Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

24th August 2020 Current Affairs in Tamil & English

24th August 2020 Current Affairs in Tamil & English

24th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

24th August 2020 Current Affairs Pdf Tamil

24th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பழங்குடியினரின் நலத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட வலைத்தளத்தின் பெயரென்ன?

அ. ஆரோக்யா

ஆ. ஸ்வஸ்த்யா

இ. வந்தனா

ஈ. பழங்குடி இரக்ஷா

  • “ஸ்வஸ்தயா” என்ற பழங்குடியினர் நலவாழ்வு, ஊட்டச்சத்து வலைத்தளம், ‘அலேக்’ என்ற நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மின்னணு-செய்திமடல் ஆகியவற்றை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அண்மையில் தொடக்கிவைத்தார்.
  • இந்த ஒற்றைத்தளத்தில் இந்தியாவின் பழங்குடி மக்கள் தொடர்பான அனைத்து நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறும். புதிய நடைமுறைகள், ஆராய்ச்சியின் சுருக்கங்கள், கள ஆய்வுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை, ‘ஸ்வஸ்தயா’ சேகரித்து வழங்கும். பழங்குடியின மக்களுக்கு நலவாழ்வு & ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகளை சான்றாதாரங்களின் அடிப்படையில் வகுக்கவும் முடிவுகள் எடுக்கவும் தேவையான உள்ளீடுகளை இது வழங்கும்.

2.உலக சூரிய ஆற்றல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள அமைப்பு எது?

அ. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி

ஆ. உலக வர்த்தக சங்கம்

இ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

ஈ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) தனது முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மெய்நிகராக வரும் 2020 செப்.8 அன்று நடத்தவுள்ளது. ISA ஆனது 121 நாடுகளின் கூட்டணியாகும்; இது, குருகிராமை தலைமையிடமாகக்கொண்டு இந்தியாவால் தொடங்கப்பட்டதாகும். இந்தியப்பிரதமர் மோடியும், ISA தலைவரும் புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாட்டு அமைச்சருமான R K சிங் ஆகியோர் இவ்வுச்சிமாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளனர். சூரிய ஆற்றலை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

3. ‘நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்’ பிரிவில், புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’இல் முதலிடம் பிடித்த நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு

ஆ. IIT மெட்ராஸ்

இ. IIT பம்பாய்

ஈ. IIT தில்லி

  • இந்தியக்குடியரசுத் துணைத்தலைவர் M வெங்கையா, புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’ஐ அறிவித்தார். இது, மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் (IIT-M), “நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்” பிரிவின்கீழ் முதலிடத்தையும், IIT மும்பை மற்றும் IIT தில்லி ஆகியவை முறையே இரண்டாவது & மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தொழில்முனைவு, புதுமையான கற்றல் அறிவுசார் சொத்துருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களில், கல்லூரிகளை, இந்தப் பட்டியல் மதிப்பீடு செய்கிறது.

4.இந்தியாவில், “புத்தாக்க சவால் நிதியத்தை” தொடங்கியுள்ள நாட்டின் அரசு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரேசில்

ஈ. ஜெர்மனி

  • ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக்கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • “UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன்கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

5.இந்திய இரயில்வேயால், எந்த மாநிலத்தில், உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’ கட்டப்படுகிறது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. மணிப்பூர்

ஈ. மேகாலயா

  • உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’, மணிப்பூரில், இந்திய இரயில்வேயால் “இஜாய்” ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. அதன் மிகவுயரமான தூணின் உயரம் 141 மீட்டராகும். இந்தப் பாலம், ஜிரிபாம்-துபுல்-இம்பால் இரயில்பாதைத் திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது.
  • ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயரமான தூண் பாலமே தற்போது வரை உலகின் மிகவுயரமான தூண் பாலமாக உள்ளது. `280 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள், 2020 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம், 703 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

6.கடல் உணவுகளில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக, MPEDA’ஆல், எந்த மாநிலத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

  • கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் போர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது. பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசோதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும். நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.

