Tnpsc

24rd September 2020 Current Affairs in Tamil & English

24rd September 2020 Current Affairs in Tamil & English

24rd September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

24th September Tamil Current Affairs 2020

24th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அதன் 35 இலட்சம் MSME’களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதற்காக SIDBI உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. உத்தர பிரதேசம்

  • குஜராத் மாநில அரசு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியுடனான (SIDBI) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், அம்மாநிலத்தின் 35 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) திறன் கட்டமைப்பு மற்றும் சந்தை ஆதரவை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, MSME சூழலியலை உருவாக்குவதற்காக இராஜஸ்தான் மாநில அரசு SIDBI உடன் கூட்டிணைந்தது குறிப்பிடத்தக்கது.

2.மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட எந்த மசோதா, DGCA, BCAS மற்றும் AAIB போன்ற விமானப் போக்குவரத்து சார்ந்த முகமைகளை சட்டப்பூர்வ அமைப்புகளாக மாற்ற முற்படுகிறது?

அ. வானூர்தி (திருத்தம்) மசோதா, 2020

ஆ. வான் போக்குவரத்துத் துறை (திருத்த) மசோதா, 2020

இ. உள்நாட்டு வான் போக்குவரத்து (திருத்த) மசோதா, 2020

ஈ. வான் போக்குவரத்து (திருத்த) மசோதா, 2020

  • உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தாக்கல்செய்த வானூர்தி (திருத்த) மசோதா 2020’ஐ, மாநிலங்களவை அண்மையில் நிறைவேற்றியது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில், மக்களவை, இம்மசோதாவுக்கு அனுமதியளித்தது. உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (BCAS), வானூர்தி விபத்து விசாரணை அமைப்பு (AAIB) போன்ற வான் போக்குவரத்து சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியான அமைப்புகளாக மாற்ற இது முற்படுகிறது. வீதிமீறல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இது முன்மொழிகிறது.

3.நடப்பாண்டு (2020) வரும், ‘ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான (உலக ஓசோன் நாள்)’ கருப்பொருள் என்ன?

அ. Ozone for Life

ஆ. Ozone and COVID-19

இ. Ozone Defending Humans

ஈ. The Hole

  • உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைப்பாதுகாப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
  • ‘வாழ்க்கைக்கான ஓசோன்’ என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். நடப்பாண்டு (2020), வியன்னா தீர்மானத்தின் முப்பத்தைந்தாம் ஆண்டு நிறைவையும், உலகளாவிய ஓசோன் படல பாதுகாப்பின் 35 ஆண்டுகளையும் குறிக்கிறது.

4.எந்த நாட்டோடு இணைந்து, பாதுகாப்பு தொழில்நுட்பம் & வர்த்தக முன்னெடுப்பு கூட்டத்தை, இந்தியா நடத்தியது?

அ. பிரான்ஸ்

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஜெர்மனி

ஈ. ஜப்பான்

  • இந்திய-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒருபகுதியாக இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் (USA) இடையிலான பத்தாவது பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பு குழுமக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்ற இந்த குழுக்கூட்டங்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவால் மாறி மாறி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த மெய்நிகரான சந்திப்பின்போது, பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு நல்குதல் தொடர்புடைய அறிக்கையொன்றும் கையெழுத்தானது.

5.உயிரி மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஒரு புதிய நிறுவனத்தை (BARDA) அமைப்பதாக அறிவித்துள்ள பன்னாட்டுச் சங்கம் எது?

அ. ASEAN

ஆ. காமன்வெல்த்

இ. ஐரோப்பிய ஒன்றியம்

ஈ. G20

  • ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தில் அவரது முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையை நிகழ்த்தினார். அவ்வுரையின்போது, அவர் ஒரு வலுவான ஐரோப்பிய நலவாழ்வுச் சங்கத்தை உருவாக்குதற்கு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை வலியுறுத்தினார். உயிரி மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்வதற்கான ஒரு புதிய நிறுவனத்தை (BARDA) உருவாக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அடுத்த ஆண்டு உலக நலவாழ்வு உச்சிமாநாட்டைக் கூட்டவும் அவர் முன்மொழிந்தார்.

6.முதலாம் ‘AICTE-விஸ்வேஷ்வரையா சிறந்த ஆசிரியர்’ விருதுகளை வழங்கியவர் யார்?

அ. பிரதமர்

ஆ. குடியரசுத்தலைவர்

இ. குடியரசுத்துணைத்தலைவர்

ஈ. மத்திய கல்வி அமைச்சர்

  • அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) முதன்முறையாக விஸ்வேஷ்வரையா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு, நாடு முழுவதும் AICTE அங்கீகாரம்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 12 பேராசிரியர்களை AICTE தேர்வுசெய்தது. பொறியாளர் நாளை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலிக்காட்சிமூலம் வழங்கினார்.
  • சிறப்பான ஆசிரியர்களை அடையாளங்காணவும், உயர்தொழில்நுட்ப கல்வித்துறையில் அவர்களின் சிறந்த நடைமுறையை அங்கீகரிக்கவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை Dr. R மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் Dr. ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் Dr நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

7.MP’களின் ஊதியத்தை எத்தனை சதவீதத்துக்கு குறைக்க முற்படும், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியம்’ மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது?

அ. 10%

ஆ. 20%

இ. 25%

ஈ. 30%

  • ​நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் (திருத்த) மசோதா, 2020’ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா COVID-19 தொற்றால் எழுந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஓராண்டு காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 30% குறைக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில், இது தொடர்பாக, அரசாங்கம் ஒரு அவசர ஆணையை பிறப்பித்திருந்தது.

8.செயற்கை சுவாச வழங்கிகளை தயாரிக்கவுள்ள KELTRON, எம்மாநிலத்திற்கு சொந்தமான மின்னணு மேம்பாட்டுக் கழகமாகும்?

அ. கர்நாடகா

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிசா

  • கேரள மாநில அரசுக்கு சொந்தமான கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக்கழகம் (KELTRON), வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய செயற்கை சுவாச வழங்கிகளை (ventilators) தயாரிக்கவுள்ளது. செயற்கை சுவாச வழங்கிகள் உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெறுவதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின்கீழ் உள்ள உயிரி மருத்துவ தொழில்நுட்ப சங்கத்துடனான ஓர் ஒப்பந்தத்தில் KELTRON கையெழுத்திட்டுள்ளது.

9.கோசி இரயில் மகா சேது (பிரம்மாண்ட பாலம்) அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. பீகார்

ஈ. அஸ்ஸாம்

  • பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கோசி இரயில் மகா சேதுவை (பிரம்மாண்ட பாலம்) இந்தியப் பிரதமர் மோடி திறந்துவைத்தார். கடந்த 2003-04’ஆம் ஆண்டில், இந்திய அரசு, இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. 1.9 கிமீ நீளமுள்ள இப்பாலம் `516 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம், இந்திய – நேபாள எல்லையில், உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

10. G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது எந்த நாட்டின் தலைமையின்கீழ் நடைபெற்றது?

அ. செளதி அரேபியா

ஆ. ஐக்கிய அமரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது செளதி அரேபியா தலைமையின்கீழ் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஊழல் எதிர்ப்பு, காலநிலை, விவசாயம், எண்ணிமப் பொருளாதாரம், கல்விபோன்ற பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது.

1. Which state government has signed a MoU with SIDBI, to provide market support to its 35 lakh MSMEs?

[A] Tamil Nadu

[B] Gujarat

[C] Uttar Pradesh

[D] Andhra Pradesh

  • The state government of Gujarat has signed a Memorandum of Understanding (MoU) with the Small Industries Development Bank (SIDBI). Under this deal, the state aims to increase self–reliance and provide capacity building and market support to the 35 lakh Micro–small–medium enterprises (MSMEs) of the state. Earlier, Rajasthan had partnered with SIDBI to develop MSME ecosystem.

2. Which bill, that has been passed in Rajya Sabha, seeks to convert aviation agencies like DGCA, BCAS and AAIB into statutory bodies?

[A] Top of Form

Aircraft (Amendment) Bill, 2020

[B] Aviation Sector (Amendment) Bill, 2020

[C] Civil Aviation (Amendment) Bill, 2020

[D] Air Transport (Amendment) Bill, 2020

  • The Rajya Sabha has recently passed the Aircraft (Amendment) Bill 2020, which was tabled by Civil aviation minister Hardeep Singh Puri. The bill has already been cleared by the Lok Sabha in March this year. It seeks to convert aviation agencies like the Directorate General of Civil Aviation (DGCA), Bureau of Civil aviation security (BCAS) and Aircraft Accident Investigation Bureau (AAIB) into statutory bodies. It also proposes heavy punishment for violations.

3. What is the theme of ‘International Day for the Preservation of the Ozone Layer’ (World Ozone Day) 2020?

[A] Ozone for Life

[B] Ozone and COVID–19

[C] Ozone defending Humans

[D] The Hole

  • World Ozone Day or ‘International Day for the Preservation of the Ozone Layer’ is observed on September 16 all over the world. Vienna Convention for the Protection of the Ozone Layer was adopted and signed by 28 countries, on 22 March 1985. The theme of this year is ‘Ozone for Life’.
  • This year also marks the 35th year of the Vienna Convention and 35 years of global ozone layer protection.

4. India held the Defence Technology and Trade Initiative (DTTI) meeting with which country?

[A] France

[B] United States of America

[C] Germany

[D] Japan

  • The 10th Defence Technology and Trade Initiative (DTTI) Group Meeting between India and the United States. This meeting was held as a part of the Indo–US Bilateral Defence Cooperation. DTTI Group Meetings are held twice a year, hosted alternatively by India and the United States.
  • During the virtual meet held this year, a Statement of Intent on Defence technology cooperation was also signed.

5. Which international association unveiled a new agency for Biomedical advanced research and development (BARDA)?

[A] ASEAN

[B] Commonwealth

[C] European Union

[D] G20

  • The President of the European Commission Ursula von der Leyen delivered her first annual State of the European Union address. During the address, she urged the EU members to build a stronger European health union. She also announced the creation of a new agency for biomedical advanced research & development (BARDA). She also proposed to convene a global health summit next year.

6. Who has presented the first ever AICTE–Visvesvaraya Best Teacher Awards?

[A] Prime Minister

[B] President

[C] Vice President

[D] Union Educational Minister

  • Union Education Minister Ramesh Pokhriyal Nishank presented the first ever AICTE–Visvesvaraya Best Teacher Awards 2020. The award has been conferred to 12 faculty members of AICTE approved institutes on the occasion of Engineers Day. The award has been introduced to identify extraordinary teachers and recognize their best practice in the field of higher technical education.

7. The Lok Sabha has passed ‘Salary, Allowances and Pension of MPs’ Bill which seeks to reduce the salaries of MPs by what percent?

[A] 10%

[B] 20%

[C] 25%

[D] 30%

  • The Lok Sabha has passed the Salary, Allowances and Pension of MPs (Amendment) Bill, 2020. The Bill would reduce the salaries of Members of Parliament by 30% for a period of 1 year to meet the exigencies arising out of the COVID–19 pandemic. Earlier this year, the government had brought an ordinance in this regard.

8. Keltron, which is set to manufacture ventilators, is the Electronic Development Corporation owned by which state?

[A] Karnataka

[B] Kerala

[C] Maharashtra

[D] Odisha

  • Kerala State Electronic Development Corporation (Keltron), owned by the Government of Kerala, is set to manufacture commercially available Ventilators. The corporation has signed a pact with Society for Bio Medical Technology (SBMT) under the Defence Research Development Organisation (DRDO) for technical expertise in ventilator production.

9. Where is the Kosi Rail Maha Setu (Mega bridge) located?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Bihar

[D] Himachal Pradesh

  • The Prime Minister of India is to inaugurate Kosi Rail Mahasetu (Mega bridge) located in Bihar. The Kosi Rail Mahasethu project was sanctioned by Government of India in 2003–04. It is 1.9 km long bridge and has been constructed at a cost of Rs.516 Crore. This bridge is of strategic importance along the India Nepal border.

10. The Environment Ministerial Meeting of the G20 countries was held under the Presidency of which country?

[A] Saudi Arabia

[B] United States of America

[C] United Kingdom

[D] United Arab Emirates

  • The Environment Ministerial Meeting of the G20 countries was conducted under the Presidency of Saudi Arabia. The meeting was held in a virtual mode. India was represented by Union Environment Minister, Prakash Javadekar. The meeting focused on various social and economic issues such as anti–corruption, climate, agriculture, digital economy, education etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!