Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

24th & 25th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

24th & 25th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th & 25th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. Dr FC கோலி சிறப்பு ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ. சென்னை கணித நிறுவனம்

ஆ. TATA அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்

இ. இந்திய புள்ளிவிவரங்கள் நிறுவனம்

ஈ. இந்திய அறிவியல் நிறுவனம்

  • கடந்த 1989ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை கணித நிறுவனம் என்பது ஒரு முதன்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதற்கு, 2006’இல், ‘பல்கலைக்கழக’ அந்தஸ்து வழங்கப்பட்டது. கணிதம் மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான Dr FC கோலி சிறப்பு ஆராய்ச்சி மையத்தை இந் நிறுவனம் அமைக்கவுள்ளது. Dr பாகிர் சந்த் கோலி என்பவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நிறுவனர் மற்றும் முதல் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். மேலும், ‘இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை’ என இவர் கருதப்படுகிறார்.

2. தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்புப்படைகளுடன் கூட்டிணைந் -துள்ள இந்திய வங்கி எது?

அ. பாரத வங்கி

ஆ. பரோடா வங்கி

இ. பஞ்சாப் தேசிய வங்கி

ஈ. கனரா வங்கி

  • இந்தியக்கடற்படை மற்றும் இந்தியக்கடலோரக்காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரோடா வங்கி கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை அவ்வங்கி வழங்கவுள்ளது. ‘பரோடா ராணுவ ஊதிய தொகுப்பு’மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரோடா வங்கி புதுப்பித்துள்ளது.

3. நலவாழ்வு & மருத்துவத்தில் ஒத்துழைப்பு நல்குதற்கும், ‘பசுமை நலவாழ்வு’க்கு ஆதரவளிப்பதற்குமாக, இந்தியா, கீழ்க்காணும் எந்த நாட்டுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. பிரான்ஸ்

ஆ. பிரேசில்

இ. இத்தாலி

ஈ. இஸ்ரேல்

  • கடந்த 2003 செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, இந்தியாவும் இஸ்ரேலும் அண்மையில் நலவாழ்வு மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இருநாடுகளும், காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உட்கட்டமைப்பை உருவாக்குவதில் தங்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், ‘பசுமை சுகாதாரத்திற்கு’ ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டன.

4. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருதை வழங்கிய நாடு எது?

அ. இரஷ்யா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இருநாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

5. தேசிய நுகர்வோர் நாள் (National Consumers Day) கடைபிடிக்கப்படும் தேதி எது?

அ. டிசம்பர் 22

ஆ. டிசம்பர் 23

இ. டிசம்பர் 24

ஈ. டிசம்பர் 25

  • நுகர்வோர் இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு நுகர்வோரும் தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்குறித்து மேலும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று இந்தியாவில் தேசிய நுகர்வோர் நாள் கொண்டாடப்படுகிறது. “The Sustainable Consumer” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். 1986ஆம் ஆண்டு இதேநாளில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

6. “தேசிய நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 22

ஆ. டிசம்பர் 23

இ. டிசம்பர் 24

ஈ. டிசம்பர் 25

  • ஆண்டுதோறும் டிசம்பர்.25 அன்று, “நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் பொருட்டு, கடந்த 2014ஆம் ஆண்டில் இச்சிறப்புநாள் உருவாக்கப்பட்டது. அரசின் பொறுப்பு மற்றும் நிர்வாகம்குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிறப்புநாளின் நோக்கமாகும்.

7. இந்திய மானுடவியல் ஆய்வுமையமானது (AnSI) எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

  • இந்திய மானுடவியல் ஆய்வகம் என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இது மனித மற்றும் பண்பாட்டுக் கூறுகளுக்கான மானுடவியல் ஆய்வு மற்றும் கள தரவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. வட சென்டினல் தீவுகளில் எந்தவொரு வணிக நடவடிக்கையும் பழங்குடியினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அண்மையில் ஒரு கொள்கை ஆவணத்தின்மூலமாக இந்திய மானுடவியல் ஆய்வகம் எச்சரித்துள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஐந்நூறு மீட்டர் துளையுள்ள கோள தொலைநோக்கி (FAST)’ அமைந்துள்ள நாடு எது?

அ. அர்ஜென்டினா

ஆ. பிரான்ஸ்

இ. சீனா

ஈ. இரஷ்யா

  • புவேர்ட்டோ ரிக்கோவில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரேசிபோ ஆய்வகம் நிலைகுலைந்த பின்னர், சீனா உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை பன்னாட்டு அறிவியலாளர்களின் பயன்பாட்டுக்காக திறந்துள்ளது. Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த ‘FAST’ தொலைநோக்கியின் கட்டுமானம், 2016ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. தற்போது, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களின் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைநோக்கி திறக்கப்பட்டுள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தெள பூட்ஸ்’ என்றால் என்ன?

அ. COVID தடுப்பூசி

ஆ. கொரோனா வைரஸ் திரிபு

இ. விண்மீன் அமைப்பு

ஈ. அதிவேக புல்லட் இரயில்

  • பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுமமானது சமீபத்தில் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கோளிலிருந்து முதல் வானொலி சமிக்ஞையை சேகரித்துள்ளது. சுமார் 51 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தப் புறக்கோள், ‘தெள பூட்ஸ்’ விண்மீன் அமைப்பில் காணப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள வானொலி தொலைநோக்கியான தாழ் அதிர்வெண் வரிசையைப்பயன்படுத்தி (LOFAR) இவ்வானொலி சமிக்ஞை சேகரிக்கப்பட்டுள்ளது.

10. நடப்பாண்டு (2020) இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவுக்கான கருப்பொருள் என்ன?

அ. Science for Self-Reliant India and Global Welfare

ஆ. Aatma Nirbhar Vigyanika

இ. Science and COVID-19

ஈ. Bharat Vigyan

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் ஆகிய அமைச்சகங்கள் விஞ்ஞான பாரதியுடன் இணைந்து இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவை நடத்துகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதையும், அறிவியல்சார் தொழிற்முறை வாழ்வை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் நான்கு நாள் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவின் கருப்பொருள், “Science for Self-Reliant India and Global Welfare” என்பதாகும்.

24th & 25th December 2020 Tnpsc Current Affairs in English

1. Which Indian research institution is to set up Dr FC Kohli Centre of Excellence for Research?

[A] Chennai Mathematical Institute

[B] TATA Institute of Fundamental Research

[C] Indian Statistical Institute

[D] Indian Institute of Science

  • Chennai Mathematical Institute is a premier research and education institute, which was founded in 1989. It was granted ‘University’ status in 2006. This institute is set to establish Dr FC Kohli Centre of Excellence for Advanced Research in Mathematical and Computing Sciences. Dr Faquir Chand Kohli was the founder and first CEO of Tata Consultancy Services and considered the father of Indian IT Industry.

2. Which Indian Bank has partnered with Defence Forces for providing customised banking services?

[A] State Bank of India

[B] Bank of Baroda

[C] Punjab National Bank

[D] Canara Bank

  • Leading Public sector lender Bank of Baroda (BoB) has signed a memorandum of understanding (MoU) with Indian Navy and Indian Coast Guard. Under the MoU, the bank is to offer customised services along with a several facilities to the account holders.
  • The bank has also renewed its MoU with the Indian Army to offer customised banking services through ‘Baroda Military Salary Package’.

3. India signed an agreement with which country, to cooperate in health and medicine and support ‘Green healthcare’?

[A] France

[B] Brazil

[C] Italy

[D] Israel

  • India and Israel have recently signed an agreement to cooperate in the fields of health and medicine, replacing the old agreement signed in September 2003. The two countries also agreed to share their expertise in building climate resilient infrastructure and support ‘Green healthcare’.

4. Indian Prime Minister Narendra Modi has been conferred with the ‘Legion of Merit’ honour by which country?

[A] Russia

[B] United States of America

[C] United Kingdom

[D] United Arab Emirates

  • The ‘Legion of Merit’ honour of the United States has been conferred on Indian Prime Minister Narendra Modi. The prestigious award has also been conferred on former Japanese Prime Minister Shinzo Abe and Australian Prime Minister Scott Morrison. It recognises the efforts of the people of India & the US to improve bilateral ties, reflected in the bipartisan consensus in both countries about the Indo–US Strategic Partnership.

5. When is National Consumer Day observed?

[A] December 22

[B] December 23

[C] December 24

[D] December 25

  • The National Consumer Day is observed on 24th December each year. Its objective is to highlight the importance of consumer movement and promote awareness about consumer rights and responsibilities. This year’s theme is “The Sustainable Consumer”. This was the day when the Consumer Protection Act, 1986 was enacted.

6. When is “Good Governance Day” observed?

[A] December 22

[B] December 23

[C] December 24

[D] December 25

  • The Good Governance Day is observed on 25th December each year. It was initiated in 2014 to honor PM Vajpayee. Its objective is to spread awareness to the public about the accountability of the government and governance.

7. Anthropological Survey of India (AnSI) functions under which Union Ministry?

[A] Ministry of Social Justice and Empowerment

[B] Ministry of Science and Technology

[C] Ministry of Tribal Welfare

[D] Ministry of Culture

  • Anthropological Survey of India (AnSI) is the apex organisation, functioning under the Ministry of Culture, Government of India. It is headquartered in Kolkata. It is involved in anthropological studies and field data research for human and cultural aspects. Recently AnSI in a policy document warned that any commercial activity in North Sentinel islands would be a threat to the tribals.

8. ‘Five–hundred–meter Aperture Spherical Telescope (FAST)’, which was seen in the news recently, is located in which country?

[A] Argentina

[B] France

[C] China

[D] Russia

  • After the collapse of the historic Arecibo Observatory in Puerto Rico, China has opened the biggest radio telescope in the world to international scientists. The Five–hundred–meter Aperture Spherical Telescope (FAST) is located in Guizhou province of China. The construction of FAST Telescope was completed in the year 2016. Now, the telescope is being open to the doors to astronomers from across the world.

9. What is ‘Tau Bootes’, which was making news recently?

[A] COVID Vaccine

[B] Corona Virus Strain

[C] Star System

[D] High–speed Bullet Train

  • An international team of scientists has recently collected the first possible radio signal from a planet beyond our solar system. Emission bursts have been observed which are originating from exoplanet ‘Tau Bootes’ star–system, which is about 51 light–years away. This was observed using the Low Frequency Array (LOFAR), a radio telescope in the Netherlands.

10. What is the theme of the India International Science Festival 2020?

[A] Science for Self–Reliant India and Global Welfare

[B] Aatma Nirbhar Vigyanika

[C] Science and COVID–19

[D] Bharat Vigyan

  • Ministries of Science and Technology and Earth Sciences in association with Vijnana Bharati organise the India International Science Festival. Launched in the year 2015, the festival aims to promote scientific temper in the society and encourage students to take up scientific career. This year, the theme of the 4–day long India International Science festival is ‘Science for Self–Reliant India and Global Welfare’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!