Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

23rd October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. தற்போதைய நிலவரப்படி, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் எத்தனை கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?

அ. 13

ஆ. 17

இ. 20

ஈ. 24

  • நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரமுயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு அமைச்சகம் 14 விளையாட்டு மையங்களை தரமுயர்த்தி அறிவித்திருந்தது. இப்போது கூடுதலாக ஒன்பது மையங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அடுத்து, மொத்தம் 23‌ மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 விளையாட்டு மையங்கள் தரமுயர்த்தப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில் உலகத்தரம்வாய்ந்த பயிற்சிகளும் வசதிகளும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் அளிக்கப்படும்.

2. பிரமோஸ் மீயொலி ஏவுகணையின் கடற்படை பதிப்பு, எந்தக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?

அ. INS சென்னை

ஆ. INS மைசூர்

இ. INS கொல்கத்தா

ஈ. INS விக்கிரமாதித்யா

  • ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, INS சென்னை போர்க் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது, அரபிக்கடலிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைவிலிருந்து தாக்குந்திறன்கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பல், கப்பல், வானூர்தி அல்லது நிலத்திலிருந்தும் ஏவமுடியும்.

3. சைவ உணவுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆராய்வதற்காக பணிக்குழுவொன்றை அமைத்துள்ள அமைப்பு எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. FSSAI

இ. FCI

ஈ. APEDA

  • நாட்டில் சைவ உணவுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆராய்வதற்காக இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI) அண்மையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது. இப்பணிக்குழுவில் ICAR, வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மற்றும் தரக்கழகம் மற்றும் சில தனியார் சைவ உணவு நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ளனர்.

4. WPP Plc மற்றும் Kantar’இன் அறிக்கையின்படி, எது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம்?

அ. TATA மோட்டார்ஸ்

ஆ. HDFC வங்கி

இ. ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம்

ஈ. எண்ணெய் & இயற்கை எரிவாயு கழகம்

  • WPP Plc மற்றும் Kantar’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, HDFC வங்கி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது. HDFC வங்கியின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் டாலர்களாகும். அதைத்தொடர்ந்த இடத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இடத்தில் உள்ளது.

5. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘காதி பிகூ திருவிழா’ கொண்டாடப்படுகிறது?

அ. ஒடிஸா

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்கம்

ஈ. கர்நாடகா

  • அஸ்ஸாம் மாநிலத்தில், அண்மையில், ‘காதி பிகூ’ திருவிழா கொண்டாடப்பட்டது. இது, அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு வேளாண் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின்போது, அஸ்ஸாம் மாநில மக்கள், தங்களின் இல்லங்களிலும் வயல்களிலும் விளக்கேற்றுகிறார்கள். மாநிலம் முழுவதும் கலாசார நடனங்களும், விருந்து நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

6. அறிவியல் மற்றும் தொழினுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை செயல்படுத்துகிற துறை எது?

அ. வேளாண் துறை

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

இ. பணியாளர்கள் துறை

ஈ. விண்வெளித் துறை

  • “பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் & தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை’ (FIST) மறுசீரமைப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. FIST திட்டம் இப்போது FIST 2.0 என மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
  • துளிர் நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கத்தின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துடன் இணைப்பதை இந்த FIST 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. NITI ஆயோக் ஆனது ஒரு முன்னணி தொழில்நுட்பமான, ‘கிளவுட்’ புத்தாக்க மையத்தை, கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறுவவுள்ளது?

அ. இன்டெல்

ஆ. மைக்ரோசாப்ட்

இ. அமேசான்

ஈ. கூகிள்

  • சமூகத்தில் சவால்களாக உள்ள சிக்கல்களை, டிஜிட்டல் புத்தாக்கங்கள்மூலம் தீர்வுகாண, முன்னணி தொழில்நுட்பமான ‘கிளவுட் புத்தாக்க மையத்தை’ அமேசான் வலையக சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் முதல்முறையாக NITI ஆயோக் அமைக்கவுள்ளதாக அறிவித்தது. அமேசான் வலையக சேவையின், உலகளாவிய CIC திட்டத்தின் ஒருபகுதிதான் இம்மையம். இது இந்தியாவில் அமைக்கப்படவுள்ள அமேசானின் முதல் கிளவுட் புத்தாக்க மையமும் உலக அளவில் பன்னிரண்டாம் மையமும் ஆகும்.

8. பல பண்டங்கள் பரிமாற்றகம் (MCX) அறிமுகப்படுத்திய நிகழ்நேர எளிய உலோகக் குறியீட்டின் (Base Metals Index) பெயர் என்ன?

அ. METLDEX

ஆ. GOLDEX

இ. BULLDEX

ஈ. BASEDEX

  • பண்டப்பரிமாற்றகமான Multi Commodity Exchange of India (MCX) அண்மையில் நிகழ்நேர எளிய உலோகக் குறியீடான, ‘METLDEX’இல் எதிர்கால வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவற்றின் நிகழ்நேர செயல்திறனை இந்த எளிய உலோக அட்டவணை கண்காணிக்கும். கடந்த 2020 ஆகஸ்டில், இந்தப் பரிமாற்றகம், MCX Bullion Index (MCX BULLDEX)’ஐ அறிமுகப்படுத்தியது.

