Tnpsc

23rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சுகாதார அமைச்சகம் வழங்கும் தொலைமருத்துவ சேவையின் பெயரென்ன?

அ) இ-ஆரோக்கியா

ஆ) இ-ஸ்வஸ்தியா

இ) இ-சுரக்ஷா

ஈ) இ-சஞ்சீவனி

  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி என்ற தொலைமருத்துவ சேவையானது 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது. இ-சஞ்சீவனி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இதுவரை முப்பது இலட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்ப -ட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இதன்மூலம், நாடு முழுவதும் தினமும் 35,000 நோயாளிகள் இணைய வழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுவருகின்றனர். அதிக ஆலோசனை பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகியவை முதல் 3 இடங்களைப்பிடித்துள்ளன.

2. அண்மையில், மத்திய இந்தியாவில் விபத்துக்குள்ளான இந்திய வான்படையின் வானூர்தி எது?

அ) MiG-21 பைசன்

ஆ) மிராஜ் 2000

இ) சுகோய் சு -30

ஈ) ரபேல்

  • மத்திய இந்தியாவில் அமைந்துள்ள இந்திய வான்படைதளம் ஒன்றில் இருந்து, பயிற்சிக்காக புறப்பட்ட MiG-21 பைசன் இரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இந்தக் கோர விபத்தில் இந்திய வான்படை குழு கேப்டனான ஆஷிஷ் குப்தா உயிரிழந்தார். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான தேஜஸ் விமானங்கள், MiG-21 இரக விமானங்களுக்கு மாற்றாக உள்ளன. MiG -21 இரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்களில் சிக்கி வருகின்றன.

3. தொடங்கிடு இந்தியா விதை நிதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

அ) இஞ்செட்டி சீனிவாஸ்

ஆ) கீதா கோபிநாத்

இ) H K மிட்டல்

ஈ) S C குந்தியா

  • தொடங்கிடு இந்தியா விதை நிதிய திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும் கண்காணிப்பிற்குமாக நிபுணர்கள் அடங்கிய ஓர் ஆலோசனை குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. DPIIT’படி, இந்தக்குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த H K மிட்டல் தலைமையில் இரு -க்கும். DPIIT, உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், NITI ஆயோக் மற்றும் துளிர் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பின் வல்லுநர்கள் இதன் மற்ற உறுப்பினர்களாக இருப்பார்கள்.

4. கீழ்காணும் எந்த இந்திய பொதுத்துறை வங்கி தனது கடனட்டை வணிகத்திற்காக புதிய சொந்தமான இணை-நிறுவனத்தை உருவாக்கியுள்ளது?

அ) யூனியன் பாங்க் ஆப் இந்தியா

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி

இ) இந்தியன் வங்கி

ஈ) கனரா வங்கி

  • பஞ்சாப் தேசிய வங்கி சமீபத்தில் வங்கியின் முழு உரிமையாளரான பிஎன்பி கார்டுகள் மற்றும் சேவைகளை இணைத்துள்ளது. இந்தப் புதிய நிறுவனம் வங்கியின் கடனட்டை வணிகத்துடன் தொடர்புடைய நிதி சாராத ஆதரவு சேவையை மேற்கொள்ளும்.
  • PNB அட்டைகள் & சேவைகள் நிறுவனமானது 25 கோடி அனுமதிக்கப்பட்ட மூலதனத்தையும், 15 கோடி செலுத்திய மூலதனத்தையும் கொண்டு -ள்ளது. இவ்வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவற்றை தன்னுடன் இணைத்துள்ளது.

5. புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியன் எண்ணெய் நிறுவனம் – பினெர்ஜி ஆகிய கூட்டு நிறுவனமானது, மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உருவாக்குவதற்காக லித்தியத்திற்கு மாற்றாக எந்த உலோகத்தை பயன்படுத்தவுள்ளன?

அ) வெள்ளி

ஆ) தாமிரம்

இ) அலுமினியம்

ஈ) பாதரசம்

  • அரசுக்கு சொந்தமான இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இஸ்ரேலிய மின்கல உற்பத்தியாளரான பினெர்ஜியும் மின்சார வாகனங்களுக்கு அதி-லேசான உலோகக்காற்று மின்கலங்களை தயாரிப்பதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டு நிறுவனம், மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உருவாக்குவதற்காக லித்தியத்திற்கு மாற்றாக அலுமினியத்தை பயன்படுத்தும்.
  • இதன்மூலம், விரைவாக மின்னேற்றம் செய்யவும் முடியும், அதிக நேரம் வேலைசெய்ய வைக்கவும் முடியும். மாருதி சுசூகியும் அசோக் லேலண்ட் நிறுவனமும் அந்நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளன. இந்தியன் எண்ணெய் நிறுவனமானது கடந்த ஆண்டில், பினெர்ஜி நிறுவனத்தில் சிறு பங்குகளை வாங்கியது.

