Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

23rd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

23rd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 23rd September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘UPI லைட்’ கொடுப்பனவு பரிவர்த்தனையின் உச்சவரம்பு என்ன?

அ. ரூ.1000

ஆ. ரூ.500

இ. ரூ.200

ஈ. ரூ.100

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ரூ.200

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர், சக்திகாந்த தாஸ் சமீபத்தில் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்-2022இல் மூன்று முக்கிய டிஜிட்டல் கொடுப்பனவு முனைவுகளைத் தொடங்கினார். இந்த முனைவுகளில் UPIஇல் ரூபே கடனட்டை பயன்பாடு, UPI LITE, பாரத் பில்பே – எல்லைதாண்டிய இரசீது கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும். BHIM செயலியில் UPI லைட்மூலம், பயனர்கள் இணையமற்ற பயன்முறையில் சிறுமதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்யவியலும். UPI லைட்டின் கொடுப்பனவு பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு `200 ஆகும்.

2. ‘சர்வதேச சைகை மொழிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.20

ஆ. செப்டம்பர்.23

இ. செப்டம்பர்.25

ஈ. செப்டம்பர்.27

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செப்டம்பர்.23

  • காதுகேளாதோரின் மனித உரிமைகளை உணர்ந்துகொள்வதில் சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை செப்.23ஆம் தேதியை சர்வதேச சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. கடந்த 1951ஆம் ஆண்டு ரோமில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளை இந்த நாள் நினைவுகூருகிறது. சர்வதேச காது கேளாதோர் வாரத்தின் ஒருபகுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டில் சைகை மொழிகளின் சர்வதேச நாள் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கிகாலி திருத்தத்துடன் தொடர்புடைய நடவடிக்கை எது?

அ. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது

ஆ. ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களைக் குறைத்தல்

இ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நுகர்வை அதிகரித்தல்

ஈ. நிலக்கரி ஆலைகளைப் படிப்படியாக ஒழித்தல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களைக் குறைத்தல்

  • குளிர்பதன சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க செனட், அண்மையில் ஓசோன் மாசுபாடு தொடர்பான கடந்த 1987 மாண்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்திற்கு ஒப்புதலளித்தது. அடுத்த பதினான்கு ஆண்டுகளில் HFC-கள் எனப்படும் ஹைட்ரோபுளோரோகார்பன்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை 85% குறைக்க அந்தச் சர்வதேச ஒப்பந்தம் நோக்கம் கொண்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை முறையாக அங்கீகரித்துள்ளன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நிலவு வெளிச்சம் (Moonlighting)’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. விண்வெளி அறிவியல்

ஆ. வேலைவாய்ப்பு

இ. உளவியல்

ஈ. நிதியியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வேலைவாய்ப்பு

  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது போட்டி நிறுவனங்களுக்காக ஒரே நேரத்தில் பணி புரிவதாகக் கண்டறியப்பட்ட 300 ஊழியர்களின் வேலையைப் பறித்துள்ளது. இச்செயல், ‘மூன்லைட்டிங்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறையானது ஆர்வத்தில் முரண்பாடு, தரவுகளின் மீறல்கள் மற்றும் நிறுவனத்தின் அறிவுசார் சொத்து மற்றும் சொத்துக்களின் தவறான பயன்பாடு ஆகியவற்றை உருவாக்கலாம் என்று நிறுவனங்கள் அச்சங்கொள்கின்றன.

5. ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுற்றுலா அமைச்சகம்

  • சுற்றுலா அமைச்சகம் இராமாயண சுற்று, பௌத்த சுற்று, கடற்கரையோர சுற்று மற்றும் பாலைவன சுற்று உள்ளிட்ட 15 சுற்றுலா சுற்றுகளை அதன் ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்தின்கீழ் அடையாளம் கண்டுள்ளது.
  • நடுவண் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, ‘அம்பேத்கர் சுற்றை’ பயணித்து காண்பதற்கான சிறப்பு சுற்றுலா இரயிலை அறிவித்தார். இந்த இரயில் டாக்டர் பி ஆர் அம்பேத்கருடன் தொடர்புடைய முக்கிய இடங்களான மோவ் (அவர் பிறந்த இடமான இந்தூரில் உள்ள Dr அம்பேத்கர் நகர்), இலண்டன் (அவர் தங்கியிருந்து படித்த இடம்), நாக்பூர் (படித்த இடம்), தில்லி (காலமான இடம்) மற்றும் இறுதியாக மும்பை (அவர் தகனம் செய்யப்பட்ட இடம்) இடங்களை உள்ளடக்கி பயணிக்கும்.

6. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. மும்பை

இ. சென்னை

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பெங்களூரு

  • குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்டின் அறிக்கையின்படி, சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெங்களூரு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் முதலிடத்தில் உள்ளது. “Tech Cities: The Global Intersection of Talent and Real Estate” என்ற தலைப்பிலான அறிக்கை, உலகம் முழுவதும் உள்ள 115 வெவ்வேறு, ‘தொழில்நுட்ப நகரங்களை’ ஆய்வு செய்தது. மற்ற மூன்று இந்திய நகரங்களான சென்னை, தில்லி மற்றும் ஹைதராபாத் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. APAC-இன் 14 நகரங்களின் பட்டியலில் மும்பை மற்றும் புனே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன.

