Tnpsc

23rd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலகின் முதல் வணிக ரீதியான சிறிய மட்டு உலையான ‘லிங்லாங் ஒன்’ஐ உருவாக்குகிற நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) ரஷ்யா

ஈ) தென் கொரியா

  • சீனா தனது சாங்ஜியாங் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் உலகின் முதல் வணிக ரீதியான மட்டு சிறிய உலையான ‘லிங்லாங் ஒன்’னின் கட்டுமானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • இதன் கட்டுமானம் முடிந்ததும், சிறிய மட்டு உலைகளின் உற்பத்தித் திறன் 1 பில்லியன் கிலோவாட் மணிநேரத்தை எட்டும். இது சீனாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பல்நோக்கு சிறிய மட்டு உலை, முதன்முதலில், பன்னாட்டு அணுசக்தி முகமையால், கடந்த 2016ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.

2. உலக மலாலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.4

ஆ) ஜூலை.8

இ) ஜூலை.10

ஈ) ஜூலை.12

  • பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலாவின் நினைவாக அவரது பிறந்தநாளான ஜூலை.12ஆம் தேதியை உலக மலாலா நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2012ஆம் ஆண்டில், மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வியை உறுதிசெய்வதற்கு உலக தலைவர்களிடம் முறையீடு செய்யும் நோக்கோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

3. என்செலடஸ் என்பது எந்தக் கோளின் நிலவாகும்?

அ) சனி

ஆ) வியாழன்

இ) வெள்ளி

ஈ) நெப்டியூன்

  • என்செலடஸ் சனியின் ஆறாவது பெரிய நிலவாகும். நாசாவின் காசினி விண்கலம், சமீபத்தில், சனியின் நிலவுகளில் கரியமில வாயு மற்றும் டைஹைட்ரஜனுடன் சேர்ந்து, வழக்கத்திற்கு மாறாக மீத்தேன் செறிவைக்கண்டறிந்துள்ளது.
  • சனியின் மற்றொரு நிலவான டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதையும், என்செலடஸில் வாயு மற்றும் தண்ணீருடன் ஒரு திரவ கடல் இருப்பதையும் அவ்விண்கலம் கண்டறிந்துள்ளது. என்செலடஸில் மீத்தேன் உற்பத்தி செய்யும் செயல்முறைகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

4. தேங்காய் வளர்ச்சி வாரியம் என்பது எந்த அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும்?

அ) உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்

ஆ) வேளாண் அமைச்சகம்

இ) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) எம்.எஸ்.எம்.இ அமைச்சகம்

  • தேங்காய் வளர்ச்சி வாரியம் என்பது மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். இது தேங்காய் & தேங்காய் தொடர்பான பொருட்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக செயல்படுகிறது. தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான திருத்தத்தை தேங்காய் வளர்ச்சி வாரிய சட்டம், 1979‘இல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போதைய நடைமுறையான நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களிலிருந்து ஆறு உறுப்பினர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.

5. ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’ திட்டத்தின் காலம் என்ன?

அ) 1 ஆண்டு

ஆ) 10 ஆண்டுகள்

இ) 20 ஆண்டுகள்

ஈ) 25 ஆண்டுகள்

  • இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு நடுத்தர நீண்டகால கடனளிப்பு வசதி ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளாகும்.
  • ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’யின்கீழ் நிதி வசதி வழங்கும் மத்திய துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய&மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் & சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

6. ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள மாநிலம் எது?

அ) அருணாச்சல பிரதேசம்

ஆ) பஞ்சாப்

இ) ஹரியானா

ஈ) கேரளா

  • கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தொற்றானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொசுக்கடியின்மூலம் பரவுகிறது. பெரும்பாலான வேளைகளில், அறிகுறியற்றதாக உள்ள இது, சில வேளைகளில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் தங்களின் சோதனைகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளன.

7. STI தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) முன்மொழிந்த BRICS உறுப்பு நாடு எது?

அ) பிரேஸில்

ஆ) இந்தியா

இ) ரஷ்யா

ஈ) சீனா

  • அறிவியல், தொழினுட்பம் புத்தாக்க தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) இந்தியா முன்மொழிந்தது. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட BRICS S&T வழிநடத்து குழுவின் 12ஆம் கூட்டத்தின்போது, அனைத்து BRICS நாடுகளும் STI தலைமையிலான செயல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இது ஒருவருக்கொருவர் புத்தாக்க சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்குநர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

8. 50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்த நாடு எது?

