TnpscTnpsc Current Affairs

23rd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

23rd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 23rd August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ஹைட்ரஜன் எரிபொருள்மூலம் இயங்குகின்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது?

அ. மைசூரு

ஆ. ஹைதராபாத்

இ. புனே

ஈ. அகமதாபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. புனே 

  • ஹைட்ரஜன் எரிபொருள்மூலம் இயங்குகின்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பேருந்து புனேவில் உள்ள KPIT–CSIRஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம்செய்துவைத்தார். ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலமானது ஹைட்ரஜன் மற்றும் வளியைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்குகிறது. அதன் செயலாக்கத்தின்போது வெப்பம் மற்றும் நீர் மட்டுமே உற்பத்தியாகிறது. FCEV–கள் (Fuel Cell Electric Vehicle) சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைமையாக உள்ளன.

2. 2022–இல் தேசிய விதை மாநாடு நடைபெறும் இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. மைசூரு

இ. குவாலியர்

ஈ. விசாகப்பட்டினம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குவாலியர்

  • நடுவண் உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குவாலியரில், 2022 – தேசிய விதை மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஸ்டேட் அகாடமி ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் அலைட் சைன்சஸ் (SAAS) அப்போது தொடங்கப்பட்டது. தேசிய அளவில் NAAS மற்றும் பிராந்திய அளவில் SAAS–இன் முனைவுகள் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு அறிவியல் மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகளை மேலும் விரைவுப்படுத்தும்.

3. அண்மையில் சோதனையோட்டம் செய்யப்பட்ட 3.5 கிமீ நீள சரக்கு இரயிலின் பெயர் என்ன?

அ. பாரத் ஃபிரைட்

ஆ. சூப்பர் வாசுகி

இ. இந்தியா ஃபிரைட்

ஈ. பாரத் கூட்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சூப்பர் வாசுகி

  • இந்திய இரயில்வே அண்மையில் 3.5 கிமீ நீளமுள்ள, ‘சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு இரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. இந்திய இரயில்வேயால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான மற்றும் அதிக எடைகொண்ட சரக்கு இரயில் இதுவாகும். இது சத்தீஸ்கரில் உள்ள கோர்பா மற்றும் நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் இடையே 27,000 டன் நிலக்கரியை ஏற்றிச்செல்லும் பெட்டிகளைக் கொண்டுள்ளது.

4. கீழ்க்காணும் எந்த மாநிலத்துடன் இணைந்து, ‘மாவட்ட நல்லாட்சி இணையதளத்தை’ உருவாக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. சிக்கிம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அருணாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேச மாநில அரசுடன் இணைந்து, ‘மாவட்ட நல்லாட்சி இணையதளத்தை’ உருவாக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இந்த இணையதளம், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் செயல்திறனையும் மாதந்தோறும் கண்காணித்து செயல்திறனை தரப்படுத்துவதில் உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. நடுவண் தொழிலாளர் அமைச்சகத்தின்கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை, ‘மாவட்ட நல்லாட்சி இணையதாளத்தை’ உருவாக்கும்.

5. இராஜீவ்காந்தி அட்வான்ஸ் டெக்னாலஜி (R–CAT) மையத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. இராஜஸ்தான்

இ. சிக்கிம்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இராஜஸ்தான்

  • இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இராஜீவ்காந்தி அட்வான்ஸ் டெக்னாலஜி மையத்தை (R–CAT) தொடங்கி வைத்தார். R–CAT ஆனது பட்டதாரிகளுக்கு மேம்பட்ட மற்றும் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சித்திட்டங்களை நடத்தும். இந்த மையம் வென்றவர்களுக்கு தொழிற்தரச்சான்றிதழ்களை வழங்கும்.

6. ‘சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பு உலக பால் மாநாடு’ நடைபெறும் இடம் எது?

அ. பாட்னா

ஆ. புது தில்லி

இ. அமிர்தசரசு

ஈ. அகமதாபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • 4 நாள் நடக்கும் சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பு உலக பால் உச்சிமாநாடு (IDF WDS 2022) ஆனது செப்.12 முதல் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தியாவானது அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளுடன் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது; ஆனால் அதே வேளையில் விளைச்சலில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டின்மூலம், இந்தியா, முன்னேறிய நாடுகளிடம் இருந்து பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளும்.

