Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

23rd & 24th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23rd & 24th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd & 24th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவில், ‘தேசிய கொடி நாள்’ கொண்டாடப்படுகிற நாள் எது?

அ. ஜூலை.18

ஆ. ஜூலை.22 

இ. ஜூலை.24

ஈ. ஜூலை.25

  • ஒவ்வோர் ஆண்டும், ஜூலை.22 அன்று இந்தியா தேசிய கொடி நாளைக் கொண்டாடுகிறது. 1947ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய அரசியலமைப்பு அவை தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டது. 1947 ஜூலை.22–இல் இந்திய அரசியலமைப்பு அவையின் உறுப்பினர்கள் தில்லியில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் கூடியபோது, சுதந்திர இந்தியாவுக்கான தேசியக்கொடியை ஏற்றுக்கொள்வதற்கான ஜவஹர்லால் நேருவின் தீர்மானத்தை அவ்வவை சட்டசபை முதலில் விவாதித்தது.

2. ‘பிரதமர் வய வந்தனா யோஜனா’வின் பயனாளிகள் யார்?

அ. பள்ளி மாணவர்கள்

ஆ. மூத்த குடிமக்கள் 

இ. வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள பெண்கள்

ஈ. MSME–கள்

  • பிரதமர் வய வந்தனா யோஜனாவானது 2017 ஜூலை.21 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு சமீபத்தில் அதன் ஐந்தாமாண்டை நிறைவுசெய்தது. இத்திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மொத்தமாக முதலீடு செய்வதோடு மாதாந்திர அல்லது ஆண்டு முறையில் ஓய்வூதியம் பெறலாம். PMVVY ஆனது 2023 மார்ச்.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் திருத்தமானது, 2020–21ஆம் ஆண்டிற்கு ஆண்டுக்கு 7.40 சதவீதம் என்ற நிச்சயமான வருவாய் விகிதத்தை அனுமதிக்கிறது. இந்த விகிதம் ஒவ்வோர் ஆண்டும் மீட்டமைக்கப்படும்.

3. ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2022–23–க்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு என்ன?

அ. 7.2 % 

ஆ. 7.8 %

இ. 8.0 %

ஈ. 8.2 %

  • ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.2% ஆகக்கணித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக பணவீக்கம் மற்றும் பண இறுக்கம் இதற்கான காரணங்களாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இது 2023–24ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி மதிப்பீட்டை முன்னர் மதிப்பிடப்பட்ட 8%–இலிருந்து 7.8%–ஆகக்குறைத்தது.

4. சமீபத்தில் நாஸ்காம் அமைத்த, ‘டிஜிவானி கால் சென்டருக்கு’ நிதியளிக்கிற தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகிள் 

இ. டுவிட்டர்

ஈ. மெட்டா

  • நாஸ்காம் அறக்கட்டளை, பெண் விவசாயிகள் தங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவும் வகையில், “டிஜிவானி கால் சென்டர்” என்ற அழைப்பு மையத்தை அமைத்துள்ளது. இது இலாப நோக்கற்ற இந்திய வேளாண் வணிக வல்லுநர் சங்கத்துடன் (ISAP) இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களிலுள்ள 20,000 கிராமப்புற பெண் தொழில்முனைவோரைச் சென்றடைவதற்காக இந்தத்திட்டம் ஒரு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு கூகுள் நிறுவனம் நிதியளித்துள்ளது.

5. முக்தார் அப்பாஸ் நக்விக்குப்பிறகு நடுவண் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் யார்?

அ. பியூஷ் கோயல்

ஆ. ஸ்மிருதி இரானி 

இ. ஜிதேந்திர சிங்

ஈ. இராஜ்நாத் சிங்

  • நடுவண் பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடுவண் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றார். நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவிவிலகிய முக்தார் அப்பாஸ் நக்வியிடம் இருந்து அவர் அப்பொறுப்பினை ஏற்றார். தற்போது உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சக பொறுப்பிலிருக்கும் நடுவண் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நடுவண் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

6. எந்த நகரத்தில், சுவாமி இராமானுஜாச்சாரியாரின், ‘அமைதியின் சிலை’யை உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார்?

