TnpscTnpsc Current Affairs

23rd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் ‘Laser Interferometer Gravitational-Wave Observatory (LIGO)’ திட்டம் வரவுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) தமிழ்நாடு

இ) மகாராஷ்டிரா 

ஈ) மத்திய பிரதேசம்

  • 2016ஆம் ஆண்டில், ஈர்ப்பு அலைகள் பற்றிய ஆராய்ச்சிக்கான LIGO -இந்திய மெகா அறிவியல் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ‘கொள்கை அளவில்’ ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல்-வேவ் அப்சர்வேட்டரி திட்ட வசதி மகாராஷ்டிராவில் வரவுள்ளது. சமீபத்தில், ஹிங்கோலி வருவாய் துறை இத்திட்டத்திற்காக 225 ஹெக்டேர் நிலத்தை ஒப்படைத்துள்ளது.

2. இந்தியாவின் முதல் மீன்வள வணிக காப்பகமான – ‘LINAC- NCDC மீன்வள வணிக அடைவு மையம்’ திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) விசாகப்பட்டினம்

ஆ) கொச்சின்

இ) குருகிராம் 

ஈ) காந்திநகர்

  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, குருகிராமில் LINAC-NCDC மீன்வள வணிக அடைவு மையம் (LlFlC) எனப்படும் இந்தியாவின் முதல் மீன்வள வணிக காப்பகத்தை திறந்து வைத்தார்.
  • தன்னம்பிக்கையை நோக்கி நகர்வதற்கு மீன்பிடித் துறையில் அவர்களு -க்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை தொழில்முனைவோர் மத்தியில் ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அடைவின் விலை `3.23 கோடி. மீன்வளத்துறையில் மொத்தம் 30,000 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

3. 2021 – உலக ஆண்டிமைக்ரோபியல் விழிப்புணர்வு வாரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் கருப்பொருள் என்ன?

அ) Infection control

ஆ) Go Blue 

இ) Overusing antimicrobials

ஈ) Antimicrobial surveillance

  • உலக சுகாதார அமைப்பு நுண்ணுயிர்க்கொல்லி தடுப்பாற்றலை முதல் 10 உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரத்தில் (நவம்பர் 18-24), ‘Go Blue’ பிரச்சாரம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு பதிலளிக்காதபோது நுண்ணுயிர்க் கொல்லி தடுப்பாற்றல் ஏற்படுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்
    -சையளிப்பதை கடினமாக்குகிறது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “Stop Soros” சட்டத்தை நிறைவேற்றிய நாடு எது?

அ) இத்தாலி

ஆ) ஹங்கேரி 

இ) ஆஸ்திரேலியா

ஈ) அமெரிக்கா

  • “ஸ்டாப் சொரோஸ்” சட்டமானது கடந்த 2018 ஜூனில் ஹங்கேரிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும்.
  • சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு நாட்டிற்குள் வசிப்பிடத்திற்காக விண்ணப்பிக்க உதவுவது ஓராண்டு வரை சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றம் என இந்தச்சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டத்தை பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஃபிடெஸ் ஆதரித்தது.
  • அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம், புகலிட வேண்டுவோர்க்கு ஆதரவளிப்பதைக் குற்றமாக்கும் ஹங்கேரியின் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை மீறுவதாக தீர்ப்பளித்தது.

5. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக, ‘Mother on Campus’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) திரிபுரா 

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

  • மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக, திரிபுரா கல்வித் துறை, ‘வளாகத்தில் தாய்’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. இங்கு, சொந்த அல்லது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கல்வி வளாகத்தில் தங்கலாம். குழந்தைகளிடையே பாதுகாப்புணர்வை இது தூண்டலாம் மற்றும் குழந்தைகளின் கல்வித் திறனுக்கு இது பயனளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுராவில் அரசு நடத்தும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகளில் தங்கும் குழந்தைகளின் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்கலாம்.

6. மத்திய ப்ளீஸ்டோசீன் காலத்தில் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மனித மூதாதைய இனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பெயரென்ன?

அ) ஹோமோ போடோயென்சிஸ் 

ஆ) ஹோமோ ஆப்பிரிக்கன்

இ) ஹோமோ சிபானியன்

ஈ) ஹோமோ நியாண்டர்தால்கள்

  • சுமார் அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது சிபானியன் என்றழைக்கப்படும் மத்திய ப்ளீஸ்டோசீன் காலத்தில் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ‘ஹோமோ போடோயென்சிஸ்’ என்ற மனித மூதாதையர்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எத்தியோப்பியாவின் போடோ டி’ஆரில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோட்டினால் ‘போடோயென்சிஸ்’ என அழைக்கப்படுகிறது

7. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவர் யார்?

அ) பிபேக் டெப்ராய் 

ஆ) ராகேஷ் மோகன்

இ) பூனம் குப்தா

ஈ) டி டி ராம் மோகன்

  • பிரதமர் மோடி தனது பொருளாதார ஆலோசனைக் குழுவை (EAC-PM) மறுசீரமைக்க ஒப்புதலளித்துள்ளார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பிபேக் டெப்ராய் அக்கவுன்சிலின் தலைவராக உள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் இராகேஷ் மோகன், ஐஐஎம் அகமதாபாத் பேராசிரியர் டி டி ராம் மோகன் மற்றும் என்சிஏஇஆர்-ன் டைரக்டர் ஜெனரல் பூனம் குப்தா ஆகியோர் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் இணைந்த மூன்று புதிய உறுப்பினர்கள் ஆவார்.
  • ஈராண்டு காலத்திற்கு இப்புதிய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ள -து. இந்த அவையின் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் அவ்வாறே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வில்வாத்ரி கால்நடைகள், எந்த மாநிலத்தில், ‘மரபணு ரீதியாக வேறுபட்டவை – Genetically Divergent’ என அறிவிக்கப்பட்டன?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் பூர்வீக வில்வாத்ரி கால்நடைகள், மாநிலத்தில் உள்ள மற்ற கால்நடைகளிலிருந்து ‘மரபணு ரீதியாக வேறுபட்டவை’ ஆகும். விலங்கு மரபியல் மற்றும் இனப்பெருக்கத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையத்தின் அறிவியலாளர்கள் குழுவால் அதன் மரபணு வேறுபாடு ஆய்வுசெய்யப்பட்டது.
  • பாலக்காடு-திருச்சூர் எல்லையில் காணப்படும் வில்வாத்ரி கால்நடைக -ள், மாநிலத்தின் பிற பூர்வீகக்கால்நடைகளைப்போலவே திமிலுடைய -வை, ஆனால் அவை நீளமான கொம்புகளுடன் பெரியதாக இருக்கும். உள்நாட்டு இனங்கள் நோயெதிர்ப்பு சக்தி கொண்டவை மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன்கொண்டவை.

9. அறிகுறியுடைய COVID சிகிச்சைக்காக ‘மோல்னுபிராவிர்’ என்ற வாய்வழி உட்கொள்ளும் மாத்திரையை அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) UK 

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

  • அறிகுறியுடைய COVID-19 சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் வைரஸ் தடுப்பு மாத்திரையை UK மருந்து கட்டுப்பாட்டாளர் சமீபத்தில் அங்கீகரித்துள்ளார். ‘மோல்னுபிராவிர்’ என்ற அம்மாத்திரையானது, சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு இருமுறை வழங்கப்படுகிறது.
  • காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக முதலில் உருவாக்கப்பட்ட இந்த மாத்திரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அல்லது இறப்பு அபாயத்தை பாதியாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

10. “பெகபெகா-டூ-ரோவா” என்ற நீண்டவால்கொண்ட வௌவால் சார்ந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) நியூசிலாந்து 

இ) ஜப்பான்

ஈ) சீனா

  • நியூசிலாந்தைச்சார் பெகபெகா-டூ-ரோவா என்ற நீண்டவால்கொண்ட வௌவால் 2021 ஆம் ஆண்டின் ‘சிறந்த பறவை’ விருதை பெற்றுள்ளது/ இது அந்த நாட்டின் தன்னாட்சிமிக்க அமைப்பான “ஃபாரஸ்ட் அண்ட் பேர்ட்” ஆல் வழங்கப்பட்டது. இவ்விருது ஒரு வகையான போட்டியாகும், இதன்கீழ் நியூசிலாந்தர்கள் தங்களுக்கு பிடித்த பறவைகளை நாட்டின் பூர்வீக இனங்கள் வாரியாக தரவரிசைப்படுத்துகிறார்கள், இது அவர்களி -ன் சுற்றுச்சூழல் அவலநிலைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘துல்லிய தாக்குதல் ஹீரோ’ – அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது:

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவிக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ராணுவ கமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறார்.

இதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்ததற்காக, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, இரண்டாவது மிக உயர்ந்த வீர விருதான கீர்த்தி சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்படுகிறது.

2. பிஎம்சி வங்கியை கையகப்படுத்துவதற்கான வரைவு திட்டம்: ரிசா்வ் வங்கி வெளியீடு

பஞ்சாப் & மகராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியை தில்லியைச் சோ்ந்த யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (யுஎஸ்எஃப்பி) கையகப்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

இந்த வரைவுத் திட்டம் பிஎம்சி வங்கியின் சொத்துகள், டெபாசிட் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் யுஎஸ்எஃப்பி எடுத்துக் கொள்ள வகை செய்கிறது. இதனால், டெபாசிட்தாரா்களுக்கு கூடுதல் அளவிலான பாதுகாப்பு கிடைக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறையைச் சோ்ந்த ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு அதிக அளவிலான கடன் கொடுத்து அதனை மறைக்க முற்பட்டதையடுத்து பிஎம்பிசி வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியது.

பிஎம்சி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து கடந்த 2019 செப்டம்பரில் அந்த வங்கியை ரிசா்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து, அதன் வாடிக்கையாளா்கள் பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், யுஎஸ்எஃப்பி நிறுவனம் வங்கியாக செயல்படுவதற்கான உரிமம் 2021 அக்டோபரில் வழங்கப்பட்டது. நவம்பா் 1-ஆம் தேதியிலிருந்து யுஎஸ்எஃப்பி தனது செயல்பாடுகளை தொடங்கிய நிலையில், தற்போது பிஎம்சி வங்கியை இணைத்துக் கொள்வதற்கான வரைவு திட்டத்தை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

3. இன்று தொடங்குகிறது உலக டேபிள் டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 4 வீரா்கள், 5 வீராங்கனைகள் என 9 போ் அணி பங்கேற்கிறது. இவா்கள் தனிநபா், இரட்டையா் மற்றும் கலப்பு அணிகள் பிரிவுகளில் விளையாடவுள்ளனா்.

ஆடவா் பிரிவில் அந்தோணி அமல்ராஜ், ஹா்மீத் தேசாய், சத்தியன் ஞானசேகரன், சரத் கமல் ஆகியோரும், மகளிா் பிரிவில் அா்ச்சனா காமத், அஹிகா முகா்ஜி, மதுரிகா பட்கா், மணிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி ஆகியோரும் களம் காண்கின்றனா்.

4. 23 நவம்பர் 2021 – ‘உவமைக் கவிஞர்’ சுரதா அவர்களின் 101ஆவது பிறந்தநாள்.

5. சேதி தெரியுமா?

நவ.14: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற எட்டாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதன்முறையாகக் கோப்பையை வென்றது.

நவ.15: உலகில் 60 சதவீத வருவாய் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்தது.

நவ.16: 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து அமெரிக்கா நடத்துகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2025இல் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறுகிறது. 2024 – 2031 காலகட்டத்தில் இந்தியா மூன்று ஐசிசி தொடர்களை நடத்த உள்ளது.

நவ.17: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் வரை அப்பொறுப்பை மூத்த நீதிபதி துரைசாமி வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

நவ.17-18: இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அனைத்திந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும்விதமாக இம்மாநாடு நடைபெற்றது.

நவ.18: தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்டம் விளையாட்டைச் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவ.18: மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நவ.19: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

நவ.19: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முழு உடல் பரிசோதனையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், சில மணி நேரங்களுக்குத் தற்காலிக அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்றார். அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் அதிபர் அதிகாரங்களை ஏற்றது இதுவே முதன்முறை.

நவ.19: 580 ஆண்டுகளுக்குப் பின்பு வானில் நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நிகழ்ந்தது.

6. சையது முஷ்டாக் அலி கோப்பையை – 3-வது முறையாக வென்றது தமிழக அணி:

சையது முஷ்டாக் அலி டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்ஸர் விளாச தமிழக அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்செய்த கர்நாடகா 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள்குவித்தது. 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணிக்கு பிரதீக் ஜெயின் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷாருக்கான், ஷாய் கிஷோர் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் ஷாய் கிஷோர் பவுண்டரி அடித்தார். அடுத்த 4 பந்துகளில் மேற்கொண்டு 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் 2 உதிரிகளும் அடங்கும்.

கடைசி பந்தில் 5 ரன்கள்தேவைப்பட்ட நிலையில்ஷாருக்கான், டீப் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாச தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாருக்கான் 15 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் விளாசினார். ஷாய் கிஷோர் 6 ரன்கள் சேர்த்தார். முன்னதாக நாராணயன் ஜெகதீசன் 41, ஹரி நிஷாந்த் 23, விஜய் சங்கர்18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

சையது முஷ்டாக் அலிகோப்பையை தமிழக அணி வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2006 மற்றும் 2020-ம் ஆண்டும் தமிழக அணி கோப்பையை வென்றிருந்தது.

7. கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது

கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 தொடங்கியது.

திமுக அரசு, ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சூழலில், அடுத்த கட்டமாக 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் இன்று தொடங்கியுள்ளது. கோவை கொடீசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழித்துறை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முதல்வர் தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில், 40 முதல் 45 வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

1. India’s first ‘Laser Interferometer Gravitational–Wave Observatory (LIGO) project’ is to come up in which state?

A) Gujarat

B) Tamil Nadu

C) Maharashtra 

D) Madhya Pradesh

  • In 2016, the Indian government gave an ‘in principle’ approval to the LIGO–India mega science proposal for research on gravitational waves. India’s Laser Interferometer Gravitational–Wave Observatory (LIGO) project facility is to come up in Maharashtra. Recently, the Hingoli revenue department has handed over 225 hectares of land in the state for the project.

2. India’s first fisheries business incubator – ‘LINAC– NCDC Fisheries Business Incubation Centre (LlFlC)’ was inaugurated in which city?

A) Vishakhapatnam

B) Cochin

C) Gurugram 

D) Gandhinagar

  • Union Minister of Fisheries, Animal Husbandry and Dairying, Parshottam Rupala inaugurated India’s first–of–its–kind, dedicated fisheries business incubator known as LINAC– NCDC Fisheries Business Incubation Centre (LlFlC) in Gurugram.
  • It aims to encourage initiatives among entrepreneurs providing them support in the fisheries sector to move towards self–reliance. The incubator costs Rs 3.23 crore. In total, there are around 30,000 cooperatives in the fisheries sector.

3. What is the theme of the campaign undertaken during World Antimicrobial Awareness Week 2021?

A) Infection control

B) Go Blue 

C) Overusing antimicrobials

D) Antimicrobial surveillance

  • The World Health Organisation (WHO) has declared antimicrobial resistance (AMR) as one of the top 10 global health threats. This year during the World Antimicrobial Awareness Week (November 18–24), ‘Go Blue’ campaign aims to raise awareness on AMR.
  • Antimicrobial resistance occurs when microbes such as bacteria, viruses, fungi, and parasites don’t respond to medicines, which makes infections difficult to treat.

4. “Stop Soros” legislation, which was seen in the news sometimes, was passed by which country

A) Italy

B) Hungary 

C) Australia

D) USA

  • The “Stop Soros” legislation was passed in June 2018, by the Hungarian parliament. It outlawed helping illegal immigrants apply for residence inside the country, with punishments of up to one year in prison.
  • The legislation was supported by Prime Minister Viktor Orbán and his ruling party Fidesz. Recently the European Union (EU) Top Court has ruled that Hungary’s move to criminalise support of asylum seekers infringes EU law.

5. Which Indian state has launched the ‘Mother on Campus’ initiative, to improve academic performance of students?

A) Assam

B) Tripura 

C) Gujarat

D) Odisha

  • The Tripura Education Department has launched the ‘Mother on Campus’ initiative, to improve academic performance of students. Here, biological or legally–authenticated mothers can stay with their children on campus, to induce a sense of security among children and to benefit the academic performance of the children.
  • Mothers of children staying in state–run hostels and boarding schools in Tripura can now stay with the kids.

6. What is the new name given to the species of human ancestors, who lived in Africa during the Middle Pleistocene?

A) Homo bodoensis 

B) Homo Africane

C) Homo chibanian

D) Homo Neanderthals

  • Scientists have discovered a species of human ancestors called ‘Homo bodoensis’ who lived around half a million years ago, in Africa during the Middle Pleistocene which is now known as Chibanian.
  • The term ‘bodoensis’ has been derived from a skull found in Bodo D’ar, Ethiopia.

7. Who is the Chairman of the Prime Minister’s Economic advisory council?

A) Bibek Debroy 

B) Rakesh Mohan

C) Poonam Gupta

D) T T Ram Mohan

  • Prime Minister Narendra Modi approved the reconstitution of his Economic advisory council (EAC–PM). Bibek Debroy, President of the Indian Statistical Institute, is the Chairman of the council. Former RBI deputy governor Rakesh Mohan, along with IIM Ahmedabad Professor T T Ram Mohan, and Director–General of NCAER Poonam Gupta, are the three new members to join the seven–member council.
  • The new advisory council has been appointed for a period of two year. The Chairman of the council and three other members have been retained.

8. Vilwadri cattle, which was seen in the news, was announced as ‘genetically divergent’ in which state?

A) Tamil Nadu

B) Kerala 

C) Andhra Pradesh

D) Odisha

  • The native Vilwadri cattle of Thrissur district of Kerala is genetically divergent from the rest of the cattle population in the State.
  • The genetic diversity study was done by a group of scientists of the Centre for Advanced Studies in Animal Genetics and Breeding (CASAGB). The Vilwadri cattle, which are found in the Palakkad–Thrissur border, cattle are humped like other indigenous cattle of the State but they are bigger with longer horns. Indigenous breeds are disease–resistant and can withstand high temperatures.

9. Which country is the first in the world to approve an oral pill ‘Molnupiravir’ to treat symptomatic Covid?

A) USA

B) UK 

C) Australia

D) China

  • UK medicines regulator has recently approved the first antiviral pill designed to treat symptomatic Covid. The tablet named Molnupiravir will be given twice a day to vulnerable patients recently diagnosed with the disease. The pill which was originally developed to treat flu, is claimed to cut the risk of hospitalisation or death by about half.

10. “Pekapeka–tou–roa”, is a long–tailed bat belonging to which country?

A) Australia

B) New Zealand 

C) Japan

D) China

  • The Pekapeka–tou–roa which is a long–tailed bat belonging to New Zealand has been awarded Bird of the Year award of the year 2021, awarded by the country’s independent organization named “Forest and Bird”. This award is a sort of competition, under which New Zealanders rank their favorite birds among the country’s native species, which creates awareness of their ecological plight.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!