7. கனிமங்கள் பாதுகாப்பு கூட்டாண்மைக்குத் தலைமை வகிக்கும் நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. அமெரிக்கா

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • சமீபத்தில் உருவாக்கப்பட்ட பதினொரு நாடுகளின் அமெரிக்க தலைமையிலான கூட்டாண்மை, முதன்மையான கனிம விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கனிமங்கள் பாதுகாப்பு கூட்டாண்மை கோபால்ட், நிக்கல், லித்தியம் மற்றும் 17 ‘அருமண் கனிமங்கள்’போன்ற கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளில் கவனம் செலுத்துகிறது. இந்தக் கூட்டணி சீனாவுக்கு மாற்றான கூட்டணியாகக் கருதப்படுகிறது.

8. ‘மாபெரும் வெங்காய சவால்’ போட்டியைத் தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ. நடுவண் வேளாண் அமைச்சகம்

ஆ. நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்

இ. நடுவண் MSME அமைச்சகம்

ஈ. நடுவண் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்

  • நடுவண் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது அண்மையில், ‘மாபெரும் வெங்காய சவால்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தச் சவால் இளம் தொழில் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து வடிவமைப்பு மற்றும் அறுவடைக்கு முந்தைய நுட்பங்களை மேம்படுத்துதல், முதன்மை செயலாக்கம், சேமிப்பு மற்றும் நாட்டில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை கொண்டு செல்வதற்கான யோசனைகளை நாடுகிறது.

9. கலா அசாரை ஒழிப்பதற்கான இந்தியாவின் புதிய இலக்கு ஆண்டு என்ன?

அ. 2023

ஆ. 2025

இ. 2027

ஈ. 2030

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2023

  • வரும் 2023ஆம் ஆண்டுக்குள் கலா அசாரை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மக்களவையில் நடுவண் சுகாதார அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 633 காலா–அசார் தொகுதிகளில், கடந்த ஆண்டு 625 தொகுதிகள் ஒழிப்புக்கான இலக்கை எட்டியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் செயல்திட்டம் கலா–அசார் ஒழிப்புக்கான இலக்கு ஆண்டை 2030 என நிர்ணயித்துள்ளது.

10. ‘பொது பதிவு வசதி’ (எனது ரேஷன்–எனது உரிமை) இணையதளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஆ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், ‘பொது பதிவு வசதி’ (எனது ரேஷன்–எனது உரிமை) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டும் இப்பதிவு செய்யும் வசதி, வீடற்ற மக்கள், ஆதரவற்றோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் தகுதியுடைய பிற பயனாளிகள் ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டத்தின்கீழ் அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘விக்ராந்த்’ போர்க்கப்பல் செப்.2-இல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட, ‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி செப்.2ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விமானந்தாங்கி போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின்கீழ் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலாக ‘விக்ராந்த்’, சுமார் `20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

2. கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான விருது தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம இராஜேந்திரனுக்கும், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான விருது முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் க நெடுஞ்செழியனுக்கும், 2022-ஆம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டு அறிஞர் ழான் லூய்க் செவ்வியாருக்கும் வழங்கப்பட்டது.

23rd August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. India’s first indigenously developed Hydrogen Fuel Cell Bus has been inaugurated in which city?

A. Mysuru

B. Hyderabad

C. Pune

D. Ahmedabad

Answer & Explanation

Answer: C. Pune

  • India’s first indigenously developed Hydrogen Fuel Cell Bus was developed by KPIT–CSIR in Pune. It was unveiled by Jitendra Singh, Union Minister of State for Science and Technology. The hydrogen fuel cell uses hydrogen and air to generate electricity, producing only heat and water in the process. FCEVs (Fuel Cell Electric Vehicles) are the most environment–friendly mode of public transportation.

2. Which is the location of the National Seed Congress in 2022?

A. Hyderabad

B. Mysuru

C. Gwalior

D. Vishakhapatnam

Answer & Explanation

Answer: C. Gwalior

  • The Union Minister of Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar inaugurated the National Seed Congress in 2022 in Gwalior. The State Academy of Agricultural and Allied Sciences (SAAS) was launched. The efforts of NAAS at the national level and SAAS at the regional level will further accelerate the activities of agriculture, horticulture, animal husbandry science and promotion of related research and education.

3. What is the name of the 3.5–km–long freight train, which was recently tested?

A. Bharat Freight

B. Super Vasuki

C. India Freight

D. Bharat Goods

Answer & Explanation

Answer: B. Super Vasuki

  • The Indian Railways recently conducted a test run of the 3.5–km–long freight train named ‘Super Vasuki’. This is the longest and heaviest freight train ever run by the Railways. It has wagons carrying over 27,000 tonnes of coal between Korba in Chhattisgarh and Rajnandgao in Nagpur.

4. The Central government has planned to collaborate with which state to develop a ‘district good governance portal’?

A. Arunachal Pradesh

B. Assam

C. Karnataka

D. Sikkim

Answer & Explanation

Answer: A. Arunachal Pradesh

  • The Central government has planned to collaborate with the Arunachal Pradesh government to develop a ‘district good governance portal’. The portal aims to monitor the performance of each district of the state on a monthly basis and help in benchmarking performance. Department of Administrative Reforms and Public Grievances (DARPG) under the Ministry of Personnel will develop the ‘district good governance portal’.

5. Which state has inaugurated Rajiv Gandhi Centre of Advance Technology (R–CAT)?

A. Chhattisgarh

B. Rajasthan

C. Sikkim

D. Punjab

Answer & Explanation

Answer: B. Rajasthan

  • Rajasthan Chief Minister Ashok Gehlot inaugurated the Rajiv Gandhi Centre of Advance Technology (R–CAT). R–CAT will conduct training programmes on advanced and emerging Information technologies for graduates. The centre will give industry standard certificates to successful candidates.

6. Which is the venue of the ‘International Dairy Federation World Dairy Summit’?

A. Patna

B. New Delhi

C. Amritsar

D. Ahmedabad

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The four–day International Dairy Federation World Dairy Summit (IDF WDS 2022), is scheduled to be held in New Delhi from September 12. India is the world’s largest milk producer with largest cattle population while it lags behind in yield. From the summit, India will learn lessons to improve its per animal milk productivity from advanced nations.

7. Which country leads the Minerals Security Partnership (MSP)?

A. China

B. Japan

C. USA

D. Fencing

Answer & Explanation

Answer: C. USA

  • A new US–led partnership initiative of 11 nations which was recently formed, aims to bolster critical mineral supply chains. The Minerals Security Partnership (MSP) focusses on the supply chains of minerals such as Cobalt, Nickel, Lithium and 17 ‘rare earth’ minerals. The alliance is seen as primarily focused on an alternative to China.

8. Which Union Ministry launched the ‘Grand Onion Challenge’?

A. Union Agricultural Ministry

B. Union Consumer Affairs Ministry

C. Union MSME Ministry

D. Union Commerce and Industry Ministry

Answer & Explanation

Answer: B. Union Consumer Affairs Ministry

  • The Department of Consumer Affairs recently launched the ‘Grand Onion Challenge’. The challenge seeks ideas from young professionals, professors and scientists for designs and for improving pre–harvesting techniques, primary processing, storage, and transportation of post harvested onions in the country.

9. What is India’s new target year to eliminate Kala–azar?

A. 2023

B. 2025

C. 2027

D. 2030

Answer & Explanation

Answer: A. 2023

  • The Government has set the target to eliminate Kala–azar by 2023 from the country. In a written reply in Lok Sabha given by the union health minister, out of 633 Kala–azar endemic blocks, 625 blocks have achieved the elimination target last year. The World Health Organisation (WHO) Neglected Tropical Diseases Road map has set the target for Kala–azar elimination as 2030.

10. Which Union Ministry launched the ‘Common Registration Facility’ (My Ration–My Right) portal?

A. Ministry of Agriculture and Farmers Welfare

B. Ministry of Consumer Affairs, Food and Public distribution

C. Ministry of Rural Development

D. Ministry of Housing and Urban Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Consumer Affairs, Food and Public distribution

  • Ministry of Consumer Affairs, Food and public distribution launched a web portal named ‘Common Registration Facility’ (My Ration–My Right). The registration facility in 11 states and UTs aims to enable homeless people, destitutes, migrants and other eligible beneficiaries to apply for ration cards. All 36 states/UTs have been onboarded under the One Nation One Ration Card plan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!