Tnpsc

24th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. NASA’இன் சமீபத்திய ஆய்வின்படி, எந்தத் துணைக்கோளின் சுற்றுப்பாதையில் உள்ள தள்ளாட்டம் காரணமாக 2030ஆம் ஆண்டில் ‘தொல்லை வெள்ளம் – Nuisance floods’ அடிக்கடி ஏற்படும்?

அ) நிலா

ஆ) டைட்டன்

இ) போபோஸ்

ஈ) டீமோஸ்

  • அண்மையில், அமெரிக்காவின் NASA நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள ‘தள்ளாட்டம்’, காலநிலை மாற்றத்தின் காரணமாக உயரும் கடல் மட்டங்களுடன் இணைந்து பூமியில் பேரழிவு தரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
  • ‘தொல்லை வெள்ளம் – Nuisance floods’ என்று அழைக்கப்படும் இவை வழக்கமாக கரையோரப் பகுதிகளில் சராசரி அலைகளைவிடவும் 2 அடி உயரமான அலைகளை அடிக்கடி ஏற்படுத்தும். இந்த ஆய்வின்படி, இந்த ‘தொல்லை வெள்ளம்’ 2030’இன் நடுப்பகுதியில் அடிக்கடி நிகழும்.

2. உலக மக்கள்தொகை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.11

ஆ) ஜூலை.12

இ) ஜூலை.14

ஈ) ஜூலை.16

  • உலக மக்கள் தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டிய அதே நாளன்று உருவாக்கப்பட்ட விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11 அன்று மக்கள்தொகை நாளை கடைபிடிக்க பரிந்துரைத்தது.
  • “The impact of the COVID-19 pandemic on fertility” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

3. KVIC என்பது எந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?

அ) 1947

ஆ) 1957

இ) 1988

ஈ) 1999

  • காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறை ஆணையம் (KVIC) என்பது மத்திய MSME அமைச்சகத்தின்கீழுள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, 1957 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ‘காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறைகள் ஆணையகச் சட்டம் 1956’இன்கீழ் உருவாக்கப்பட்டது.
  • ‘காதி’ வணிக அடையாளத்தை பன்னாட்டளவில் பாதுகாக்கும் மிகப் பெரிய நடவடிக்கையாக, பூடான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளில் வர்த்தக குறியீட்டு பதிவுகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சமீபத்தில் பெற்றுள்ளது.

4. வங்கபந்து இருக்கை அமைப்பதற்காக ICCR’உடன் கூட்டு சேர்ந்த இந்திய பல்கலைக்கழகம் எது?

அ) மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஆ) தில்லி பல்கலைக்கழகம்

இ) அண்ணா பல்கலைக்கழகம்

ஈ) பெரியார் பல்கலைக்கழகம்

  • தில்லி பல்கலைக்கழகத்தில் ‘வங்கபந்து இருக்கை’ அமைப்பதற்காக இந்திய கலாச்சார உறவுகள் கழகம் (ICCR) மற்றும் தில்லி பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இருநாடுகளின் பொதுவான பாரம்பரியம் மற்றும் பௌத்த ஆய்வுகள், வங்காளம், புவியியல், வரலாறு, இசை, நுண்கலைகள், அரசியல் அறிவியல், பன்னாட்டு உறவுகள் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட பல பாடங்களில் இந்த இருக்கை கவனம் செலுத்தும். ஷேக் முஜிபுர் ரகுமான் வங்காளதேசத்தின் முதல் குடியரசுத்தலைவராக இருந்தார்.

5. 2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெறும் இடம் எது?

