TnpscTnpsc Current Affairs

23rd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23rd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நகராட்சி திட மற்றும் திரவக்கழிவுகள் மீதான சுற்றுப்பொருளாதாரம்’ என்ற அறிக்கையை வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

ஆ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நகராட்சி திட மற்றும் திரவக்கழிவுகள் மீதான சுற்றுப்பொருளாதாரம்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் நாடோறும் 1.4 இலட்சம் டன் திடக்கழிவுகள் உருவாகின்றன; அதில் 35 சதவீதம் உலர் கழிவுகளாம். ஈர, திட மற்றும் கட்டுமானக் கழிவுகளை சுத்திகரிப்பதன்மூலம் ஒரு நகராட்சி ஆண்டுக்கு `30,000 கோடியை வருவாயாக ஈட்டமுடியும் என இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

2. 2022-இல் நடந்த ‘BRICS வெளியுறவு அமைச்சர்கள்’ கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா 

இ. ரஷ்யா

ஈ. பிரேசில்

  • 2022-இல் BRICS வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை சீனா நடத்தியது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சார்பாக S ஜெய்சங்கர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்; அங்கு வெளியுறவு அமைச்சர்கள் உக்ரைன் நிலைமை குறித்து விவாதித்தனர். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தைகளை ஆதரித்தனர். வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் குறித்த BRICS வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையிலும் இந்திய வெளியுறவு அமைச்சர் பங்கேற்றார்.

3. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய முக்கிய தீர்ப்பின்படி, கீழ்காணும் எந்த அமைப்பின் பரிந்துரை மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது?

அ. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் 

ஆ. நிதி ஆணையம்

இ. NITI ஆயோக்

ஈ. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில்

  • சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கடல்வழியாக பொருட்களை இறக்குமதி செய்யும்போது ஒருங்கிணைந்த GST (IGST) விதிப்பது குறிப்பது வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை அளித்தது. GST மீது சட்டமியற்ற நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு சமமான அதிகாரங்கள் இருப்பதாகவும், GST கவுன்சில் இணக்கமான முறையில் செயல்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

4. இராஜீவ்காந்தி கொலைவழக்குக் குற்றவாளியான A G பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் எந்த அரசியல் சட்டத்தின்கீழ் ஆணையிட்டது?

அ. பிரிவு 142

ஆ. பிரிவு 161

இ. பிரிவு 123

ஈ. பிரிவு 260

  • இராஜீவ்காந்தி கொலைவழக்குக் குற்றவாளி A G பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட, அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அசாதாரண அதிகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பயன்படுத்தியது. அரசியல் சாசனத்தின் 161ஆவது பிரிவின்கீழ் பேரறிவாளனுக்கு மன்னிப்பு வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் அதீத தாமதம் காட்டி முடிவெடுக்காததையும் உச்சநீதிமன்றம் அப்போது மேற்கோள் இட்டு காட்டியது.

5. ‘உலகளாவிய உணவுப்பாதுகாப்பு-வினைக்கழைப்பு’ என்ற உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்திற்குத் தலைமை வகித்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. அமெரிக்கா 

ஈ. ஐக்கிய இராச்சியம் (UK)

  • நியூயார்க்கில் நடைபெற்ற, ‘Global Food Security-Call to Action’ குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தலைமை தாங்கினார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளீதரன், இக்கூட்டத்தில் உலகளாவிய உணவுப்பாதுகாப்பின்மை குறித்து கவலை தெரிவித்தார். உணவு, எரிசக்தி மற்றும் நிதி தொடர்பான உலகளாவிய நெருக்கடி பதிலளிப்புக் குழுவை நிறுவுதல் மற்றும் உணவு ஏற்றுமதி கட்டுப்பாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிக்காக WFPமூலம் உணவு கொள்முதலுக்கு விலக்களிக்கும் ஐநா பொதுச்செயலாளரின் முன்முயற்சியை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.

6. ஐநாஇன் சமீபத்திய உலகப்பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?

அ. 8.2%

ஆ. 7.5%

இ. 6.9%

ஈ. 6.0% 

  • ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அதன் ‘உலகப்பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்’ அறிக்கையை வெளியிட்டது. நடப்பு 2022ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீதமாக வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டின் 8.8 சதவீதத்தைவிட குறைவாகும். இருந்தபோதிலும் வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரமாகத்தான் இந்தியா உள்ளது. 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் உலகப்பொருளாதார வளர்ச்சியை 4 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகக் குறைத்துள்ளதாகவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

7. ‘தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் நாளானது’ மே மாதத்தில் வரும் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?

அ. மே மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை

ஆ. மே மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

இ. மே மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை

ஈ. மே மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை 

  • ‘தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே.20 அன்று இந்த நாள் கொண்டாடப்பட்டது. அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாக்க நாம் எடுக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 1973ஆம் ஆண்டின் அழிந்துவரும் உயிரினங்கள் சட்டம் டிசம்பர்.28 அன்று நடைமுறைக்கு வந்தது. வனவுயிரிகள் பாதுகாப்பு மற்றும் அழிந்துவரும் உயிரினங்களின் மறுவாழ்வு ஆகியவற்றின் தேவையை உயர்த்துவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. இந்திய ரிசர்வ் வங்கியானது 2021-22ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எவ்வளவு உபரி நிதியைப் பரிமாற்றஞ் செய்யவுள்ளது?

அ. ரூ.20201 கோடி

ஆ. ரூ.30307 கோடி 

இ. ரூ.78784 கோடி

ஈ. ரூ.99500 கோடி

  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2021-22ஆம் ஆண்டிற்கான உபரி நிதியாக `30,307 கோடியை அரசாங்கத்திற்கு பரிமாற்றஞ்செய்யவுள்ளது. எதிர்பாராச் செலவு நிதியத்தை அதன் இருப்பு நிலைக்குறிப்பில் 5.50 சதவீதமாக பராமரிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. 2021 மார்ச்சுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்திற்கு முந்தைய நிதியாண்டில் பரிமாற்றப்பட்ட உபரியான `99,126 கோடியைவிடவும் இந்த ஆண்டின் நிதிப் பரிமாற்றம் குறைவாக உள்ளது.

9. இந்தியாவில், ‘தீவிரவாத எதிர்ப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜனவரி.31

ஆ. பிப்ரவரி.28

இ. மார்ச்.31

ஈ. மே.21 

  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மே.21 அன்று ‘தீவிரவாத எதிர்ப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு இதேநாளில்தான் முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். பொதுமக்களின் துயர்களை எடுத்துரைத்து, பயங்கரவாதம் மற்றும் வன்முறை குறித்து இளையோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். இந்த ஆண்டு (2022) இராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு நாளாகும். இந்த ஆண்டு, உள்துறை அமைச்சகம் ‘பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை’ முன்மொழிந்தது.

10. 2021-22 நிதியாண்டில் இந்தியாவில் அதிக முதலீடு செய்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சிங்கப்பூர் 

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. நெதர்லாந்து

  • 2021-22 நிதியாண்டில் $83.57 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு மிக அதிகமான வருடாந்தர வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. பொருள் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தத் துறையில் 2020-21 நிதியாண்டுடன் ($12.09 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில், 2021-22 நிதியாண்டில் 76% உயர்வு ($21.34 பில்லியன் டாலர்) இருந்தது.
  • வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவில் 2021-22 நிதியாண்டில் முதன்மை நாடாக 27 சதவீதத்துடன் சிங்கப்பூரும், 18 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், 16 சதவீதத்துடன் மொரீஷியஸ் மூன்றாமிடத்திலும் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. WHO தலைமை இயக்குநரின் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருததைப் பெற்ற ஆஷா பணியாளர்கள்

‘ஆஷா’ எனப்படும் அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO), தலைமை இயக்குநரின், ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

2. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம்

`227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின்கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும்.

2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின்கீழ், தென்னங் கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத்தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

3. பாம்பின் நஞ்சுமூலம் கிடைக்கும் வருவாயில் 5% இருளர் மக்கள் நலனுக்காக செலவிடப்படும்

பாம்பின் நஞ்சை ஐசெரா பல்லுயிர் தனியார் நிறுவனம் அணுகும் வகையில், தேசிய பல்லுயிர் ஆணையமும் தமிழ்நாடு பல்லுயிர் வாரியமும், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் பாம்பு நஞ்சிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் 5%, இருளர் மக்களின் நலனுக்காக இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தப்படும்.

4. மியூசிக் அகாதெமி விருதுகள் அறிவிப்பு

‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத கலா ஆச்சார்யா’ உள்ளிட்ட விருதுகளுக்குத் தேர்வுசெய்யப்பட்ட கலைஞர்களின் விவரங்களை சென்னை மியூசிக் அகாதெமி வெளியிட்டது.

சங்கீத கலாநிதி விருது: கர்நாடக இசைக்கலைஞர் நெய்வேலி ஆர் சந்தானகோபாலன் (2020); மிருதங்க இசைக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம் (2021); வயலின் இசைக்கலைஞர்கள் லால்குடி ஜி ஜெ ஆர் கிருஷ்ணன், ஜி ஜெ ஆர் விஜயலட்சுமி (2022).

சங்கீத கலா ஆச்சார்யா விருது: நாகஸ்வர இசைக்கலைஞர் கீவளூர் என் ஜி கணேசன் (2020); கர்நாடக இசைக் கலைஞர் ரிதா ராஜன் (2021); வீணை இசைக்கலைஞர் ஆர் எஸ் ஜெயலட்சுமி (2022).

டி டி கே விருது: கர்நாடக இசைக்கலைஞர் தாமரக்காடு கோவிந்தன் நம்பூதிரி (2020); மிருதங்க-ஜலதரங்க இசைக் கலைஞர் நேமனி சோமயாஜுலு (2021), கஞ்சிரா இசைக்கலைஞர் ஏ வி ஆனந்த் (2022).

இசைப்பேரறிஞர் விருது: வி பிரேமலதா (2022).

நாட்டிய விருது (நிருத்ய கலாநிதி): பரதநாட்டியக் கலைஞர்கள் ரமா வைத்தியநாதன் (2020); நர்த்தகி நடராஜ் (2021); பிரகா பெசல் (2022).

1. Which Ministry launched the report on ‘Circular Economy in Municipal Solid and Liquid Waste.’?

A. Ministry of Housing and Urban Affairs 

B. Ministry of Agriculture and Farmers Welfare

C. Ministry of Home Affairs

D. Ministry of Rural Development

  • Ministry of Housing and Urban Affairs (MoHUA) has released a report on ‘Circular Economy in Municipal Solid and Liquid Waste.’ At present, India generates 1.4 lakh tonnes of solid waste daily out of which 35 percent is dry waste. This report has estimated that proper municipal wet, solid, and construction waste treatment can generate around Rs 30,000 crore revenue annually.

2. Which country chaired the ‘BRICS Foreign Ministers’ Meet in 2022?

A. India

B. China 

C. Russia

D. Brazil

  • China hosted the BRICS foreign ministers’ meet in 2022. The Ministry of External Affairs (MEA) of India S Jai Shankar participated in the meeting, where the foreign ministers discussed the situation in Ukraine and supported talks between Russia and Ukraine.
  • External Affairs Minister also participated in the BRICS foreign ministers’ dialogue with emerging markets and developing countries.

3. As per a recent landmark judgement of the Supreme Court, which body’s recommendation is not binding on the Centre and State?

A. Goods and Services Tax (GST) Council 

B. Finance Commission

C. NITI Aayog

D. Financial Stability and Development Council

  • The Supreme Court ruled in a landmark judgment that the Goods and Services Tax (GST) Council’s recommendations are not binding on the Centre and the states. The Supreme Court struck down the integrated GST (IGST) levy in an ocean freight case and ruled that the recommendations have only persuasive value. It said Parliament and the state legislatures had equal powers to legislate on GST and the Council must work in a harmonious manner.

4. Under which article of the constitution, the Supreme Court ordered the release of Rajiv Gandhi assassination case convict A G Perarivalan?

A. Article 142 

B. Article 161

C. Article 123

D. Article 260

  • The Supreme Court Bench of Justices invoked the extraordinary power conferred on the court under Article 142 of the Constitution, to order the release of Rajiv Gandhi assassination case convict A G Perarivalan. The Apex court cited the inordinate delay and lack of decision making by the Tamil Nadu Governor in pardoning Perarivalan under Article 161 of the Constitution.

5. Which country chaired the high–level Ministerial meeting on ‘Global Food Security–Call to Action’?

A. India

B. China

C. USA 

D. UK

  • US Secretary of State Antony Blinken chaired the high–level Ministerial meeting on ‘Global Food Security–Call to Action’ in New York. India’s Union Minister of State for External Affairs V Muraleedharan expressed concern over global food insecurity in the meeting.
  • He said that India welcomes the UN Secretary General’s initiative of establishing a Global Crisis Response Group on Food, Energy and Finance (GCRG) and exemption of food purchases by WFP for humanitarian assistance from food export restrictions.

6. As per the recent UN World Economic Situation and Prospects (WESP) report, what is the projected GDP Growth rate of India in FY23?

A. 8.2%

B. 7.5%

C. 6.9%

D. 6.0% 

  • UN Department of Economic and Social Affairs released its World Economic Situation and Prospects (WESP) report. India is projected to grow by 6.4 per cent in 2022, slower than the last year’s 8.8 per cent but still remains the fastest–growing major economy.
  • For the fiscal year 2023, India’s growth is projected to be 6 per cent. The war in Ukraine slowed global economic growth to 3.1 per cent from 4 per cent.

7. The ‘National Endangered Species Day’ is celebrated on which day of May?

A. First Sunday of May

B. Last Saturday of May

C. Last Sunday of May

D. Third Friday of May 

  • National Endangered Species Day is celebrated every year on the third Friday of May and this year it is celebrated on 20 May. The day aims to create awareness among people about endangered species and the different steps we can take to protect them. The Endangered Species Act of 1973 came into existence on 28 December. The act aims to raise the need for wildlife conservation and rehabilitation of endangered species.

8. What is the surplus transfer by the Reserve Bank of India (RBI) to the Government for 2021–22?

A. Rs 20201 crores

B. Rs 30307 crores 

C. Rs 78784 crores

D. Rs 99500 crores

  • The Reserve Bank of India (RBI) will transfer Rs 30,307 crore as surplus to the government for 2021–22. The decision was taken by the RBI board to maintain the contingency risk buffer at 5.50 per cent of its balance sheet. This year’s transfer is lower than the surplus transferred in the previous financial year Rs 99,126 crore for a nine–month period ended March 2021.

9. ‘Anti–Terrorism Day’ is observed on which day in India?

A. January.31

B. February.28

C. March.31

D. May.21 

  • Anti–Terrorism Day is observed on May 21 in India every year. It was on this day in the year 1991 that former Indian Prime Minister Rajiv Gandhi was assassinated. The objective of this day is to sensitise the youth about terrorism and violence by highlighting the suffering of common people. This year commemorates Rajiv Gandhi’s 30th death anniversary. This year, the Ministry of Home Affairs proposed ‘Anti–Terrorism Pledge”.

10. Which was the top–most investor in India during fiscal year 2021–22?

A. USA

B. Singapore 

C. UAE

D. The Netherlands

  • According to a statement issued by the commerce and industry ministry, India has recorded highest ever annual FDI inflow of USD 83.57 billion in the Financial Year 2021–22. FDI equity inflow in manufacturing sectors has increased by 76 per cent in 2021–22. Singapore was the topmost investor in India last fiscal year, accounting for 27% of the FDI, followed by the US at 18% and Mauritius at 16%. In 2020–21, the inflows were USD 81.97 billion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!