Tnpsc

23rd September 2020 Current Affairs in Tamil & English

23rd September 2020 Current Affairs in Tamil & English

23rd September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

23rd September Tamil Current Affairs 2020

23rd September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. திரிபுரா மாநிலத்தின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) எங்கு அமைக்கப்படுகிறது?

அ. அகர்தலா

ஆ. சப்ரூம்

இ. தர்மாநகர்

ஈ. கைலாஷகர்

 • திரிபுரா மாநிலத்தின் சப்ரூமில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) கட்டுவதற்காக, அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இது, அம்மாநிலத்தின் முதல் SEZ ஆகும். `635 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த SEZ, இரப்பர், மூங்கில், ஜவுளி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிலிருந்து 130 கிமீ தொலைவில் சப்ரூம் அமைந்துள்ளது.

2. சாலி புயலால் பாதிக்கப்பட்டு, அதன் மாகாணங்களில் அவசரநிலையை அறிவித்த நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. ஆஸ்திரேலியா

இ. ஜப்பான்

ஈ. பிலிப்பைன்ஸ்

 • வெப்பமண்டல புயல் சாலி காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடலோர மாகாணமான லூசியானாவின் ஆளுநர், அம்மாகாணத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த வெப்பமண்டல புயல் ஒரு சூறாவளியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லூசியானா மாகாணத்தின் நிலப்பரப்பிற்கு நகரும்போது, இது, மீண்டும் வெப்பமண்டல புயலாக பலவீனமடையும்.

3. 1962’க்குப் பிறகு முதன்முறையாக ஆசியாவின் பொருளாதாரம் சரியும் என மதிப்பிட்டுள்ள நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. BRICS வங்கி

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

 • ஆசிய வளர்ச்சி வங்கியின் கூற்றுப்படி, 1962’க்குப் பிறகு முதன்முறையாக ஆசியாவின் பொருளாதாரம் சரியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% அதிகரிக்கும் என இவ்வங்கி முன்பு கணித்திருந்தது. தற்போது, ​​2020ஆம் ஆண்டில் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.7% குறைந்து, 2021ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் GDP, நடப்பாண்டு 9%ஆக குறையும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

4. ‘நமாமி கங்கை’ திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ், எந்த மாநிலத்தில், பல்வேறு திட்டங்களை பிரதம அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பீகார்

இ. குஜராத்

ஈ. மத்திய பிரதேசம்

 • ‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்’ & ‘அம்ருத்’ திட்டங்களின்கீழ் பீகாரில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என 4 திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் திட்டங்கள், முசாபர்பூரில் ‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்ட’த்தின்கீழ் ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.

5. அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, எந்த வகை நிறுவனங்களை மறுசீரமைக்க, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமளிக்கிறது?

அ. அயல்நாட்டு வங்கிகள்

ஆ. கூட்டுறவு வங்கிகள்

இ. நிதி நிறுவனங்கள்

ஈ. சீட்டு நிதியங்கள்

 • இந்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அதிகாரம் அளிக்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் பருவகால அமர்வின் முதல் நாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவசரச்சட்ட வடிவில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இத்திருத்தத்தின்கீழ், ரிசர்வ் வங்கியால் நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைக்க முடியும்.

6. யாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், செப்டம்பர்.15 அன்று, இந்தியா, பொறியாளர் நாளைக் கொண்டாடுகிறது?

அ. சர் C V இராமன்

ஆ. ஹோமி J பாபா

இ. M விஸ்வேஷ்வரையா

ஈ. அப்துல் கலாம்

 • பொறியாளர் M விஸ்வேஷ்வரையாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியா முழுவதும் செப்.15 அன்று தேசிய பொறியாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. மோக்ஷகுண்டம் விஸ்வேஷ்வரயா, 1861 செப்.15 அன்று கர்நாடகாவில் பிறந்தார். மைசூரில் தலைமைப்பொறியாளராக பணியாற்றிய அவர், ஹைதராபாத், மைசூர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் பல தொழில்நுட்ப திட்டங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார். இதில், தக்கான கால்வாய்களில் கண்டமுறையிலான நீர்ப்பாசனத் திட்டமும் அடங்கும்.