அ) துஷன்பே

ஆ) மாஸ்கோ

இ) ஷாங்காய்

ஈ) புது தில்லி

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் தஜிகிஸ்தானின் தலைநகரமான துஷன்பே நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்துமாறு அவர் SCO’ஐ வலியுறுத்தினார்.
  • இதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் சூழல் மற்றும் பொதுநலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

6. கோக்கிங் நிலக்கரி தொடர்பான ஒத்துழைப்பிற்காக எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) ரஷ்யா

ஆ) சுவீடன்

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா

  • எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கோக்கிங் நிலக்கரி தொடர்பான ஒத்துழைப்பிற்காக இந்திய குடியரசின் எஃகு அமைச்சகம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் எரிசக்தி அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நடுவணமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
  • உள்ளீட்டு விலை குறைவதன் மூலம் ஒட்டுமொத்த எஃகு துறைக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பலனளிக்கும். இதனால் நாட்டில் எஃகு விலை குறைய வாய்ப்புள்ளதோடு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு மேம்படும். சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஒத்துழைப்பிற்காக இந்திய குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டென்மார்க் முடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7. வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவ நிறுவனம் (NEIFM) அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) மேகாலயா

  • வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவ நிறுவனத்தின் (NEIFM) பெயர் மற்றும் ஆணையை வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (NEIAFMR) என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. NEIFM, அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட்டில் அமைந்துள்ளது. இது முறையான ஆராய்ச்சி, பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவ முறைகளை ஆவணப்படுத்துதல் மற்றும் அப்பிராந்தியத்தின் மருத்துவ நடைமுறைகளுக்காக சிறப்புற வகையில் நிறுவப்பட்டது.

8. மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் யார்?

அ) பியூஷ் கோயல்

ஆ) அமித் ஷா

இ) இராஜ்நாத் சிங்

ஈ) நிர்மலா சீதாராமன்

  • கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்ட தாவர்சந்த் கெலாட் உருவாக்கிய காலியிடத்தை நிரப்புவதற்காக நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மகராஷ்டிராவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல அமைச்சகங்களுக்கான பொறுப்பிலுள்ளார். அவையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதிலும், அனைத்து கட்சியினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் மாநிலங்களவைத்தலைவர் முக்கிய பங்கு வகிப்பார்.

9. மத்திய பட்டியலிலுள்ள OBC’க்குள் உள்-வகைப்படுத்தல் குறித்த சிக்கலை ஆராய அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

அ) A K சிக்ரி

ஆ) G ரோகிணி

இ) இரஞ்சன் கோகோய்

ஈ) S A போப்டே

  • மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11ஆவது முறையாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும். அக்டோபர் 11, 2017 அன்று பொறுப்பேற்ற இந்த ஆணையத்திற்கு, தில்லி உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி G ரோகினி தலைமைதாங்குகிறார்.

10. ஆண்டுதோறும் வெளியிடப்படும் மின்னல் அறிக்கையின்படி, 2020-21 ஆண்டு காலப்பகுதியில், மின்னல் தாக்கத்தால் அதிகபட்ச மரணங்களைக் கண்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) அஸ்ஸாம்

ஈ) பீகார்

  • இந்தியாவின் இரண்டாவது வருடாந்திர மின்னல் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, மின்னல் காரணமாக அதிக இறப்புகளை (401 இறப்புகள்) பீகார் மாநிலம் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அந்த அறிக்கையின்படி, தனியான உயரமான மரங்களின்கீழ் மக்கள் நிற்பதால் தான் அதிகப்படியான இறப்புகள் நிகழ்கின்றன.
  • சோடா நாக்பூர் பீடபூமியில் தோன்றும் மின்னல் காரணமாக, ஒடிஸா -மேற்கு வங்கம் – ஜார்கண்ட் பகுதி அதிக மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் 1.38 கோடி மின்னல் தாக்கங்களுடன் ஒப்பிடும்போது, 2020-2021ஆம் ஆண்டில், இந்தியா, 1.85 கோடி மின்னல் தாக்கங்களை கண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழக நீர்ப்பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்த உலக வங்கி `992 கோடி

