TnpscTnpsc Current Affairs

23rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ரிப்போர்ட்டர்ஸ் வித்தௌட் பார்டர்ஸின் ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் பத்திரிகையாளர்களை அதிகம் சிறைபிடிக்கும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) வட கொரியா

இ) சீனா 

ஈ) பாகிஸ்தான்

  • ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்சின் சமீபத்திய அறிக்கை, தற்போது குறைந்தபட்சம் 127 நிருபர்கள் தடை செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் பத்திரிகை -யாளர்களை அதிகம் சிறைபிடிக்கும் நாடு சீனா எனக் கூறியுள்ளது. ‘The Great Leap Backwards of Journalism in China’ என்ற தலைப்பிலான அவ்வறிக்கை, கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சீனாவின் மீறல்களை வெளிப்படுத்துகிறது.
  • COVID-19 நெருக்கடியைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்த -தற்காக 2020இல் குறைந்தது 10 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

2. BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் யார்?

அ) K ஸ்ரீகாந்த் 

ஆ) பருப்பள்ளி காஷ்யப்

இ) சாய் பிரனீத்

ஈ) நந்து நடேகர்

  • இந்திய பேட்மிண்டன் சாம்பியனான கே ஸ்ரீகாந்த், BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரை சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் கெடுவாய்ப்பாக, கே ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டியில் சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
  • கே ஸ்ரீகாந்த், கடந்த 2018 ஏப்ரலில் BWF தரவரிசையில் உலகின் நம்பர்.1 இடத்தைப் பிடித்தார். மேலும் 2015’இல் அர்ஜுனா விருது மற்றும் 2018’இல் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளார்.

3. சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தனியார் பயணியான யுசாகு மேசாவாவை அனுப்பிய விண்வெளி அமைப்பு எது?

அ) NASA

ஆ) ISRO

இ) ROSCOSMOS 

ஈ) ESA

  • ஜப்பானிய கோடீசுவரரான யுசாகு மேசாவா, இரஷ்ய விண்வெளி நிறுவனமான ROSCOSMOSமூலம் டிச.8 அன்று சோயுஸ் விண்கலத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 12 நாட்கள் தங்கியிருந்த பின் அவர் பூமிக்கு திரும்பியுள்ளார். எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்X உடன் 2023ஆம் ஆண்டு நிலவுக்குச்செல்லும் அவரது பயணத்தி -ற்கான வெற்றிகரமான பரிசோதனை ஓட்டமாகும் இது.

4. 2021 டிச.20-25 வரையிலான வாரம் இந்தியாவில் என்னவாக கடைப்பிடிக்கப்படுகிறது?

அ) நல்லாட்சி வாரம் 

ஆ) ஊழலுக்கு எதிரான வாரம்

இ) வங்கி விழிப்புணர்வு வாரம்

ஈ) பஞ்சாயத்து ராஜ் வாரம்

  • இந்திய அரசு 2021 டிச.20-25 வரையிலான தேதிகளை ‘நல்லாட்சி வார’மாகக் கொண்டாடுகிறது.
  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை, பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து, ‘நல்லாட்சி’பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது. மேலும், ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘பிரஷாஷன் கௌன் கி ஔர்’ என்ற பெயரில் ஒரு பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது. இது சேவை வழங்கலை மேம்படுத்துதல் & பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

5. 2021 நதி உத்சவமானது இந்தியாவில் எத்தனை கருப் பொருள்களின்கீழ் கொண்டாடப்படுகிறது?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு 

ஈ) ஆறு

  • நதி உத்சவம் (ஆறு திருவிழா) இந்தியாவில் உத்தரகாசி முதல் கேரளா வரை பதினாறு மாநிலங்கள் மற்றும் 41 மாவட்டங்களில் தூய்மை, தேசபக்தி, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல், பக்தி மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு கருப்பொருள்களின்கீழ் கொண்டாடப்படுகிறது.
  • 2021 டிசம்பர்.16-23 வரை இந்த விழா நடத்தப்படுகிறது. நதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆற்றுத்திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் ‘மான் கி பாத்’தில் ஆற்றிய உரைக்கு இணங்க இது அமைந்துள்ளது.

