Tnpsc

24th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சுவையூட்டப்பட்ட நறுமணப்பால் தயாரிப்புகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் 12 சதவீத வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் தீர்ப்பளித்த ஆணையம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) மேம்பட்ட ஆளும் ஆணையம் (AAR)

இ) நிதி ஆணையம்

ஈ) மத்திய மறைமுக வரிகள் வாரியம்

  • சுவையூட்டப்பட்ட நறுமணப்பால் தயாரிப்புகளுக்கு சரக்கு & சேவை வரியின்கீழ் 12% வரி விதிக்கப்படும் என்று குஜராத் மாநிலத்தின் GST வழக்குகளை விசாரிக்கும் AAR ஆணையம் தெரிவித்துள்ளது. அமுல் பிராண்டின்கீழ் பால் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம், அமுல் கூல்/அமுல் கூல் கபே என்ற பெயரில் விற்பனை செய்யும் நறுமண பாலுக்கு GST வரி விதிப்பது குறித்து AAR ஆணையத்தை அணுகியது.

2. பின்வரும் எந்த நாடு யுரேனியத்தை 60% வரை செறிவூட்ட தொடங்கியுள்ளது என்பதை பன்னாட்டு அணுவாற்றல் முகமை உறு -திப்படுத்தியுள்ளது?

அ) இஸ்ரேல்

ஆ) ஈரான்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) நைஜீரியா

  • ஈரான் 60 சதவீதம் வரை யுரேனியம் செறிவூட்டலை தொடங்கிவிட்டது என பன்னாட்டு அணுவாற்றல் முகமை உறுதிசெய்துள்ளது. இதுவே அதிகபட்ச செறிவூட்டல் நிலையாகும். அண்மையில் நடந்த சம்பவத்தால் நடான்சில் உள்ள மின்விநியோக வலையமைப்பு சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, யுரேனியம் செறிவூட்டலை உயர்த்துவதற்கும், நவீனமயமாக்கப் -பட்ட மையவிலக்கிகளை நடான்ஸ் அணுவாற்றல் நிலையத்தில் நிறுவுவதற்கும் ஈரான் முடிவுசெய்துள்ளது.

3. பாதுகாப்பு குறித்து, அண்மையில் பணியமர்த்தப்பட்ட “INAS 323” என்றால் என்ன?

அ) ஆளில்லா வானூர்தி

ஆ) வான்படையணி

இ) நீர்மூழ்கிக்கப்பல்

ஈ) ஏவுகணை துவக்கி

  • இந்திய கடற்படையின் உள்நாட்டில் கட்டப்பட்ட நவீன இலகு இரக உலங்கு வானூர்தி Mk III, இந்திய கடற்படையின் INAS 323 வான்படை அணி ஆகியவை கோவாவின் INS ஹன்சாவிலிருந்து பணியில் சேர்க்க -ப்பட்டன. நவீன இலகு இரக உலங்கு வானூர்தியான Mk III, தேடல் & மீட்பு, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர கண்காணிப்புக்கு ஆகிய -வற்றுக்கு பயன்படுத்தப்படும்.
  • இப்படையணி, மூன்று நவீன இலகு ரக Mk III உலங்கு வானூர்திகளை இயக்கும், சக்தி எந்திரத்துடன்கூடிய இந்த உலங்கு வானூர்தியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சிவசுப்பிரமணியன் ராமன், கீழ்காணும் எந்த அமைப்பின் தலைவர் & நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்?

அ) SEBI

ஆ) SIDBI

இ) ISRO

ஈ) DRDO

  • சிவசுப்பிரமணியன் ராமன் SIDBI வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளதாக சிறு தொழிற்துறை மேம்பாட்டு வங்கி (SIDBI) அறிவித்தது. மூன்றாண்டு காலத்துக்கு அவர் இப்பதவியை வகிப்பார். இந்த நியமனத்திற்கு முன்பு, ராமன், தேசிய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SBI) நிர்வாக இயக்குநர் பதவியையும் வகித்துள்ளார்.

5. ஆண்டுதோறும் ஏப்ரல்.19 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளோடு தொடர்புடைய மனித உடலின் இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு எது?

அ) தோல்

ஆ) கல்லீரல்

இ) நுரையீரல்

ஈ) மூளை

  • கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.19 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல், மனிதவுடலின் இரண்டாவது பெரிய உறுப்பு மற்றும் செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
  • இது தோலுக்கடுத்து இரண்டாவது மிகப்பெரிய உறுப்பாகும். 2018ஆம் ஆண்டில், சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் நச்சுயிரியால் கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதையும் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, “புளூ நேச்சர் அலையன்ஸ்” என்பதுடன் தொடர்புடையது எது?