7. லிஸ் டிரஸ் என்பார் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்?

அ. பிரான்ஸ்

ஆ. ஐக்கிய இராச்சியம் (UK)

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐக்கிய இராச்சியம் (UK)

  • ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக பழைமைவாத கட்சியின் தலைவர் லிஸ் ட்ரஸ் நியமிக்கப்பட்டார். ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பின்னர், ஆளும் பழைமைவாத கட்சியின் உட்கட்சி தலைமைப்போட்டியில் 47 வயதான லிஸ் ட்ரஸ் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்தார். தெரசா மே மற்றும் மார்கரெட் தாட்சரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் ஆனார்.

8. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான சின்னத்தின் பெயர் என்ன?

அ. ஷெர்

ஆ. சவாஜ்

இ. விகாஸ்

ஈ. லியோ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சவாஜ்

  • அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 36ஆவது தேசிய விளையாட்டுப்போட்டிக்கான சின்னம் மற்றும் கீதத்தை நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இந்தச் சின்னத்திற்கு குஜராத்தியில், ‘குட்டி’ என்று பொருள்படும் ‘சவாஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கீதத்தின் கருப்பொருள், ‘ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற அடிப்படையில் உள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டிகள், குஜராத் மாநிலத்தில் உள்ள ஆறு நகரங்களில் செப்டம்பர்.29 முதல் அக்டோபர்.12 வரை நடத்தப்படும்.

9. தில்லியிலுள்ள பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் திட்டத்தைத் தொடக்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாடு அரசானது தில்லியில் உள்ள பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த பள்ளிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்தைத் தொடக்கியது. தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். தொடக்க நிலையில், 26 சிறந்த பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப்பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் தொடக்கப்பட்டுள்ளன. ‘தகைசல் பள்ளிகள்’ மற்றும் ‘மாதிரிப்பள்ளிகள்’ ஆகியவை சிறந்த பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகளுக்கான அதிகாரப்பூர்வ தமிழ்ப்பெயர்களாகும்.

10. ’Our Great National Parks’ என்ற ஆவணத்தொடருக்காக ‘சிறந்த கதைசொல்லி’க்கான எம்மி விருதை வென்ற முன்னாள் அதிபர் / குடியரசுத்தலைவர் யார்?

அ. பராக் ஒபாமா

ஆ. இம்மானுவேல் மக்ரோன்

இ. இராம்நாத் கோவிந்த்

ஈ. ஷின்சோ அபே

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பராக் ஒபாமா

  • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத் தொடரான, ‘Our Great National Parks’-க்காக ‘சிறந்த வசனகர்த்தா’வுக்கான எம்மி விருதை வென்றார். பராக் ஒபாமாவின் தயாரிப்பு நிறுவனமான ஹையர் கிரவுண்ட், உலகெங்கிலும் உள்ள தேசியப்பூங்காக்களைப் பற்றிய இந்தத் தொடரைத் தயாரித்துள்ளது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஏற்கனவே இரண்டு கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் வரலாற்றில் எம்மி விருதை வென்ற இரண்டாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. ‘நிஸ்தார்’, ‘நிபுண்’ ஆழ்கடல் பயிற்சிக் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தார்’, ‘நிபுண்’ ஆகிய கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் வைத்து கடற்படையில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இவ்விரண்டு கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன.

இந்திய தொழிற்நிறுவனங்கள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்புடன் இவ்விரு பயிற்சிக் கப்பல்களும் தயாரிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்காற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் நீர்முழ்கிக் கப்பல்களை மீட்பது மற்றும் ஆழ்கடல் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும். கடற்பகுதியில் ஹெலிகாப்டர்களை இயக்கும் நடவடிக்கையிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையிலும் இவை ஈடுபடுத்தப்படும் எனக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

23rd September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the upper limit of the ‘UPI Lite’ payment transaction?

A. Rs.1000

B. Rs.500

C. Rs.200

D. Rs.100

Answer & Explanation

Answer: C. Rs.200

  • The Reserve Bank of India (RBI) Governor, Shaktikanta Das recently launched three key digital payment initiatives at the Global Fintech Fest 2022. The initiatives include RuPay Credit Card on UPI, UPI LITE, Bharat BillPay Cross–Border Bill Payments. Through UPI Lite on BHIM App, users will be able to make small–value transactions in near–offline mode. The upper limit of a UPI Lite payment transaction will be ₹200.

2. When is the ‘International Day of Sign Languages’ observed every year?

A. 20th September

B. 23rd September

C. 25th September

D. 27th September

Answer & Explanation

Answer: B. 23rd September

  • The UN General Assembly declared 23 September as the International Day of Sign Languages to raise awareness of importance of sign language in realization of the human rights of people who are deaf. It commemorates the day on which the World Federation of the Deaf was established in Rome in 1951. The International Day of Sign Languages was first celebrated in 2018 as part of the International Week of the Deaf.