6. கேப்ரியல் போரிக், எந்த நாட்டின் இளவயது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) சிலி 

ஆ) அர்ஜென்டினா

இ) நியூசிலாந்து

ஈ) இஸ்ரேல்

  • 35 வயதான இடதுசாரி மில்லினியல் கேப்ரியல் போரிக் சிலியின் இளம் அதிபரானார். எல் சால்வடாரின் நயிப் புக்கேலுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் தலைமை தாங்கும் இரண்டாவது மில்லினியல் ஆவார் இவர்.

7. மனிதர்களுக்கு பாதிப்பற்ற ஆனால் பாக்டீரியாவைக் கொல்லும் வைரஸ்களைப் பயன்படுத்தும் சிகிச்சையின் பெயர் என்ன?

அ) பேஜ் சிகிச்சை 

ஆ) வைரஸ் சிகிச்சை

இ) ஆண்டிபயாடிக் சிகிச்சை

ஈ) நுண்ணுயிர் சிகிச்சை

  • ‘பேஜ் சிகிச்சை’ என்பது மனிதர்களுக்கு பாதிப்பற்ற ஆனால் பாக்டீரியாவைக் கொல்லும் வைரஸ்களை (பேஜ் என அறியப்படுகிறது) பயன்படுத்துவதாகும்.
  • புதியதோர் ஆராய்ச்சியின்படி, இச்சிகிச்சையானது நோய்த் தொற்றுகளை மிகவும் திறம்பட குணப்படுத்துவதற்காக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம். இது எதிருயிரி எதிர்ப்புத் தன்மையின் அச்சுறுத்தலைக் குறைக்கும்.

8. சுய-உதவி குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதியை வழங்கும் திட்டம் எது?

அ) பிரதமர் ஸ்வச் பாரத் அபியான்

ஆ) தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய கிராமப் புற வாழ்வாதார இயக்கம் 

இ) PM கதி சக்தி யோஜனா

ஈ) PM SHG சம்ரித்தி அபியான்

  • தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ், சுய உதவி குழுக்கள் சமூக முதலீட்டு நிதியைப் பெறுகின்றன.
  • சமீபத்தில், சுமார் 16 இலட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில், பிரதமர் மோடி `1,000 கோடியை சுய-உதவி குழுக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தார். இது DAY-NRLM திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது.

9. ‘முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா திட்டம்’ என்பது எந்த மாநிலத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்?

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம் 

  • ‘முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா திட்டம்’ உத்தர பிரதேச மாநிலத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு பெண் குழந்தைக்கு அவளது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் `15,000 நிதியுதவியை நிபந்தனையுடன் வழங்குகிறது. `15,000 தொகையானது ஒரு பயனாளிக்கு அவர் பிறக்கும்போது, ஓராண்டு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன், வகுப்பு-I, வகுப்பு-VI மற்றும் வகுப்பு-IX சேர்க்கையின்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு XII அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (அ) டிப்ளமோ படிப்பில் சேரும்போது எனப் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.

10. Tseminyu, Niuland மற்றும் Chumukedima ஆகியவை கீழ்காணும் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் ஆகும்?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) நாகாலாந்து 

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • நாகாலாந்து மாநில அரசாங்கம் சேமின்யு, நியுலாந்து மற்றும் சுமுகேதிமா என மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 15ஆக மாறியுள்ளது.
  • நாகாலாந்து மாநில ஆளுநர் ஜகதீஷ் முகி, கோஹிமா மாவட்டத்தின்கீழ் சேமின்யு உட்பிரிவு, திமாபூர் மாவட்டத் -தின்கீழ் நியுலாந்து உட்பிரிவு மற்றும் சுமுகேதிமா துணைப்பிரிவு ஆகியவற்றை அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் – மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

இதனை கருத்தில்கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாக பணிகளைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.

தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23-ந் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உள்பட) மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவானர் அரங்கத்தில்” இன்று வைக்கப்பட உள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா அபார சாதனை: யுனிகார்ன் ஸ்டார்ட்அப்பில் உலக அளவில் 3-வது இடம்; பிரிட்டனை முந்தியது

54 யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பிரிட்டனை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

1 பில்லியன் டாலர் அதாவது 100 கோடி டாலர்களுக்கு மேல் மதிப்பைக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் என அழைக்கப்படுகின்றன. 2021-ல் அக்டோபர் மாதம் வரையில் மட்டும் இந்தியாவில் 30 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன. 2011-2014 வரையில் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு நிறுவனம் யுனிகார்ன் பட்டியலில் இணைந்தது. 2015-ல் அந்த எண்ணிக்கை நான்காக ஆனது.

2018-க்குப் பிறகு யுனிகார்ன் பட்டியலில் இணையும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2018-ல் 8, 2019-ல், 9, 2020-ல் 10 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்தன. இந்த ஆண்டு 30 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன.

இதன் மூலம் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்திருக்கிறது.

இதுகுறித்து ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

54 யுனிகார்ன்களுடன் பிரிட்டனை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் தற்போது 54 யுனிகார்ன்கள் உள்ளன. 2020 இல் இருந்ததை விட 33 யுனிகார்ன்கள் அதிகம். அதே நேரத்தில் இங்கிலாந்தில் தற்போது 39 யுனிகார்ன்கள் உள்ளன, இது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட 15 அதிகமாகும்.

யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 396 யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டு முதல் இடத்திலும், சீனா 277 நிறுவனங்களைக் கொண்டு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து (32) நான்காவது இடத்திலும், ஜெர்மனி (18) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்களில் பேடிஎம், போன்பே, இகாமர்ஸில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், மீஸோ, கல்வித் துறையில் பைஜூஸ், அன்அகாடமி, போக்குவரத்து சேவையில் ஓலா கேப்ஸ், விடுதி சேவையில் ஓயோ, கேமிங்கில் டீரீம் 11 என கடந்த பத்தாண்டுகளில் யுனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன.

இதில் பைஜூஸ் மற்றும் பேடிஎம் 15 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக மாறியுள்ளன. பைஜூஸ் இப்போது உலகின் 15 வது மிகவும் மதிப்புமிக்க யுனிகார்ன் ஆகும், அதே நேரத்தில் இன்மோபி 28 வது மிகவும் மதிப்புமிக்க யுனிகார்ன் ஆகும். இது நாட்டின் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க தொடக்கமாகும்.

உலகளவில் யுனிகார்ன்களின் வரலாற்றில் 2021 ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் யுனிகார்ன்களின் எண்ணிக்கை வெறும் 568 இல் இருந்து 1,058 ஆக உயர்ந்துள்ளது. 2020 இல் 79% இல் இருந்து 74% ஆகக் குறைந்துள்ளது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு வெளியே உள்ள நாடுகளில் உள்ள நிறுவனங்களின் நிதி சேகரிப்பு வேகத்தை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பெங்களூரில் யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன. அதற்கு அடுத்த இடத்தில் மும்பை இருக்கிறது. இந்த ஆண்டு யுனிகார்ன் பட்டியலில் இணைந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் பெங்களூரையும் 7 நிறுவனங்கள் மும்பையையும் தலைமையிடமாகக் கொண்டவை. பாஸ்டன், பாலோ ஆல்டோ, பாரிஸ், பெர்லின், சிகாகோ போன்ற நகரங்களை விட பெங்களூரில் அதிக யுனிகார்ன்கள் இருக்கின்றன.

இதுமட்டுமின்றி இந்தியர்கள் வெளிநாடுகளிலும் யுனிகார்ன் நிறுவனங்களை தொடங்கி சாதனை படைத்து வருகின்றனர்.