6. மிகை-பணவீக்கம் காரணமாக பெருமதிப்புள்ள பணத்தாட்களை வெளியிட்ட நாடு எது?

அ) ஈரான்

ஆ) வெனிசுலா

இ) சூடான்

ஈ) நைஜீரியா

  • மிகை-பணவீக்கம் காரணமாக வெனிசுலா சமீபத்தில் பெருமதிப்புள்ள பணத்தாட்களை வெளியிட்டது. தென்னமெரிக்க நாடான வெனிசுலாவி -ன் பொலிவர் பணம் அதன் மதிப்பை பெருமளவில் இழந்துவருகிறது. முறையே 10 மற்றும் 27 அமெரிக்க சென்ட் மதிப்புள்ள 200,000 மற்றும் 500,000 பொலிவர் பணம் அந்நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
  • வெனிசுலாவின் மத்திய வங்கி, வெறும் 50 அமெரிக்க சென்ட் மதிப்புள்ள 1 மில்லியன் பொலிவரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

7. கரியமிலவாயுவை (CO2) பிடித்து சூரிய எரிபொருளாக மாற்றும் செயல்முறைக்கு என்ன பெயர்?

அ) செயற்கை ஒளிச்சேர்க்கை

ஆ) இயற்கை ஒளிச்சேர்க்கை

இ) ஆற்றல் மாற்றம்

ஈ) ஆற்றல் உற்பத்தி

  • அண்மையில், ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டலத்திலிருந்து கரியமில வாயுவைப்பிடித்து சூரிய எரிபொருளாக மாற்றக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயல்முறை செயற்கை ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது.
  • இச்செயல்முறை, உயிர்வளியை துணைப்பொருளாக உருவாக்குகிறது. இந்தச்செயல்முறை புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஏற்படும் தீங்குகளைத் தணிக்கும் என்று கூறப்படுகிறது.

8. கீழ்காணும் எந்தக்கொள்கையின்படி, 2024 ஜூன்.1 முதல் இருபது ஆண்டுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வாகனங்களின் பதிவு நீக்கம் செய்யப்படும்?

அ) புதிய வாகன கொள்கை

ஆ) உமிழ்வுக் கட்டுப்பாட்டுக் கொள்கை

இ) பாரத் நிலை – 7

ஈ) பழைய வாகனங்களை அழித்தல் கொள்கை

  • மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள பழைய வாகனங்களை அழித்தல் கொள்கையின்படி, தானியங்கு உடல்தகுதி பரிசோதனையில் தோல்வியுற்றால், 20 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள், 2024 ஜூன்.1 முதல் பதிவு நீக்கம் செய்யப்படும்.
  • வணிக வாகனங்களைப் பொருத்தவரை, 2023 ஏப்ரல்.1 முதல் 15 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் பதிவு நீக்கம் செய்யப்படும்.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “Baikal-GVD” என்றால் என்ன?

அ) விண்கலம்

ஆ) ரஷிய தொலைநோக்கி

இ) கிரிப்டோகரன்சி

ஈ) புதிய கோள்

  • ரஷிய அறிவியலாளர்கள், “பைக்கால்-GVD” என்ற தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். இத்தொலைநோக்கி தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியின் அடியாழத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி, பூமியின் மிகஆழமான ஏரியாகும். இந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய துகளான நியூட்ரினோவை அறிவியலாளர்கள் கண்டறியவுள்ளனர்.

10. புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பி உடன் பிறந்த உலகின் முதல் குழந்தை, பின்வரும் எந்த நாட்டில் பிறந்தது?

அ) ரஷியா

ஆ) அமெரிக்கா

இ) பிரேசில்

ஈ) இத்தாலி

  • புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பிகளைக் கொண்ட உலகின் முதல் குழந்தை அமெரிக்காவில் பிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவுற்று 36ஆவது வாரத்தில் தாய்க்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது. இதன் விளைவாக தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பிறபொருளெதிர்ப்பிகள் உருவாகியுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கோவிஷீல்ட்: இரண்டு ‘டோஸ்’களுக்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா தொற்றுக்கு எதிரான சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களுக்கான கால இடைவெளியை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவும், கரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுண -ர் குழுவும் அளித்த அறிவுரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை முதல்முறை போடுவதற்கும் இரண்டாவதுமுறை போடுவதற்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-6 வார இடைவெளியை 4-8 வாரமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிக்கு பொருந்தாது.