அ. அமராவதி

ஆ. பெங்களூரு

இ. ஸ்ரீ நகர் 

ஈ. பூரி

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சுவாமி இராமானுஜாச்சாரியாரின், ‘அமைதியின் சிலை’யை உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இராமானுஜாச்சாரியார் ஒரு வேத தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்று கருதப்படுகிறார். அவர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு, சமத்துவம் மற்றும் சமூக நீதியை ஆதரித்தார். இராமானுஜாச்சாரியார் பக்தி இயக்கத்திற்கு புத்துயிர் அளித்ததற்காக அறியப்பட்டவர்.

7. இந்திய அரசாங்கம் சமீபத்தில் எந்தப் பழம் குறித்து, ‘தேசிய மாநாட்டை’ ஏற்பாடு செய்தது?

அ. மாங்கனி

ஆ. டிராகன் பழம் 

இ. லிச்சி

ஈ. அன்னாசி

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ‘டிராகன் பழ தேசிய மாநாட்டை’ ஏற்பாடு செய்தது. டிராகன் பழ சாகுபடியை ஊக்குவிக்க நடுவணரசு முடிவுசெய்துள்ளது. அது, “சூப்பர் பழம்” என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது, இந்த அயல்நாட்டு பழம், 3,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு வருகிறது; ஐந்தாண்டுகளில் அதன் சாகுபடியை 50,000 ஹெக்டேராக அதிகரிக்க திட்டம் உள்ளது. குஜராத் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இந்த டிராகன் பழங்களைப் பயிரிடுவதற்கு ஏற்கனவே ஊக்கத்தொகை வழங்கியுள்ளன.

8. நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2021–இல் இந்தியாவால் எத்தனை விலங்கினங்கள் சேர்க்கப்பட்டன?

அ. 54

ஆ. 24

இ. 240 

ஈ. 540

  • புதிய கண்டறிவுகள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதிய பதிவுகள்பற்றிய விவரங்களை நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்தில் வெளியிட்டார். 2021ஆம் ஆண்டில் இந்தியா தனது விலங்கினங்களின் தரவுத்தளத்தில் 540 இனங்களைச் சேர்த்தது. இதையடுத்து மொத்த விலங்கு இனங்களின் எண்ணிக்கை 1,03,258 ஆக உள்ளது. ஒரு புதிய பாலூட்டி இனமான வெண்பற்கொண்ட ஷ்ரூ (Crocidura narcondamica), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

9. பிரத்தியேகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாக மாற உள்ள மாநிலம் எது?

அ. புது தில்லி

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா 

  • பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை கொண்டுள்ள நாட்டின் முதலாவது மாநிலமாக கர்நாடகா உருவாகவுள்ளது. அக்கொள்கையானது அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 0.1 சதவீதத்தை R&D மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஒதுக்க எண்ணுகிறது. பிரத்யேக விண்வெளி மற்றும் பாதுகாப்பு R&D கொள்கையைக்கொண்ட முதல் மாநிலம் கர்நாடகா ஆகும். இது ஒரு தனி குறைக்கடத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையையும் கொண்டுள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மங்கர் சிறுகுன்று அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான் 

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

  • குஜராத் மாநில எல்லைக்கு அருகில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மங்கர் சிறுகுன்றானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படவுள்ளது. இது, கடந்த 1913இல் 1500 பில் பழங்குடியின விடுதலைப் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட ஒரு பழங்குடி எழுச்சியின் தளமாகும். அந்த இடத்தில் கூடியிருந்த பழங்குடியினர், சமூகத்தின் தலைவர் கோவிந்த் குரு தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். இந்த இடம், ‘ஆதிவாசி ஜாலியன்வாலா’ என்றும் அழைக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. இந்தியாவில் 854 பேருக்கு 1 மருத்துவர்: உலக சுகாதார நிறுவன பரிந்துரையைவிட அதிகம்

இந்தியாவில் 854 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மருத்துவர்கள்-மக்கள் விகிதாசாரம் உள்ளது. இது, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற தரநிலையைவிட மேம்பட்டது என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நடுவண் சுகாதார துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி, இந்த ஆணையத்திலும் மாநில மருத்துவ கவுன்சில்களிலும் 13,08,009 அலோபதி மருத்துவர்கள் பதிவுசெய்துள்ளனர். இது, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரமாகும். இதுதவிர 5.65 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்கள், 34.33 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள், 13 லட்சம் துணை மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தேவையான சுகாதார பணியாளர்களை நியமிப்பதும் போதிய படுக்கை வசதியை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பாகும்.

நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-இல் 51,348-ஆக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை இப்போது 91,927-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 79% உயர்வாகும். இதேபோல், முதுநிலை மருத்துவப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-இல் 31,185-ஆக இருந்தது. இன்றைய தேதியில் இது 60,202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்-மக்கள் விகிதாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் பங்களிப்புடன் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 72 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று அமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.

2. 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள்: ‘சூரரைப்போற்று’ சிறந்த திரைப்படம்; சிறந்த நடிகராக சூரியாவுக்கு விருது

கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பட விருதுடன், அந்தப் படத்தில் நடித்த சூரியா சிறந்த நடிகராகவும் அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு புதுமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும் (28 பிரிவுகள்), 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் (22 பிரிவுகள்) தேசிய விருதுக்குப் போட்டியிட்டன.

அதன் விவரம்:

சிறந்த திரைப்படம் – சூரரைப்போற்று

சிறந்த திரைக்கதை – சூரரைப்போற்று

சிறந்த வசனம் – மண்டேலா

சிறந்த இயக்குநர் கே ஆர் சச்சிதானந்தன் (ஐயப்பனும் கோஷியும்) – மலையாளத் திரைப்படம்

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த நடிகர் சூரியா – (சூரரைப்போற்று) & அஜய் தேவ்கன் (தானாஜி: தி அன்சங் வாரியர்)

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)

சிறந்த தமிழ் திரைப்படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த துணை நடிகை – லட்சுமிப்ரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த இசையமைப்பாளர் – (பின்னணி இசை) ஜி வி பிரகாஷ்

சிறந்த இசையமைப்பாளர் – (பாடல்கள்) தமன் எஸ் (அலவைகுந்தபுரமுலு – தெலுங்கு திரைப்படம்)

சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

3. தேசியக்கொடியை இனி இரவிலும் பறக்கவிட அனுமதி: விதிகள் திருத்தம்

தேசியக்கொடியை இரவிலும் பறக்கவிட அனுமதிக்கும் வகையில், அதுதொடர்பான விதிகளில் நடுவணரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், தேசியக்கொடி தொடர்பான விதிமுறைகளில் நடுவண் உள்துறை அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து நடுவண் அமைச்சகங்கள், துறைகளுக்கு உள்துறைச் செயலகம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தேசியக்கொடி ஏற்றப்படுதல், பயன்பாடு ஆகியவை கடந்த 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசியக்கொடி சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச்சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தேசியக்கொடியை பொதுமக்களின் வீட்டில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமன்றி இரவிலும் பறக்கவிடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக்கொடி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், கைகளால் நூற்கப்பட்ட தேசியக்கொடி மட்டுமன்றி எந்திரத்தால் ஆக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம். பருத்தி, பாலிஸ்டர், கம்பளி, காதி பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளாக அவை இருக்கலாம். இதற்குரிய விதிமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முந்தைய விதிமுறைகளின்படி, தேசியக்கொடியானது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பறக்கவிட அனுமதி இருந்தது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட மற்றும் பாலியஸ்டர் கொடிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. குரங்கு அம்மை சர்வதேச சுகாதார நெருக்கடி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

குரங்கு அம்மை பாதிப்பு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில், அதனை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. குரங்கு அம்மை பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்க உலக அளவில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை ஐநா சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஒரு நோய் பாதிப்பு மேலும் பல நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்க உலக நாடுகளின் ஒருங்கிணை -ந்த முயற்சி அவசியம் என்பதை வலியுறுத்தவே ‘சர்வதேச சுகாதார நெருக்கடி’ நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. முன்னர், கரோனா பாதிப்பு, எபோலா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்புகள் சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

1. The ‘National Flag Day’ is celebrated in which day in India?

A. July.18

B. July.22 

C. July.24

D. July.25

  • Every year, India celebrates the National Flag Day on July 22. On the same day in the year 1947, the Constituent Assembly of India adopted the National Flag. When the members of the Indian Constituent Assembly met in the Constitution Hall in Delhi on July 22, 1947, the first thing the assembly discussed was a motion by Jawaharlal Nehru to adopt the national flag for free India.

2. Who are the beneficiaries of ‘Pradhan Mantri Vaya Vandana Yojana’?

A. School Students

B. Senior Citizens 

C. Below–Poverty–Line Women

D. MSMEs

  • Pradhan Mantri Vaya Vandana Yojana was launched on July 21, 2017. The scheme recently completed five years since its launch. Under the scheme, senior citizens above the age of 60 can make a lump sum investment and can monthly or a yearly pension. PMVVY has been extended up to 31st March, 2023. The amendment in 2020 allowed an assured rate of return of 7.40 % per annum for the year 2020–21 per annum and thereafter to be reset every year.