சீனா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா. அறிக்கையின்படி, போஸ்ட்மேன், இன்னோவாக்கர், ஐசெர்டிஸ், மோக்லிக்ஸ் உள்ளிட்ட 65 யுனிகார்ன்களை இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நிறுவியுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. சேதி தெரியுமா?

டிச.12: பிரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுவது தொடர்பாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ காலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர மக்கள் ஆதரவளித்தனர்.

டிச.14: பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

டிச.15: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழகம் வந்த 47 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.

டிச.15: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயத்துடன் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். இதன்மூலம் விபத்தில் பலினானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தது.

டிச.16: 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தைப் பிரிக்கும் வகையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

டிச.16: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்தும் அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டிச.16: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

டிச.17: சூரியனை ஆய்வுசெய்ய முதன் முறையாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நுழைந்து புதிய அத்தியாயம் படைத்திருக்கிறது.

டிச.17: ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

4. ‘ப்ரலே’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக்கூடிய ‘ப்ரலே’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) முதன்முறையாக செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து முதன்முறையாக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்தச் சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியது. இந்தப் புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை திட எரிபொருள் ராக்கெட் மோட்டாா் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இயங்கக் கூடியது. இது 150 முதல் 500 கிலோ மீட்டா் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்பதோடு நடமாடும் சாதனத்திலிருந்து செலுத்தக் கூடியதாகும்.

விஞ்ஞானிகளின் இந்தச் சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

5. ஆசிய ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் பெற்றது

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

நடப்புச் சாம்பியனான இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை தனது அரையிறுதியில் ஜப்பானிடம் 3-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், 3-ஆவது இடத்துக்காக பாகிஸ்தானை புதன்கிழமை சந்தித்தது.

முன்னதாக பாகிஸ்தானும் தனது அரையிறுதியில் தென் கொரியாவிடம் 5-6 என்ற கணக்கில் தோற்று இந்த ஆட்டத்துக்கு வந்திருந்தது. இந்தியா தனது லீக் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்த ஆட்டத்துடன் ஒப்பிடுகையில், வெண்கலப் பதக்கத்துக்கான இந்த ஆட்டத்தில் இந்தியா கடுமையாகப் போராடும் நிலை இருந்தது. அணிக்கு 11 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் இரண்டையே இந்தியாவால் கோலாக மாற்ற முடிந்தது.

தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் தடுப்பாட்டத்துக்கு நெருக்கடி கொடுத்தது இந்தியா. அதன் பலனாக முதல் நிமிஷத்திலேயே வரிசையாக 4 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் கடைசி வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா் துணை கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்.

தொடா்ந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு வளையத்தை பலமுறை ஊடுருவிச் சென்றாலும், துல்லியமான கோல் வாய்ப்பை இந்திய அணியால் உருவாக்க முடியாத நிலை இருந்தது. நேரம் செல்லச் செல்ல தனது ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான், 10-ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது.

இந்தியாவின் தடுப்பாட்டத்தில் ஹா்மன்பிரீத் செய்த சிறு தவறை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் வீரா் அஃப்ராஸ், இந்திய கோல்கீப்பா் கிருஷண் பகதூா் பாதக்கை கடந்து கோலடித்தாா். சிறிது நேரத்திலேயே இந்தியாவுக்கு 5-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தாலும், அதில் ஹா்மன்பிரீத் மேற்கொண்ட கோல் முயற்சியை பாகிஸ்தான் தடுப்பாட்ட வீரா்கள் தடுத்தனா்.

14-ஆவது நிமிஷத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற விடாமல் முறியடித்தாா் கோல்கீப்பா் கிருஷன் பகதூா். 2-ஆவது கால்மணி நேர ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்தியாவின் பல கோல் முயற்சிகளுக்கு பாகிஸ்தானின் மாற்று கோல்கீப்பராக வந்த அம்ஜத் அலி அணை போட்டாா்.

22-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கான பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஹா்மன்பிரீத் கோலடிக்க முயல, அம்ஜத் அலி அதை தடுத்தாா். 4 நிமிஷங்களுக்குப் பிறகு ஆகாஷ் தீப் சிங் ரிவா்ஸ் ஹிட் முறையில் ஒரு கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, அதுவும் அம்ஜத் அலியை கடக்க முடியாமல் போனது. பின்னா் இந்தியாவின் 7-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பிலும் ஜா்மன்பிரீத் சிங்கை கோலடிக்க விடாமல் செய்தாா் அம்ஜத்.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் சமனிலையில் முடிந்தது. 33-ஆவது நிமிஷத்தில் பாகிஸ்தானின் 2-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பில் அப்துல் ராணா கோலடிக்க, அந்த அணி முன்னிலை பெற்றது. அதே நிமிஷத்தில் அப்துல் ராணா ஒரு ஃபீல்டு கோலுக்கும் முயற்சிக்க, அது கோல்போஸ்டில் பட்டு வீணானது.

இந்நிலையில், ஆட்டத்தின் 45-ஆவது நிமிஷத்தில் குா்சாஹிப்ஜித் சிங் அருமையாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, அதில் தவறாமல் கோலடித்த சுமித், ஆட்டத்தை 2-2 என சமன் செய்தாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. இந்தியாவுக்கு அதிக கோல் வாய்ப்புகள் கிடைத்தும் பாகிஸ்தான் அதில் பலன் கிடைக்க விடாமல் தடுத்தது.

எனினும் 53-ஆவது நிமிஷத்தில் கிடைத்த இரு பெனால்டி காா்னா் வாய்ப்புகளில் ஒன்றை வருண் குமாா் கோலாக மாற்ற, இந்தியா முன்னிலை பெற்றது. தொடா்ந்து பாகிஸ்தானுக்கும் இரு பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் திறம்படத் தடுத்தாா்.

57-ஆவது நிமிஷத்தில் லலித் யாதவ் பாஸ் செய்த பந்தை ஆகாஷ்தீப் சிங் கோலடிக்க இந்தியா 4-2 என முன்னேறியது. ஆனால், அதே நிமிஷத்தில் பாகிஸ்தான் வீரா் அகமது நதீமும் கோலடிக்க, அந்த அணி 3-4 என நெருங்கியது. எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தான் ஸ்கோா் செய்ய முடியாததால், இறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி தென் கொரிய அணி சாம்பியன் ஆனது. முன்னதாக அந்த இரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3}3 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட “ஷூட் அவுட்’ முறையில் தென் கொரியா 4}2 என்ற கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக லீக் சுற்றில் தனது அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா, தென் கொரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை மட்டும் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1. As per a recent report by Reporters Without Borders (RSF), which country is the world’s biggest captor of journalists?

A) India

B) North Korea

C) China 

D) Pakistan

  • A recent report by Reporters Without Borders (RSF) has said China is the world’s biggest captor of journalists with at least 127 reporters detained at present. The report titled ‘The Great Leap Backwards of Journalism in China’ reveals China’s violations against its international commitments to freedom of opinion and expression.
  • At least ten journalists were arrested in 2020 for informing public about the COVID–19 crisis.

2. Who is the first Indian male badminton player, to reach the finals of BWF World badminton championship?

A) K Srikanth 

B) Parupalli Kashyap

C) Sai Praneeth

D) Nandu Natekar

  • Indian badminton champion K Srikanth has become the very first Indian man to reach the final match of BWF World badminton championship. But unfortunately, K Srikanth lost against Singapore’s Loh Kean Yew at the final match and ended up winning a silver–medal. K Srikanth was ranked world number 1 at the BWF ranking in April 2018 and is the recipient of Arjuna award in 2015 and Padma Shri in 2018.

3. Which space agency had launched Yusaku Maezawa, the first private passenger to the international space station, recently?