தமிழ்நாட்டின் நீர்ப்பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி `2,073 கோடியை கடனுதவியாக வழங்குகிறது. இதில் இதுவரை `992.19 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் விஸ்வேஷ்வர் துடு மக்களவையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீர்ப்பாசன விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் மொத்த செலவில் 70 சதவீதமான `2,073 கோடியை உலக வங்கியின் ஐபிஆர்டி அமைப்பு கடனாக வழங்குகிறது. இந்த திட்டத்தை 2025’க்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் கடந்த ஜூலை.7ஆம் தேதி வரை `992.19 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாநில அரசும் 30%, அதாவது சுமார் `1000 கோடியை தன் பங்காக வழங்குகிறது. இதன்படி கடந்த மார்ச்.31ஆம் தேதி வரை தமிழக அரசு `409.88 கோடியை வழங்கியுள்ளது. இது முற்றிலும் மாநில அரசின் திட்டம் என்பதால் கடனை பெற்றுக்கொடுத்தைத்தவிர மத்திய அரசால் நிதி அனுமதிப்பது குறித்த எந்த சிக்கல்களும் இதில் இல்லை என அவர் தெரிவித்தார்.

2. டிஜிட்டல், நிலையான வர்த்தக வசதிகள்: ஐ.நா. ஆய்வில் இந்தியா முன்னேற்றம்

எண்ம முறையிலான (டிஜிட்டல்) நிலையான வர்த்தக வசதி தொடர்பாக ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்களுடன் முன்னேறியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்தது.

143 நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பீடு செய்தபின், 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை, நடைமுறைகள், நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு, காகிதப் பயன்பாடு இல்லாத வர்த்தகம், நாடுகள் தாண்டி வர்த்தகம் ஆகிய 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகள் (63.12 சதவீதம்) மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் (63.12 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதை ஐ.நா. கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சராசரியைவிட அதிகமாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை விஷயத்தில் இந்தியா 100% மதிப்பெண்ணை பெற்றுள்ளது. வர்த்தகத்தில் மகளிர் என்ற பிரிவில் 66% மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது. விரைவான சுங்க நடவடிக்கையின்கீழ், காகிதம் இல்லா, மனித தொடர்பில்லா சுங்க நடவடிக்கைகள் போன்ற புதுமையான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் முன்னணியில் உள்ளது. இதன் நேரடி தாக்கம், டிஜிட்டல் மற்றும் நிலையான வா்த்தக வசதி குறித்த ஐநா’இன் மதிப்பீட்டில் பிரதிபலித்துள்ளது.

இந்தத் தகவல் மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. As per a recent NASA study, ‘Nuisance floods’ will occur frequently in 2030, due to the wobble in the orbit of which satellite?

A) Moon

B) Titan

C) Phobos

D) Deimos

  • As per the recent study conducted by USA’s NASA, a ‘wobble’ in Moon’s orbit combined with rising sea levels due to climate change will lead to devastating floods on Earth. Called ‘Nuisance floods’, these usually occur in coastal areas when the tide reaches about 2 feet above the daily average high tide. As per the study, these nuisance floods will become more frequent and irregular by mid–2030s.

2. When is the ‘World Population Day’ observed every year?

A) July.11

B) July.12

C) July.14

D) July.16

  • The ‘World Population Day’ is observed across the world, on July 11 every year. The day was first celebrated in the year 1990. Inspired by the awareness created by ‘Five Billion Day’ on the same day in 1987 when the world’s population reached 5 billion, UNDP recommended the observance of Population Day on July 11. The 2021 theme for the day is “The impact of the Covid–19 pandemic on fertility”.

3. KVIC is a statutory body formed in which year?

A) 1947

B) 1957

C) 1988

D) 1999

  • The Khadi and Village Industries Commission (KVIC) is a statutory body under the Union Ministry of MSME, formed in April 1957 under the act of Parliament – ‘Khadi and Village Industries Commission Act of 1956’. Recently, KVIC has secured the trademark registration for its brand “Khadi” in Bhutan, United Arab Emirates (UAE) and Mexico.

4. Which Indian University has partnered with ICCR, to set up Bangabandhu Chair?

A) Madras University

B) Delhi University

C) Anna University

D) Periyar University

  • An MoU was signed between the Indian Council for Cultural Relations (ICCR) and Delhi University to set up the ‘Bangabandhu Chair’ at Delhi University. The Chair will focus on the common heritage of the two countries and several subjects including Buddhist Studies, languages including Bangla, Geography, History, Music, Fine Arts, Political Science, International relations and Sociology. Sheikh Mujibur Rahman was the first President of Bangladesh.

5. Which city is the venue of the Shanghai Cooperation Organisation (SCO) meeting 2021?

A) Dushanbe

B) Moscow

C) Shanghai

D) New Delhi

  • The Shanghai Cooperation Organisation meeting was recently held in the city of Dushanbe, the capital of Tajikistan. India’s External Affairs Minister S. Jaishankar participated in the meeting, representing India. He urged the SCO to stop terror financing.
  • Foreign Ministers of Russia, China and Pakistan also attended the meeting. Situation in Afghanistan as well as public health and economic recovery were discussed.

6. The Union Cabinet has approved MoU with which country, on cooperation regarding Coking Coal?

A) Russia

B) Sweden

C) Japan

D) Australia

  • The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between the Ministry of Steel of the Republic of India and the Ministry of Energy of the Russian Federation on cooperation regarding Coking Coal.
  • Coking Coal is used for Steel making. The MoU shall benefit the steel sector in India by reducing their input cost and cost of steel in domestic market. The Cabinet also approves MoU between India and Denmark for cooperation in health and medicine.

7. North Eastern Institute of Folk Medicine (NEIFM) is situated in which state?

A) Assam

B) Sikkim

C) Arunachal Pradesh

D) Meghalaya

  • The Union Cabinet has given its approval for changing the name and mandate of North Eastern Institute of Folk Medicine (NEIFM) as North Eastern Institute of Ayurveda & Folk Medicine Research (NEIAFMR). The NEIFM is located in Pasighat, Arunachal Pradesh. It was established for systemic research, documentation of traditional folk medicine and medicinal practices of the region.

8. Which Union Minister has been appointed as the Leader of House in Rajya Sabha?

A) Piyush Goyal

B) Amit Shah

C) Rajnath Singh

D) Nirmala Sitharaman

  • Union Minister Piyush Goyal was appointed as the Leader of the House in the Rajya Sabha, filling the vacancy created by Thaawarchand Gehlot, who is now the Governor of Karnataka.
  • Piyush Goyal, who is a Rajya Sabha member from Maharashtra, is in charge of several Ministries including Commerce and industry, Consumer affairs, food and public distribution, and Textiles. The Leader will play a key role in ensuring the smooth functioning of the House and better coordination with all parties.

9. Who is the head of the Commission set up to examine the issue of Sub–categorization within OBCs in the Central List?

A) A K Sikri

B) G Rohini

C) Ranjan Gogoi

D) S A Bobde

  • The Union Cabinet has approved the Eleventh Extension of the term of the Commission constituted under Article 340 of the Constitution to examine the issue of Sub–categorization within Other Backward Classes (OBCs) in the Central List by 6 months, up to 31st January 2022.
  • The commission, which took charge on October 11, 2017, is headed by retired Delhi High Court Chief Justice G Rohini.

10. Which Indian state/UT had maximum deaths due to lightning strikes during 2020–21, as per annual Lightning Report?

A) Kerala

B) Karnataka

C) Assam

D) Bihar

  • According to India’s second annual Lightning Report, Bihar reported the most deaths due to lightning between April 1, 2020– March 31, 2021 (401 deaths), followed by Uttar Pradesh and Madhya Pradesh.
  • According to the report, the most number of deaths are due to people standing under isolated tall trees. The Odisha–West Bengal–Jharkhand belt is more prone as lightning strikes originate from Chot Nagpur Plateau. India witnessed 1.85 crore strikes in 2020–2021 compared to 1.38 crore strikes in 2019–2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!