24th & 25th October 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. எத்திட்டத்திற்கான வல்லுநர் குழுவை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது?

அ. காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டம்

ஆ. தெலங்கானா மீஅனல்மின் திட்டம்

இ. காகதீய திட்டம்

ஈ. பகீரதா திட்டம்

 • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் அறிவித்தது. ஏழு உறுப்பினர்களைக்கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. திட்டத்தால் ஏற்படும் சேதத்தின் அளவையும் இந்தக் குழு மதிப்பீடு செய்யும்.

2. Solvent Extractors’ சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியாவில், இந்த எண்ணெய் ஆண்டில், எப்பொருளின் இறக்குமதி 12 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது?

அ. சமையல் எண்ணெய்

ஆ. சோயா பீன்ஸ்

இ. பிண்ணாக்கு

ஈ. கடுகு

 • இந்தியாவின் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் சங்கத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2019–20 எண்ணெய் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (நவம்பர் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 12 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. ஓர் எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் முதல் அக்டோபர் வரையுடையதாகும். 2019–20 நவம்பர்–செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்தியா 11.95 மில்லியன் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

3. ஐநா மனிதவுரிமைகள் உயராணையரானவர் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை எந்த நாடு மீளாய்வு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. பிரேசில்

 • ஐநா மனிதவுரிமைகள் உயராணையரான மைக்கேல் பேச்லெட், சமீபத்தில் இந்திய அரசாங்கத்திடம் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 • ஐநா மன்றத்தின் தலைவரும் இந்தியாவை பன்னாட்டு மனிதவுரிமை விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மனிதவுரிமை மீறல் குறித்த புகாரளிப்பின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தண்டிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக, பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வங்கிக்கணக்குகளை இந்தியா முடக்கியதை அடுத்து, இந்தியாவிலுள்ள தனது அலுவலகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PM 2020’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. BSNL

ஈ. HAL

 • ‘தற்சார்பு இந்தியா’வை உருவாக்கும் முயற்சியில், துளிர் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஈடுபடும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கொள்முதல் கையேடு 2020’ஐ (Procurement Manual 2020) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘OSIRIS–Rex’ என்றால் என்ன?

அ. விண்கலம்

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. COVID–19 தடுப்பூசி

ஈ. பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

 • Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) என்பது NASA’இன் விண்கலமாகும். 2023ஆம் ஆண்டில் புவிக்கு வழங்குவதற்காக, ஒரு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களை சேகரிக்க, அவ்விண்கலம் அதன் எந்திர கையைப் பயன்படுத்தி அக்குறுங்கோளைத் தொட்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ‘பென்னு’ எனப்படும் குறுங்கோள் தற்போது புவியிலிருந்து ஏறத்தாழ 321 மில்லியன் கிமீட்டருக்கும் அப்பால் உள்ளது.

6. எந்த மாநிலத்தில், 172 ஆயிரமாண்டுகள் பழமையான ஆற்றின் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா

 • ‘குவாட்டர்னரி சைன்ஸ் ரிவியூஸ்’ இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, தொலைந்த ஓர் ஆறு குறித்த சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன; இந்த ஆறு அக்காலத்தில் மாந்தரின் உயிர்நாடியாக இருந்திருக்கலாம். 172,000 ஆண்டுகளுக்கு முன்பு பிகானேருக்கு அருகிலுள்ள மத்திய தார் பாலைவ –னத்தின் வழியாக இந்த ஆறு பாய்ந்தோடியுள்ளது. இந்த ஆய்வை, ஜெர்மனியில் அமைந்துள்ள மாந்தர் வரலாற்று அறிவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், தமிழ்நாட்டைச் சார்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் IISER கொல்கத்தா ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.