9. 2019ஆம் ஆண்டில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ள இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. கர்நாடகா

ஈ. உத்தர பிரதேசம்

  • கடந்த 2019ஆம் ஆண்டில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்திய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் விளங்குகிறது. இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2020’இன்படி, இந்தியாவைச் சார்ந்த 23.1% பயணிகள் உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். அயல்நாட்டுப் பயணிகளின் சராசரி எண்ணிக்கையில், அம்மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 47 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள், கடந்த 2019ஆம் ஆண்டில் அம்மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

10. மகாராஷ்டிராவின் சாலை மேம்பாட்டுக்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான $177 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடனொப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது?

அ. உலக வங்கி

ஆ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

  • மகாராட்டிர மாநிலத்தில் 450 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டுள்ளன. இது, மகாராட்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இதன்மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.

1. As of today, how many Khelo India State Centres of Excellence (KISCEs) have been selected by Sports Ministry?

[A] 13

[B] 17

[C] 20

[D] 24

  • The Sports Ministry has recently selected nine States and Union Territories for upgradation to Khelo India State Centre of Excellence (KISCE). The Ministry had identified 14 centres to be upgraded to Khelo India State Centre of Excellence. The total number stands at 24 KISCEs from 23 States and UTs. Centre will provide assistance for bridging gaps in sports equipment, coaches and technical support among others.

2. The naval version of the BrahMos supersonic cruise missile was successfully test–fired from which ship?

[A] INS Chennai

[B] INS Mysore

[C] INS Kolkata

[D] INS Vikramaditya

  • A naval version of the BrahMos supersonic cruise missile was successfully test–fired from INS Chennai. The missile was fired from the indigenously built stealth destroyer of the Indian Navy in the Arabian Sea. It hit the target accurately after performing extremely complex operations. The missile can be launched from submarines, ships, aircraft or from land platforms.

3. Which organisation has constituted a task force to look into guidelines for vegan foods in the country?

[A] Ministry of Agriculture

[B] FSSAI

[C] FCI

[D] APEDA

  • Food Safety and Standards Authority of India (FSSAI) has recently constituted a task force to look into guidelines for vegan foods in the country. The task force includes 7 members from various organisations like ICAR, Ministry of Commerce and the Industry and Quality Council and some private vegan institutions.

4. As per the report by WPP Plc and Kantar, which is India’s most valuable Brand?

[A] TATA Motors

[B] HDFC Bank

[C] Reliance Industries Limited

[D] ONGC

  • As per a recent report by WPP Plc and Kantar, HDFC Bank has emerged as the most valued brand in India. The Bank is placed at the top position for seventh consecutive year. HDFC Bank is valued at USD 20.2 billion and it is followed by Life Insurance Corporation of India (LIC) at second position.

5. The ‘Kati Bihu’ festival is celebrated in which state?

[A] Odisha

[B] Assam

[C] West Bengal

[D] Karnataka

  • The ‘Kati Bihu’ festival was celebrated in the state of Assam recently. It is an agricultural festival being celebrated in the month of October. It is an important festival, during which they light up their homes and agricultural fields. They also perform cultural dances and organise feasts across the state.

6. The Fund for Improvement of Science and Technology Infrastructure (FIST), is implemented by which department?

[A] Department of Agriculture

[B] Department of Science and Technology

[C] Department of Personnel

[D] Department of Space

  • The Department of Science and Technology (DST) has stated that it is restructuring the “Fund for Improvement of Science and Technology Infrastructure in Universities and Higher Educational Institutions” (FIST). The FIST programme will now be re–launched as FIST 2.0. It aims align the requirements of startups with the government’s ‘self–reliant India’ campaign.

7. NITI Aayog has established a ‘Cloud Innovation Center’ with which technology major?

[A] Intel

[B] Microsoft

[C] Amazon

[D] Google

  • India’s think tank NITI Aayog (National Institution for Transforming India) has stablished a Frontier Technologies Cloud Innovation Center (CIC) with Amazon Web Services (AWS). This aims to address societal challenges through digital innovation. This is the first Cloud Innovation Center of Amazon in India and twelfth around the world.

8. What is the name of the real–time Base Metals Index launched by the Multi commodity Exchange (MCX)?

[A] METLDEX

[B] GOLDEX

[C] BULLDEX

[D] BASEDEX

  • Commodity exchange, Multi commodity Exchange of India (MCX) has recently launched futures trading in real–time Base Metals Index ‘METLDEX’. The Base Metals Index will track real–time performance of a basket of MCX Base Metal futures that includes zinc, copper, nickel, lead, and aluminium. In August 2020, the exchange had launched MCX Bullion Index (MCX BULLDEX) futures.

9. Which state in India has recorded the highest number of domestic tourists in 2019?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Karnataka

[D] Uttar Pradesh

  • The state of Uttar Pradesh has attracted the highest number of domestic tourists in 2019. As per the Indian Tourist Statistics 2020, 23.1% of travelers in India visited Uttar Pradesh. The state stood at third position in average number of foreign travelers. As many as 47 lakh travelers visited the state in 2019.

10. India has signed an agreement with which organisation for 177–million–dollar loan to upgrade road infrastructure in Maharashtra?

[A] World Bank

[B] IMF

[C] ADB

[D] AIIB

  • The Government of India has signed a loan agreement with Asian Development Bank (ADB) for a loan of USD 177 million. The proceeds of the loan would be used for upgrading 450 kilometres of state highways in Maharashtra. The project is expected to boost the road connectivity between rural and urban centres in Maharashtra for better access to markets and services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!