அ) விண்வெளி பாதுகாப்பு

ஆ) பெருங்கடல் பாதுகாப்பு

இ) வேளாண் பாதுகாப்பு

ஈ) மயில்கள் பாதுகாப்பு

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில், 18 மில்லியன் சதுர கிமீட்டர் பெருங்கடல் பரப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு புத்தம் புதிய உலகளாவிய கடல்சார் முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு, “புளூ நேச்சர் அலையன்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது தேசிய அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், பழங்குடி மக்கள், அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் வழிநடத்தப்படுகிறது.

7. உலக பத்திரிகை சுதந்திர குறியீடு – 2021’இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 142

ஆ) 152

இ) 162

ஈ) 172

  • ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்தி -ரிகை சுதந்திர குறியீட்டில், இந்தியா, 142ஆவது இடத்தை இந்தாண்டும் தக்கவைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
  • பத்திரிகை சுதந்திரம்பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள்கொண்ட இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து பின்லா -ந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ஆம் இடங்கள் பிடித்துள்ளன. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது என அக்குறியீடு தெரிவித்துள்ளது.

8. ஐக்கியப்பேரரசால் வெளியடப்படும் புதிய டிஜிட்டல் நாணயத்தின் பெயர் என்ன?

அ) UK நாணயம்

ஆ) பிரிட்காயின்

இ) டிஜி பிரிட்

ஈ) பிரிட் நாணயம்

  • ஐக்கியப்பேரரசு (UK) ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற் -கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இது, “பிரிட்காயின்” என்று அழைக்கப்படுகிறது. மத்திய வங்கியின் இந்த டிஜிட்டல் நாணயம் குறித்த நன்மைகளை மதிப்பிடுவதற்காக, இங்கிலாந்து வங்கியும் கருவூலமும் இணைந்து செயல்படவுள்ளன.
  • வீட்டுச் செலவுகள் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டிற்கான டிஜிட்டல் நாணயத்தின் புதிய வடிவமாக இந்தப் புதிய நாணயம் இருக்கும் என அவ்வங்கி கூறியுள்ளது.

9. அண்மையில் காலமான இட்ரிஸ் டெபி இட்னோ, முப்பதாண்டுக -ளுக்கும் மேலாக, பின்வரும் எந்த மத்திய ஆப்பிரிக்க தேசத்தின் ஆட்சியாளராக இருந்தார்?

அ) சூடான்

ஆ) சாட்

இ) எகிப்து

ஈ) நைஜீரியா

  • மத்திய ஆப்பிரிக்க தேசமான சாட் நாட்டை முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த சதிபர் இட்ரிஸ் டெபி இட்னோ, அண்மையில் கிளர்ச்சி -யாளர்களுடனான போரின்போது இறந்தார். அவர் மரணிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஏப்.11 அன்று அதிபர் தேர்தலில் டெபி வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

10. பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ் நலவாழ்வுப் பணியாள -ர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?

அ) `5 இலட்சம்

ஆ) `10 இலட்சம்

இ) `25 இலட்சம்

ஈ) `50 இலட்சம்

  • பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின்கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கா -ன காப்பீட்டுத்திட்டத்தை இந்திய அரசு ஓராண்டுகாலத்திற்கு நீட்டித்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது COVID-19 தொடர்பான பணியின் காரணமாக தற்செயலாக உயிரிழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் உரிமைகோருபவருக்கு `50 இலட்சம் வழங்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. COVID சிகிச்சைக்கு ‘விரஃபின்’ ஊசி மருந்து: அவசரகால பயன்பாட்டுக்கு DGCI அனுமதி

COVID நோயாளிகளின் அவசரகால சிகிச்சைக்கு ‘விரஃபின்’ ஊசி மருந்தை பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DGCI) அனுமதியளித்தது. கரோனா தொற்றால் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள நோ
-யாளிகளின் சிகிச்சைக்கு அந்த மருந்தை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான ஸைடஸ் கடிலா இந்த ஊசிமருந்தை உற்பத்தி செய்கிறது. நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் அவசரகால பயன்பாட்டுக்கு ‘விரஃபின்’ மருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் NCC இணைப்பு: UGC தகவல்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான விருப்பப் பாடப்பிரிவில் தேசிய மாணவர் படை (NCC) சேர்க்கப்பட்டுள்ளதாக UGC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வுகளை வளர்க்கும் விதமாக ‘தேசிய மாணவர் படை’ இளம் வயதுகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ராணுவம், காவல்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

3. யூ-டியூப் வழியே குடிமைப்பணித் தேர்வு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குநர் வெ இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு: கரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேர்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு -ள்ளன. இந்தத் தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப்பணித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தேர்வுக்குரிய காணொளிகள் அதில் பதிவேற்றப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.