7. நாட்டின் 29 மாநிலங்களுள் சிறந்த இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டைக் கொண்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஹரியானா

ஈ. கர்நாடகா

 • சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அனீமியா முக்த் பாரத் (AMB) குறியீட்டின் மதிப்பெண் பட்டியலில், ஹரியானா மாநிலம் 46.7 என்ற AMB குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரத்தசோகை முக்த் பாரத் என்பது நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும். இந்தியா முழுவதும் இரத்தசோகை பாதிப்பைக் குறைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நாஸ்கா கோடுகள்’ அமைந்துள்ள நாடு எது?

அ. பிரேசில்

ஆ. பெரூ

இ. ஜமைக்கா

ஈ. தென்னாப்பிரிக்கா

 • புகழ்பெற்ற UNESCO உலக பாரம்பரிய தளமான நாஸ்கா கோடுகள் (பம்பா டி நாஸ்கா) தென்னமெரிக்க நாடான பெரூவில் அமைந்துள்ளது. இந்த மலையின் சரிவொன்றில் வரையப்பட்ட பூனை தொடர்பான புதிய உருவ அடையாளம் காணப்பட்டதால் இந்த இடம் அண்மைச் செய்திகளில் காணப்பட்டது. இந்தத் தளம், பிரம்மாண்டமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் கற்பனை மனிதர்களின் சித்தரிப்புகளுக்கு பெயர் பெற்றது.

9. “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்ற அறிக்கையை உலக வங்கியுடன் இணைந்து வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. WHO

ஆ. FAO

இ. IMF

ஈ. UNICEF

 • “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்பது உலக வங்கிக் குழுமமும் UNICEF அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள வறுமையில் வாடும் சிறார்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு ஆகும்.
 • இம்மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள மொத்த 356 மில்லியன் குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் (1/6), COVID–19 கொள்ளைநோய்க்கு முன்னதாக மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். துணை சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறார்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

10. ‘Global Air 2020’ என்ற அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் உலகளவில் அதிக காற்றுமாசை ஏற்படுத்திய நாடு எது?

அ. சீனா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. இந்தியா

ஈ. சிங்கப்பூர்

 • ‘The State of Global Air 2020’ (SOGA 2020) என்ற அறிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த ஹெல்த் எபெக்ட்ஸ் நிறுவனமும் குளோபல் பர்டன் ஆப் டிசீசசும் இணைந்து வெளியிட்டுள்ளன. இவ்வறிக்கையின்படி, கடந்த ஆண்டு, இந்தியாவில் மிகவுயர்ந்த ஆண்டு சராசரியான PM 2.5 செறிவு வெளிப்பாட்டை இந்தியா பதிவுசெய்துள்ளது. இந்திய மக்கள் உலகளவில் மிகவுயரிய PM 2.5 செறிவுக்கு ஆளாகின்றனர். மேலும், 2010 முதல் PM 2.5 செறிவானது இந்தியாவில் அதிகரித்து வருவது.

1. The National Green Tribunal (NGT) directed the Environment Ministry to constitute expert committee for which project?

[A] Kaleshwaram Lift Irrigation Project

[B] Telangana Super Thermal Power Project

[C] Kakatiya Project

[D] Bhagiratha Project

 • The National Green Tribunal (NGT) has recently held that environmental clearance was granted to the Kaleshwaram lift irrigation project in Telangana “ex post facto” in violation of the legal requirement. NGT directed the Ministry of Environment to constitute a seven–member expert committee and suggest relief and rehabilitation measures. It will also assess the extent of damage caused by the project.

2. As per Solvent Extractors’ Association, the import of which product has decreased by 12 per cent during this oil year in India?

[A] Edible Oil

[B] Soy Bean

[C] Oil Cakes

[D] Mustard

 • As per the recent statement of the Solvent Extractors’ Association (SEA) of India, the import of edible oils to the country reduced by 12 percent in the first 11 months (November to September) of the oil year 2019–20. The oil year ranges from November to October. India imported 11.95 million tonnes of edible oil during November–September of 2019–20 as against 13.58 million tonnes during the corresponding period of 2018–19.

3. The UN High Commissioner for Human Rights (UNHCHR) asked which country to review the Foreign Contribution (Regulation) Act?

[A] China

[B] India

[C] United States of America

[D] Brazil

 • The UN High Commissioner for Human Rights (UNHCHR) chief Michelle Bachelet has recently appealed to the Government of India to review the Foreign Contribution (Regulation) Act.
 • The head of the UN forum also asked India to review compliance of the act with international human rights norms. She also regretted that it was being used to punish NGOs for human rights reporting. Earlier, Amnesty Intl., shut its office in India after its bank accounts were frozen.

4. ‘PM 2020’, that was seen in news recently, is associated with which organisation?

[A] ISRO

[B] DRDO

[C] BSNL

[D] HAL

 • Defence Minister Rajnath Singh released a new version of the Defence Research and Development Organisation (DRDO) Procurement Manual 2020 (PM–2020). The previous Procurement Manual was altered in the year 2016. The manual aims to encourage more participation of start–ups and micro, small & medium enterprises (MSMEs) in defence research and development.

5. What is ‘OSIRIS–Rex’ that was seen in news recently?

[A] Spacecraft

[B] Submarine

[C] COVID–19 vaccine

[D] Anti–tank missile

 • Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) is a space craft of the NASA. It was seen in news recently as the space craft touched an asteroid using its robotic arm to collect dust and pebbles from the surface to deliver to Earth in 2023. The asteroid known as Bennu, is currently more than 321 million kilometers from Earth.

6. The evidence of a 172–thousand–year–old river has been found at which state/UT?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Rajasthan

[D] Karnataka

 • As per a recent study published in the ‘Quaternary Science Reviews’ journal, evidence of a lost river has been found, which might have been a life–line to human populations.
 • The river which through the central Thar Desert, near Bikaner, before 172 thousand years ago. The study was conducted by Max Planck Institute for the Science of Human History in Germany, Anna University in Tamil Nadu, and IISER Kolkata.

7. Which state has the best Anaemia Mukt Bharat (AMB) Index among 29 states in the country?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Haryana

[D] Karnataka

 • In a recently released scorecard of the Anaemia Mukt Bharat (AMB) Index by the Ministry of Health and Family Welfare, Haryana was ranked at the top spot with an AMB Index of 46.7. The Anaemia Mukt Bharat is an initiative of the Ministry of Health and Family Welfare and UNICEF. It aims to reduce the prevalence of Anaemia all over India.

8. Nazca Lines, which was seen in news recently, is located in which country?

[A] Brazil

[B] Peru

[C] Jamaica

[D] South Africa

 • The famous UNESCO World Heritage Site Nazca Lines (Pampa de Nazca) is located in the South American country Peru. The place was seen in news recently as a new figurative geoglyph related to a cat was identified, drawn on one of the slopes of this hill. The site is known for its depictions of gigantic animals, plants and imaginary beings.

9. Which organisation in association with World Bank has released the report named “Global Estimate of Children in Monetary Poverty – An update”?

[A] WHO

[B] FAO

[C] IMF

[D] UNICEF

 • ‘Global Estimate of Children in Monetary Poverty: An Update’ is an analysis on children living in poverty, released by World Bank Group and UNICEF. As per the estimate, 1/6th of the total 356 million children of the world, were living in extreme poverty before the COVID–19. The report states that sub–Saharan Africa accounts for two thirds of children living extreme poverty.

10. Which country recorded highest air pollution exposure globally in 2019, as per the State of Global Air 2020 report?

[A] China

[B] United States of America

[C] India

[D] Singapore

 • The State of Global Air 2020 (SOGA 2020) report was released by US–based Health Effects Institute and Global Burden of Disease (GBD). As per the report, India recorded the highest annual average PM 2.5 concentration exposure in the world last year.
 • People in India are exposed to the highest PM 2.5 concentrations globally and the country has been recording an increase in PM 2.5 pollution since 2010.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *