23rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. எந்த மத்திய அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப் பின்னர், சிறார் நீதிச்சட்டம், 2015 சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது?

அ) நலவாழ்வு & குடும்பநல அமைச்சகம்

ஆ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) சட்ட அமைச்சகம்

ஈ) சமூக நீதி அமைச்சகம்

 • சிறார்கள் நலனை உறுதிசெய்ய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் சிறார்கள் பாதுகாப்பு) சட்டம், 2015இல் திருத்தங்கள் செய்வதற்கான, பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • சிறார் நீதிச்சட்டங்களை எளிதாக அமல்படுத்தவும், துயரமான சூழ்நிலைகளில் உள்ள சிறார்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நீதிபகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

2. புலம்பெயர்ந்தோர் மற்றும் வீட்டுதொழிலாளர்கள் உள்ளிட்ட அகில இந்திய ஆய்வுகளை நடத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

இ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

 • தொழிலாளர் & வேலைவாய்ப்பு பற்றிய அகில இந்திய கணக்கெடுப்புக்
  -கான செயலி, பயிற்சித்திட்டம், அறிவுறுத்தல் கையேடு மற்றும் கேள்வித் தாள் ஆகியவற்றை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வர் வெளியிட்டார்.
 • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுவேலைசெய்யும் தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பு, போக்குவரத்து துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் வேலை வாய்ப்புபற்றிய காலாண்டு கணக்கெடுப்பு ஆகியவற்றை நாடு முழுவதும் தொழிலாளர் அலுவலகம் நடத்துகிறது.

3. 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) ஹைதராபாத்

இ) திருவனந்தபுரம்

ஈ) நாகர்கோவில்

 • மர நாள் அறக்கட்டளை மற்றும் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தை 2020ஆம் ஆண்டுக்கான உலக மர நகரமாக அங்கீகரித்துள்ளன. உலகளவில் 51 நகரங்களுடன் இணைந்து இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஒரே இந்திய நகரம் இதுதான். ‘ஹரிதா ஹரம்’ என்பது தெலுங்கானா மாநிலத்தின் மரம் நடு இயக்கம் ஆகும். இது, காடுகளை உருவாக்கவும் பராமரிக்கவும் செய்கிறது.

4. 2021 ஐநா காலநிலை மாற்ற மாநாட்டிற்கு (COP-26) தலைமை தாங்கும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஐக்கியப்பேரரசு

ஈ) ஆஸ்திரேலியா

 • COP-26 என்றும் அழைக்கப்படுகிற 2021 ஐநா காலநிலை மாற்றத்துக் -கான மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2021 நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஐக்கியப் பேரரசின் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், COP-26’இன் தலைவருமான அலோக் சர்மா, புதுதில்லியில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

5. எந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி பணிநீக்கம் செய்யப்பட்டார்?

அ) புதுச்சேரி

ஆ) அந்தமான் & நிகோபார்

இ) இலட்சத்தீவுகள்

ஈ) லடாக்

 • இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

6. ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் அதன் முதல் உற்பத்திப்பிரிவைத் தொடங்கவுள்ள நிறுவனம் எது?

அ) மைக்ரோசாப்ட்

ஆ) சாம்சங்

இ) அமேசான்

ஈ) ஆப்பிள்

 • இந்தியாவில் உற்பத்தி சாதனங்களைத் தொடங்கத்தயாராக இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் முதல் அமேசான் உற்பத்திப் பிரிவாகும்.
 • அமேசான் நிறுவனமானது சென்னையில், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜியுடன் இணைந்து இந்த உற்பத்திப்பிரிவைத்தொடங்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, ஆண்டுதோறும் பல இலட்சம் ‘Fire TV Stick’ சாதனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக்கொண்ட இந்த உற்பத்திப்பிரிவு, தமிழ்நாட்டில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எண்ணப்படுகிறது.

7. கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குவதற்கு, ஜல் ஜீவன் திட்டம் நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு என்ன?

அ) 2022

ஆ) 2023

இ) 2024

ஈ) 2030

 • 2024ஆம் ஆண்டுக்குள் கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி, 2019 ஆக.15 அன்று தொடங்கிவைத்தார். தற்போது 3.53 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • கடந்த 2019 ஆக.15 நிலவரப்படி, மொத்தமிருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது 6.76 கோடி (35.24 சதவீதம்) கிராம வீடுகளுக்கு குழாய்மூலம் தண்ணீர் கிடைக்கிறது. 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புபெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது.

8. அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்த டெம்கே மெகோனென், எந்த நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமாவார்?

அ) நைஜீரியா

ஆ) எத்யோப்பியா

இ) சாட்

ஈ) பொலிவியா

 • எத்யோப்பிய துணைப்பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டெம்கே மெகோனென் ஹாசன் அண்மையில் புது தில்லிக்கு வருகைதந்தார். புது தில்லியில் உள்ள எத்தியோப்பிய தூதரகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய உயர்சேவையகத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கருடன் இணைந்து அவர் திறந்துவைத்தார்.

9. குலாம்நபி ஆசாத்தை அடுத்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ளவர் யார்?

அ) மல்லிகார்ஜுன் கார்கே

ஆ) ஆனந்த் சர்மா

இ) ஜெய்ராம் ரமேஷ்

ஈ) A K ஆண்டனி

 • மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு மாநிலங்களவைத்தலைவர் M வெங்கையா அங்கீகாரம் வழங்கியுள்ளார். இவருக்குமுன் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சரான மல்லிகார்சுன் கார்கே, இதற்கு முன்பு மக்களவையில் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.

