Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

24th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. வர்த்தக ஒப்பந்தமொன்றில் இந்தியா கையெழுத்திட்ட முதலாவது ஆப்பிரிக்க நாடு எது?

அ) மொரீஷியஸ்

ஆ) மடகாஸ்கர்

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) எகிப்து

  • இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.
  • வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகள், தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறை & இதரதுறைகளில் ஒத்துழைப்பு இடம்பெறுகின்றன.

2. பிரதமர் கிசான் சம்பதா யோஜனா (PMKSY) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?

அ) உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

ஆ) உழவு அமைச்சகம்

இ) ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

ஈ) மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகம்

  • பிரதமர் கிசான் சம்பதா யோஜனா என்பது மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு முதன்மை திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், `363.4 கோடி செலவிலான இருபது திட்டங்களுக்கு, உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு `102.91 கோடி மதிப்பில், அரசு, மானிய உதவியை வழங்கும்.

3. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான மொட்டேரா (Motera) மைதானம் அமைந்துள்ள நகரம் எது?

அ) மெல்பர்ன்

ஆ) ஆமதாபாத்

இ) சிட்னி

ஈ) அடிலைட்

  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா மைதானம் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இங்கு நடைபெறவுள்ளது. இந்த அரங்கத்தில் 1,10,000 பேர் வரை அமரலாம். COVID-19 தொற்றுநோய் காரணமாக 55,000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.

4. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழிற்துறைகள் மேம்பாட்டுக்கான துறையும் FICCI’உம், கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைந்து தலைமைச் செயல் அதிகாரிளுக்கான மன்றத்தை ஏற்பாடு செய்தன?

அ) ஜப்பான்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஐக்கியப்பேரரசு

ஈ) சிங்கப்பூர்

  • இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றத்தை சமீபத்தில் உள்நாட்டு வர்த்தகம் & தொழிற்துறைகள் மேம்பாட்டுக்கான துறையும் FICCI’உம் ஏற்பாடு செய்தன. கடந்த 2018 நவம்பரில் இந்தியா-சிங்கப்பூர் தலைமைச் செயல் அதிகாரி மன்றம் தொடங்கப்பட்டது.
  • அப்போது, மின் வர்த்தகம், நிதியியல் தொழில்நுட்பம், சீர்மிகு உற்பத்தி, சுகாதாரம் ஆகிய முக்கியதுறைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்றும் இந்தத்துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதன் வாயிலாக நம் மக்களுக்கு மிகச்சிறந்த வசதிகளையும், சேவைகளையும் வழங்க முடியும் என்றும் அமைச்சர் உரைத்தார்.

5. விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் எந்த நாட்டுடனான திருத்தியமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அண்மையில், இந்தியா கையெழுத்திட்டது?

அ) ஐக்கியப்பேரரசு

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஜப்பான்

ஈ) பிரான்ஸ்

  • இந்திய விண்வெளி ஆய்வுமையமும் (ISRO) ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு முகமையும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு நல்கும் திருத்தி அமைக்கப்பட்ட ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விரிவான உத்திசார் கூட்டணி, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.

6. சமீபத்தில், ஆஸ்திரேலிய ஓப்பன்-2021’இல் பெண்கள் பட்டத்தை வென்றவர் யார்?

அ) நவோமி ஒசாகா

ஆ) ஜெனிபர் பிராடி

இ) கரோலினா முச்சோவா

ஈ) ஆஷ்லீ பார்டி

  • ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்க (US) வீராங்கனை ஜெனிபர் பிராடியை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் 2021 பெண்கள் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், அவர் தனது தொழிற் முறை வாழ்வில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றுள்ளார்.
  • 23 வயதான நவோமி ஒசாகா, மோனிகா செலஸ் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோருக்குப்பிறகு முதல் 4 முக்கிய இறுதிப்போட்டிகளில் வென்ற 3 -ஆவது நபராக மாறியுள்ளார். அவர் தற்போது, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார்.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹெலினா’ என்றால் என்ன?

அ) ஏவுகணை அமைப்பு

ஆ) கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

இ) ஆளில்லா விமானம்

ஈ) இராணுவ பீரங்கி

  • ஹெலினா (இராணுவ பதிப்பு) மற்றும் துருவாஸ்திரா (வான்படை பதிப்பு) ஏவுகணை அமைப்புகளின் கூட்டு சோதனை, பாலைவனப்பகுதிகளில் உள்ள நவீன இலகுரக ஹெலிகாப்டர் தளத்தில் செய்து பார்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன. உலகிலுள்ள மிகவும் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.

8. இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு பதிவுசெய்யவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) பூடான்

இ) சீனா

ஈ) பாகிஸ்தான்

  • பிறநாடுகளின் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத் -துவதைத்தடுப்பதற்காக, இமயமலை இளஞ்சிவப்பு உப்புக்கு புவிசார் குறியீட்டைப் பதிவுசெய்ய பாகிஸ்தான் முடிவுசெய்துள்ளது. இந்த அரிய உப்பு, பஞ்சாபில் உள்ள உப்புமலைத்தொடரிலிருந்து எடுக்கப்படுகிறது.
  • இந்த உப்பு மலைகள், பாகிஸ்தானிய மலைகள் மற்றும் ஜீலம் ஆற்றுக்கு வடக்கே நீண்டுள்ளது. பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.

9. இந்திய கடற்படை பங்கேற்கவிருக்கும், ‘NAVDEX – 21’ மற்றும் ‘IDEX – 21’ ஆகிய பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்துகிற நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) நியூசிலாந்து

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) கனடா

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆண்டுதோறும் நடத்தப்படும் கடற்படை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிகளான ‘NAVDEX’ மற்றும் ‘IDEX’ ஆகியவற்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
  • பிப்ரவரி.20 முதல் பிப்.25 வரையிலான இந்தப் பயிற்சிகளில் பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பலான பிரலயா அபுதாபிக்கு விரைந்துள்ளது. INS பிரலயா ஆனது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட பிரபல் வகுப்பு ஏவுகணை கப்பல்களுள் இரண்டாவது கப்பலாகும்.

10. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘இந்திராதனுஷ் 3.0’ திட்டம் என்றால் என்ன?

அ) போர்ப்பயிற்சி

ஆ) சிறார்கள் & கர்ப்பிணிப்பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்

இ) வேளாண் திட்டம்

ஈ) தூய ஆற்றல் உற்பத்தித் திட்டம்

  • தீவிரப்படுத்தப்பட்ட ‘இந்திரதனுஷ் 3.0’ திட்டத்தை மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், COVID-19 பரவல் அதிகமிருந்த காலத்தில், வழக்கமான தடுப்பூசிகள் செலுத்தப்ப -டாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இருசுற்று இடம்பெற்றிருக்கும். புலம்பெயர்ந்து வந்த பெண்கள் & குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 6,376 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் (Super Critical Thermal Power) நிலை-3’ஐ முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார். மிக உய்ய அனல் மின்-தொழில்நுட்பத்தில் 800 MW திறன்கொண்ட அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தில்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே 700 கோடி மதிப்பில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை தொடக்கிவைத்தார். இராமநாதபுரம் – தூத்துக்குடி வரை 143 கிமீ தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது.
  • தருமபுரி மாவட்டம் கும்முனூர் கிராமத்தில் வேளாண் & தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான புதிய வேளாண் கல்லூரி தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 24.02.2021 – காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித்தலைவி’ டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 73ஆவது பிறந்தநாள். அவரது பிறந்தநாள், தமிழ்நாடு அரசால், ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’ அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

1. Which is the first African country with which India signed a Trade Agreement?

A) Mauritius

B) Madagascar

C) South Africa

D) Egypt

  • The Union Cabinet has approved signing of the Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA) between India and Mauritius. This is the first trade Agreement to be signed by India with any country in Africa.
  • The agreement aims to liberalise norms covering Rules of Origin, Technical Barriers to Trade, Sanitary and Phytosanitary (SPS) measures, Dispute Settlement, Telecom, Financial services and Customs Procedures among others.

2. Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY) is a scheme implemented under which Union Ministry?

A) Ministry of Food Processing Industries

B) Ministry of Agriculture

C) Ministry of Rural Development

D) Ministry of Fisheries, Animal Husbandry and Dairying

  • Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY) is a flagship scheme being implemented by the Ministry of Food Processing Industries.
  • The Union Food Processing Industries Ministry cleared 20 projects worth Rs 363.4 crore for two schemes under Pradhan Mantri Kisan Sampada Yojana. The government will provide a grant–in–aid of Rs 102.91 crore for these projects.

3. Motera stadium, the world’s biggest cricket stadium, is located in which city?

A) Melbourne

B) Ahmedabad

C) Sydney

D) Adelaide

  • The world’s largest cricket stadium, Motera stadium was rebuilt and renovated. It is the venue for the third day–night India–England Test. The stadium has a capacity of 1,10,000. On account of COVID–19 pandemic, only 55,000 persons are allowed inside the stadium.

4. The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) and FICCI organised a CEO forum with which country?

A) Japan

B) United States of America

C) United Kingdom

D) Singapore

  • India–Singapore CEO Forum was recently organised by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) and FICCI. The India–Singapore CEO Forum was launched in November 2018.
  • Union Minister Piyush Goyal addressed the forum and expressed that both the countries can work together in areas such as e–commerce, fintech, smart manufacturing and healthcare.

5. India signed amended MoU for space cooperation with which country recently?

A) United Kingdom

B) Australia

C) Japan

D) France

  • The Indian Space Research Organisation (ISRO) and the Australian Space Agency signed an amendment to the Memorandum of Understanding, for space cooperation with Australia.
  • The Comprehensive Strategic Partnership between the two countries was announced by Prime Minister Narendra Modi and Australian Prime Minister Scott Morrison last year.

6. Who won the Australian Open 2021 women’s title recently?

A) Naomi Osaka

B) Jennifer Brady

C) Karolína Muchová

D) Ashleigh Barty

  • Naomi Osaka of Japan defeated Jennifer Brady and clinched the Australian Open 2021 women’s title. With this victory, she claimed her 4th Grand Slam title in her career. The 23–year–old player became the 3rd player after Monica Seles and Roger Federer to win their first four major finals. She is presently ranked No.2 in tennis ratings.

7. What is “Helina” which is seen in news recently?

A) Missile System

B) Anti–vessel Missile

C) Unmanned Aircraft

D) Military Tank

  • The trials of Helina – Indian Army version of a Missile system was carried out recently from an Advanced Light Helicopter. Additionally, Dhruvastra – the Indian Air Force Version of the same missile system was also tested. These systems were designed and developed by the Defence Research and Development Organisation (DRDO).

8. Which country is set to register Himalayan pink salt as Geographical Indications (GI)?

A) India

B) Bhutan

C) China

D) Pakistan

  • Pakistan has decided to register Himalayan pink salt as Geographical Indications (GI), to curb the unauthorised use of the product by other countries. The rare salt is extracted from the Salt Range in Punjab which extends along the mountains of Pakistan and the north of the Jhelum River. Pakistan is fighting a case in the European Union against India’s move to register Basmati rice as GI.

9. Which country hosts the defence exercises ‘NAVDEX 21’ and ‘IDEX 21’, which are to be participated by the Indian Navy?

A) France

B) New Zealand

C) United Arab Emirates

D) Canada

  • Annual naval defence and maritime security exhibitions ‘NAVDEX’ and ‘IDEX’ are to be scheduled in the United Arab Emirates.
  • Indian Naval Ship Pralaya arrived at Abu Dhabi in the United Arab Emirates to participate in the exercises from February 20 to Feb.25. ‘INS Pralaya’ is the second ship of the indigenously built Prabal Class Missile Vessels.

10. What is Mission Indradhanush 3.0, which was seen in the news recently?

A) Warfare Exercise

B) Vaccination Campaign for Children & Pregnant Women

C) Agricultural Scheme

D) Pure form of energy Project

  • The Union Ministry of Health and Family Welfare has launched the Mission Indradhanush 3.0.
  • It aims to vaccinate children and pregnant women who have missed their regular vaccination due to COVID–19 and national lockdown. This campaign will have two rounds of vaccination. Women and children of migration areas and hard to reach terrains would be targeted first.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!