அ) சீனா

ஆ) இஸ்ரேல்

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) ஆஸ்திரேலியா

  • ஐக்கியப்பேரரசானது 50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இங்கிலாந்து-இந்தியா மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மே மாதம் நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டின்போது ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து-இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க அவர் இலக்கு நிர்ணயித்தார்.

9. தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) K V காமத்

ஆ) ஷியாம் சீனிவாசன்

இ) பத்மகுமார் மாதவன்

ஈ) M K ஜைன்

  • தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனம் என்னும் மோசமான வங்கியை இந்தியா முறையாக அமைத்து பதிவு செய்துள்ளது. மும்பையில், `74.6 கோடி மூலதனத்துடன் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • இதன் நிர்வாக இயக்குநராக பத்மகுமார் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் SBI’இன் வாரக்கடன்களுக்கு தீர்வுகண்டுள்ளார். இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா இதன் இயக்குநராக இருப்பார். முன்னதாக, பொதுத்துறை வங்கிகள், `89,000 கோடி மதிப்புள்ள 22 மோசமான கடன் கணக்குகளை தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றும்.

10. COVID தடுப்பூசியின் முதல் டோஸை 100 சதவீத மக்களுக்கு செலுத்திய முதல் இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கோவா

ஆ) லடாக்

இ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஈ) புதுச்சேரி

  • லடாக்கில், பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் COVID தடுப்பூசியின் முதல் டோஸை தனது 100 சதவீத மக்களுக்கு செலுத்திய முதல் இந்திய யூனியன் பிரதேசமாக லடாக் ஆனது.
  • அனைத்து சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரையும் உள்ளடக்கியது. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் மூலம், 2021 ஜூலை.14 வரை முப்பத்து எட்டு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கட்டளை பிறப்பிப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத்தொடர்பு அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைக்குப் பிறகு கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது உறுதிசெய்யப்பட்டது. இந்த ஏவுகணையை இந்திய விமானப்படையில் சேர்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் ஏவுகணை (ஆகாஷ்-என்.ஜி.), நிலத்தில் இருந்து 60 கிமீ தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையை 2.5 மாக் வேகம் வரை செலுத்த முடியும். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணையை DRDO வடிவமைத்துள்ளது.

2. ‘கரோனாவால் 1.19 லட்சம் இந்திய சிறுவர்கள் ஆதரவு இழப்பு’

கரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவில் 1.19 லட்சம் சிறுவர்கள் ஆதரவற்றவர்களாகியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார நிறுவனத்தின் ஓர் அங்கமான தேசிய போதைப்பழக்கம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா பாதிப்பால் உலகின் 21 நாடுகளில் பதினைந்து லட்சம் சிறுவர்கள் தங்களுக்கு ஆதரவளித்து வந்தவர்களை இழந்துள்ளனர். அவர்களில் 1.19 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

நாட்டில் 25,500 சிறுவர்கள் தங்களது தாயையும் 90,751 சிறுவர்கள் தங்களது தந்தையையும் கரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனர். 12 சிறுவர்களது தாய், தந்தை ஆகிய இருவருமே கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் 11.34 லட்சம் சிறுவர்கள் தங்களது தாய் அல்லது தந்தையையோ, தாத்தா பாட்டிகளையோ இழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, 15.62 லட்சம் சிறுவர்கள் தங்களுக்கு ஆதரவளித்து வந்தவர்களில் ஒருவரை கரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. 2032’இல் பிரிஸ்பேனில் நடக்கிறது ஒலிம்பிக் போட்டிகள்

வரும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் நடக்குமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக, கடந்த 2000ஆம் ஆண்டு சிட்னி நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக 1956’இல் மெல்போர்ன் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

டோக்கியோவைத் தொடர்ந்து பாரீஸில் 2024ஆம் ஆண்டும், பின்னர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் 2028ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. ஹைத்தி: புதிய பிரதமர் பொறுப்பேற்பு

