TnpscTnpsc Current Affairs

25th & 26th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை பின்வரும் எதனை குறிக்கிறது?

அ. அதிகாரப்பூர்வ மொழிகள்

ஆ. நிலச்சீர்திருத்தங்கள்

இ. கட்சித்தாவல் தடை சட்டம் 

ஈ. பஞ்சாயத்து இராஜ்

 • 52ஆவது திருத்தச்சட்டம், 1985இன் விளைவாக, கட்சித்தாவல் தடைச்சட்டம் எனப் பிரபலமாக அறியப்படும் பத்தாவது அட்டவணை, இந்திய அரசியலமைப்பின் ஒருபகுதியாக மாறியது. மற்றோர் அரசியல் கட்சிக்குத் தாவுவதன் அடிப்ப
  -டையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கு இது அனுமதிக்கிறது. மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி காரணமாக சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வரதா ஆறு என்பது கீழ்க்காணும் எவ்வாற்றின் கிளையாறாகும்?

அ. கிருஷ்ணா ஆறு

ஆ. காவிரியாறு

இ. காளியாறு

ஈ. துங்கபத்திரை ஆறு 

 • நடுக்கர்நாடகாவில் பாயும் வரதா ஆறு துங்கபத்திரை ஆற்றின் கிளையாறாகும். கர்நாடகா மாநில அரசு பெட்டி-வரதா ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விமர்சனங்களைத் தற்சமயம் எதிர் கொண்டுவருகிறது. பெட்டி-வரதா ஆறுகளை இணைக்கும் திட்டம் உத்தரகன்னடாவில் உள்ள சிர்சியில் இருந்து ரைச்சூர் மற்றும் கொப்பல் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு சுமார் 524 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை ஏற்றம் செய்ய எண்ணுகிறது. இத்திட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் உள்ள 2,125 ஏக்கர் காடுகளை அழிக்கும் என்று உள்ளூர் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

3. NDA-இன் குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரான திரௌபதி முர்மு, எந்தப் பழங்குடியைச் சார்ந்தவர்?

அ. கோண்டு

ஆ. சந்தால் 

இ. பில்

ஈ. முண்டா

 • சந்தால் பழங்குடிகள் கோண்டுகள் மற்றும் பில்களைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய பழங்குடிச் சமூகமாக உள்ளது. சந்தால் பழங்குடிகள் ஜார்கண்ட், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச், சந்தால் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுள் ஒன்றாகும். திரௌபதி முர்மு, சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராவார்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற இரகுராஜ்பூர், பின்வரும் எந்த வகையான ஓவியங்களுக்காக அறியப்படுகிறது?

அ. மதுபானி

ஆ. பட்டாச்சித்ரா 

Attend Free Test - Install Winmeen App

Question Bank Books - Buy Hard Copy

Samacheer Lesson Wise Test Series - MCQ Pdf & Online Test

இ. காளிகாட்

ஈ. பகாடி

 • பட்டாச்சித்ரா ஓவியமானது ஒடிஸா மற்றும் மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய ஓவியமாகும். பாரம்பரிய துணிகளில் அச்சுகளை உருளச்செய்து உருவாக்கும் துணி அடிப்படையிலான ஓவியமான இவை 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். ஹிந்து புராணங்களைச்சித்தரிக்கும் ஜகந்நாதர் / வைஷ்ணவ பிரிவுகளைக் கருப்பொருளாகவும் கொண்ட ஓவியங்கள் இவை. வாடிகன் நகரத்தில், போப் பிரான்சிசுக்கு ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்டாச்சித்திரம் ஒன்றை பரிசாக வழங்கியது அடுத்து சமீப செய்திகளில் இது இடம்பெற்றது. பூரி மாவட்டத்தில் உள்ள இரகுராஜ்பூர் கிராமத்தைச்சேர்ந்த கலைஞர் அபிந்த்ரா சுவைன் மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்தப் பட்டாச்சித்திரம் உருவாக்கப்பட்டது. இரகுராஜ்பூர், பட்டாச்சித்திரம் ஓவியங்களுக்கு உலகப்புகழ்பெற்றதாகும்.

5. மத்திய தகவல் தொடர்பு பணியகம் முன்பு என்னவாக அறியப்பட்டது?

அ. தொலைத்தொடர்புத் துறை

ஆ. C-DOT

இ. விளம்பர மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம்

ஈ. வெளிக்கள மற்றும் தொடர்புப் பணியகம் 

 • நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது, வெளிக்கள மற்றும் தொடர்புப் பணியகத்தை (BOC), நடுவண் தகவல்தொடர்புப் பணியகம் எனப்பெயர்மாற்றஞ்செய்துள்ளது. நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பழைய ஊடகப்பிரிவுகள் ஒன்றென இணைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2017-இல் BOC நிறுவப்பட்டது.

6. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘ஆயுர்வேத ஆகார்’ இலச்சினையானது கீழ்க்காணும் எந்த வண்ணத்தொனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. சிவப்பு

ஆ. பச்சை 

இ. நீலம்

ஈ. பழுப்பு

 • ஜூன்.7 அன்று உலக உணவுப்பாதுகாப்பு நாளை முன்னிட்டு, ‘ஆயுர்வேத ஆகார்’ இலச்சினையை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். ‘ஆயுர்வேத ஆகார்’ என்பது FSSAI விதிமுறைகளின் ‘அட்டவணை A’இன் கீழ் உள்ள ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்முறைகள், பொருட்கள் மற்றும் செயல்முறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஓர் உணவாகும்.
 • பச்சை வண்ணத் தொனியில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இலச்சினையில் தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் ‘ஆயுர்வேதம்’ மற்றும் ‘ஆகார்’ என்ற சொற்களின் தொடக்க எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

7. ‘கீர் பவானி மேளா’ கொண்டாடப்படுகிற இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. ஜம்மு & காஷ்மீர் 

இ. நாகாலாந்து

ஈ. பஞ்சாப்

 • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கந்தர்பாலில் உள்ள புகழ்பெற்ற ரக்னியா தேவி கோவிலில் வருடாந்திர மாதா ‘கீர்பவானி மேளா’ தொடங்கியது. காஷ்மீரின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரம் மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக துல்முல்லா ஆலயம் உள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக ஈராண்டுகளுக்குப்பிறகு இந்த மேளா கொண்டாடப்படுகிறது.

8. Revitalisation: Collective Action for the Ocean’ என்பது ஜூன்.8 அன்று கொண்டாடப்பட்ட எந்த நாளின் கருப் பொருளாகும்?

அ. உலக கடல்வாழ் விலங்குகள் நாள்

. உலகப் பெருங்கடல்கள் நாள் 

இ. உலக கடற்கரை நாள்

ஈ. உலக அன்னை பூமி நாள்

 • பெருங்கடல்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எதிர்காலத்தில் அவற்றை நிலையாகப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா அவை ஜூன்.8-ஐ உலகப் பெருங்கடல்கள் நாளாக அறிவித்தது. “Revitalisation: Collective Action for the Ocean” என்பது 2022ஆம் ஆண்டின் உலகப் பெருங்கடல்கள் நாளின் கருப்பொருளாகும். இந்த ஆண்டின் (2022) கருப்பொருள் கடலுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துவதோடல்லாமல், கூட்டுமுயற்சிகள்மூலம் கடல்சார் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கவனஞ்செலுத்துகிறது.

9. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் மற்றும் சமுத்திரயான் ஆகிய திட்டங்களுக்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு எது?

அ. 2022

ஆ. 2023 

இ. 2024

ஈ. 2025

 • புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியா தனது முதல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான, ‘ககன்யான்’ மற்றும் ‘சமுத்திரயான்’ திட்டத்தை தொடங்கும் என்று அறிவித்தார். புது தில்லியில் உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறினார். இந்திய அரசாங்கம் விரைவில் நீலப் பொருளாதாரக் கொள்கையை வெளியிடும் என்றும் 2030 ஆம் ஆண்டளவில் கடல்சார் தொழில்களால் சுமார் 40 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என அவர் அறிவித்தார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘EASE 5.0 சீர்திருத்தங்கள்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. பல்கலைக்கழகங்கள்

ஆ. பொதுத்துறை வங்கிகள் 

இ. வானூர்தி நிலையங்கள்

ஈ. காவல் நிலையங்கள்

 • Enhanced Access and Service Excellence-EASE 5.0 EASE Next திட்டத்தின் ‘பொதுச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்’ சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தொடங்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களுக்காக அவை உருவாக்கப்பட்டுள்ளன. PSB மந்தன், 2022 ஆனது EASENext திட்டத்தை வெளியிட்டது; இது 2 முக்கிய முயற்சிகளை உள்ளடக்கியது; அதாவது EASE 5.0 சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் தனிப்பட்ட வங்கியின் வணிக முன்னுரிமைகளின் அடிப்படையில் வங்கியின் குறிப்பிட்ட உத்திசார் 3-ஆண்டு செயல்திட்டமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆயத்த ஆடை உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு; ஜவுளி உற்பத்தியிலும் இரண்டாம் இடம் வகிக்கிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் இரண்டாவது அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். மொத்த மின்சார உற்பத்தியில், காற்றலை வாயிலாக அதிக பங்களிப்பை வழங்குவதில் தமிழ்நாடு உலக அளவில் ஒன்பதாம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். கார் உற்பத்தியிலும் உலகின் பத்து பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.

நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள் அமைந்திருப்பதன்மூலம் தமிழ்நாடு, இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காகவும், மொத்த நூல் உற்பத்தியில் நாற்பது சதவீதத்தை பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவின் நூல் கிண்ணமாகவும் திகழ்வதாக கூறினார்.

இந்தியாவில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பாதி அளவுக்கு (13,000-ல் 6,500) தமிழ்நாட்டில் இருப்பதுடன், ஆயத்த ஆடை உற்பத்தியில் முதலிடத்திலும், ஜவுளி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவித்தார். 35 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் துறை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தெழுச்சி பெறும் ஜவுளித்தொழில்

ஜவுளித் தொழில் துறை கொவிட் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றி, 3 மாத காலத்திற்குள் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. COVID பாதிப்புக்கு பிந்தைய காலத்தில், ஜவுளி ஏற்றுமதி சாதனை அளவாக 44 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சார்பு இந்தியாவுக்கு மிக முக்கியமாக திகழும் ஜவுளித்துறை, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றிலும் முன்னணியில் இருப்பதாக அவர் கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள்

ஜவுளித்தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை: எம்எம்எஃப் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு `10,683 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆறு நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.964 கோடி முதலீடும், 12 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பும், ரூ.14,600 கோடி விற்று வரவும், ரூ. 360 கோடி அளவுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மித்ரா பூங்காக்கள்:

பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடை (PM MITRA) பூங்கா திட்டத்தின் கீழ் 7 பூங்காக்களை உலகத்தரம்வாய்ந்த கட்டமைப்புடன், `4,045 கோடி மதிப்பீட்டில், 2027-2028க்குள் அமைக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிரதமரின் மித்ரா பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜவுளித் தொழில் பூங்கா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் `740 கோடி செலவில் 8 பூங்காக்களை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளது. 4 இடங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் கொலப்பலூரில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் SITRA சார்பில் மெடிடெக் உயர் சிறப்பு மையமும், PSG பொறியியல் கல்லூரியில் இந்து டெக் உயர் சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் `8,024 கோடி நிதியுதவி மற்றும் `595 கோடி மானிய உதவியுடன், சுமார் 6 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக, மொத்தம் 1405 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமர்த் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 2 லட்சம் பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இதுவரை `1.71 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2. திருப்பூர், விழுப்புரத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் அடிக்கல்

திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் `76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

டைடல் பூங்காவில் `212 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் `33.46 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் `76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு -ம் காணொலிக்காட்சிமூலம் அடிக்கல் நாட்டினார்.

இரண்டாவது பொருளாதார மாநிலம்: 295 பில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இவற்றோடு மனநிறைவு அடைந்துவிடாமல், 2030-ஆம் ஆண்டில், தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் `78 லட்சம் கோடி) பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்றார்.

2. பத்திரிகையாளர் மாலனுக்கு சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது

நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்புக்கான விருதுக்கு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி எழுதிய ஆங்கில நாவலான ‘குரோனிக்கல் ஆப் கார்ப்ஸ் பியரர்’ நூலை ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த மொழியாக்கப் படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் 22 இந்திய மொழிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றோர்க்கு `50,000 ரொக்கமும் செப்புப்பட்டயமும் வழங்கப்படவிருக்கிறது.

3. FIFA 17 வயது உலகக்கோப்பை: குரூப் ஏ பிரிவில் இந்தியா

வரும் அக்டோர் மாதம் நடைபெறவுள்ள FIFA 17 வயது மகளிர் உலகக்கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) சார்பில் இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்.11 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புவனேசுவரம், கோவா, நவி மும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா:

போட்டியை நடத்தும் இந்தியா, குரூப் ஏ பிரிவில் வலுவான அமெரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுடன் இடம்பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஜெர்மனி, நைஜீரியா, சிலி, நியூசிலாந்தும், குரூப் சி பிரிவில் ஸ்பெயின், கொலம்பியா, மெக்ஸிகோ, சீனாவும், குரூப் டி பிரிவில் ஜப்பான், தான்சானியா, கனடா, பிரான்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

4. NITI ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் நியமனம்!

NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015இல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய அமைப்பு NITI ஆயோக். தேசிய வளர்ச்சிக் கொள்கைகளை இது பரிந்துரை செய்கிறது.

இதன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அமிதாப் காந்தின் பதவிக்காலம் வருகிற ஜூன்.30 அன்று நிறைவடைவதையடுத்து, பரமேஸ்வரன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அறிவிப்பின்படி, ஆரம்ப பதவிக்காலமாக ஈராண்டுகள் பதவிவகிப்பார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. G7 மாநாடு: பிரதமர் மோடி ஜெர்மனி பயணம்

G7 மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் மோடி ஜெர்மனி செல்லவுள்ளார்.

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் G7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விரைவில் ஜெர்மனி செல்கிறார். ஜுன்.26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

6. வங்கதேசத்தின் நீளமான பாலம்

வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே சுமார் `2,700 கோடியில் கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா திறந்துவைத்தார். தலைநகரம் டாக்காவையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியையும் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே சாலை-ரயில் பாலமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவி ஏதுமின்றி இந்தப் பாலத்தை வங்கதேச அரசு கட்டியுள்ளது. நாட்டின் மிகநீண்ட இந்தப் பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1. Tenth Schedule of the Indian Constitution deals with which of the following aspects?

A. Official languages

B. Land Reforms

C. Anti–defection law 

D. Panchayati Raj

 • The Tenth Schedule, which is popularly known as the Anti–Defection Act, became part of the Indian Constitution as the result of the 52nd Amendment Act, 1985. It sets grounds for the disqualification of legislators on the grounds of defection to another political party. It was recently making news due to Maharashtra Political Crisis.

2. Varada River, which was mentioned in news recently, is the tributary of which river?

A. Krishna River

B. Cauvery River

C. Kali River

D. Tungabhadra River 

 • The Varada River in central Karnataka is a tributary of Tungabhadra River. The state government of Karnataka is currently facing criticism from environmentalists for the proposed Bedti–Varada River linking project. The Bedti–Varada river–linking project seeks to pump about 524 million cubic metres (mcm) of water from Sirsi in Uttara Kannada to arid regions of Raichur and Koppal districts. It has met with strong opposition from local activists, who say that project will destroy 2,125 acres of forests in the ecologically sensitive parts of Western Ghats.

3. NDA Presidential election candidate Droupadi Murmu belongs to which tribe?

A. Gond

B. Santhal 

C. Bhil

D. Munda

 • Santhal or Santal are India’s third largest scheduled tribe community after Gonds and Bhils. The Santhali population is mainly distributed in Jharkhand, Odisha and West Bengal. NDA Presidential election candidate Droupadi Murmu’s home district, Mayurbhanj, is one of the districts having dense concentration of the Santhali people. Droupadi Murmu belongs to Santhal tribe.

4. Raghurajpur, that was recently in news, is famous for which of the following types of paintings?

A. Madhubani

B. Pattachitra 

C. Kalighat

D. Pahadi

 • Pattachitra painting is the traditional painting of Odisha and West Bengal. These scroll paintings trace their origin to 12th century. They mainly depict Hindu mythology and are closely related to Jagannath and Vaishnava sect. It was recently in news as Odisha Chief Minister Naveen gave a Pattachitra to Pope Francis in Vatican City as a gift. This pattachitra was created by artist Apindra Swain and his family who belong to craft village of Raghurajpur in Puri district. Raghurajpur is world famous for Pattachitra paintings.

5. Central Bureau of Communication was earlier known as__?

A. Department of Telecommunication

B. C–DOT

C. Directorate of Advertising and Visual Publicity

D. Bureau of Outreach and Communication 

 • The Ministry of Information and Broadcasting has renamed the Bureau of Outreach and Communication (BOC) as the Central Bureau of Communication. The BOC was set up in 2017 following the merger of the ministry’s erstwhile media units.

6. The ‘Ayurveda Aahar’ logo, which was released recently, has been designed in which colour tone?

A. Red

B. Green 

C. Blue

D. Brown

 • Union Health Minister Dr Mansukh Mandaviya launched the ‘Ayurveda Aahar’ logo on the occasion of World Food Safety Day on June 7. ‘Ayurveda Aahar’ is food prepared in accordance with the recipes, ingredients and processes as described in the books of Ayurveda listed under ‘Schedule A’ of FSSAI regulations. The design of the green–coloured logo contains initial letters of the words Ayurveda and Aahar in Devnagari and English.

7. ‘Kheer Bhawani Mela’ is a festival celebrated in which Indian state/UT?

A. Arunachal Pradesh

B. Jammu & Kashmir 

C. Nagaland

D. Punjab

 • The annual Mata Kheer Bhawani Mela started at the famous Ragnya Devi temple in Ganderbal, Jammu and Kashmir. The Tullmulla shrine is also the symbol of centuries–old culture and brotherhood among different communities of Kashmir. The Mela is being celebrated after two years due to the COVID–19 pandemic.

8. ‘Revitalisation: Collective Action for the Ocean’ is the theme of which international day celebrated on June 8?

A. World Sea Animals Day

B. World Ocean Day 

C. World Beach Day

D. World Mother Earth Day

 • The United Nations designated June 8 as World Ocean Day to raise awareness about how to save the oceans and sustainably use them in the future. The theme for World Ocean Day 2022 is ‘Revitalisation: Collective Action for the Ocean’.
 • This year’s theme focuses on how to not only stop harming the ocean but on actions to be taken in order to restore the oceans through collective efforts.

9. What is the target year set by India for first Human Space Mission Gaganyaan and first Human Ocean Mission?

A. 2022

B. 2023 

C. 2024

D. 2025

 • Earth Science Minister Dr Jitendra Singh announced that India will launch the first Human Space Mission ‘Gaganyaan’ as well as the first Human Ocean Mission in the second half of 2023. Addressing the World Oceans Day celebrations in New Delhi, The Minister also said that the government will soon unveil the Blue Economic Policy and around 40 million people will be employed by ocean–based industries by 2030.

10. ‘EASE 5.0 Reforms’, which was seen in the news, is associated with which units?

A. Universities

B. Public Sector Banks 

C. Airports

D. Police Stations

 • Enhanced Access and Service Excellence–EASE 5.0 ‘Common reforms agenda’ of EASE Next program was recently launched by the Minister of Finance Nirmala Sitharaman. They have been developed for reforms in Public Sector Banks. PSB Manthan, 2022 unveiled the EASENext program, which would comprise 2 major initiatives namely EASE 5.0 reforms agenda and Bank specific strategic 3–year roadmap, based on individual bank’s business priorities.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button