23rd December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

23rd December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. பண்டித தீனதயாள் உபாத்யாய தொலைத்தொடர்பு சிறப்பு விருதுகளை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?

அ. திறன்மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சு

இ. தகவல்தொடர்பு அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

 • தொலைத்தொடர்புத்துறையும் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகமும் இணைந்து பண்டித தீனதயாள் உபாத்யாய தொலைத்தொடர்புத்திறன் மேம்பாட்டு விருதுகளை வழங்குகின்றது. தொலைத்தொடர்புத் துறையில் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தொலைத்தொடர்புத்துறை கடந்த 2017ஆம் ஆண்டு இந்த விருதை அறிமுகப்படுத்தியது. வேளாண்மை, வர்த்தகம், நலவாழ்வு, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொலைத்தொடர்புமூலம் தீர்வுகளை உருவாக்குவோருக்கு இந்த விருதுகள் வழ -ங்கப்படுகின்றன. நடப்பாண்டின் விருதுகள் சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சரால் வழங்கப்பட்டன.

2. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘ரிப்போர்டிங் இந்தியா’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. S ஜெய்சங்கர்

ஆ. பிரேம் பிரகாஷ்

இ. சுஷாந்த் சரீன்

ஈ. ஷீலா பட்

 • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், சமீபத்தில், தில்லியில், ‘Reporting India’ என்னும் நூலை வெளியிட்டார். இது, விடுதலைக்குப் பின்னரான இந்தியாவின் வரலாற்றை விவரிக்கிறது. முன்னணி செய்தி நிறுவனமான ஆசிய நியூஸ் இன்டர்நேஷனலின் (ANI) தலைவர் பிரேம் பிரகாஷ் இந்நூலை எழுதியுள்ளார். அவர், 1971ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தை நிறுவினார். மேலும், காணொளி வழிச்செய்திகளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் இதுவாகும்.

3. கீழ்க்காணும் யாருக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. ஆதி கோத்ரேஜ்

ஆ. முகேஷ் அம்பானி

இ. ரத்தன் டாடா

ஈ. உதய் கோட்டக்

 • பிரதமர் நரேந்திர மோடி ASSOCHAM அறக்கட்டளை வாரம்–2020’இல் காணொளிவழி மாநாட்டின் மூலம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது, டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெற்ற ரத்தன் டாடாவுக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருதினை பிரதமர் வழங்கினார். ரத்தன் டாடா அவர்கள், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது, அக்குழுமத்தின் பல்வேறு தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமைதாங்கிவருகிறார்.

4. IUCN’இன் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய EEZ’இல் உள்ள கீழ்க்காணும் எவ்வினங்கள் மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?

அ. சுறாக்கள், திருக்கைகள் மற்றும் கலப்புச்சுறாக்கள்

ஆ. கானமயில்கள்

இ. வெளிமான்கள்

ஈ. கருப்போட்டு ஆமைகள் மற்றும் இமயமலை வரையாடுகள்

 • இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சுறா வல்லுநர்கள் குழு, இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EZZ) சுறாக்கள் (Shark), திருக்கைகள் (Sting Ray) மற்றும் கலப்புச்சுறாக்கள் (Chimaera) பற்றிய மதிப்பீட்டை நடத்தியது. அம்மதிப்பீட்டின்படி, இந்தியப்பெருங்கடல்களில் காணப்படும் 170 இனங்களுள் 19 இனங்கள் (அதாவது 11%) மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவை அழிந்துபோகும் நிலையில் உள்ளன.

5. 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஆட்டோமொபைல் எரிபொருளின் பெயரென்ன?

அ. வானூர்தி விசையாழி எரிபொருள்

ஆ. பெட்ரோல்

இ. உயிரி – பெட்ரோல்

ஈ. E20 எரிபொருள்

 • இந்திய வாகனங்களில் E20 எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் முன்மொழிந்தது. E20 எரிபொருள் என்பது 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஒரு கலவை ஆகும். இந்நடவடிக்கை வாகன உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதே வேளையில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஷிங்கன்சென்” என்றால் என்ன?

அ. பெளத்த நினைவுச்சின்னம்

ஆ. அதிவேக இரயில்

இ. COVID தடுப்பூசி

ஈ. புதிய கோள்

 • அண்மையில், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம், ஜப்பானில் பயன்படுத்தப்படும் E5 வரிசையைச் சார்ந்த ஷிங்கன்சென் – அதிவேக புல்லட் இரயில்களின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அது, மும்பை-ஆமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றப்படும். இத்திட்டம் முடிந்ததும், மும்பை-ஆமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணிநேரமாகக் குறையும். இந்தத் திட்டம், 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. அண்மையில், நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவை எது?