7. மஞ்சள்கடலில் ஒரு கப்பலிலிருந்து, 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதைக்கு ஏவிய நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இஸ்ரேல்

ஈ. வட கொரியா

 • ​மஞ்சள்கடலில் உள்ள ஒரு கப்பலிலிருந்து சீனா ஒரு திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறியை வெற்றி -கரமாக ஏவியது. இந்த ஏவூர்தியில், 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது சீனத்தின் 2ஆம் கடல்சார் ஏவுதிட்டமாகும். லாங் மார்ச் 11 குடும்பத்தின் பத்தாவது ஏவுகணையான லாங் மார்ச் 11-HY2, ஜிலின்-1 காபென் 03-1 குழுமத்திற்கு சொந்தமான ஒன்பது தொலையுணர் திறன் கொண்ட செயற்கைக்கோள்களை ஏற்றிச்சென்றது.

8. CAPEX திட்டத்தின்கீழ், “கொல்லைப்புற தோட்டம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேச அரசு எது?

அ. புதுச்சேரி

ஆ. சிக்கிம்

இ. ஜம்மு & காஷ்மீர்

ஈ. ஆந்திர பிரதேசம்

 • ஜம்மு-காஷ்மீரின் தோட்டக்கலைத்துறையானது CAPEX திட்டத்தின்கீழ், “கொல்லைப்புற தோட்டம்” என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கையான முறையில் பழ உற்பத்தியை மேற்கொள்ள, மக்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், 90% மானியத்தில் 3 பழ தாவரங்கள், உழவர்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம், தற்சார்பு வாழ்வியலை ஊக்குவிப்பதோடு சுற்றுச்சூழலையும் பேணிப்பாதுகாக்கிறது.

9. அண்மையில், பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் உறுப்பினராக தெரிவான நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. ஆஸ்திரேலியா

 • பெண்களின் நிலைகுறித்த ஐநா ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 54 உறுப்பினர்களைக்கொண்ட இந்த ஆணையம் (CSW) ஐநா பொருளாதார & சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு வினைபடு அமைப்பாகும்.
 • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட, ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான ஈரிடங்களுக்கு தேர்தல் நடந்தது. CSW’இல் இடம்பெறுவதற்கான தேர்தலில் இந்தியா வெற்றிபெற்றது.

10. இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நலவாழ்வு அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. ஆயுஷ் அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

 • மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இரு முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் மசோதா – 2020 மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் மசோதா – 2020 ஆகியவை மக்களவையால் செப்.14 அன்று நிறைவேற்றப்பட்டது.
 • ஏற்கனவேயுள்ள இந்திய மருத்துவ மத்தியக் குழு சட்டம், 1970 மற்றும் ஹோமியோபதி மருத்துவ மத்திய குழு சட்டம், 1973 ஆகியவற்றை இவ்விரு புதிய மசோதாக்கள் மாற்றியமைக்க விழைகின்றன. இவ்விரு மசோதக்களுக்கும் மாநிலங்களவை 2020 மார்ச் 18 அன்று ஒப்புதல் அளித்தது.

1. Where is the first Special Economic Zone (SEZ) of Tripura being constructed?

[A] Agartala

[B] Sabroom

[C] Dharmanagar

[D] Kailashahar

 • Foundation stone was laid for construction of a Special Economic Zone (SEZ) in Sabroom of Tripura. It is the first SEZ of the state. The SEZ is being built at a cost of Rs 635 crore and would focus on rubber, bamboo, textile and food processing. Sabroom is located at a distance of 130 km from Agartala, the capital of Tripura.

2. Which country has been hit by the storm Sally and has declared emergency in its states?

[A] USA

[B] Australia

[C] Japan

[D] Philippines

 • The Governor of the coastal State of Louisiana, United States has declared a state of emergency on account of the tropical Storm Sally. The storm is expected to strengthen to a hurricane and will weaken back to a tropical storm while moving inland over Louisiana.

3. Which institution has estimated that Asia’s economy will contract for the first time since 1962?

[A] World Bank

[B] Asian Development Bank

[C] BRICS Bank

[D] International Monetary Fund

 • According to the Asian Development Bank, Asia’s economy will contract for the first time since the early 1960s. The bank had earlier projected that the GDP would grow by 0.1 per cent. Now, it is estimated that Asia’s GDP would decline by 0.7 per cent in 2020 and would increase to 7.7 per cent in 2021. It also highlighted that the GDP in India would contract by 9% this year.

4. Prime Minister has inaugurated various projects under the ‘Namami Gange’ Yojana and the ‘AMRUT’ scheme in which state?

[A] Uttar Pradesh

[B] Bihar

[C] Gujarat

[D] Madhya Pradesh

 • Prime Minister Narendra Modi has inaugurated various projects under the ‘Namami Gange’ Yojana and the ‘AMRUT’ Yojana in Bihar. The four schemes inaugurated include sewerage treatment plants in Patna and water–related projects under the ‘AMRUT’ scheme. The Prime Minister also laid foundation stones were also laid for water supply projects and River Front Development Scheme under Namami Gange.

5. The new Banking Regulation (Amendment) Bill, 2020, introduced by the government empowers RBI to restructure which type of institutions?

[A] Foreign Banks

[B] Cooperative Banks

[C] Finance Companies

[D] Chit funds

 • The new Banking Regulation (Amendment) Bill, 2020, introduced by the government empowers RBI to restructure Cooperative banks. The bill was tabled on the first day of the Parliament’s Monsoon Session by the Finance Minister Nirmala Sitharaman. The bill which came in the form of ordinance was earlier withdrawn. Under this amendment, the Reserve Bank of India can restructure distressed cooperative banks.

6. India celebrates Engineer’s Day on September 15 to commemorate the birth anniversary of which eminent personality?

[A] Sir C V Raman

[B] Homi J Bhabha

[C] M Visvesvaraya

[D] Abdul Kalam

 • National Engineers Day is celebrated on September 15 across the country, to mark the birth anniversary of eminent engineer M Visvesvaraya. Mokshagundam Visvesvaraya was born on September 15, 1861 in Karnataka.
 • He served as the Chief engineer in Mysore and had contributed to several technical projects in Hyderabad, Mysore, Maharashtra and Odisha, including the block system of irrigation in the Deccan canals.

7. Which country successfully sent nine satellites into orbit from a ship in the Yellow Sea?

[A] USA

[B] China

[C] Israel

[D] North Korea

 • China has successfully launched a solid–propellant carrier rocket from a ship in the Yellow Sea and successfully sent nine satellites into orbit. This is the country’s second such sea–based launch mission. The tenth rocket of the Long March 11 family, the Long March 11–HY2 was launched carrying nine remote–sensing satellites belonging to the Jilin–1 Gaofen 03–1 group.

8. Which Indian state/UT has launched “Backyard Horticulture” under CAPEX scheme?

[A] Puducherry

[B] Sikkim

[C] Jammu & Kashmir

[D] Andhra Pradesh

 • The Horticulture Department of the Jammu and Kashmir has launched the Flagship programme ‘Backyard Horticulture’ under CAPEX scheme. The programme aims to promote organic fruit production for home consumption. Under the programme, three fruit plants will be distributed among the farmers at 90% subsidy. It increases self–sustenance and also preserves environment.

9. Which country has been recently elected as a member of Commission on the Status of Women?

[A] India

[B] USA

[C] UK

[D] Australia

 • India has been elected as a Member of the UN Commission on the Status of Women. The 54–member Commission on the Status of Women (CSW) is a functional body of the UN Economic and Social Council (ECOSOC). Elections were held for 2 seats in Asia Pacific states, where India, Afghanistan and China contested. India won the election to secure a seat in the CSW.

10. National Commission for Indian System of Medicine Bill pertains to which ministry?

[A] Ministry of Health

[B] Ministry of Rural Development

[C] Ministry of Agriculture

[D] Ministry of AYUSH

 • Two important bills pertaining to Ministry of AYUSH has been passed in Lok Sabha, namely the “National Commission for Indian System of Medicine Bill 2020” and “National Commission for Homoeopathy Bill 2020”. The said bills have been already passed in the Rajya Sabha in March 2020. The bills seek to replace the existing “Indian Medicine Central Council Act 1970” and “Homoeopathy Central Council Act 1973”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content