4. கோடை காலப் பயிர்கள் சாகுபடி பரப்பளவு 21.50 சதவீதம் அதிகரிப்பு! பருப்பு வகை சாகுபடியில் தமிழ்நாடு முன்னிலை

நாட்டில் கோடைகாலப்பயிர்கள் சாகுபடி பரப்பளவு 21.5% அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண், உழவர்கள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதில், அதிக அளவில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்றும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றையொட்டி நாட்டின் வளர்ச்சி விகிதம் பல்வேறு துறைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேளாண் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை. விவசாயிகளின் கடின உழைப்போடு மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோடைகாலப்பயிர்கள் சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூறியுள்ளதாவது: நாட்டில் கோடைகாலப்பயிர்களான பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய வேளாண்துறை எடுத்தது. இதன் விளைவாக ஏப்.23ஆம் தேதி வரையில் நாட்டில் 73.76 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கோடைகாலப்பயிர்கள் சாகுபடி செய்யப்ப -ட்டுள்ளன. இது சுமார் 21.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இது 60.67 இலட்சம் ஹெக்டேராக இருந்தது.

பருப்பு வகைகள்: இதில், பருப்பு வகைகள் சாகுபடிப் பரப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் சுமார் 6.45 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இது இந்த ஆண்டு 12.75 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம் 2.12 லட்சம் ஹெக்டேருக்கு மேலாக பருப்பு வகைகளை சாகுபடி செய்து முன்னனி மாநிலமாக திகழ்கிறது. மேலும், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 8 மாநிலங்களில் அதிக அளவில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

எண்ணெய் வித்துகள்: நாட்டில் எண்ணெய் வித்துகள் சாகுபடி 9.03 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 10.45 இலட்சம் ஹெக்டேராக (16 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதில் முன்னிலை பட்டியலில் உள்ள 8 மாநிலங்களில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 33.82 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு 39.10 இலட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. குறுவை நெல் சாகுபடியில் மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகம் ஆகியவை முன்னிலையில் உள்ளது. இந்த வகையில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது.

கோடைகாலப்பயிர்கள் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பால் கூடுதல் வருவாயு -ம், வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. மேலும், விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் கோடைகாலப்பயிர்கள் சாகுபடிக்கான பயிற்சிக
-ளும் அளிக்கப்படுகின்றன. இந்தப்பயிற்சி ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

பயிர்சாகுடி பரப்பளவு அதிரிக்கப்படுவதால், உணவு தானியங்களின் கூடுத -ல் தேவையும், கால்நடைகளுக்கான உணவுத்தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. பயிர் சாகுபடியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதற் -கும் விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் நோய்த்தொற்று காலகட்டத்தில், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் `2.74 லட்ச கோடியளவுக்கு வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி `2.31 லட்ச கோடியாக இருந்தது. கோதுமை, தானியங்கள், அரிசி, சோயா, சர்க்கரை, பருத்தி போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் முக்கியமானவையாகும். 2020-21’இல் கோதுமை `3,283 கோடி, தானிய வகைகள் `4,542 கோடி, அரிசி `30,277 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன், லெபனானுக்கு 40,000 மெட் -ரிக் டன் கோதுமையை NABARD நிறுவனம் ஏற்றுமதி செய்தது என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

5. NASAஉடன் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் X

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6 மாதத்துக்கு ஒருமுறை என்கிற வகையில் சுழற்சிமுறையில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற் -காக அமெரிக்காவின் அரசு விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, ஸ்பேஸ் X என்னும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக ஸ்பேஸ் X நிறுவனம் குரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 இரக ஏவுகலத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 2 வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் X ஏவுகலம்மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர். நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து மூன்றாவது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட், மேகன் மெக் ஆர்தர், NASA காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகிய 4 பேரும் ஏப்.22ஆம் தேதி புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் பால்கன் 9 ஏவுகலத்தில் பறக்கவுள்ளனர். இவர்கள் ஆறுமாதகாலம் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர்.

1. Which authority recently ruled that Flavoured milk is ‘beverage containing milk’ and will attract 12 percent GST?

A) Finance Ministry

B) Authority for Advance Ruling

C) Finance Commission

D) Central Board of Indirect Taxes

  • The Gujarat Authority for Advance Ruling (AAR) has ruled that Flavoured milk is ‘beverage containing milk’ and will attract 12 per cent GST. Gujarat Co–operative Milk Marketing Federation, which markets dairy product under Amul brand, had approached the AAR on the taxability under the GST of flavoured milk.