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைத்தியின் அதிபர் ஜோவனல் மாய்ஸ் படுகொலை செய்யப்பட்டதால் எழுந்துள்ள பதற்ற சூழலுக்கிடையே, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இதுவரை இடைக்கால பிரதமராக இருந்து வந்த கிளாட் ஜோசப்புக்கு பதிலாக, அந்தப் பொறுப்புக்கு ஏரியல் ஹென்றி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் அந்தப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

5. இன்றுமுதல் ஒலிம்பிக் போட்டிகள்: பதக்க வேட்கையில் 120 இந்தியர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை.23 முதல் தொடங்குகின்றன. இந்த ஒலிம்பிக்கிற்காக இந்தியா 68 ஆடவர், 52 மகளிர் என 120 போட்டியாளர்கள் அடங்கிய குழுவை அனுப்புகிறது. கடந்த 1900ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 28 பதக்கங்களையே அதில் வென்றுள்ளது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால், கடந்த 2008’இல் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா வென்றது மட்டும்தான். இந்த ஒலிம்பிக்கில் தனது பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முனைப்பு காட்டுகிறது இந்திய அணி.

துப்பாக்கிசுடுதலில் களம்காணும் மானு பாகர், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வார், ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவர்கள்தவிர பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி – அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கல் உள்ளிட்டோர், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி வி சிந்து, டென்னிஸில் சானியா மிர்சா ஆகியோரும் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பார்க்கவுள்ளனர்.

தடகள பிரிவில் 18 பேர் தடம்பதிக்கும் முனைப்பில் உள்ளனர். மேலும், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணியும் பதக்க வேட்கையுடன் களம்காண உள்ளன. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், குதிரையேற்றத்தில் பௌவாத் மிர்ஸா ஆகியோர் ஈடுபடுகின்றனர். மேலும் நீச்சல், படகுப் போட்டி என இதர பல விளையாட்டுகளிலும் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக போட்டியாளர்கள்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத் கமல், ஜி சத்தியன், தடகள போட்டியாளர்கள் ஆரோக்கிய இராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், பாய் மரப்படகு போட்டியாளர்கள் நேத்ரா குமணன், கே சி கணபதி, வருண் தக்கர் ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

6. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் வெற்றிக் கொண்டாட்டம்: சென்னையில் நடைபெற்றது

கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நிகழ்வாக சென்னை வந்தடைந்த வெற்றி ஜோதியை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக்கொண்டார்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம் தனி நாடாக விடுதலை பெற்றது. இப்போர் நடைபெற்று 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. புது தில்லியில் உள்ள போர் நினைவு சதுக்கத்தில் நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு நாட்டின் நான்கு திசைகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இதன் ஒரு வெற்றி ஜோதி தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று தற்போது சென்னை வந்தடைந்துள்ளது.

7. பல்லவர் கால லகுலீசர் சிலை உத்திரமேரூரில் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில், பல்லவர் காலத்தை சார்ந்த, கிபி ஏழாம் நுாற்றாண்டு லகுலீசரின் அரிய சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது: ‘லகுலம்’ என்றால் தடி, ‘ஈசம்’ என்றால் ஈஸ்வரன் தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமானே மனித உருவில், 28ஆவது அவதாரமாக உருவெடுத்ததே லகுலீசர் என்பதாகும். சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்திலிருந்து இந்த லகுலீசம் தோன்றியது.

கிபி 2ஆம் நுாற்றாண்டில், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் காரோஹன் என்னுமிடத்தில் தோன்றி, தமிழ்நாட்டில் மூன்றாம் நுாற்றாண்டிற்கு பின், வேர்விடத்துவங்கியது. இதை பின்பற்றுவோர், விபூதியை உடல் முழுதும் பூசி, சாம்பலில் நடனமாடி, லகுலீச பாசுபதம் சார்ந்த கோவில்களில் மட்டுமே இரவில் தங்குவர்.

பல்லவர் காலத்தில் உச்சத்திலிருந்த இந்த லகுலீசம், படிப்படியாக வலுவிழக்க தொடங்கியது. தமிழ்நாட்டில் இதுவரை 20’க்கும் மேற்பட்ட லகுலீசர் உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுதான் முதல் சிலை என்பதால் அரிய சிலை எனக்கூறலாம். இச்சிலை, 95 செமீ உயரம், 65 செமீ அகலம், ஆடை இன்றி சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதை ஊர் மக்கள் சிலர், அம்புரீஸ்வரர் என அழைக்கின்றனர்.

தமழ்நாட்டில் லகுலீச பாசுபத ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களுமான மங்கை வீரராகவன் மற்றும் சுகவன முருகன் ஆகியோர், இதை லகுலீசர் என்பதையும், ஏழாம் நுாற்றாண்டை சார்ந்த பல்லவர்கால சிலை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர். கடந்தகால வரலாற்றை பறைசாற்றும் இந்த அரிய வரலாற்று கலைப் பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

8. மயிலாடும்பாறை அகழாய்வில் மண் குடுவைகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் அண்மையில் மேற்கொண்ட அகழாய்வில் மூன்று கால்களுடன் கூடிய மண் குடுவைகள், மண் குவளை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய பத்து வெவ்வேறு இடங்களில் தற்போது அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், தொகரப்பள்ளி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச்முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கல்திட்டை பகுதியில் உடைந்த நிலையில் 70 செமீ நீளமுள்ள இரும்பு வாளும் நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதே பகுதியில் உள்ள கல் திட்டையில் தற்போது 3 கால்களுடான மண் குடுவைகள், உடைந்த நிலையில் உள்ள மண் குவளை, இரும்புக்கத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:

மயிலாடும்பாறை, சானரப்பன் மலையில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் அடிவாரம் முதல் 1½ கிமீ சுற்றுப்புறப் பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல் திட்டைகளும் கற்குழிகளும் காணப்படுகின்றன. கடந்த 1980, 2003இல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 3 மாத ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 70 செமீ நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண் பானைகளும் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அதே பகுதியில் இறந்தவர்களைப் புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும் 3 கத்தி துண்டுகள், மூன்று கால்களுடன் கூடிய 4 சிறிய மண் குடுவைகள், உடைந்த நிலையில் மண் குவளையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும் என்றார்.

9. சேதி தெரியுமா?

ஜூலை.9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல் மாய்ஸும் அவருடைய மனைவியும் மர்ம நபர்களால் படுகொலைசெய்யப்பட்டனர்.

ஜூலை.9: டெல்டா+ கரோனா வகையைவிட அபாயகரமான ‘லம்படா’ வகை 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை.11: இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.

ஜூலை.11: கோபா-அமெரிக்கக் கால்பந்துபோட்டியின் இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.

ஜூலை.11-12: விம்பிள்டன் கிராண்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டியும் ஆடவர் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச்சும் வென்றனர்.

ஜூலை.12: இலண்டனில் நடைபெற்ற யூரோ கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி கோப்பையை வென்றது.

ஜூலை.14: இதுவரை 431 T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் இரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல்.

ஜூலை.14: 1983’இல் இந்தியா உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த கிரிகெட் வீரர்களில் ஒருவரான யஷ்பால் ஷர்மா (66) காலமானார்.

ஜூலை.15: நீட் தேர்வின் தாக்கம்குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே இராஜன் தலைமையிலான குழு, முதல்வர் மு க ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஜூலை.16: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு தில்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தது.

1. Which country is building LingLong One, the world’s 1st commercial small modular reactor?

A) China

B) Japan

C) Russia

D) South Korea

  • China has officially begun the construction of the world’s first commercial modular small reactor ‘Linglong One’ at its Changjiang Nuclear Power Plant. Once completed, the generation capacity of the small modular reactor can reach 1 billion kilowatt hours.
  • This is expected to cater to more than 5 lakh households in China. This multipurpose small modular reactor was the first to be approved by the International Atomic Energy Agency in 2016.

2. When is World Malala Day celebrated every year?

A) July.4

B) July.8

C) July.10

D) July.12

  • The United Nations declared July 12, Malala’s birthday, as World Malala Day in honour of the young education activist from Pakistan. In 2012, Malala was shot at by Taliban insurgents while she was on her way to school. This day is observed to make an appeal to world leaders, to ensure compulsory and free education for every child in their country.

3. Enceladus is the moon of which planet?

A) Saturn

B) Jupiter

C) Venus

D) Neptune

  • Enceladus is the sixth–largest moon of Saturn. NASA’s Cassini spacecraft has recently detected an unusually high concentration of methane, along with carbon dioxide and dihydrogen, in the moons of Saturn. The spacecraft has found that Titan, another moon of Saturn has methane in its atmosphere and Enceladus has a liquid ocean with gas and water. Researchers assume that there may be methane–producing processes on Enceladus.

4. Coconut Development Board is a statutory body established under which Union Ministry?

A) Ministry of Food Processing Industries

B) Ministry of Agriculture

C) Ministry of Commerce and Industry

D) Ministry of MSME

  • Coconut Development Board is a statutory body established under the Ministry of Agriculture, for the integrated development of coconut and coconut–related products. The Union Cabinet has approved the amendment in the Coconut Development Board Act, 1979, to make the post of chairman non–executive. Centre will nominate six members in the board from the current practice of four members from four states.

5. What is the duration of the ‘Agriculture Infrastructure Fund’ scheme?

A) 1 year

B) 10 years

C) 20 years

D) 25 years

  • The Agriculture Infrastructure Fund scheme launched by the Government of India, is a medium – long term debt financing facility aimed to enhance the post gravest infra in India. The duration of this scheme is 10 years from FY2020 to FY2029.
  • The Union cabinet headed by the Prime Minister Narendra Modi has approved some changes in this scheme, in terms of eligibility, location of the units, interest subvention etc.

6. Which state has witnessed a rise in cases of Zika virus infection?

A) Arunachal Pradesh

B) Punjab

C) Haryana

D) Kerala

  • The count of persons infected with the Zika virus in the state of Kerala has been on the rise. The infection is a viral disease spread through mosquito bites from one person to another. It is said that in most cases, it is asymptomatic, but sometimes it can lead to paralysis.
  • The neighbouring states of Tamil Nadu and Karnataka have intensified their checks at inter–state borders to prevent the infection from spreading.

7. Which member country of BRICS proposed the STI–led BRICS Innovation Cooperation Action Plan (2021–24)?

A) Brazil

B) India

C) Russia

D) China

  • India had proposed the Science, Technology Innovation– led BRICS Innovation Cooperation Action Plan (2021–24). Recently, during the 12th meeting of the BRICS S&T Steering Committee, hosted by the Department of Science and Technology, all BRICS countries agreed to the STI–led Action Plan.
  • It enables sharing of experiences of each other’s innovation ecosystem and networking of innovators and entrepreneurs.

8. Which country has exported apples to India, for the first time on 50 years?

A) China

B) Israel

C) UK

D) Australia

  • The United Kingdom has exported apples to India for the first time in over 50 years. This is seen as a sign of the UK–India Enhanced Trade Partnership. The Enhanced Trade Partnership was agreed by British Prime Minister Boris Johnson and Prime Minister Narendra Modi during their virtual summit in May.
  • After that, Commerce and Industry Minister Piyush Goyal signed the agreement, setting a target to double UK–India bilateral trade by 2030.

9. Who is the first Managing Director of the National Asset Reconstruction Company Ltd?

A) K V Kamath

B) Shyam Srinivasan

C) Padmakumar Madhavan

D) M K Jain

  • India has formally set up a bad bank, registered as the National Asset Reconstruction Company Ltd. has been registered in Mumbai with a paid–up capital of ₹74.6 crore ($10 million). Padmakumar Madhavan Nair has been appointed as the Managing Director.
  • He had earlier handled stressed assets resolution in the SBI. Sunil Mehta, CEO of the Indian Banks’ Association, will be a director. Initially, public sector banks will transfer 22 bad loan accounts worth ₹89,000 crore to NARCL.

10. Which is the first Indian state/UT to achieve 100% first dose coverage, for Covid–19?

A) Goa

B) Ladakh

C) Andaman & Nicobar Islands

D) Puducherry

  • The Administration of UT of Ladakh has achieved 100 per cent vaccination with the first dose of the Covid–19 vaccine to all its eligible population, i.e., people above 18 years.
  • The UT Administration has given the first dose of COVID–19 vaccine to all beneficiaries, by covering all Health Care Workers, Front line Workers, all those in the age group of above 45 and 18 to 45. India’s vaccination drive has crossed 38 Crore mark of administered doses, as on July 14, 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!