3. Kigali Amendment, which was seen in the news, is related to which action?

A. Increase Use of Electric Vehicles

B. Reduction of hydrofluorocarbons

C. Increase Renewable Energy Consumption

D. Phasing out Coal plants

Answer & Explanation

Answer: B. Reduction of hydrofluorocarbons

  • US Senate recently ratified Kigali Amendment to the 1987 Montreal Protocol on ozone pollution, to limit use of refrigerants.
  • The international agreement requires participating nations to phase down production and use of hydrofluorocarbons, also known as HFCs, by 85% over the next 14 years. More than 130 countries, including China, India and Russia, have formally ratified the agreement.

4. ‘Moonlighting’, which was seen in the news, is related to which field?

A. Space Science

B. Employment

C. Psychology

D. Finance

Answer & Explanation

Answer: B. Employment

  • Indian IT major Wipro has terminated the services of 300 employees, who were found to be working for its competitors simultaneously. The act is also called as ‘Moonlighting’. Companies worry that this practice might create a conflict of interests, data breaches, and mis–use of company’s Intellectual Property (IP) and assets.

5. ‘Swadesh Darshan’ scheme is an initiative of which Union Ministry?

A. Ministry of Culture

B. Ministry of Tourism

C. Ministry of External Affairs

D. Ministry of Communications

Answer & Explanation

Answer: B. Ministry of Tourism

  • The Ministry of Tourism had identified 15 tourist circuits under its Swadesh Darshan scheme including Ramayana Circuit, Buddhist Circuit, Coastal Circuit and Desert Circuit among others. Union Tourism and Culture Minister G Kishan Reddy announced a special tourist train to cover the ‘Ambedkar Circuit’.
  • The train will visit key sites associated with Dr BR Ambedkar including Mhow (his birthplace called Dr. Ambedkar Nagar in Indore), London (where he resided and studied), Nagpur (also studied here), Delhi (where he passed away) and finally Mumbai (where he was cremated.)

6. Which Indian city was ranked second in the Asia Pacific region in the top tech hubs list?

A. Bengaluru

B. Mumbai

C. Chennai

D. Hyderabad

Answer & Explanation

Answer: A. Bengaluru

  • According to a report by Cushman and Wakefield, Bengaluru ranked second in the Asia Pacific region in the top tech hubs list and is only behind China’s Beijing. The report titled ‘Tech Cities: The Global Intersection of Talent and Real Estate’, studied 115 different ‘tech cities’ across the globe. Three other Indian cities, Chennai, Delhi and Hyderabad were in the next three ranks. Mumbai and Pune were at eighth and ninth position in a list of 14 cities from the APAC.

7. Liz Truss was named as the new Prime Minister of which country?

A. France

B. United Kingdom

C. Australia

D. Germany

Answer & Explanation

Answer: B. United Kingdom

  • Leader of the Conservative Party Liz Truss was named as the new Prime Minister of the United Kingdom. The 47–year–old leaderbeat her rival, former finance minister Rishi Sunak in an internal leadership contest of the ruling Conservative party, after Boris Johnson’s resignation in July. Liz Truss will be only the UK’s third female Prime Minister following Theresa May and Margaret Thatcher.

8. What is the name of the mascot for the 36th National Games Ahmedabad?

A. Sher

B. Savaj

C. Vikas

D. Leo

Answer & Explanation

Answer: B. Savaj

  • Union Home Minister Amit Shah launched the mascot and the anthem for the 36th National Games in Ahmedabad. The mascot is named as ‘Savaj’ which means cub in Gujarati. The theme of the anthem is ‘Ek Bharat Shreshtha Bharat’. The National Games will be organised from September 29 to October 12, across six cities in the state.

9. Which state inaugurated Schools of Excellence and Model Schools Scheme, based on the schools of Delhi?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Gujarat

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • The Tamil Nadu government inaugurated the Schools of Excellence and Model Schools Scheme, broadly based on the schools of Delhi. Delhi Chief Minister Arvind Kejriwal launched the scheme in Tamil Nadu in the presence of his counterpart M K Stalin. As many as 26 Schools of Excellence and 15 Model Schools are covered under the scheme, in the initial phase. ‘Thagaisal Palligal’ and ‘Mathiri Palligal’ are the official Tamil names for the SoE and Model Schools.

10. Which Former President won the best narrator Emmy Award for his documentary series ‘Our Great National Parks’?

A. Barack Obama

B. Emmanuel Macron

C. Ramnath Kovind

D. Shinzo Abe

Answer & Explanation

Answer: A. Barack Obama

  • Former USA President Barack Obama won the best narrator Emmy Award for his Netflix documentary series ‘Our Great National Parks’. Barack Obamas’ production company, Higher Ground, is behind the series on national parks around the world. The former President has already received two Grammy awards. He becomes only the second US president in history to win an Emmy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!