10. 2021 பிப்ரவரி மாத நிலவரப்படி, எத்தனை துறைகளுக்கான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 13

 • தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக `12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தயாரிப்புகளுள் சுவிச்சுகள், திசைவிகள், ரேடியோ அணுகல் நெட்வொர்க், கம்பியில்லா உபகரணங்கள் மற்றும் பிற இணைய உலக (IoT) அணுகல் சாதனங்கள் ஆகியவை அடங்கும். இதன்மூலம், மொத்தத்துறைகளின் எண்ணிக்
  -கை பதிமூன்றாக மாறியுள்ளது. இதற்கான ஊக்குவிப்பு சலுகைகள் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை இருக்கும்.

1. The Juvenile Justice Act, 2015 was approved recently, after the proposal of which Union Ministry?

A) Ministry of Health & Family Welfare

B) Ministry of Women & Child Development

C) Ministry of Law

D) Ministry of Social Justice

 • The Union Cabinet on Wednesday approved a set of amendments to the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015. This was the proposal of the Ministry of Women and Child Development.
 • The amendments include empowering the District Magistrates (DM) and the additional DMs to monitor the functioning of agencies, which are implementing the act.

2. Which Union Ministry conducts all–India surveys including on migrant and domestic workers?

A) Ministry of Home Affairs

B) Ministry of Skill Development

C) Ministry of Labor & Employment

D) Ministry of Rural Development

 • Union Labour Minister Santosh Gangwar is to launch software applications for five all India surveys, being conducted by the Labour Bureau.
 • The Ministry will also release instruction manuals with questionnaire for five All India Surveys including All India Survey on Migrant workers, All India Survey on Domestic Workers, All India Survey on Employment Generated by Professionals, All India Survey on Employment Generated in Transport Sector, and All–India Quarterly Establishment based Employment Survey.

3. Which is the only Indian city to have been recognised as a 2020 Tree City of the World?

A) Chennai

B) Hyderabad

C) Thiruvananthapuram

D) Nagercoil

 • The Arbor Day Foundation and the Food and Agriculture Organization have recognised Hyderabad as the 2020 Tree City of the World. This is the only city in India to have earned this honour, along with 51 cities globally. Haritha Haram is the tree plantation drive of the Telangana state, which made the city to grow and maintain urban forests.

4. Which country holds the presidency of the 2021 United Nations Climate Change Conference (COP–26)?

A) India

B) United States of America

C) United Kingdom

D) Australia

 • The 2021 United Nations Climate Change Conference of the Parties, also known as COP26, is scheduled to be held in Glasgow, Scotland, in November 2021. The event is to be held under the presidency of the United Kingdom. British MP and President–designate of COP–26, Alok Sharma called on Indian Prime Minister Narendra Modi in New Delhi.

5. Kiran Bedi has been removed as the Lieutenant Governor of which UT?

A) Puducherry

B) Andaman & Nicobar Islands

C) Lakshadweep

D) Ladakh

 • As per a communication issued by the President Ramnath Kovind, Puducherry Lieutenant Governor Kiran Bedi was removed from her post. This step has been taken amid a political crisis in the Puducherry Union territory. The additional charge of the UT has been given to the Telengana Governor Tamilisai Soundhararajan.

6. Which multi–national company is to start its 1st manufacturing line in India, along with a subsidiary of Foxconn?

A) Microsoft

B) Samsung

C) Amazon

D) Apple

 • Amazon has announced that it is set to begin manufacturing devices in India. This is the first Amazon manufacturing line in India. Amazon will begin manufacturing with Cloud Network Technology, a subsidiary of Foxconn, in Chennai. Beginning later this year, the programme aims to manufacture several lakhs of ‘Fire TV Stick’ devices every year, generating additional jobs in Tamil Nadu.

7. What is the target year of the Jal Jeevan Mission, to provide tap water connection to every rural household?

A) 2022

B) 2023

C) 2024

D) 2030

 • The Jal Jeevan Mission was launched by the Prime Minister Narendra Modi on 15th August, 2019. It aims to provide tap water connection to every rural household by 2024. Recently, the scheme has reached a new milestone by providing 3.53 Crore rural household tap water connections. 35.24% of rural households receive potable water through taps, against only 17% in 2019.

8. Demeke Mekonnen, who arrived in New Delhi recently, was the Deputy Prime Minister & Foreign Minister of which country?

A) Nigeria

B) Ethiopia

C) Chad

D) Bolivia

 • Ethiopian Deputy Prime Minister and Minister of Foreign Affairs Demeke Mekonnen Hassen arrived in New Delhi. He inaugurated the new Chancery and Residence at Ethiopian Embassy in New Delhi along with External Affairs Minister of India Dr. S. Jaishankar.

9. Who succeeded Ghulam Nabi Azad as the Leader of Opposition in Rajya Sabha?

A) Mallikarjun Kharge

B) Anand Sharma

C) Jairam Ramesh

D) A K Antony

 • Rajya Sabha Chairman M Venkaiah has granted recognition to Mallikarjun Kharge as the Leader of the Opposition in the Rajya Sabha. The Indian National Congress Leader succeeds Ghulam Nabi Azad whose term has ended recently. Mallikarjun Kharge was a former Union minister and had been Congress leader in the Lok Sabha, earlier.

10. The Union Government approved the Production Linked Incentive scheme for how many sectors, as of February 2021?

A) 10

B) 11

C) 12

D) 13

 • The Union Cabinet recently approved a Rs 12,195–crore Production Linked Incentive (PLI) scheme for domestic manufacturing of telecom and networking products.
 • The products include switches, routers, radio access network, wireless equipment and other internet of things (IoT) access devices. With this, the total number of sectors stand at 13, for which incentives of 4 to 6 percent would be provided by the Government.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *