Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

23rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

23rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 23rd November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘கர்மயோகி பிரரம்ப்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிரிவினருக்காகத் தயாரிக்கப்பட்ட பாடமாகும்?

அ. வெளிநாடு வாழ் இந்தியர்கள்

ஆ. அரசுப் பணியாளர்கள்

இ. MSMEகள்

ஈ. அமைப்புசாரா துறை ஊழியர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அரசுப் பணியாளர்கள்

  • பிரதமர் நரேந்திர மோதி, அரசு ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட இணையவழி அடிப்படையில் நடத்தப்படும் ‘கர்மயோகி பிரரம்ப்’ என்ற பாடத்தொகுதியைத் தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி ரோஸ்கர் மேளாவின்கீழ் 71,000 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் திட்டத்தையும் அவர் அப்போது தொடக்கிவைத்தார்.

2. ‘சங்காய் திருவிழா’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு கலாச்சார விழாவாகும்?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஒடிஸா

இ. மணிப்பூர்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மணிப்பூர்

  • நடுவண் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிசன்ரெட்டி, சங்காய் இனவியல் பூங்காவில் ‘மணிப்பூர் சங்காய் விழாவைத் தொடக்கிவைத்தார். வடகிழக்கு மாநிலம் முழுவதும் 13 இடங்களில் நவ.30ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா, மாநிலத்தின் அனைத்து பழங்குடியினத்தைச் சார்ந்த மக்களின் பங்கேற்பின்மூலம் ஒற்றுமையை நிலை பெறச்செய்வதற்கான ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

3. 2022இல் இந்தோ–பசிபிக் பிராந்திய அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தும் நகரம் எது?

அ. கொழும்பு

ஆ. புது தில்லி

இ. டாக்கா

ஈ. இஸ்லாமாபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • “இந்தோ–பசிபிக் பெருங்கடல்கள் முனைவைச் செயல்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இந்தோ–பசிபிக் பிராந்திய அளவிலான பேச்சுவார்த்தையின் நான்காவது பதிப்பு புது தில்லியில் தொடங்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தை என்பது இந்திய கடற்படையின் உயர்மட்ட சர்வதேச வருடாந்திர மாநாடாகும். தேசிய கடல்சார் அறக்கட்டளையானது இந்த நிகழ்வின் அறிவுசார் பங்காளராகவும் தலைமை அமைப்பாளராகவும் உள்ளது.

4. 2022இல் UNEP, ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருதைப் பெற்ற இந்தியர் யார்?

அ. பூர்ணிமா தேவி பர்மன்

ஆ. நரேந்திர மோதி

இ. K K ஷைலஜா

ஈ. பியூஷ் கோயல்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பூர்ணிமா தேவி பர்மன்

  • அஸ்ஸாமைச் சேர்ந்த வனவுயிரி உயிரியலாளர் பூர்ணிமா தேவி பர்மனுக்கு இந்த ஆண்டுக்கான, ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருது வழங்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வழங்கப்படுகிறது. அஸ்ஸாமிய மொழியில், ‘ஹர்கிலா’ என்று அழைக்கப்படும் ‘பெருநாரையை’ப் பாதுகாக்கும் திட்டத்திற்காக, ‘தொழில் முனைவோர் பார்வை’ பிரிவில் பூர்ணிமா தேவி பர்மன் அவ்விருதை வென்றார்.

5. அண்மையில், ‘தற்கொலை தடுப்புக் கொள்கையை’ வெளியிட்ட ஆசிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. இந்தியா

ஈ. இங்கிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • இந்தியாவின் நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது ஒரு ‘தேசிய தற்கொலை தடுப்பு உத்தி’யை அறிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் தற்கொலையின் காரணமாக ஏற்படும் மரணங்களை 10% குறைக்கும் வகையிலான செயல்திட்டங்களை இது கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து மாவட்டங்களிலும், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மனநலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

6. ‘உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. ஜனவரி

ஆ. மே

இ. செப்டம்பர்

ஈ. நவம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. நவம்பர்

  • கடந்த 2015ஆம் ஆண்டில் ஐநா சபையானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ஆழிப்பேரலை தாக்கும்போது, அனைவரும் உயரமான இடத்திற்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐநா அலுவலகத்தின்படி, தொடக்கநிலை எச்சரிக்கை மற்றும் முன்கூட்டிய நடவடிக்கை ஆகியவை மக்களைக்காக்கும் இரு பயனுள்ள கருவிகளாகும்.

7. 2022ஆம் ஆண்டில், ‘வேளாண் தொழில்நுட்ப இந்தியா – வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்பக் கண்காட்சி’ நடத்தப்படும் நகரம் எது?

அ. மும்பை

ஆ. சண்டிகர்

இ. மைசூரு

ஈ. காந்திநகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சண்டிகர்

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்துள்ள ‘வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் 15ஆவது பதிப்பு நவ.4–7 வரை சண்டிகரில் நடக்கவுள்ளது. உழவு மற்றும் உழவர்கள்நல அமைச்சகம், உணவுப் பதனிடும் தொழிற் துறைகள் அமைச்சகம் மற்றும் வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) CII வேளாண் தொழில்நுட்ப இந்தியா – வேளாண் மற்றும் உணவு தொழில்நுட்பக் கண்காட்சிக்கான பங்காளர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “Digital Transformation for Sustainable Agriculture and Food Security” என்பதாகும்.

8. இந்தியாவில், ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.07

ஆ. நவம்பர்.07

இ. டிசம்பர்.07

ஈ. ஜனவரி.07

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.07

  • புற்றுநோயின் அபாயங்களை எடுத்துரைப்பதற்காக, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.07 அன்று ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளானது கடந்த 2014 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இது நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் பிறந்தநாளுடன் ஒத்திசைந்து வருகிறது; அவருடைய பங்களிப்புகள் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க சிகிச்சையின் வளர்ச்சிக்கு வழிகோலியது.

9. கேரள மாநில அரசால் நிறுவப்பட்ட, ‘கேரள ஜோதி’ விருதை முதன்முதலில் பெற்றவர் யார்?

அ. அடூர் கோபாலகிருஷ்ணன்

ஆ. M T வாசுதேவன் நாயர்

இ. கணாய் குன்ஹிராமன்

ஈ. வைக்கம் விஜயலக்ஷ்மி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. M T வாசுதேவன் நாயர்

  • மூத்த எழுத்தாளர் M T வாசுதேவன் நாயர், கேரள மாநில அரசால் நிறுவப்பட்ட முதல் ‘கேரள ஜோதி’ விருதைப் பெற்றவர். இதன் நடுவர் குழுமத்திற்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நடிகர் மம்மூட்டி, முன்னாள் அரசு ஊழியர், சமூக ஆர்வலர் T மாதவ மேனன் உள்ளிட்டோர் ‘கேரள பிரபா’ விருதுக்கும், ‘சிற்பி’ கணாய் குன்ஹிராமன், அறிவியலாளரும் கல்வியாளருமான M P பரமேஸ்வரன், பாடகி வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு, ‘கேரள ஸ்ரீ’ விருதும் வழங்கப்படவுள்ளது.

10. ‘Innovations for You’ என்ற நினைவுக் குறிப்பேட்டின் நான்காவது பதிப்பை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. UIDAI

ஈ. தேசிய புத்தாக்க அறக்கட்டளை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. NITI ஆயோக்

  • NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கமானது (AIM) ‘Innovations for You’ என்ற நினைவுக்குறிப்பேட்டின் 4ஆவது பதிப்பை வெளியிட்டது. இது AIM, NITI ஆயோக்கின் அடல் அடைவு மையங்களின் ஆதரவில் இருக்கும் இந்தியாவின் 75 வெற்றிகரமான பெண்தொழில்முனைவோர் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. ‘Innovations for You’ என்ற தொடர், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக துளிர் நிறுவனங்கள் எத்தகைய புதுமைகளை உருவாக்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தீனதயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டம் (DDU-GKY)

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது நடுவணரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் ஒன்றிய மாநில அரசின் வாயிலாக கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின்மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை நீங்கலாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுவரும் தீனதயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின்கீழ் 18-35 வயதிற்குட்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிலையான மாத வருமானம் ஈட்டும் வகையில் திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத் துறை, ஆட்டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத்துறை, அழகுக்கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்புப் பெறவியலும் 120க்கு மேற்பட்ட தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூகரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியலினத்தினருக்கு – 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

2. 23-11-2022 – ‘உவமைக் கவிஞர்’ சுப்புத்தினதாசன் (சுரதா) அவர்களின் 102ஆவது பிறந்தநாள்.

3. ‘கனவு இல்லம்’ திட்டம்: 10 எழுத்தாளர்கள் தேர்வு

தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், நிகழாண்டில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு: எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டமானது, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், பத்துப்பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

23rd November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Karmayogi Prarambh’ is a course prepared for which segment of people?

A. Non–Resident Indians

B. Government Employees

C. MSMEs

D. Unorganised Sector Employees

Answer & Explanation

Answer: B. Government Employees

  • The Prime Minister Narendra Modi launched the Karmayogi Prarambh Module, an online orientation course prepared for government employees. He also launched the programme of providing appointment letters to more than 71,000 youth, under the Pradhan Mantri Rozgar Mela.

2. ‘Sangai Festival’ is a cultural festival celebrated in which state?

A. West Bengal

B. Odisha

C. Manipur

D. Assam

Answer & Explanation

Answer: C. Manipur

  • Union Tourism Minister G Kishan Reddy inaugurated the ‘Manipur Sangai Festival 2022’ at the Sangai Ethnic Park. The 10–day–long festival will be held in 13 venues across the north–eastern state till November 30. The festival is celebrated as the Festival of Oneness to achieve unity through the participation of all indigenous communities of the state.

3. Which city is the host of the Indo–Pacific Regional Dialogue in 2022?

A. Colombo

B. New Delhi

C. Dhaka

D. Islamabad

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The 4th edition of Indo–Pacific Regional Dialogue (IPRD) has been inaugurated in New Delhi on the theme of “Operationalising the Indo–Pacific Oceans Initiative”. IPRD is an apex level international annual conference of the Indian Navy. The National Maritime Foundation is the knowledge partner and chief organizer of the event.

4. Which Indian was conferred the UNEP ‘Champions of the Earth’ award in 2022?

A. Purnima Devi Barman

B. Narendra Modi

C. K K Shailaja

D. Piyush Goyal

Answer & Explanation

Answer: A. Purnima Devi Barman

  • Purnima Devi Barman, an Assam–based wildlife biologist, was awarded the ‘Champions of the Earth’ award this year. It is presented by the United Nations Environment Programme (UNEP). Barman won the award in the ‘Entrepreneurial Vision’ category, for her work in protecting the ‘Greater adjutant stork’, called ‘hargila’ in Assamese.

5. Which Asian country has recently released a ‘Suicide prevention policy’?

A. Sri Lanka

B. Bangladesh

C. India

D. United Kingdom

Answer & Explanation

Answer: C. India

  • India’s Union Ministry of Health and Family Welfare announced a National Suicide Prevention Strategy. The country’s first of its kind policy has time–bound action plans and multi–sectoral collaborations to achieve reduction in suicide mortality by 10% by 2030. It seeks to establish effective surveillance mechanisms for suicide within the next three years, establish psychiatric outpatient departments in all districts within the next five years, and to integrate a mental well–being curriculum in all educational institutions within the next eight years.

6. In which month, the ‘World Tsunami Awareness Day’ observed?

A. January

B. May

C. September

D. November

Answer & Explanation

Answer: D. November

  • In 2015 the United Nations declared that each year 5 November would be observed as World Tsunami Awareness Day. It is a reminder that when a tsunami strikes, everyone must be ready to get to high ground. As per the UN Office for Disaster Risk Reduction, Early warning and early action are effective tools to protect people and preventing the hazard from becoming a disaster.

7. Which city is the host of ‘Agro Tech India –Agri and Food Technology Fair’ in 2022?

A. Mumbai

B. Chandigarh

C. Mysuru

D. Gandhinagar

Answer & Explanation

Answer: B. Chandigarh

  • The 15th edition of the Agro Tech India organised by the Confederation of Indian Industry (CII) is scheduled to be held in Chandigarh from November 4 to 7. The Ministry of Agriculture and Farmers Welfare, Ministry of Food Processing Industries, and Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) are partners for CII Agro Tech India –Agri and Food Technology Fair’. This year’s theme is ‘Digital Transformation for Sustainable Agriculture and Food Security’.

8. When is the ‘National Cancer Awareness Day’ observed in India?

A. August.07

B. November.07

C. December.07

D. January.07

Answer & Explanation

Answer: B. November.07

  • ‘National Cancer Awareness Day’ is observed on November 7 every year in India, to highlight the risks of cancer. National Cancer Awareness Day was announced in September 2014. It also coincided with the birth anniversary of Nobel laureate Marie Curie, whose contributions led to the development of radiotherapy for cancer treatment.

9. Who is the first recipient of the Kerala Jyothi award instituted by the Kerala State Government?

A. Adoor Gopalakrishnan

B. M T Vasudevan Nair

C. Kanayi Kunhiraman

D. Vaikom Vijayalakshmi

Answer & Explanation

Answer: B. M T Vasudevan Nair

  • Veteran writer M.T. Vasudevan Nair has been named the recipient of the first Kerala Jyothi award instituted by the State Government. The jury was chaired by the renowned film–maker Adoor Gopalakrishnan. Actor Mammootty, former civil servant, social activist T. Madhava Menon among others are selected for the Kerala Prabha award while sculptor Kanayi Kunhiraman, scientist and educationist M.P. Parameswaran and singer Vaikom Vijayalakshmi among others will be presented Kerala Sree award.

10. Which institution launched the fourth edition of ‘Innovations for You’ coffee table book?

A. NITI Aayog

B. Reserve Bank of India

C. UIDAI

D. National Innovation Foundation

Answer & Explanation

Answer: A. NITI Aayog

  • Atal Innovation Mission (AIM) of NITI Aayog launched the fourth edition of ‘Innovations for You’ coffee table book. It features as many as 75 successful women entrepreneurs of India, which are supported by Atal Incubation Centres (AICs) of AIM, NITI Aayog. The ‘Innovations for You’ series capture how start–ups are innovating to create a sustainable future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!