Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

23th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதன்மை தகவல் உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான நிறுவனமாகும்?

அ. தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம்

ஆ. தேசிய தகவலியல் மையம்

இ. ICERT

ஈ. NCIIPC 

  • தேசிய முதன்மை தகவல் உட்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (NCIIPC) என்பது இந்தியாவின் முதன்மையான தகவல் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புவாய்ந்த நிறுவனமாகும். இது 2014-இல் IT சட்டம், 2000-இன் பிரிவு 70A இன்கீழ் நிறுவப்பட்டது. இது NSA-இன் கீழ் உள்ள உளவுத்துறை நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (NTRO) ஒருபகுதியாகும்.

2. சமீப செய்திகளில் குறிப்பிடப்பட்ட விடுதலை அறிவிப்புடன் (Emancipation Proclamation) தொடர்புடையது எது?

அ. பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம்

ஆ. கருக்கலைப்புக்கான உரிமை

இ. வாக்குரிமை

ஈ. அடிமைத்தனத்தின் முடிவு 

  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், பிரிவினைவாத கூட்டமைப்பு நாடுகளில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக 1863 ஜன.1ஆம் தேதி அன்று விடுதலை அறிவிப்பை வெளியிட்டார். அடிமைகளை வைத்திருந்தோர் தங்கள் அடிமைகளிடம் இதுகுறித்த தகவலை மறைத்து வைத்ததால், ஈராண்டுகளுக்கும் மேலாக அது பயனற்றதாக இருந்தது. இறுதியாக அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 1865 ஜூன்.19 அன்று விடுவிக்கப்பட்டனர்.

3. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவின்கீழ் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் நிறுவப்பட்டது?

அ. பிரிவு 246

ஆ. பிரிவு 257

இ. பிரிவு 263 

ஈ. பிரிவு 267

  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 263, பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகளைப்பற்றி விவாதிப்பதற்கான பொதுவான ஒரு மேடையில் அரசு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலை நிறுவ குடியரத்தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் 1990-இல் நிறுவப்பட்டது. அதன் தலைவர் பிரதமரும் அதன் உறுப்பினர்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளும் உள்ளனர்.

4. ‘UNESCO மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிபா பரிசு’ பின்வரும் எந்தத் துறையில் செய்யப்பட்ட பணிகளை அங்கீகரிக்கிறது?

அ. இலக்கியம்

ஆ. உயிரியல் அறிவியல்

இ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஈ. தகவல் & தொடர்பு தொழில்நுட்பம் 

  • UNESCO மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிபா பரிசு / கல்வியில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் பயன்பாடு (ICT) குறித்த விருதானது 2005-இல் பஹ்ரைன் பேரரசின் உதவியுடன் நிறுவப்பட்டதாகும். இது கல்வித் துறையில் ICT-இன் புதுமையான பயன்பாடுகளை அங்கீகாரமளிக்கிறது.

5. இந்தியாவின் முதல், ‘டார்க் ஸ்கை ரிசர்வ்’ அமைந்துள்ள வனவுயிரிகள் சரணாலயம் எது?

அ. சாங்தாங் வனவுயிரிகள் சரணாலயம் 

ஆ. சக்ரஷிலா வனவுயிரிகள் சரணாலயம்

இ. காரகோரம் வனவுயிரிகள் சரணாலயம்

ஈ. போபிடோரா வனவுயிரிகள் சரணாலயம்

  • இலடாக்கில் உள்ள சாங்தாங் வனவுயிரிகள் சரணாலயத்தின் ஒருபகுதி ‘டார்க் ஸ்கை ரிசர்வ்’ ஆக மாறவுள்ளது. இது வானியல்-சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இப்பகுதி ‘ஹான்லே டார்க் ஸ்கை ரிசர்வ்’ என அறிவிக்கப்பட்ட உடன், இரவு வானை மிதமிஞ்சிய ஒளி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

6. வருடாந்திர BALTOPS கடற்படை பயிற்சியை நடத்துகிற சங்கம் எது?

