TnpscTnpsc Current Affairs

24th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

24th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 24th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. UNESCOஇன் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்க இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட ‘கார்பா’ என்றால் என்ன?

அ. திருவிழா

ஆ. நடன வடிவம்

இ. கலை வடிவம்

ஈ. நினைவுச்சின்னம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடன வடிவம்

  • UNESCOஇன் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்க ‘கார்பா’ என்ற நடன வடிவத்தை இந்தியா சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது. UNESCOஇன் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியப் பிரதிநிதிகளில் ‘துர்கா பூஜை’ கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்தைக் காப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவில் பணியாற்ற UNESCOஆல் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. எந்த நாட்டுடன் இணைந்து நாடுகடந்த கல்விக்கான பணிக்குழுவை நிறுவுவதாக இந்தியா அறிவித்தது?

அ. அமெரிக்கா

ஆ. ஆஸ்திரேலியா

இ. இங்கிலாந்து

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • இந்தியாவின் நடுவண் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அவருக்கிணையான ஆஸ்திரேலிய பிரதிநிதி இணையமைச்சர் ஜேசன் கிளேர் ஆகியோர் நாடுகடந்த கல்விக்கான பணிக்குழுவை நிறுவுவதாக அறிவித்தனர். இந்தப்பணிக்குழு இருநாடுகளிலும் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளைப்பற்றிய பகிரப்பட்ட புரிதலை உருவாக்குவதையும் நிறுவனங்களின் இருவழி இயக்கத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா இந்திய கல்வி கவுன்சிலின் (AIEC) ஆறாவது கூட்டத்திற்கு நடுவண் அமைச்சர் இணைத் தலைமைதாங்கினார்.

3. இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு கூர்நோக்ககம் நிறுவப்படவுள்ள மாநிலம் / UT எது?

அ. குஜராத்

ஆ. உத்தரகாண்ட்

இ. சிக்கிம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தரகாண்ட்

  • இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு கூர்நோக்ககம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் பகுதியில் விண்வெளித்துறை துளிர் நிறுவனமான திகந்தாராவால் நிறுவப்படவுள்ளது. பூமியைச்சுற்றி வரும் 10 செமீ அளவுள்ள பொருட்களைக் கண்காணிப்பதை இந்த ஆய்வகம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணில் இருக்கும் பொருட்களைக் கண்காணித்தல் மற்றும் அடையாளம் காண்பதன் செயல்திறனை மேம்படுத்தும்.

4. இந்தியா, சமீபத்தில் (2022 ஆகஸ்ட்) எந்த நாட்டில் புதிய இந்தியத் தூதரகத்தை திறந்து வைத்தது?

அ. மால்டா

ஆ. பராகுவே

இ. ஈரான்

ஈ. வெனிசுலா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பராகுவே

  • இந்தியாவின் நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், பராகுவேயில் உள்ள அசன்சியனில் புதிய இந்தியத் தூதரகத்தை கூட்டாகத் திறந்து வைத்தார். இருநாடுகளும் தூதரக உறவுகளை நிறுவி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பராகுவே குடியரசிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

5. அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருந்துகளை இணையவழியில் கண்காணிப்பு செய்வதற்காக அமைப்பு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • அரசாங்கம் நடத்தும் மருத்துவ நிறுவனங்களிலுள்ள மருந்துகளைக் கண்காணிக்க இணையவழி கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. மருந்துகளின் இருப்பு மற்றும் விநியோகத்தை கண்காணிப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. மருந்துகள் கிடைப்பை உறுதி செய்ய, கேரள மருத்துவச்சேவை கழகத்தின் இணையவழி முறைமையை மருத்துவமனை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

6. 2022–இல் நடைபெற்ற, ‘SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்’ நடைபெறும் இடம் எது?

அ. பெய்ஜிங்

ஆ. தாஷ்கண்ட்

இ. ஷாங்காய்

ஈ. நூர்சுல்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தாஷ்கண்ட்

  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் வருடாந்திர கூட்டத்தில் நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்தியாவைத் தவிர, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். சமர்கண்டில் நடைபெறவுள்ள SCO நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

7. 2022ஆம் ஆண்டுக்கான லிபர்ட்டி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட தலைவர் யார்?

அ. இம்ரான் கான்

ஆ. நரேந்திர மோடி

இ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ஈ. ஃபுமியோ கிஷிடா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

  • தேசிய அரசியலமைப்பு மையத்தால் நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான, ‘லிபர்ட்டி பதக்கத்திற்கு’ உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உருசிய கொடுங்கோன்மைக்கு எதிரான அவரது சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளுக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 மே முதல் உக்ரைன் அதிபராக பணியாற்றி வரும் வோலோடிமிர் ஜெலென்சுகி, ரொனால்ட் ரீகன் விடுதலை விருது மற்றும் ஜான் F கென்னடி துணிச்சல் விருது மற்றும் பிற அரசாங்கங்களின் விருதுகளைப் பெற்றவராவார்.

8. 2022 – உலக நீர் வாரத்திற்கான கருப்பொருள் என்ன?

அ. Seeing the Unseen: The Value of Water

ஆ. Transforming the global water challenges

இ. Global collaboration for water

ஈ. Biodiversity and climate change

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Seeing the Unseen: The Value of Water

  • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு நீர் நிறுவனமானது (SIWI) ஒவ்வோர் ஆண்டும் உலக நீர் வாரத்தை நடத்துகிறது. இந்த ஆண்டு, இது ஆக.23 முதல் செப்.1 வரை கொண்டாடப்படுகிறது. “Seeing the Unseen: The Value of Water” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் உலக நீர் வாரத்திற்கானக் கருப்பொருளாகும். இது உலகளாவிய நீர் சவால்களை மாற்றுவதை நோக்கமாகக்கொண்ட ஓர் இயக்கமாகும்.

9. 2022 – புலிட்சர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபஹ்மிதா அசிம் சார்ந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. வங்காளதேசம்

இ. ஈரான்

ஈ. ஓமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வங்காளதேசம்

  • வங்காளதேசத்தில் பிறந்து அமெரிக்காவின் இன்சைடர் ஆன்லைன் இதழில் பணிபுரிந்து வரும் ஃபஹ்மிதா அசிம், 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசுக்குத் தெரிவாகியுள்ளார். உய்குர்களின் மீதான சீன அடக்குமுறை குறித்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இன்சைடரின் நான்கு பத்திரிகையாளர்களுள் இவரும் ஒருவராவார். ‘நான் ஒரு சீனத்தடுப்பு முகாமிலிருந்து தப்பித்தேன்’ என்ற படைப்பில் அவரது விளக்கப்படங்களுக்காக, ‘விளக்கப்பட செய்தி’ மற்றும் ‘வர்ணனை’ என்ற பிரிவின்கீழ் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற, அந்திம் பங்கல் சார்ந்த விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

ஆ. பளு தூக்குதல்

இ. ஹாக்கி

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மல்யுத்தம்

  • 20 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை அந்திம் பங்கல் பெற்றுள்ளார். பல்கேரியாவின் சோபியா நகரத்தில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ பிரிவில் முதலிடம் பிடித்தார். U20 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மற்ற இந்தியர்கள் – தீபக் புனியா (2019) ரமேஷ் குமார் (2001) பல்விந்தர் சிங் சீமா (2001) மற்றும் பப்பு யாதவ் (1992).

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உலக வங்கி நிதியுதவி திட்டங்கள்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வீட்டுவசதித்துறையை வலுப்படுத்தவும், அதன் திட்டங்களில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும் உலக வங்கி நிதியுதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டத்தின்கீழ், கொள்கை மேம்பாட்டு கடனுதவியாக `1,492.40 கோடி நிதி உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

2. வானில் உள்ள இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

தரையிலிருந்து செங்குத்தாக மேலெழும்பி, வானிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘VL-SRSAM’ என்ற ஏவுகணையை DRDO வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.

இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ‘VL-SRSAM’ ஏவுகணை, வானில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா சிறியரக விமானத்தைத் துல்லியமாகத் தாக்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள் அந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், ஹைதராபாதில் உள்ள RCI ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் புணேவில் உள்ள ஆய்வு-மேம்பாட்டு பொறியாளர்களும் ஏவுகணையை வடிவமைத்தனர்.

24th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is ‘Garba’, which was nominated by India to be inscribed on UNESCO’s intangible cultural heritage list?

A. Festival

B. Dance Form

C. Art Form

D. Monument

Answer & Explanation

Answer: B. Dance Form

  • India has recently nominated the dance form Garba to be inscribed on UNESCO’s intangible cultural heritage list. The inclusion of ‘Durga Puja’ on the UNESCO intangible cultural heritage representative was made last year. India was elected by UNESCO to serve on the Intergovernmental Committee of the 2003 Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage in July.

2. India announced the establishment of a working group on transnational education with which country?

A. USA

B. Australia

C. UK

D. Germany

Answer & Explanation

Answer: B. Australia

  • India’s Union Education Minister Dharmendra Pradhan and his Australian counterpart, Jason Clare announced the establishment of a working group on transnational education. The working group aims to build shared understanding of the regulatory settings in both countries and promote opportunities for a two–way mobility of institutions. The Union Minister co–chaired the sixth meeting of the Australia India Education Council (AIEC).

3. India’s first commercial space situational awareness observatory is to be established in which state/UT?

A. Gujarat

B. Uttarakhand

C. Sikkim

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Uttarakhand

  • India’s first commercial space situational awareness observatory is to be established in the Garhwal region of Uttarakhand by Digantara, a space sector start–up. The observatory aims to track objects as small as 10 cm in size orbiting the earth. This will improve the effectiveness of tracking and identifying pre–existing resident space objects.

4. India recently inaugurated the new Indian Embassy in which country (in August 2022)?

A. Malta

B. Paraguay

C. Iran

D. Venezuela

Answer & Explanation

Answer: B. Paraguay

  • India’s Union External Affairs Minister S Jaishankar jointly inaugurated the new Indian Embassy in Asuncion in Paraguay with his counterpart. This is the first ever visit of an Indian Foreign Minister to the Republic of Paraguay which has taken place as the two countries completed the 60th anniversary of the establishment of diplomatic relations.

5. Which state has announced to set up online monitoring system of medicines in government–run medical institutions?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Assam

Answer & Explanation

Answer: B. Kerala

  • Kerala government has announced to introduce an online monitoring system, to keep track of medicines in government–run medical institutions. The system aims to keep track of availability and distribution of medicines. The state’s health minister announced that hospital employees should use the online system of Kerala Medical Services Corporation (KMSCL) to ensure availability of medicines.

6. Which is the venue of the ‘SCO Defence Ministers’ Meeting’ held in 2022?

A. Beijing

B. Tashkent

C. Shanghai

D. Nursultan

Answer & Explanation

Answer: B. Tashkent

  • Union Defence Minister Rajnath Singh attended the annual meeting of Defence Ministers of the Shanghai Cooperation Organisation (SCO) member states in Tashkent, Uzbekistan. Apart from India, the Foreign Ministers of China, Kazakhstan, Kyrgyzstan, Pakistan, Russia, Tajikistan and Uzbekistan also participated in the meeting. The preparations for the forthcoming SCO Summit of Heads of State in Samarkand were also discussed.

7. Which leader has been honoured with the ‘2022 Liberty Medal’?

A. Imran Khan

B. Narendra Modi

C. Volodymyr Zelenskyy

D. Fumio Kishida

Answer & Explanation

Answer: C. Volodymyr Zelenskyy

  • Ukrainian President Volodymyr Zelenskyy has been named for this year’s ‘Liberty Medal’ by the National Constitution Center. He was selected for his heroic defense of liberty in the face of Russian tyranny. Volodymyr Zelensky has been serving as the nation’s President since May 2019, has also been the recipient of awards such as the Ronald Reagan Freedom Award and the John F. Kennedy Profile in Courage Award as well as honors from other governments.

8. What is the theme of the ‘World Water Week 2022’?

A. Seeing the Unseen: The Value of Water

B. Transforming the global water challenges

C. Global collaboration for water

D. Biodiversity and climate change

Answer & Explanation

Answer: A. Seeing the Unseen: The Value of Water 

  • The Stockholm International Water Institute (SIWI) organizes World Water Week every year. This year, it is celebrated from August 23 to September 1. The theme for World Water Week 2022 is ‘Seeing the Unseen: The Value of Water’. It is a movement aimed at transforming the global water challenges.

9. Fahmida Azim, who has been selected for the 2022 Pulitzer Prize, is from which country?

A. India

B. Bangladesh

C. Iran

D. Oman

Answer & Explanation

Answer: B. Bangladesh

  • Bangladesh–born Fahmida Azim working for the Insider online magazine of United States has been selected for the 2022 Pulitzer Prize. She is among the four journalists of Insider, selected for their work on the Chinese oppression of the Uyghurs.  She has been selected under the category of Illustrated Reporting and Commentary, for her illustrations in the work ‘I escaped a Chinese internment Camp’.

10. Antim Panghal, who was seen in the news, plays which sports?

A. Wrestling

B. Weight lifting

C. Hockey

D. Badminton

Answer & Explanation

Answer: A. Wrestling

  • Antim Panghal became the first Indian female wrestler ever to clinch gold at the Under 20 Wrestling World Championships. She topped the 53kg category in the World Championships being held in Sofia, Bulgaria.
  • The only other Indians to win gold at the U20 World Championships are Deepak Punia (2019) Ramesh Kumar (2001) Palwinder Singh Cheema (2001) and Pappu Yadav (1992).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!