2. The International Atomic Energy Agency (IAEA) has confirmed that which country started enriching Uranium up to 60 per cent?

A) Israel

B) Iran

C) Afghanistan

D) Nigeria

  • The International Atomic Energy Agency (IAEA) has confirmed that Iran started enriching uranium up to 60 %.
  • This figure is its highest–ever level of enrichment. The decision to boost uranium enrichment and to install modernized centrifuges at the Natanz nuclear facility was made due to the recent incident damaging the electricity distribution network in Natanz.

3. With reference to defence, what is “INAS 323”, that was recently commissioned?

A) Unmanned Aerial Vehicle

B) Air Squadron

C) Submarine

D) Missile Launcher

  • Indian Navy’s first unit of the indigenously–built Advanced Light Helicopter (ALH) Mk III, Indian Naval Air Squadron 323 (INAS 323), was commissioned at INS Hansa, Goa.
  • The Mk III version of the ALH will be used for Search and Rescue, Special Operations and Coastal Surveillance. The squadron will operate three ALH Mk III helicopters, a multi–role chopper with the Shakti engine manufactured by Hindustan Aeronautics Limited (HAL).

4. Sivasubramanian Ramann, who was making news recently, took over as the Chairman and MD of which organisation?

A) SEBI

B) SIDBI

C) ISRO

D) DRDO

  • Small Industries Development Bank of India (SIDBI) announced that Sivasubramanian Ramann has taken charge as Chairman and Managing Director of the bank. The appointment is for a period of three years. Prior to this appointment, Ramann was serving as MD and CEO of National E–Governance Services Ltd (NeSL).
  • He has also held the position of Executive Director in Securities and Exchange Board of India (SEBI).

5. Which is the second largest organ of the human body, which is also related to a special day celebrated on April 19, every year?

A) Skin B) Liver

C) Lungs D) Brain

  • World liver day is observed on every 19 April every year across the world, to spread awareness about liver related diseases.
  • The liver is the second largest organ of the human body and an important part of the digestive system. It is second only to the skin, the largest organ. In 2018, Ministry of Health and Family Welfare launched National Viral Hepatitis Control Program, which aims to prevent and control viral hepatitis in India.

6. “Blue Nature Alliance”, which was making news recently, is associated with which field?

A) Space Conservation

B) Ocean Conservation

C) Agricultural Conservation

D) Peacock Conservation

  • A new global marine initiative has been launched to protect and conserve 18 million square kilometres of the ocean over the next five years. This initiative is known as the “Blue Nature Alliance”. It is led by several philanthropic organisations along with national governments, local communities, Indigenous peoples, scientists, and academics.

7. What is the rank of India in the World Press Freedom index 2021?

A) 142

B) 152

C) 162

D) 172

  • World Press Freedom Index 2021 is published by the international journalism not–for profit body, Reporters Without Borders (RSF). India is ranked 142, same as last year among the 180 countries and the index is topped by Norway followed by Finland and Denmark.
  • India is regarded among the countries classified “bad” for journalism and is termed as one of the most dangerous countries for journalists trying to do their jobs properly.

8. What is the name of the new digital currency, being explored by the United Kingdom?

A) UK Coin

B) Britcoin

C) Digi Brit

D) Brit Currency

  • The United Kingdom is exploring the possibility of creating a new digital currency, which is dubbed as “Britcoin”. The Bank of England and the Treasury are set to work together to assess the benefits of a central bank digital currency. The bank said the new currency, would be a new form of digital money for use by households and businesses.

9. Idriss Deby Itno, who recently passed away, was the ruler of which Central African nation for over three decades?

A) Sudan

B) Chad

C) Egypt

D) Nigeria

  • The President of the Central African country Chad, Idriss Deby Itno, who ruled the country for more than three decades, died recently during a fight with rebels. Hours earlier, the electoral officials had declared Deby as the winner of the April 11 presidential election.

10. What is the insurance cover extended to healthcare workers under the Pradhan Mantri Garib Kalyan Package?

A) Rs 5 lakhs

B) Rs 10 lakhs

C) Rs 25 lakhs

D) Rs 50 lakhs

  • The Government of India has recently extended the insurance scheme under the Pradhan Mantri Garib Kalyan Package for health workers for a period of one year. This insurance scheme convers loss of life due to COVID 19 and accidental death due to COVID related duty. A sum of Rs. 50 lakhs would be paid to the claimant of insured person.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!