அ. ஐரோப்பிய ஒன்றியம்

ஆ. நேட்டோ 

இ. எஸ்சிஓ

ஈ. ஆசியான்

  • நேட்டோ 16 நாடுகளைச் சேர்ந்த 7000 மாலுமிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் கடற்படையினருடன் பால்டிக் கடலில் இருவாரகால அமெரிக்கா தலைமையிலான கடற்படைப்பயிற்சியைத் தொடங்கியது. ராணுவக்கூட்டணியில் சேர விண்ணப்பித்த பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. வருடந்தோறும் நடக்கும் BALTOPS கடற்படைப் பயிற்சி கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘D2M ஒளிபரப்பு’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. Digital-to-Mobile

ஆ. Direct-to-Mobile 

இ. Device-to-Mobile

ஈ. Direct-to-Movie

  • தொலைத்தொடர்புத் துறையும் இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியும், ‘Direct-to-Mobile (D2M) ஒளிபரப்பு’ என்ற தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. செயலில் உள்ள இணைய இணைப்பின் அவசியமில்லாமல், நேரடியாக திறன்பேசிகளில் காணொளி & பல்லூடக உள்ளடக்கத்தின் பிற வடிவங்களை ஒளிபரப்ப இது அனுமதிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் அகலக்கற்றை இணைய பயன்பாடு பயன்பாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. 2022 – உலக உணவுப் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Prevent foodborne risks.

. Safer Food, Better Health. 

இ. Manage foodborne infections.

ஈ. Safe food to children.

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.7 அன்று உலக உணவுப்பாதுகாப்பு நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவினால் ஏற்படும் இடர்களைத்தடுப்பது, கண்டறிவது மற்றும் நிர்வகித்தற்கான விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டு ஐநா அவையால் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, உலக உணவு பாதுகாப்பு நாளின் கருப்பொருள், “Safer Food, Better Health” என்பதாகும். WHO-இன் அறிக்கையின்படி, உலகில் ஆண்டுதோறும் 600 மில்லியனுக்கும் அதிகமான பேர் உணவினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

9. காலநிலை நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இந்தியா, சமீபத்தில் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. பிரான்ஸ்

ஆ. கனடா 

இ. ஆஸ்திரேலியா

ஈ. சிலி

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நெகிழி மாசுபோன்ற துறைகளில் பல்வேறு முன்னெடுப்புகள்மூலம் காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் கனடாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளும் ஒத்துழைத்து, தகவல் பரிமாற்றம் செய்து, பரஸ்பர காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடையும்.

10. ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக்கப்பல் எந்த மாநிலம்/UTஇலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

  • சென்னை துறைமுகத்திலிருந்து, ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பலை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் முதல் சொகுசுக்கப்பல் இதுவாகக் கருதப்படுகிறது. பதினோரு மாடிகளைக் கொண்ட இந்தச் சுற்றுலாக் கப்பலில் 2000 பயணிகள் மற்றும் 800 பணியாளர்கள் வரை பயணிக்க முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சூரியவொளிமூலம் இயங்கும் அடுப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரியவொளிமூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது. சூரியவொளியின்மூலம் உருவாகும் வெப்ப ஆற்றளைச் சேமித்து வைத்து, இரவிலும் இந்த அடுப்பைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

‘சூர்யா நுடன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பின் விலை `18,000 முதல் `30,000 வரை இருக்கும் என்றும், 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை `10,000 முதல் `12,000 ஆயிரமாக குறையும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது.

2. மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்: 4-ஆவது இடத்தில் இந்தியா

பழைய நகைகளை மாற்றிவிட்டு, புதிய வடிவமைப்பைக்கொண்ட தங்க நகைகளை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்காரணமாக இந்தியாவில் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்து உள்ளது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் 75 டன் தங்கத்தை இந்தியா மறுசுழற்சி செய்துள்ளது. இதில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4-ஆவது இடம் வகிக்கிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. ஜூன் 30-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53

மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ஏவுகலம் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அந்த ஏவுகலம் செலுத்தப்படவிருக்கிறது. அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் அதில் இடம்பெற்றுள்ளன. முழுக்க, முழுக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டமாக இதனை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி ஏவுகலம் திட்டம் இதுவாகும்.

பிஎஸ்எல்வி சி-53 ஏவுகலம் தாங்கிச்செல்லும் டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், பூமியிலிருந்து 570 கிமீ உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைக் கோள், சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு, வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. இதனுடன் ஆய்வுத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் ஏவப்படவுள்ளன.

1. Which government agency is responsible for protecting India’s critical information infrastructure?

A. National Cyber Coordination Centre

B. National Informatics Centre

C. ICERT

D. NCIIPC 

  • The National Critical Information Infrastructure Protection Centre (NCIIPC) is the nodal agency responsible for protecting India’s critical information infrastructure. It was established in 2014 under Section 70A of the IT Act, 2000. It is part of the National Technical Research Organisation (NTRO), an intelligence agency under the NSA.

2. Emancipation Proclamation, which was mentioned in news, is related to___?

A. Black Lives Matter Movement

B. Right to Abortion

C. Voting Rights

D. End of Slavery 

  • Former US President Abraham Lincoln issued the Emancipation Proclamation on January 1, 1863 to free African Americans in secessionist Confederate states from slavery. It remained ineffective for more than two years as the slave owners withheld this information from their slaves. The last of the enslaved African Americans were freed on June 19, 1865.

3. Inter–State Council was established under which article of Indian Constitution?

A. Article 246

B. Article 257

C. Article 263 

D. Article 267

  • Article 263 of the Indian Constitution allows the President to establish the Inter–State Council, which brings together government entities on a common platform for discussing various governance issues. The Inter–State Council was established in 1990. Its chairman is the Prime Minister and its members include chief ministers and administrators of states and union territories.

4. UNESCO King Hamad Bin Isa Al–Khalifa Prize gives recognition to works done in which of the following fields?

A. Literature

B. Biological Sciences

C. Environment Protection

D. Information & Communication Technology 

  • UNESCO King Hamad Bin Isa Al–Khalifa Prize or the Use of Information and Communication Technologies (ICT) in Education was established in 2005 with the help of the Kingdom of Bahrain. It gives recognition to the innovative use of ICT in the education sector.

5. Which wildlife sanctuary is location of India’s first–ever Dark Sky Reserve?

A. Changthang Wildlife Sanctuary

B. Chakrashila Wildlife Sanctuary

C. Karakoram Wildlife Sanctuary

D. Pobitora Wildlife Sanctuary

  • A part of Changthang Wildlife Sanctuary in Ladakh is going to become a Dark Sky Reserve, which will help promote astronomy–tourism. Once this region is declared as the Hanle Dark Sky Reserve, efforts will be undertaken to protect the night sky from superfluous illumination and light pollution.

6. Which association holds the annual BALTOPS naval exercise?

A. European Union

B. NATO 

C. SCO

D. ASEAN

  • NATO launched the two–week United States–led naval exercise on the Baltic Sea with more than 7,000 sailors, airmen and marines from 16 nations. Finland and Sweden, who have applied to join the military alliance, also participated in the event. The annual BALTOPS naval exercise was initiated in the year 1972.

7. What is the expansion of ‘D2M broadcasting’, which was seen in the news recently?

A. Digital–to–Mobile

B. Direct–to–Mobile 

C. Device–to–Mobile

D. Direct–to–Movie

  • The Department of Telecommunications (DoT) and India’s public service broadcaster Prasar Bharati are exploring the feasibility of a technology called ‘direct–to–mobile’ (D2M) broadcasting. It allows broadcasting video and other forms of multimedia content directly to mobile phones, without the need of an active internet connection. The technology is also expected to improve consumption of broadband and utilisation of spectrum.

8. What is the theme of the ‘World Food Safety Day 2022’?

A. Prevent foodborne risks.

B. Safer Food, Better Health. 

C. Manage foodborne infections.

D. Safe food to children.

  • Every year, June 7 is observed as World Food Safety Day across the world. The objective behind the day is to promote awareness to prevent, detect and manage food–borne risks. The day was declared by the United Nations in 2018 to raise awareness of food safety. This year, the theme of World Food Safety Day is, “Safer Food, Better Health”. As per a report by WHO, the world records over 600 million cases of food–borne diseases annually.

9. India recently signed an MoU with which country to increase cooperation on climate action and environmental protection?

A. France

B. Canada 

C. Australia

D. Chile

  • India and Canada have signed a memorandum of understanding (MoU) to increase cooperation on climate action, environmental protection and conservation through various initiatives in areas such as renewable energy and plastic pollution. The two countries will collaborate, exchange information and support each other’s climate and environmental goals.

10. Luxury cruise liner “Empress” has been flagged off from which state/UT?

A. Tamil Nadu 

B. Kerala

C. Maharashtra

D. Gujarat

  • Tamil Nadu Chief Minister MK Stalin recently flagged off the luxury cruise liner “Empress” from Chennai port. This is regarded as the first luxury cruise liner to be operated from the state. The eleven–storey tourist vessel can accommodate up to 2000 passengers and 800 crew members. The package also includes an anchor at Puducherry and Visakhapatnam harbours.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!