அறிவியல் ஆதாரங்களை கருத்தில்கொண்டு, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளி, 28 நாட்களில் இருந்து, ஆறு முதல் எட்டு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு, பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணிகளில் இந்தியாவுக்கு 2 தங்கம்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுகளில் இந்தியாவின் கலப்பு அணிகள் தங்கப்பதக்கம் வென்றன. அதேபோல் ஆடவர் ஸ்கீட் அணிகள் பிரிவிலும் இந்தியர்கள் முதலிடம் பிடித்தனர். இப்போட்டியில், 22.03.21 நிலவரப்படி இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, மானு பாக்கர் கூட்டணி 16 ஷாட்களுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. உலகக்கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் சௌரவ்-மானு கூட்டணிக்கு இது 5ஆவது தங்கப்பதக்கமாகும்.

அதே பிரிவில் இந்தியாவின் யஷஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா கூட்டணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஈரானின் கோல்னௌஷ் செபாடொலாஹி, ஜாவித் ஃபருகி இணை வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாளரிவன், திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை 16 ஷாட்களுடன் தங்கம் வென்றது. சீனியர் உலகக்கோப்பை போட்டியில் இளவேனிலுக்கு இது முதல் தங்கம்; திவ்யான்ஷுக்கு இது நான்காவது தங்கமாகும்.

ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி, எஸ்தர் டெனஸ் 10 ஷாட்களுடன் வெள்ளியை வென்றனர். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய ஜோடியான அஞ்சும் முட்கில், அர்ஜுன் பபுதா தகுதிச்சுற்றில் ஐந்தாம் இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை நழுவவிட்டனர். ஆடவருக்கான ஸ்கீட் அணிகள் பிரிவில் இந்தியாவின் குர்ஜோத் காங்குரா, மைராஜ் அகமது கான், அங்கத் வீர் சிங் பாஜ்வா ஆகியோர் கூட்டணி 6-2 என்ற கணக்கில் கத்தாரின் நாசர் அல் அட்டியா, அலி அகமது அல் இஷாக், ரஷீத் ஹமாத் கூட்டணியை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது. அதே போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பரினாஸ் தலிவால், கார்திகி சிங் ஷெகாவத், கனிமத் சிகோன் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

3. நாட்டின் தங்கம் இறக்குமதி 3% குறைந்தது: வர்த்தக அமைச்சகம்

நாட்டின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் 3.3 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 2,611 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் `1.95 லட்சம் கோடி) மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2019-20ஆம் நிதியாண்டின் இதே காலகட்ட தங்கம் இறக்குமதி அளவான 2,700 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 3.3 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், நடப்பாண்டு பிப்ரவரியில் தங்கம் இறக்குமதியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 236 கோடி டாலரிலிருந்து 530 கோடி டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி சரிவடைந்துள்ளது நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு வழிவகுத்துள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் 15,137 கோடி டாலராக காணப்பட்ட வர்த்தக பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 8,462 கோடி டாலராக குறைந் -துள்ளது. வெள்ளி இறக்குமதி கடந்த 11 மாதங்களில் 70.3% குறைந்து 78 கோடி டாலராக இருந்தது.

ஆபரண துறையில் தேவை அதிகரித்து காணப்படுவதையடுத்து இந்தியா தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு 800-900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதி துறையை ஊக்குவிக்க வேண்டி பட்ஜெட்டில் தங்கத் -துக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

2020-21 ஏப்ரல்-பிப்ரவரியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி 33.86% சரிவடைந்து 2,240 கோடி டாலராக குறைந்ததாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4. 67ஆவது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: முழுப்பட்டியல்

67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டிலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்தாண்டு COVID அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளுக்கான பட்டியலில் அசுரன் மற்றும் ஒத்த செருப்பு ஆகிய இரு தமிழ்ப்படங்களுக்கும் தலா 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. அத்துடன் `1,00,000 பணமுடிப்புடன் ரஜத் கமல் விருது வழங்கப்பட்டது. அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் D. இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்தசெருப்பு படத்துக்கு நடுவர்களின் சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தேர்வாகியுள்ளார்.

சிறந்த படம் – மரைக்காயர் (மலையாளம்)

சிறந்த இயக்குநர் – சஞ்சய் பூரண் சிங் செளகான் (ஹிந்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (மணிகர்னிகா & பங்கா)

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்); மனோஜ் பாஜ்பாய் (போஸ்லே)

சிறந்த அறிமுக இயக்குநர் – மதுகுட்டி சேவியர் (ஹெலன்)

நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது – தாஜ்மஹால் (மராத்தி)

சிறந்த பொழுதுபோக்குப் படம் – மஹர்ஷி (தெலுங்கு)

சமூக நலனுக்கான சிறந்த படம் – ஆனந்தி கோபால் (மராத்தி)

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் – வாட்டர் பரியல் (மோன்பா)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோஷி

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)

சிறந்த பாடகர் – பி ப்ராக் (கேசரி, ஹிந்தி)

சிறந்த பாடகி – சவானி ரவிந்திரா (பார்டோ, மராத்தி)

சிறந்த வசனம் – தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (ஹிந்தி)

சிறந்த திரைக்கதை (தழுவல்) – கும்நமி

சிறந்த அசல் திரைக்கதை – ஜேயஸ்தோபுத்ரோ (வங்காளம்)

சிறந்த ஒலி அமைப்பு – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த ஒலி அமைப்பு – லியுடஹ் (காஸி)

சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி (ஜெர்ஸி, தெலுங்கு)

சிறந்த கலை இயக்கம் – ஆனந்தி கோபால் (மராத்தி)

சிறந்த ஒப்பனை – ரஞ்சித் (ஹெலன், மலையாளம்)

சிறந்த இசையமைப்பாளர் – D. இமான் (விஸ்வாசம்)

சிறந்த பின்னணி இசை – பிரபுத்தா பானர்ஜி (வங்காளம்)

சிறந்த பாடலாசிரியர் – பிரபா வர்மா (கொலாம்பி, மலையாளம்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – மரைக்காயர் (மலையாளம்)

சிறந்த நடனம் – ராஜு சுந்தரம் (மஹர்ஷி, தெலுங்கு)

திரையுலகுக்கு ஏற்ற மாநிலம் – சிக்கிம்

சிறப்பு விருது – ஒத்த செருப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பு – சுஜித் சுதாகரன், வி. சாய் (மரைக்காயர், மலையாளம்)

சிறந்த சண்டை இயக்கம் – அவனே ஸ்ரீமன்நாராயணா (கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி (ஹிந்தி)

5. தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு

தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு அளிப்பதுடன் அவர்களின் பணி ஓய்வு வயது 58’இலிருந்து 61 ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

6. ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு காந்தி அமைதி விருது

2020ஆம் ஆண்டுக்கான ‘காந்தி அமைதி’ விருது ‘வங்கபந்து’ என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய கலாசார துறை அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான இந்த விருது மறைந்த ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையது அல் சையதுவுக்கு வழங்கப்ப -டுவதாகவும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்பிய அவரது நோக்கத்துக்கும், வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான நடுவர் குழுவானது கடந்த மார்ச் 19ஆம் தேதி கூடி, காந்தி அமைதி விருதுக்கு ஷேக் முஜிபூர் ரஹ்மானையும், ஓமனின் நீண்டகால ஆட்சியாளரான சுல்தான் கபூஸையும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக மத்திய கலாசார துறை தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி 1995’ஆம் ஆண்டுமுதல் காந்தி அமைதி விருதானது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தேசியம், இனம், மொழி, ஜாதி, மத வேறுபாடின்றி வழங்கப்படும் இவ்விருது, `1 கோடி ரொக்கப்பரிசு, பாரம்பரிய கைவினைப் பொருள்களை உள்ளடக்கியது ஆகும்.

1. What is the name of the telemedicine service offered by the Union Health Ministry?

A) e–Aarogya

B) e–Swasthya

C) e–Suraksha

D) e–Sanjeevani

  • The Union Health Ministry’s tele–medicine service called e–Sanjeevani is operational in 31 States/Union Territories. The digital service has crossed a recent milestone of 3 million consultations, with an average of 35000 patients across the country. The Service includes two variants: one for doctor to doctor and one for outpatient services. Tamil Nadu tops the number of consultations.