அ. குருவி

ஆ. சிறு வல்லூறு

இ. சாரசு கொக்கு

ஈ. மயில்

 • உத்தரபிரதேச மாநிலத்தின் ஜேவரில் கட்டப்பட்டுவரும் புதிய கிரீன் பீல்டு வானூர்தி நிலையத்திற்கு நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் புதிய இலச்சினையில் ஒரு சாரசு கொக்கு இடம்பெற்றுள்ளது. அப்பறவை உத்தரபிரதேச மாநிலப்பறவை ஆகும். இவ்வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சூரிச் வானூர்தி நிலைய நிறுவன -த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையத்தின் முதற்கட்டம் 2024’க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. தேசிய உழவர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 21

ஆ. டிசம்பர் 22

இ. டிசம்பர் 23

ஈ. டிசம்பர் 24

 • இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் உழவர்களின் பங்கை அங்கீகரிக்கவும், ஐந்தாம் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கவுமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.23 அன்று தேசிய உழவர்கள் நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில், உழவர்களின் நலஞ்சார்ந்து அவர் ஆட்சி புரிந்தமைக்காக, ‘இந்திய உழவர்களின் சாம்பியன்’ என அவர் அறியப்படுகிறார். ‘கிசான் திவாஸ்’ எனவும் இந்நாள் அறியப்படுகிறது.

9. உழவர்களுக்காக, ‘Farmer Registration and Unified Beneficiary Information System (FRUITS)’ என்ற வலைத்தளத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • உழவர்களுக்கான மின்னாளுகை வலைத்தளமான ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளி தகவலமைப்பை (FRUITS) கர்நாடக மாநில அரசு தொடங்கிவைத்துள்ளது. இது, மாநிலத்தின் அனைத்து உழவர்களின் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் கடன்களின் அனைத்து விவரங்களின் ஒற்றை களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 • உழவர்களுக்கு அந்த வலைத்தளத்தில் அடையாள எண் ஒன்று வழங்கப்படும். இந்த அடையாள எண்ணைக்கொண்டு கடன் வழங்கும் எந்த வங்கிகளும் கடன் வழங்குதற்கு முன்னர் உழவர்களின் விவரங்களை அணுகிக்கொள்ளலாம். கனரா வங்கியானது இந்த FRUITS வலைத்தளத்தை சோதனை அடிப்படையில் இயக்கவுள்ளது.

10. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் குழுவானது கீழ்க்காணும் எந்த அமைச்சரின்கீழ் அமைக்கப்படவுள்ளது?

அ. இராஜ்நாத் சிங்

ஆ. அமித் ஷா

இ. S ஜெய்சங்கர்

ஈ. பியூஷ் கோயல்

 • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. 2021 ஜன.23’இலிருந்து ஓராண்டுக்கு நடைபெறவுள்ள நிகழ்வுகள்குறித்து இக்குழு முடிவுசெய்யும்.
 • விடுதலை போராட்டத்திற்கு நேதாஜி அளித்த மாபெரும் பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. நிபுணர்கள், வரலாற்றுவியலாளர்கள், எழுத்தாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய தேசிய இராணுவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் ஆகியோர் அரசு அமைக்கவுள்ள உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.

23rd December 2020 Tnpsc Current Affairs in English

1. Which Union Ministry presents the Pandit Deendayal Upadhyay Telecom Skill Excellence Awards?

[A] Ministry of Skill Development

[B] Ministry of Power

[C] Ministry of Communication

[D] Ministry of Electronics and IT

 • Department of Telecommunication, Ministry of Communication presents the Pandit Deendayal Upadhyay Telecom Skill Excellence Awards. The Award scheme was originally launched in the year 2017, to recognise the successful telecom skilled people and to enable them apply telecom related solution in various fields like health and Education. This year’s awards were recently presented by the Communications Minister.

2. Who is the author of the book ‘Reporting India’, which was recently launched?

[A] S Jaishankar

[B] Prem Prakash

[C] Sushant Sareen

[D] Sheela Bhatt

 • Union External Affairs Minister of India S Jaishankar recently launched a book titled ‘Reporting India’ in Delhi. It describes the history of India since independence. The book is written by Prem Prakash, Chairman of the Leading news agency, the Asian News International (ANI). He established the agency in the year 1971 and it was the first agency in India to syndicate video news.