7.உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில், 180 அடி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக கட்டியெழுப்பிய அமைப்பு எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

இ. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

ஈ. லார்சன் & டூப்ரோ

  • உத்தரகண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கன மழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு அமைத்துள்ளது. அவ்விடத்திலிருந்த 50 மீட்டர் நீள திண்காறைப்பாலம், கடந்த ஜூலையில் பொழிந்த கனமழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
  • இந்தச் சாலைத் தொடர்பையடுத்து, இருபது கிராமங்களைச் சார்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையும். புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசெளரி வரையிலான 66 கி.மீ., சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

8.சில்லறை கொடுப்பனவுகளுக்காக புதிய குடை நிறுவனத்தை அமைக்கவுள்ள நிதி நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்

இ. இந்திய பங்கு & பரிவர்த்தனைகள் வாரியம்

ஈ. இந்திய வங்கிகள் சங்கம்

  • சில்லறை கொடுப்பனவுகளுக்காக ஒரு புதிய குடை நிறுவனத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறைந்தபட்சம் `500 கோடி செலுத்திய மூலதனத்தைக் கொண்டிருக்கும், ‘இலாப நோக்குடைய’ நிறுவனமாக செயல்படும். இது ATM’கள், PoS மற்றும் ஆதார் அடிப்படையிலான கொடுப்பனவுகள் போன்ற கட்டண முறைமைகளை அமைத்து இயக்கும். வங்கிகள் / வங்கிகள் அல்லாதவற்றின் தீர்வைகளையும் இந்நிறுவனம் நிர்வகிக்கும்.

9.எந்த மாநில அரசு அனைத்து அரசாங்கப் பணிகளையும் தனது மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. கேரளம்

ஈ. கர்நாடகம்

  • மபி மாநில அரசு வேலைகள் அனைத்தும் அதன் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அண்மையில் அறிவித்தார். இதன் மூலம், இதுபோன்ற ஓர் அறிவிப்பை செய்யும் முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மாறியுள்ளது. இதுதொடர்பான சட்டவிதிகளை அம்மாநில அரசு உருவாக்கவுள்ளது. தனது விடுதலைநாள் உரையின் போது, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர், இளையோருக்கு அரசாங்கப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

10. ‘தேசிய புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை 2020’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. ICMR

ஆ. AIIMS

இ. CSIR

ஈ. NITI ஆயோக்

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR) அண்மையில் ‘தேசிய புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை -2020’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட -வர்களின் எண்ணிக்கை 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில், சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக உள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகள் இப்பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக்கொண்ட மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான ஐசால் மாவட்டம் விளங்குகிறது.

1. What is the name of the e–portal launched by the Tribal Ministry for promoting tribal health?

[A] Aarogya

[B] Swasthya

[C] Vandana

[D] Tribal Raksha

  • Union Minister of Tribal Affairs Arjun Munda has recently launched a new e–portal named ‘Swasthya’ and a e–newsletter named ALEKH. The portal aims to consolidate all health and nutrition related information of the tribal population of India. It also provides best practices collected from different parts of India and enables an effective decision making related to the nutrition of tribal population.

2. Which organisation is to conduct the World Solar Technology Summit?

[A] International Solar Alliance

[B] WTO

[C] UN Environment Programme

[D] World Wide Fund for Nature

  • The International Solar Alliance, ISA is set to organise its first World Solar Technology Summit virtually on September 8, 2020. ISA is an alliance of 121 countries, initiated by India headquartered at Gurugram. The inaugural address of the summit will be delivered by the Indian Prime Minister Narendra Modi and the ISA President and Minister of New and Renewable Energy R. K. Singh. The event will focus on using technology to effectively utilise the solar energy.

3. Which institution has topped the Atal Ranking of Institutions on Innovation Achievement (ARIIA) 2020 in the ‘Centrally funded institution’ category?

[A] IISc, Bangalore

[B] IIT Madras

[C] IIT Bombay

[D] IIT Delhi

  • The Vice President of India M Venkaiah Naidu has announced the Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) 2020. It is an initiative of Education Ministry.The Indian Institute of Technology Madras bagged the first place under the ‘Best centrally funded institution’ category, while IIT Mumbai and IIT Delhi bagged the second and third place respectively.
  • The ranking assesses the colleges on various criteria including support for entrepreneurship, innovative learning intellectual property generation and technology transfer etc.