3. What is the growth forecast for India for 2022–23, as per Asian Development Bank (ADB)’s recent estimate?

A. 7.2 % 

B. 7.8 %

C. 8.0 %

D. 8.2 %

  • The Asian Development Bank set its economic growth forecast for India to 7.2%. The reasons cited are higher–than–expected inflation and monetary tightening. It also lowered the GDP growth estimate for 2023–24 to 7.8% from the 8% estimated earlier.

4.  Which tech company funds the ‘DigiVaani Call Center’ set up recently by NASSCOM?

A. Microsoft

B. Google 

C. Twitter

D. Meta

  • Nasscom Foundation has set up a call centre to help women farmers scale up their business called the “DigiVaani Call Center”. It has been set up in collaboration with non–profit Indian Society of Agribusiness Professionals (ISAP). The project is run on a pilot basis to initially reach out to 20,000 rural women entrepreneurs across six states– Himachal Pradesh, Uttarakhand, Uttar Pradesh, Bihar, Haryana and Rajasthan. The project has been funded by Google.

5. Who has assumed the additional charge of Ministry of Minority Affairs after Mukhtar Abbas Naqvi?

A. Piyush Goyal

B. Smriti Irani 

C. Jitendra Singh

D. Rajnath Singh

  • Women and Child Development Minister Smriti Irani assumed additional charge of Ministry of Minority Affairs. She took over from Mukhtar Abbas Naqvi who resigned from the Union Council of Ministers. Union Minister Jyotiraditya Scindia, who is currently in charge of the Civil Aviation Ministry assumed the additional charge of the Steel Ministry.

6. Home Minister Amit Shah unveiled the ‘Statue of Peace’ of Swamy Ramanujacharya at which city?

A. Amravati

B. Bengaluru

C. Sri Nagar 

D. Puri

  • Home Minister Amit Shah unveiled the ‘Statue of Peace’ of Swamy Ramanujacharya at Srinagar in Jammu and Kashmir. Ramanujacharya is regarded as a Vedic philosopher and social reformer, who travelled across India, advocating equality and social justice. Ramanujacharya is known for revived the Bhakti movement and his preachings inspired other Bhakti schools of thought.

7. The Indian Government recently organised a ‘National Conclave’ on which fruit?

A. Mango

B. Dragon Fruit 

C. Lychee

D. Pineapple

  • Ministry of Agriculture & Farmers Welfare organised a ‘National Conclave on Dragon Fruit’. The Centre has decided to promote the cultivation of dragon fruit. It is also known as a “super fruit” for its health benefits. At present, this exotic fruit is cultivated in 3,000 hectares; the plan is to increase cultivation to 50,000 hectares in five years. Gujarat and Haryana Governments had already offered incentives for cultivation of the fruit.

8. As per the Environment Ministry’s report, how many faunal species were added by India in 2021?

A. 54

B. 24

C. 240

D. 540 

  • The details of new discoveries and new records of fauna and flora were published by Bhupendra Yadav, Union Minister of Environment, Forest and Climate Change, at Zoological Survey of India (ZSI), Kolkata. India added 540 species to its faunal database in 2021 taking the total number of animal species to 1,03,258. A new mammal species Crocidura narcondamica, a white–toothed shrew, was found in the Andaman and Nicobar group of islands.

9. Which is set to become the first state in the country to have an exclusive Research and Development (R&D) Policy?

A. New Delhi

B. Sikkim

C. Arunachal Pradesh

D. Karnataka 

  • Karnataka is set to become the first state in the country to have an exclusive Research and Development (R&D) Policy. The policy seeks to allocate at least 0.1 per cent of its Gross State Domestic Product towards R&D and innovation.
  • Karnataka is the first state to have an exclusive aerospace and defence R&D policy. It also has a separate semiconductor and renewable energy policy.

10. Mangarh Hillock, which was seen in the news, is located in which state/UT?

A. Punjab

B. Rajasthan 

C. Uttar Pradesh

D. Bihar

  • Mangarh Hillock, situated in Rajasthan near the Gujarat Border, is set to be declared monument of national importance. It is a site of a tribal uprising where a massacre of over 1500 Bhil tribal freedom fighters took place in 1913. Tribals gathered at the site were holding a meeting in protest, led by a leader from the community Govind Guru. The place is also known as the Adivasi Jallianwala.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!