2. Which aircraft of the Indian Air Force met with a fatal accident and crashed in Central India?

A) MiG–21 Bison

B) Mirage 2000

C) Sukhoi Su–30

D) Rafale

  • A MiG–21 Bison aircraft of the Indian Air Force was involved in a fatal accident, while taking off for a combat training mission at an airbase in central India. The IAF Group Captain Ashish Gupta died in the accident. The indigenously designed and manufactured Light Combat Aircraft Tejas were to replace the ageing fleet of the MiG 21. The MiG 21s have been continuously involved in accidents.

3. Who is the head of the experts advisory committee set up for the Startup India Seed Fund Scheme?

A) Injeti Srinivas

B) Gita Gopinath

C) H K Mittal

D) S C Khuntia

  • The government has constituted an experts advisory committee for the overall execution and monitoring of the Startup India Seed Fund Scheme. As per the DPIIT, the committee would be chaired by H K Mittal from the Department of Science and Technology. The other members are from DPIIT, Department of biotechnology, science and technology, electronics and IT, NITI Aayog, and experts from startup ecosystem.

4. Which Indian public sector bank has incorporated a new wholly owned subsidiary for its credit card business?

A) Union Bank of India

B) Punjab National Bank

C) Indian Bank

D) Canara Bank

  • Punjab National Bank has recently incorporated PNB Cards & Services, a wholly owned subsidiary of the bank. This new entity will carry out non–financial support service related to the credit card business of the bank. PNB Cards & Services has authorised capital of ₹25 crore and paid–up capital of ₹15 crore. The Bank has merged United Bank of India and Oriental Bank of Commerce with itself.

5. The newly formed Indian Oil Corporation– Phinergy JV is to replace lithium with which metal, to make batteries for electric vehicles?

A) Silver B) Copper

C) Aluminium D) Mercury

  • State–owned Indian Oil Corporation (IOC) and Israeli battery developer Phinergy formed a joint venture to manufacture ultra–lightweight metal–air batteries for electric vehicles (EVs).
  • The joint venture will replace lithium with aluminium to make batteries that will charge faster and work for a longer time. The first customers of the company are Maruti Suzuki and Ashok Leyland. IOC had acquired a minority stake in Phinergy Ltd last year.

6. Which country has rolled out larger–denomination banknotes due to hyperinflation?

A) Iran

B) Venezuela

C) Sudan

D) Nigeria

  • Venezuela has recently rolled out larger–denomination banknotes due to hyperinflation. The bolivar currency of the South American country is losing its value tremendously. Bills worth 200,000 and 500,000 bolivars, which are worth just 10 and 27 US cents, respectively, began to circulate in the country. Venezuela’s central bank has also planned to roll a bill worth 1 million bolivars, worth just 50 US cents.

7. What is the name for the process of capturing carbon dioxide (CO2) and converting it into solar fuel, called?

A) Artificial photosynthesis

B) Natural photosynthesis

C) Energy Conversion

D) Energy Production

  • Recently, researchers from Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research (JNCASR) have developed a system that can capture carbon dioxide from the atmosphere and convert it into solar fuel. This process is called Artificial Photosynthesis (AP). This process produces oxygen as by product. This process is said to mitigate the harmful effects of emissions made by use of fossil fuels.

8. As per which policy, more than 20–year–old personal vehicles would be de registered from June 1 2024?

A) New Vehicle Policy

B) Emission Control Policy

C) Bharat Stage – 7

D) Vehicle Scrapping Policy

  • As per the new Vehicle Scrapping Policy announced by the Union Ministry of Road Transport, more than 20 years old personal vehicles would be de registered from June 1 2024, in case they fail in automated physical fitness test. In case of commercial vehicles, 15 years old vehicles would be de registered from April 1 2023.

9. What is “Baikal–GVD” that has been in news recently?

A) Space Shuttle

B) Russian Telescope

C) Cryptocurrency

D) New Planet

  • Scientists from Russia have developed and deployed a telescope named “Baikal–GVD”. The telescope has been placed into the depths of Lake Baikal in southern Siberia, which is the deepest lake known in earth. Using this telescope, Scientists are in search of Neutrinos – the tiniest known particles in the universe.

10. In which country, the world’s first baby with antibodies against the novel coronavirus is reported to be born?

A) Russia

B) USA

C) Brazil

D) Italy

  • It has been reported that the world’s first baby with antibodies against the novel coronavirus is born in the USA. The mother was vaccinated against COVID–19 during 36th week of her pregnancy which resulted in development of antibodies in both mother and the baby.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!