4. The Government of which country has launched an ‘Innovation Challenge Fund’ in India?

[A] United Kingdom

[B] Australia

[C] Brazil

[D] Germany

  • The Government of United Kingdom (UK) has launched a £3 million Innovation challenge fund in India. The fund is aimed at supporting scientists in industry and academia to cope with acute global challenges like COVID–19 and other environment threats. The fund aims to bring together best minds under “UK India Tech Partnership”. The fund has specifically invited innovators associated with “AI–Data cluster” in Karnataka and “Future Mobility cluster” in Maharashtra to submit research proposals.

5. The World’s tallest Pier bridge is being constructed by Indian Railways in which state?

[A] Arunachal Pradesh

[B] Himachal Pradesh

[C] Manipur

[D] Meghalaya

  • The World’s tallest Pier bridge is being constructed by Indian Railways in Manipur across the river “Ijai”. The height of its tallest pier is 141m. The bridge is a part of Jiribam–Tupul–Imphal railway line project. The existing record for the tallest pier bridge is 139m at Montenegro in Europe.
  • The bridge is being constructed at an estimated cost of Rs.280 crore and the construction work is expected to be completed by March 2020. The total length of the bridge is estimated to be 703 mtrs.

6. A Quality control laboratory for seafood testing has been setup by MPEDA, in which state?

[A]  Tamil Nadu

[B] Kerala

[C] Maharashtra

[D] Gujarat

  • A Quality control laboratory for seafood processors and exporters has been opened by Marine Products Export Development Authority (MPEDA) at Porbandar, Gujarat.
  • The lab helps the exporters in testing of seafood to ensure safety as per international regulatory standards. The lab is equipped with advanced instruments to test and analyse antibiotic residues and heavy–metals like arsenic, mercury in seafood.

7. Which organization has built a 180 feet bridge in Pithoragarh district, Uttarakhand in a short span of 3 weeks?

[A] Indian Army

[B] National Highways Authority of India

[C] Border Roads Organization

[D] Larsen & Toubro

  • A 180–feet Bailey bridge in Jauljibi sector of Pithoragarh district, Uttarakhand has been constructed by the Border Roads Organisation (BRO), amidst frequent landslides and heavy rains. The 50–metre span concrete bridge was damaged in the month of July as the area was hit by a cloud burst. The bridge construction by BRO will help around 15,000 people in 20 villages of the district.

8. Which institution is to set up a new Umbrella entity for retail payments?

[A] Reserve Bank of India

[B] National Payment Corporation of India

[C] Securities Exchange Board of India

[D] Indian Banks Association

  • The Reserve Bank of India (RBI) has released the framework for setting up of a new umbrella entity for retail payments. It will operate as a ‘for–profit’ company that will have minimum paid–up capital of Rs 500 crore. It will set up and operate the payment systems such as ATMs, white–label PoS and Aadhaar–based payments. The company will also manage clearing and settlement systems of banks/ non–banks.

9. Which state announced to reserve all government jobs to the people belonging to its state?

[A] Andhra Pradesh

[B] Madhya Pradesh

[C] Kerala

[D] Karnataka

  • The Chief Minister of Madhya Pradesh Shivraj Singh Chouhan has recently announced that all of the state government jobs will be reserved to the people belonging to its state. This is the first country in the state to reserve all its jobs to the people of the state.
  • The state government is set to form legal provisions in this regard. During his Independence Day address, the CM announced that the state will give preference to youths in government jobs.

10. Which organisation released ‘National Cancer Registry Programme Report 2020’?

[A] ICMR

[B] AIIMS

[C] CSIR

[D] NITI Aayog

  • Indian Council of Medical Research (ICMR) has recently released ‘National Cancer Registry Programme Report 2020’. As per the report, the number of people affected by cancer could increase by 12% in the next five years. By 2025, around 1.5 million people are estimated to suffer from the disease, increased from 1.39 million in 2020. Tobacco–related cancers find the major portion in the list. Aizawl district, the capital of Mizoram state, has the highest number of cancer patients in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!