3. Who has been conferred with the ‘ASSOCHAM Enterprise of the Century Award’?

[A] Adi Godrej

[B] Mukesh Ambani

[C] Ratan Tata

[D] Uday Kotak

 • The Prime Minister Narendra Modi delivered the keynote address at ASSOCHAM Foundation Week 2020 via video conferencing. During the occasion, he presented the ‘ASSOCHAM Enterprise of the Century Award’ to Ratan Tata, who received the award on behalf of the TATA Group. Ratan Tata served as the Chairman of Tata Sons and Tata Group. He is now heading various Charitable Trusts of the Group.

4. As per IUCN’s recent assessment, which species in the Indian EEZ, are classified as Critically Endangered (CE)?

[A] Sharks, Rays and Chimaeras

[B] Great Indian Bustards

[C] Black Buck Antelopes

[D] Blackshell Turtles and Himalayan Serow

 • The International Union for Conservation of Nature (IUCN)’s Shark Specialist Group conducted an assessment of sharks, rays and chimaeras in the Indian Exclusive Economic Zone (EEZ). As per the assessment, out of the 170 species found across the oceans of the country, 19 species, which is about 11%, are classified as Critically Endangered (CE) and are facing high risk of extinction.

5. What is the name of the automobile fuel that has 20% ethanol and 80% gasoline?

[A] Aviation Turbine Fuel

[B] Petrol

[C] Bio – Petrol

[D] E20 Fuel

 • The Government of India has recently proposed to adopt E20 fuel in Indian automobiles. The E20 fuel is a blend of 20% ethanol and 80% gasoline. This move is aimed at reducing the vehicular emissions and at the same time bring down the crude oil import cost of the country.

6. What is “Shinkansen” that was making the news recently?

[A] Buddhist Monument

[B] High Speed Train

[C] COVID Vaccine

[D] New Planet

 • Recently, the Embassy of Japan in India has rolled out some images of E5 series Shinkansen – High speed bullet trains used in Japan, which would be modified for use in Mumbai–Ahmedabad High–Speed Rail (MAHSR) project. Once the project is completed, the travel time between Mumbai and Ahmedabad would be reduced to 2 hours. The project is expected to be completed by 2023.

7. Which is the state bird of Uttar Pradesh, that has been adopted as new logo of NOIDA international airport?

[A] Sparrow

[B] Lesser Falcon

[C] Sarus Crane

[D] Peacock

 • The new green field airport that is being constructed at Jewar of Uttar Pradesh has been named NOIDA international airport. The new logo of the airport contains a Sarus Crane, which is the state bird of Uttar Pradesh. The contract to construct the airport has been awarded to Zurich Airport International AG. The first phase of the airport is expected to be functional by 2024.

8. The National Farmers’ Day is celebrated on which date?

[A] December 21

[B] December 22

[C] December 23

[D] December 24

 • The National Farmer’s Day is celebrated every year in India on December 23 to acknowledge the role of farmers in India’s socio–economic development and to mark the birth anniversary of 5th Prime Minister Late Chaudhary Charan Singh. He used to be referred to as the ‘Champions of India’s peasants’ for his strive for the betterment of farmer’s lives in the country. The day is popularly known as ‘Kisan Diwas’.

9. Which state government has inaugurated ‘Farmer Registration and Unified Beneficiary Information System (FRUITS) Portal for farmers?

[A] Madhya Pradesh

[B] Uttar Pradesh

[C] Himachal Pradesh

[D] Karnataka

 • The state government of Karnataka has inaugurated the ‘Farmer Registration and Unified Beneficiary Information System (FRUITS), an e–Governance Portal for farmers. It aims to create a single repository of all details of the farm lands and farm loans of all farmers of the state. Farmers will be given an identification number on the portal, using which banks can access the details before lending. Canara Bank is set to run FRUITS portal on a pilot basis.

10. A Committee to commemorate the 125th birth anniversary of Netaji Subhas Chandra Bose, is to be constituted under which Minister?

[A] Rajnath Singh

[B] Amit Shah

[C] S Jai Shankar

[D] Piyush Goyal

 • The Indian Government has decided to constitute a High–Level Committee to commemorate the 125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose. The Committee headed by Union Home Minister Amit Shah will work on the activities for a yearlong commemoration starting 23rd January, 2021. Other members of the Committee will include historians, authors, family members of Netaji, as well as persons associated with Azad Hind Fauj–INA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *