Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

23rd & 24th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd & 24th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd & 24th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd & 24th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு ஆதரவு மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்காக பின்வரும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ) ஜப்பான்

ஆ) சிங்கப்பூர்

இ) பிரான்ஸ்

ஈ) இலங்கை

  • ஐந்தாவது இந்தியா – சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Dr எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைவகித்தார். அப்போது, இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையேயான நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்படுத்துதல் ஒப்பந்தம் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

2. மலைப்பாங்கான பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த, இமாச்சலப் பிரதேசத்துடன் கைகோர்த்துள்ள பொதுத் துறை பிரிவு எது?

அ) PFC Ltd

ஆ) PowerGrid

இ) REC Ltd

ஈ) GAIL Ltd

  • மலைப்பிரதேசங்களில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மின்தொகுப்பு நிறுவனம், இமாச்சலப் பிரதேச மின் வாரியத்துடன் அண்மையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின்கீழ், காங்க்ரா, உனா, மண்டி, குலு, பிலாஸ்பூர், சிர்மோர், பாலம்பூர், சுந்தர்நகர் உள்ளிட்ட மாநிலத்தின் மலைப்பகுதிகளில் தொலைத் தொடர்பு இணைப்பை வழங்க அந்தப் பொதுத்துறை நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. கரடுமுரடான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்த தொலைத்தொடர்பு இணைப்பு அம்மாநிலத்தில் உள்ளது.

3. இந்திய இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல்படையின் சொத்துக்களை உள்ளடக்கிய இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?

அ) ஹிம்விஜய் பயிற்சி

ஆ) கவாச் பயிற்சி

இ) கபில் பயிற்சி

ஈ) தர்ஷன் பயிற்சி

  • இந்திய இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், ‘கவாச்’ என்ற பெயரில் மிகப்பெரியளவிலான கூட்டுப்பயிற்சியை மேற்கொள் -கின்றன. அந்தமானில் உள்ள கூட்டுப்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில் இந்தப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
  • இதில் இராணுவத்தின் நீர் மற்றும் நிலப்பகுதியில் போரிடும் படைப் பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், வான்படையின் ஜாக்குவார் மற்றும் போக்குவரவு வானூர்திகள், கடலோர காவல்படை கலங்கள் பங்கேற்கின்றன.

4. எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், ஒரு ‘மினி இரத்னா’ நிறுவனமாக இந்திய பருத்திக் கழகம் செயல்பட்டு வருகிறது?

அ) ஜவுளித்துறை அமைச்சகம்

ஆ) வேளாண் அமைச்சகம்

இ) MSME அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல் & வனம் அமைச்சகம்

  • இந்திய பருத்திக் கழகம் என்பது ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மினி இரத்னா நிறுவனமாகும்.
  • நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை) குறைந்தது 10 இலட்சம் கட்டு பருத்தியை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய பருத்திக் கழகம் சமீபத்தில் அறிவித்தது. வங்கதேசம் ஏற்றுமதிக்கான இலக்காக இருக்கும்.

5. முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழா நடைபெறவுள்ள இடம் எது?

அ) லடாக்

ஆ) சிம்லா

இ) உதகமண்டலம்

ஈ) டேராடூன்

  • லடாக்கின், கார்கில் மாவட்டத்திலுள்ள சான்ஸ்கரில் முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.
  • லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 13 நாள் திருவிழா, குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கு சான்ஸ்கரை ஒரு முக்கிய இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லடாக்கை ஐஸ் ஹாக்கிக்கான மையமாக மேம்படுத்த விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

6. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் OTT அலைவரிசையின் பெயர் என்ன?

அ) India Knowledge

ஆ) New India

இ) Indian Science

ஈ) India Science

  • தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் OTT சேனல், 2021 ஜன.15ஆம் தேதியுடன், 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த OTT சேனலை அறிவியல் & தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிக்கிறது. இணையதளம் மூலமாகவும், காணக்கூடிய இந்த OTT சேனல் கடந்த 2019 ஜன.15 அன்று தொடங்கப்பட்டது.
  • மக்களிடையே அறிவியல் மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, OTT என்ற நவீன தொழில்நுட்பத்தில் ‘India Science’ என்ற இந்த அலைவரிசை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

7. நியாவிலைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) கேரளம்

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) தெலங்கானா

ஈ) பீகார்

  • YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, நியாவிலைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 9,260 “நடமாடும் விநியோக அலகுகள்” / வாகனங்கள் மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கேச் சென்று நியாவிலைப் பொருட்களை (அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள்) வழங்கும்.
  • இந்நடவடிக்கை உணவுப்பொருள் கலப்படத்தை அகற்றுவதையும், நியாயவிலைக் கடைகளில் நீண்டவரிசைகள் ஏற்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. சர்வதேச கல்வி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) ஜனவரி 21

ஆ) ஜனவரி 22

இ) ஜனவரி 23

ஈ) ஜனவரி 24

  • ஆண்டுதோறும் வரும் ஜனவரி.24ஆம் தேதியை சர்வதேச கல்வி நாளாக UNESCO அனுசரிக்கிறது. வளர்ச்சி மற்றும் அமைதியில் கல்வியின் பங்கை இது கொண்டாடுகிறது. “Recover and Revitalize Education for the COVID-19 Generation” என்பது நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச கல்வி நாளுக்கான கருப்பொருளாகும்.
  • கடந்த 2018 டிசம்பர் அன்று, ஐ.நா பொது அவை ஜன.24’ஐ, ‘சர்வதேச கல்விநாள்’ என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. கல்வி மற்றும் கற்றலை மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வளமாகக் கருதும் இந்நாள், கல்வி ஓர் அடிப்படை உரிமை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

9. நடப்பாண்டு (2021) வரும் தேசிய வாக்காளர்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Proud to be a voter – Ready to vote

ஆ) Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed

இ) No Voter to be Left Behind

ஈ) Proud to be a voter

  • தேர்தல் நடைமுறையில் வாக்காளர்கள் தங்களுடைய மேம்பட்ட பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.25 அன்று தேசிய வாக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1950 ஜனவரி.25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதன் நினைவாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. புதிய வாக்காளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை பதிவுறவைத்து, அவர்களை ஜனநாயக கடமையை ஆற்றவைப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். “Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

10. அண்மையில், “பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில்” மீண்டும் இணைந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) இந்தியா

ஈ) ஜப்பான்

  • காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) மீண்டும் இணைந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவை, புதிய அதிபர் ஜோ பிடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
  • காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் என்பது ஐநா காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின்கீழ் உள்ள ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது, 2015’இல் நடைமுறைக்கு வந்தது.

1. India signed an agreement with which country for Submarine Rescue Support and cooperation between the Navies?

A) Japan

B) Singapore

C) France

D) Sri Lanka

  • Defence Minister Rajnath Singh co–chaired the 5th India–Singapore Defence Ministers Dialogue along with the Minister for Defence, Singapore. During the dialogue, the Implementing Agreement on Submarine Rescue Support and cooperation between the Indian Navy and Singapore Navy were signed.

2. Which Public sector Unit has joined hands with Himachal Pradesh, to improve telecom connectivity in the hilly areas?

A) PFC Ltd

B) PowerGrid

C) REC Ltd

D) GAIL Ltd

  • The Power Grid Corporation of India Limited (POWERGRID), PSU under Ministry of Power, has recently signed an agreement with Himachal Pradesh State Electricity Board.
  • Under the agreement, the PSU aims to provide telecom connectivity in the hilly areas of the state including Kangra, Una, Mandi, Kullu, Bilaspur, Sirmour, Palampur, Sundernagar among others. The state has been facing limited telecom connectivity due to rough weather conditions and landslides.

3. What is the name of the military exercise that would involve assets of Indian Army, Navy, Air Force and Coast Guard?

A) Exercise HimVijay

B) Exercise Kavach

C) Exercise Kapil

D) Exercise Darshan

  • ‘Exercise Kavach’ is a large and joint military exercise that would involve technical, electronic and human intelligence and assets of the Indian Army, Indian Navy, Indian Air Force and Indian Coast Guard. This exercise is conducted under the aegis of the Andaman and Nicobar Command (ANC), which is the only Joint Forces Command of the country.

4. Cotton Corporation of India (CCI) is a Mini Ratna company under which Union Ministry?

A) Ministry of Textiles

B) Ministry of Agriculture

C) Ministry of MSME

D) Ministry of Environment & Forests

  • The Cotton Corporation of India (CCI) is a public sector enterprise under the Ministry of Textiles. It is a Mini Ratna company headquartered at Mumbai.
  • The Cotton Corporation of India (CCI) announced recently that it has planned to export at least 10 lakh bales of cotton during the current cotton season (October 2020–September 2021). Bangladesh would be the main focus country.

5. Which is the venue of the first Khelo India Zanskar Winter Sports Festival?

A) Ladakh

B) Shimla

C) Udagamandalam

D) Dehradun

  • The Union Sports and Youth Affairs Minister Kiren Rijiju launched the first Khelo India Zanskar Winter Sports Festival in Zanskar of Kargil district, Ladakh. The 13–day festival festival, organised by the Ladakh UT Administration, aims to promote Zanskar as an important destination for the winter tourists. The Sports Ministry is to promote Ladakh as a centre for Ice Hockey.

6. What is the name of the OTT Channel managed by the Union Science and Technology Ministry?

A) India Knowledge

B) New India

C) Indian Science

D) India Science

  • The OTT (Over–the–top) channel managed by the Vigyan Prasar, an autonomous organization of the Department of Science & Technology, was launched in 2019. The OTT Channel ‘India Science’, has completed two years since its launch. It aims to create scientific awareness amongst the citizens of the country. The channel was also started on the DTH (Direct to Home) mode.

7. Which state has launched the door delivery programme for supply of ration to general public?

A) Kerala

B) Andhra Pradesh

C) Telangana

D) Bihar

  • The Government of Andhra Pradesh headed by Y.S. Jagan Mohan Reddy has launched the door delivery programme for ration, wherein 9,260 “Mobile Dispensing Units” / vehicles will supply ration (rice and other essential commodities) at the door steps of ration cardholders in the State.
  • This move aims to eliminate adulteration of food commodities and also prevent formation of long queues at the fair price shops.

8. When is the International Day of Education observed every year?

A) January 21

B) January 22

C) January 23

D) January 24

  • January 24 is observed as the International Day of Education every year by UNESCO. It celebrates the role of education for Development and Peace. The theme for this year’s International Day of Education is ”Recover and Revitalize Education for the COVID–19 Generation”.
  • On December 2018, the United Nations (UN) General Assembly adopted a resolution, which declared January 24 as ‘International Day of Education’.

9. What is the theme of the 2021 National Voters Day?

A) Proud to be a voter – Ready to vote

B) Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed

C) No Voter to be Left Behind

D) Proud to be a voter

  • The National Voters Day is celebrated every year in India on January 25 since 2011 to enhance participation of citizens in the electoral process. The day also marked the foundation day of Election Commission of India, which was established on 25th January 1950.
  • The main purpose of the celebration is to encourage, facilitate and maximize the enrollment, especially for the new voters. “Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed” has been selected as the theme for the 11th National Voters’ Day.

10. Which county has rejoined the “Paris climate agreement” recently?

A) Australia

B) United States of America

C) India

D) Japan

  • The United States of America (USA) has rejoined the Paris Agreement on climate change. The new President Joe Biden reversed his predecessor Donald Trump’s order to exit the agreement.
  • The Paris Agreement on climate change is an international treaty under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC), that came into effect in 2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!