Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

24th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மருத்துவ உயிர்வளி (O2) வீணாவதைத்தடுக்க ‘தேசிய உயிர்வளி பொறுப்புத்திட்டத்தை’த் தொடங்கியுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா 

இ) UK

ஈ) வங்காளதேசம்

  • மருத்துவ உயிர்வளியை வீணாவதைத் தடுப்பதற்காக, இந்திய அரசு, மருத்துவ உயிர்வளியை பகுத்தறிவுடன் பயன்படுத்துவதில், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ‘தேசிய உயிர்வளி பொறுப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
  • இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஓர் உயிர்வளி பொறுப்பா -ளர் கண்டறியப்பட்டு அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிர்வளி இருப்புபற்றிய தகவல்களை வெளியிடுதற்காக ‘ஆக்ஸிகேர்’ என்ற தகவல் பலகையும் அமைக்கப்பட்டது.

2. இந்தியாவில் ‘வெர்னாகுலர் இன்னோவேஷன்’ திட்டத்தைத் தொடங்கிய நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) NITI ஆயோக் 

இ) BARC

ஈ) NSIL

  • NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம், 22 தாய்மொழி -களில் புதுமையான சூழலை அணுகுவதற்கு தொழில் முனைவோருக்கு உதவும் வட்டாரமொழி புத்தாக்க திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அடல் புத்தாக்க திட்டம், 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் ஒவ்வொன்றிலு -ம் ஒரு வட்டார மொழி பணிக்குழுவிற்கு பயிற்சியளிக்கும்.
  • ஒவ்வொரு பணிக்குழுவும் வட்டார மொழி ஆசிரியர்கள், பாட வல்லுநர்கள், தொழில்நுட்ப எழுத்தாளர்கள் மற்றும் பிராந்திய அடல் அடைவு மையங்களின் தலைமை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

3. இந்தியாவில் மசாலாப் பொருட்களின் உற்பத்தியின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2014-2020 வரை ___?

அ) முன்னோக்கி 

ஆ) பின்னோக்கி

இ) கோணல்மாணல்

ஈ) ஒரேபோன்ற

  • “வாசனைத் திரவிய புள்ளிவிவரங்கள் ஒருபார்வை 2021” என்ற நூலை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.
  • இந்நூலில் வாசனைத்திரவியங்கள் சாகுபடி செய்யப்படும் இடம், அவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விலை & நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வாசனைத் திரவியங்களின் மதிப்புபற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாக்கு மற்றும் வாசனைத்திரவிய வளர்ச்சித்துறை இயக்ககம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
  • நாட்டில், 2014-15இல் 67.64 இலட்சம் டன்னாக இருந்த வாசனைத்திரவியப் பொருட்கள் உற்பத்தி 2020-21இல் 106.79 லட்சம் டன்னாக மாறியுள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.9%ஆக உள்ளது.

4. குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் செயற் -பாட்டில், உழவர்களின் குறைந்தபட்ச இலாபம் என்ன?

அ) 20%

ஆ) 25%

இ) 50% 

ஈ) 75%

  • வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 50% இலாபத்தை உறுதிசெய்கிறது. அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு `255/-உம், பந்து கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு `400/ம் உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

5. ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ‘ஜேட்’ கனிமத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) மியான்மர் 

இ) நேபாளம்

ஈ) லாவோஸ்

  • முன்னர் ‘பர்மா’ என்றழைக்கப்பட்ட மியான்மர், உலகின் மிகப்பெரிய ‘ஜேட்’ உற்பத்தியாளராகும். இது நகைகளில் பயன்படுத்தப்படும் பச்சை நிறக் கனிமமாகும். சமீபத்தில், மியான்மரில் உள்ள ஒரு ‘ஜேட்’ சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் புதைந்தனர். அதில் ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

6. “பாதுகாப்பான மற்றும் பொறுப்பான புலம்பெயர்வு” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) ஜார்கண்ட் 

ஆ) ஒடிஸா

இ) உத்தர பிரதேசம்

ஈ) பீகார்

  • ஜார்கண்ட் மாநிலம் “பாதுகாப்பான மற்றும் பொறுப்பான புலம்பெயர்வு” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வாழும் மற்றும் செல்லும் மாவட்டங்கள் குறித்து முறையாக பதிவு செய்ய இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மக்கள் நடமாட்டத்தை முறையான கட்டமைப்பின்மூலம் ஆய்வு செய்வதற்கு இந்தத்திட்டம் அரசுக்கு உதவும். லடாக் மற்றும் கேரளாவில் இரண்டு “தொழிலாளர் துணை தூதரகங்களை” அமைக்கவும் ஜார்கண்ட் மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

7. எந்த மாநிலம் / யூடியில் ரிஷிஹுட் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது?

அ) குஜராத்

ஆ) உத்தரகாண்ட்

இ) புது தில்லி 

ஈ) புதுச்சேரி

  • குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, புதுதில்லியில் உள்ள அறிவியல் பவனில் ரிஷிஹுட் பல்கலைக்கழகத்
    -தை திறந்து வைத்தார். மாநிலங்களவை எம்பி’உம், ரிஷிஹுட் பல்கலையின் நிறுவனரும், வேந்தருமான சுரேஷ் பிரபுவும் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தார்.
  • நீர் மையம், ஆட்சியில் புதுமை மையம் போன்ற சமூக தாக்கத்தை மேம்படுத்துதற்கான பல்வேறு முயற்சிகளை அப்பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

8. சூரத் மெட்ரோ இரயில் திட்டத்திற்காக இந்தியா எந்த வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) ADB

ஆ) KFW 

இ) AIIB

ஈ) World Bank

  • சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இந்திய அரசாங்கமும் ஜெர்மனி மேம்பாட்டு வங்கி – KFWஉம் (Kreditanstalt für Wiederaufbau) 442.26 மில்லியன் யூரோ மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இத்திட்டத்தின் மொத்த செலவு யூரோ 1.50 பில்லியன் (`12,020 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் KFW வங்கி யூரோ 442.26 மில்லியன் நிதியுதவி செய்கிறது.
  • சூரத் மெட்ரோ ரயில் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்தத்திட்டத்திற்கு பிரெஞ்சு மேம்பாட்டு முகமை AFD மூலம் இணை நிதியுதவி வழங்கப்படுகிறது.

9. எந்த மாநிலத்தில், DRDE நவீன உயிரியல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (ABDRC) அமைக்கப்படவுள்ளது?

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) உத்தர பிரதேசம்

  • மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ்களைப் பற்றி ஆய்வுசெய்வதற்கான மேம்பட்ட உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDE) அமைக்கவுள்ளது.
  • இந்த ஆராய்ச்சி மையம் (ABDRC) ஆபத்தான வைரஸ்கள், மனிதர்கள் மீது அவற்றின் தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும் இம்மையம் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உபகரணங்களை உருவாக்கும்.

10. ‘அடிப்படை எழுத்தறிவு & எண்ணியல் குறியீட்டில்’ முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) மேற்கு வங்காளம் 

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வியறிவுக்கான குறிகாட்டியான ‘அடிப்படை எழுத்தறிவு & எண்ணியல் பற்றிய குறியீடு’ பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவால் வெளியிடப்பட்டது.
  • இக்குறியீட்டை போட்டிக் கழகம் தயாரித்துள்ளது. இந்தத் தரவரிசையில் மேற்கு வங்கம் (58.95) முதலிடத்தையும் பீகார் ‘பெரிய மாநிலங்கள்’ பிரிவில் கடைசி இடத்தையும் பிடித்தது. ‘சிறிய மாநிலங்கள்’ பிரிவில் கேரளா (67.95) முதலிடத்தைப் பிடித்தது. UT மற்றும் வடகிழக்கு மாநிலப் பிரிவில் முறையே லட்சத்தீவு (52.69) மற்றும் மிசோரம் (51.64) அதிக மதிப்பெண்களைப் பெற்ற பகுதிகளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைப்பு

ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆயுள்தண்டனை கைதி முன்விடுதலை தொடர்பாக ஆய்வுசெய்து ஆதிநாதன் தலைமையிலான குழு பரிந்துரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருபதாண்டுகள்தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாத சிறைவாசிகள் விடுதலை குறித்து குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. தொல்காப்பியத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளியீடு

தொல்காப்பியத்தின் ஹிந்தி மொழி பெயர்ப்பு, செம்மொழி தமிழ் இலக்கியத்தின் 9 கன்னட மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் மொழியின் வளரர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இதன் மூலமாக தமிழ் பழங்கால இலக்கணத்தை பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தற்போது செம்மொழி நிறுவனம் தயாரித்து உள்ள தொல்காப்பியம் நூலின் ஹிந்தி மொழிபெயர்ப்பு மற்றும் கன்னடத்தில் தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்களை தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் வெளியிட்டுள்ளார். கன்னடத்தில் மட்டும் 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

3. ஃபிஃபா பட்டியலில் 18 இந்திய நடுவர்கள்

ஃபிஃபா தயாரித்துள்ள 2022-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து நடுவர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தகவல்படி, இதில் 14 ஆண் நடுவர்களும், 4 பெண் நடுவர்களும் அடங்குவர். இந்த நடுவர்கள், 2022-இல் நடைபெறும் சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்ற தகுதியுடையவர்களாகின்றனர். அத்துடன், ஆண்டு முழுவதும் ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ பேட்ஜை சீருடையில் அணிந்துகொள்ளும் அனுமதியும் இவர்களுக்கு உண்டு.

இந்திய நடுவர்களின் விவரம் வருமாறு:

ஆண் நடுவர்கள்:

தேஜஸ் நக்வென்கர், C R ஸ்ரீகிருஷ்ணா, ரோவன் ஆறுமு -கன், கிரிஸ்டல் ஜான், பிராஞ்சல் பானர்ஜி, வெங்கடேஷ் ராமச்சந்திரன். (உதவி நடுவர்கள் தனி)

பெண் நடுவர்கள்: ரஞ்சிதா தேவி டெக்சாம், கனிகா பர்மான். (உதவி நடுவர்கள் தனி)

4. தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத் துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்தார்.

5. மாமல்லபுரத்தில் 29ஆம் ஆண்டு இந்திய நாட்டிய விழா தொடங்கியது

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் 29-ஆம் ஆண்டு இந்திய நாட்டிய விழா வியாழக்கிழமை தொடங்கியது.

ஜன.23ஆம் தேதி வரை நடைபெறும் நாட்டிய விழாவில் நாள்தோறும் மாலை பிரசித்தி பெற்ற உள்நாட்டு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, மின்னொளியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

6. ஒமைக்ரான் Vs டெல்மைக்ரான்: வேறுபாடுகளும் தாக்கமும் – சில அடிப்படைத் தகவல்கள்கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன… ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன ‘டெல்மைக்ரான்’ வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது, பாதிப்பு எப்படி இருக்கும்? – அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ…

டெல்மைக்ரான் என்றால் என்ன? – கரோனா வைரஸின் இரட்டை திரிபுதான் ‘டெல்மைக்ரான்’ வைரஸ். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வேகமாக டெல்மைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. அதாவது, கரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய இரு குணங்களையும் கொண்டதுதான் ‘டெல்மைக்ரான்’ வைரஸ்.

மகாராஷ்டிரா கோவிட் தடுப்பு குழுவின் மருத்துவர் ஷசாங் ஜோஷி கூறுகையில் “ஐரோப்பிய நாடுகளிலும், அமெரி்க்காவிலும் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் குணங்களைக் கொண்ட டெல்மைக்ரான் வைரஸ் பரவிவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்மைக்ரான் எங்கு பரவுகிறது? – டெல்மைக்ரான் வைரஸ் இரட்டை திரிபுநிலை கொண்டதால், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸ் ஆகிய இரு வைரஸ்களும் உலகம் முழுவதும் வந்துவி்ட்டது. இரு வைரஸ்களின் இணைப்புதான் டெல்மைக்ரான். இந்த வைரஸின் தாக்கத்தால்தன் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் மீ்ண்டும் கோவிட் தொற்று வேகமெடுத்துள்ளது.

யாரை டெல்மைக்ரான் தாக்க வாய்ப்பு? – உடலில் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி இருப்போர், முதியோர், இணை நோய்கள் இருப்பவர்கள், தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் தனிநபர்களுக்கு டெல்மைக்ரான் வைரஸ் தாக்கும் வாய்ப்புள்ளது. இரு வைரஸின் குணங்களின் இணைவு என்பது சூப்பர் ஸ்ட்ரைனாக மாறிவிடும் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பீட்டர் வொய்ட் தெரிவித்துள்ளார்.