A) NASA

B) ISRO

C) ROSCOSMOS 

D) ESA

  • Yusaku Maezawa, a Japanese billionaire was launched to the international space station by Russian space agency, ROSCOSMOS on December 8 in a Soyuz Spacecraft. He has returned to earth after spending 12 days on the International Space Station.
  • The landing completed a successful test run for his 2023 flight to the Moon with Elon Musk’s SpaceX.

4. The week from December 20–25 ,2021 would be observed in India as?

A) Good Governance Week 

B) Anti–Corruption Week

C) Banking Awareness Week

D) Panchayati Raj Week

  • The Government of India would be celebrating December 20–25 ,2021 as ‘Good Governance’ week. The Department of Administrative Reforms and Public Grievance (DARPG), in association with various departments and ministries, would convene many events to create awareness about ‘Good Governance’. Also, a campaign named ‘Prashashan Gaon Ki Aur’, is planned as part of the ‘Azadi Ka Amrit Mahotsav’ celebration, aimed at improving service delivery and redressal of public grievances.

5. Under how many themes, the Nadi Utsav 2021 is being celebrated in India?

A) Two

B) Three

C) Four 

D) Six

  • The Nadi Utsav (River Festival) is being celebrated in India across 16 states and 41 districts from Uttarkashi to Kerala, under the four chosen themes of Cleanliness, Patriotism, Nature and Ecology, Devotion and Spirituality.
  • The festival is being conducted from 16th Dec to 23rd Dec 2021. This is in line with the Prime Minister’s speech in Man Ki Bath, urging all people living near rivers to celebrate a river festival at least once in a year.

6. Gabriel Boric, has been selected as the youngest President of which country?

A) Chile 

B) Argentina

C) New Zealand

D) Israel

  • 35–year–old leftist millennial Gabriel Boric became the youngest President of Chile. He is also the second millennial to lead in Latin America, after El Salvador’s Nayib Bukele.

7. What is the name of the treatment which uses viruses that are harmless to humans but kill bacteria?

A) Phage therapy 

B) Viral therapy

C) Antibiotic therapy

D) Microbe therapy

  • Phage therapy is the concept of using viruses (known as phage) that are harmless to humans but kill bacteria. As per new research, this therapy can be used in combination with antibiotics to cure infections more effectively. It will in turn reduce the threat of antibiotic resistance.

8. Which scheme provides Community Investment Fund to Self help groups?

A) PM Swachch Bharat Abhiyan

B) Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission 

C) PM Gati Shakti Yojana

D) PM SHG Samridhdhi Abhiyan

  • Under the Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission (DAY–NRLM), Self help groups (SHGs) receive the Community Investment Fund (CIF). Recently, Prime Minister Narendra Modi transferred ₹1,000 crore to bank accounts of self–help groups to benefit around 16 lakh women. This transfer is being done under the DAY–NRLM scheme.

9. ‘Mukhya Mantri Kanya Sumangala Scheme’ is a scheme implemented by which state?

A) Bihar

B) Gujarat

C) Madhya Pradesh

D) Uttar Pradesh 

  • ‘Mukhya Mantri Kanya Sumangala Scheme’ is implemented by the state of Uttar Pradesh. The scheme provides conditional cash transfer of a sum of Rs 15000, to a girl child at different stages of her life. The sum of ₹ 15,000 per beneficiary are provided at various stages including at birth, on completing one–year complete vaccination, on admission in class–I, class–VI and class–IX, on admission in any degree/ diploma course after passing class X or XII.

10. Tseminyu, Niuland and Chumukedima are the newly created districts of which state?

A) Assam

B) Sikkim

C) Nagaland 

D) Arunachal Pradesh

  • Nagaland government has created three new districts in the state– Tseminyu, Niuland and Chumukedima, taking the total number of districts to 15. The Governor of Nagaland Jagdish Mukhi announced the Tseminyu subdivision under Kohima district, Niuland subdivision under Dimapur district, and Chumukedima sub–division into three new districts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!