டெல்மைக்ரான் தாக்கம் இந்தியாவில் இருக்குமா? – மகாராஷ்டிரா கோவிட் தடுப்பு குழுவின் மருத்துவர் ஷசாங் ஜோஷி கூறுகையில் “இ்ந்தியாவில் பெரும்பாலும் டெல்டா வைரஸ் பாதிப்புதான் தீவிரமாக இருக்கிறது, டெல்டா வைரஸ் பரவிய வேகத்தைவிட ஒமைக்ரான் வேகமாக உலகம் முழுவதும் பரவிவருகிறது. ஆனால் டெல்டா, ஒமைக்ரான் கூட்டிணைவு எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்க முடியவில்லை. மும்பையில் செரோ சர்வேயில் 90 சதவீதம் மக்களுக்கு கரோனா பாதித்துவிட்டது தெரியவந்துள்ளது; 88 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி ெசலுத்திவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்

டெல்மைக்ரான் அறிகுறிகள் என்ன? – டெல்டா, ஒமைக்ரான் பாதிப்பில் இருக்கும் அதே அறிகுறிகள்தான் டெல்மைக்ரானிலும் இருக்கும். அதிகமான காய்ச்சல், தொடர் இருமல், சுவை, மணம் அறிதலில் மாற்றம், தலைவலி, மூச்சில் நீர்வடிதல், தொண்டை வலி, கட்டிக்கொள்ளுதல், கரகரப்பு போன்றவை இருக்கும்.

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது? – டெல்மைக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது ஒமைக்ரான் பாதிப்பின் புள்ளிவிவரங்களையும், டெல்டா புள்ளிவிவரத்தையும் ஆய்வு செய்து வருகிறது.

7. இசை கற்போர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு `3 ஆயிரம் உதவித்தொகை:

திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான `3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 20210-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள், என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ரூ. 3 ஆயிரத்தை 18 மாணவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

8. ‘வந்தே பாரத்’ சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு:

வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும் என்று ஒருங்கிணைந்த ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF) பொதுமேலாளர் A K அகர்வால் கூறினார்.

சென்னை ICF வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நேற்று முன்தினம் 66-வது ரயில்வேவார விழா நடைபெற்றது.

தெற்கு ரயில்வே முன்னாள் பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய 298 ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.

இதில், ICF பொதுமேலாளர் A K அகர்வால் பேசும்போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சவால்கள் இருந்தும் ICF ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றி, சுமார் 2,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளனர்.

அவற்றில், இலங்கை ரயில்வேக்கான ஏற்றுமதி ரயில் பெட்டிகள், நீலகிரி மலை ரயிலுக்கான புதிய வடிவமைப்புடன் கூடிய பெட்டிகள், எல்எஃச்பி வடிவமைப்பிலான புதிய விஸ்டடோம் சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டி, மும்பை புறநகர் ரயில் சேவைக்கான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் போன்றவை அடங்கும்.

மேலும், இலங்கை ரயில்வேயில் இருந்து ரூ.106 கோடி மதிப்பிலான, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டீசல்புறநகர் ரயில் மின் தொடர்களை ஏற்றுமதி செய்யவும் ஆர்டர் கிடைத்துள்ளது.

இத்தாலி தரச் சான்றிதழ்

இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதல்முறையாக, இத்தாலியின் இன்டெர்டெக் ஸ்பா அமைப்பிடம் இருந்து, ரயில்பெட்டிகள்மற்றும் பாகங்களுக்கான வெல்டிங் தொழில்நுட்பத்துக்கு தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஒரு மாதத்துக்கு 4 முதல் 5 ‘வந்தே பாரத்’ அதிவிரைவு சொகுசு ரயில்கள் தயாரித்து அனுப்பப்பட உள்ளன. அதேபோல, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் உற்பத்தி தொடங்கும்” என்றார்.

9. ராணுவத்திற்குள் தகவல் பகிர்வுக்கான புதிய செயலி; இந்திய ராணுவம் அறிமுகம்

அசிக்மா (பாதுகாப்பான முறையில் ராணுவத்திற்குள் செய்தியிடல் செயலி) எனும் புதிய தலைமுறை, நவீன, இணைய அடிப்படையிலான செயலியை இந்திய ராணுவம் இன்று அறிமுகப்படுத்தியது. ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் அதிகாரிகள் குழுவால் முழுக்க உள்நாட்டிலேயே இது உருவாக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக சேவையில் உள்ள ராணுவ வைட் ஏரியா நெட்வொர்க் தகவல் முறைக்கு பதிலாக ராணுவத்தின் உள் மட்டங்களில் இந்தப் செயலி பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்திற்கு சொந்தமான வன்பொருளில் இது களமிறக்கப்பட்டுள்ளதோடு எதிர்கால மேம்படுத்தல்களுக்கான வாழ்நாள் ஆதரவோடு திகழ்கிறது.

அனைத்து எதிர்கால தகவல் பகிர்வு தேவைகளையும் இது பூர்த்தி செய்வதோடு மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது. பல நிலை பாதுகாப்பு, தகவல் முன்னுரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சமகால அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.

எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் இந்த செயலி, ராணுவத்தின் உடனடி தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்யும். குறிப்பாக, தற்போதைய புவிசார் அரசியல் பாதுகாப்பு சூழலின் பின்னணியில் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு இணங்க இது உள்ளது.

குறிப்பாக கொவிட்-19 பரவலுக்குப் பிறகு தானியங்கி முறையை ஒரு முக்கிய முயற்சியாக இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ளதோடு, காகிதமில்லாத செயல்பாட்டை நோக்கி கணிசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளை அசிக்மா மேலும் மேம்படுத்தும்.

10. 32 ஆண்டுகால தேச சேவைக்குப் பிறகு விடைபெற்ற ஐஎன்எஸ் குக்ரி கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது ஏவுகணை தாங்கி கப்பலான ஐஎன்எஸ் குக்ரி, நாட்டிற்கு 32 ஆண்டுகாலம் ஆற்றிய சிறப்புமிகு சேவைக்குப் பிறகு வியாழக்கிழமை 23 டிசம்பர் 2021 அன்று பணியிலிருந்து விடைபெற்றது. இதையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல், பிஸ்வஜித் தாஸ் குப்தா சிறப்பு விருந்தினராக கொண்டார். இந்தக் கப்பலின் இன்னாள், முன்னாள் கமாண்டிங் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மஸகான் கப்பல் கட்டும் தளத்தில், 23 ஆகஸ்ட் 1982 அன்று கட்டப்பட்ட இந்தக் கப்பல், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு கே சி பந்த் மற்றும் காலஞ்சென்ற கேப்டன் மகேந்திரநாத் முல்லாவின் மனைவி திருமதி சுதா முல்லா ஆகியோரால் தேச சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கப்பல் மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படைகளில் சேவையாற்றிய பெருமை உடையதாகும்.

11. பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை! ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்

பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்து, ஒன்றன் பின் ஒருவராக பதிவு செய்யும் வகையில் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. இதனால், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு தவிர்க்கப்படுகிறது. சாதாரண மக்களும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இந்த நடவடிக்கையால், மூத்த குடிமக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் பொருட்டு, தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலத்தில் எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது (70) வயதைக் கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் வண்ணம் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பதிவுகளை ஆதார் அடையாள அட்டை அல்லது உரிய அடையாள அட்டையின் உதவியுடன் வயது சரிபார்த்து, அவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின், பதிவு நாளன்று அவர்களுக்கு எந்த வரிசையில் டோக்கன் செய்திருந்தாலும் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த உடனேயே, பத்திரப்பதிவை செய்ய அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணம் பதிவு செய்யப்படும்.

இந்த அறிவிப்பு எதிர்வரும் 01.01.2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Which country launched ‘National Oxygen Stewardship Programme’ to prevent wastage of Medical Oxygen?

A) USA

B) India 

C) UK

D) Bangladesh

  • The Indian government launched “National Oxygen Stewardship Programme” to train health care workers in rational utilisation of medical oxygen to prevent wastage. Under the Programme, at least one oxygen steward will be identified and trained in each district across the country, as per the Union health ministry. OxyCare, a dashboard to publish information on the oxygen stock, was also set up.

2. Which institution launched the ‘Vernacular Innovation Program’ in India?

A) ISRO

B) NITI Aayog 

C) BARC

D) NSIL

  • Atal Innovation Mission, NITI Aayog launched the ‘Vernacular Innovation’ Program which enables entrepreneurs to have access to innovative ecosystem in 22 mother tongue languages. Atal Innovation Mission will train a Vernacular Task Force in each of the 22 scheduled languages.
  • Each task force includes vernacular language teachers, subject experts, technical writers, and the leadership of regional Atal Incubation Centres.

3. The Annual Growth rate of production of Spices in India has followed a ………… trend from 2014 to 2020

A) Upward 

B) Downward

C) Zigzag

D) Similar

  • Agriculture Minister Narendra Singh Tomar has released the book titled Spices Statistics at a Glance 2021’. It includes all statistics like area, production, productivity, export, import, price and value of output.
  • The book has been published by the Directorate of Arecanut and Spices Development. Spices production in the Country has grown from over 67 lakh tonnes in 2014–15 to over 106 lakh tonnes in 2020–21 with an annual growth rate of 7.9 percent.

4. In the process of Minimum Support Price (MSP) fixation, what is the minimum margin of profit of farmers?

A) 20%

B) 25%

C) 50% 

D) 75%

  • The fixation of Minimum Support Price (MSP) is based on recommendations of the Commission for Agricultural Costs and Prices (CACP). It assures a minimum of 50 percent as margin of profit for farmers. The Cabinet Committee on Economic Affairs has given approval to increase the minimum support price (MSP) of milling copra by Rs 255 per quintal and ball copra by Rs 400 per quintal.

5. Which country is the largest producer of the ‘Jade’ mineral, used in jewellery?

A) Bangladesh

B) Myanmar 

C) Nepal

D) Laos

  • Myanmar, earlier known as Burma, is the world’s biggest source of jade. It is a green–coloured mineral used in jewellery. Recently, after a jade mine in Myanmar was hit by a landslide, over 100 people are feared missing and one person is confirmed dead.

6. Which Indian state has launched “Safe and Responsible Migration Initiative (SRMI)”?

A) Jharkhand 

B) Odisha

C) Uttar Pradesh

D) Bihar

  • Jharkhand has launched an initiative called the Safe and Responsible Migration Initiative (SRMI). It aims for a systemic registration of migrant workers in the source as well as destination districts. This programme will help the state to analyse the movement of people through a formal structure. The state government has also decided to set up two “labour consulates” in Ladakh and Kerala.

7. Rishihood University was inaugurated in which state/UT?

A) Gujarat

B) Uttarakhand

C) New Delhi 

D) Puducherry

  • Vice President M Venkaiah Naidu inaugurated Rishihood University, at Vigyan Bhawan, New Delhi. Rajya Sabha MP, Founder and Chancellor of Rishihood University Suresh Prabhu was also present during the occasion. The university has launched many initiatives to promote social impact such as the Center for Water, Center for Innovation in Governance, etc.

8. India signed a loan agreement with which bank for Surat Metro Rail project?

A) ADB

B) KFW 

C) AIIB

D) World Bank

  • The Government of India and the Germany Development Bank –KFW (Kreditanstalt für Wiederaufbau) signed a 442.26–million–euro loan pact for Surat Metro Rail project. The total cost of the project is estimated to be Euro 1.50 billion (₹12,020 crore), of which KfW bank is financing Euro 442.26 million.
  • Surat Metro Rail Project was launched in January this year. The project is being co–financed by French Development Agency, AFD.

9. In which state, DRDE is to set up Advanced Biological Defence Research Centre (ABDRC)?

A) Bihar

B) Gujarat

C) Madhya Pradesh 

D) Uttar Pradesh

  • The Defence Research Development Establishment (DRDE) is to set up an advanced biological defence lab to study viruses dangerous to humans, at Madhya Pradesh’s Gwalior. The proposed Advanced Biological Defence Research Centre (ABDRC) will focus on dangerous viruses, their effect on humans and it will come up with safeguards and develop equipment to fight them.

10. Which state topped the ‘Index on Foundational Literacy and Numeracy’?

A) Assam

B) Sikkim

C) West Bengal 

D) Arunachal Pradesh

  • The ‘Index on Foundational Literacy and Numeracy’, an indicator of literacy among children below 10 years was released by Economic Advisory Council to the Prime Minister (EAC–PM). The Index was prepared by ‘Institute for Competitiveness’. West Bengal (58.95) topped the chart and Bihar was placed at the bottom in the ‘large states’ category. In the ‘small states’ category, Kerala (67.95) grabbed the top spot. Lakshadweep (52.69) and Mizoram (51.64) are top–scoring regions in the UT and Northeast state category, respectively.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!