TnpscTnpsc Current Affairs

24th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

24th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஓசியானிக்ஸ் சிட்டி என்ற பெயரிலான மிதக்கும் நகரம் அமைக்கப்படவுள்ள நகரம் எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. மலேசியா

இ. தென் கொரியா 

ஈ. சிங்கப்பூர்

 • உலகின் முதல் மிதக்கும் நகரமான ஓசியானிக்ஸ் சிட்டியை ஐநா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புசான் கடற்கரையில் இது அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு இதற்கானக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பாஷி வாய்க்கால், பசிபிக் பெருங்கடலில் உள்ள எந்த நீரிணையின் ஒரு பகுதியாகும்?

அ. தைவான் நீரிணை

ஆ. லூசன் நீரிணை 

இ. கரிமாடா நீரிணை

ஈ. மலாக்கா நீரிணை

 • தென்சீனக்கடலை மேற்கு பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் பாஷி வாய்க்கால், பிலிப்பைன்ஸின் வடக்குத் தீவான லூசானுக்கும் தைவானின் ஆர்க்கிட் தீவுக்கும் இடையிலான நீர்வழிப்பாதையாகும். இது பிலிப்பைன்ஸ் கடலையும் தென் சீனக்கடலையும் இணைக்கும் லூசன் நீரிணையின் ஒருபகுதியாகும்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற உருசிய புறநில ஆட்சிப் பகுதியான கலினின்கிராட் அமைந்துள்ள கடல் எது?

அ. வட கடல்

ஆ. லாப்ரடார் கடல்

இ. பால்டிக் கடல் 

ஈ. பியூபோர்ட் கடல்

 • உருசிய புறநில ஆட்சிப் பகுதியான கலினின்கிராட் கலினின்கிராட் பால்டிக் கடலில் அமைந்துள்ளது. இது லிதுவேனியாவிற்கும் போலந்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இது 1945 ஏப்ரலில் நாஜி ஜெர்மனியிடமிருந்து சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்டது. போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின் விளைவாக இது சோவியத் ஒன்றியத்தின் ஒருபகுதியாக மாறியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைவிதிப்பின் காரணமாக லிதுவேனியா அதன் எல்லை வழியாக கலினின்கிராட்டுக்கு சரக்குகள் அனுப்பப்படுவதைத் தடை செய்ய முடிவெடுத்ததைத் தொடர்ந்து இது சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றது.

4. மனித உடலின் எந்தத் திசு / உறுப்பு மைலோடிஸ்பிளாஸ்டிக் நோய்க்குறியால் பாதிக்கப்படுகிறது?

அ. இரத்த அணுக்கள் 

ஆ. தைமஸ் சுரப்பி

இ. நிணநீர் நாளங்கள்

ஈ. கணையம்

 • மைலோடிஸ்பிளாஸ்டிக் நோய்க்குறி என்பது ஓர் அரிய வகை இரத்தப்புற்றுநோயாகும்; இது எலும்பு மஜ்ஜையில் நலமான இரத்த அணுக்களை உருவாக்கும் உடலின் திறனைப்பாதிக்கிறது. இது இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் திறனைத் தடுக்கிறது. இரத்தமாற்றம், கீமோதெரபி அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றின்மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம்.

5. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் NIPUN திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பு எது?

அ. தேசிய திறன் பயிற்சி நிறுவனம்

ஆ. தேசிய திறன் மேம்பாட்டு நிதி

இ. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் 

ஈ. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்

 • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் வரும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் NIPUN திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பாகும். இது இந்த முன்முயற்சியின்கீழ் சாத்தியமான பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளிக்கும்.

6. ‘கருடா ஏரோஸ்பேஸின்’ விளம்பரத்தூதராக கையெழுத்திட்டுள்ள இந்தியர் யார்?

அ. சிவகார்த்திகேயன்

ஆ. மகேந்திர சிங் தோனி 

இ. இரஜினிகாந்த்

ஈ. கமல்ஹாசன்

 • மகேந்திர சிங் தோனி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விளம்பரத்தூதராகவும் சிறுபான்மை பங்குதாரராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சென்னையைச் சார்ந்த வானூர்தி மற்றும் விண்வெளி உதிரிபாக உற்பத்தி நிறுவனமாகும். அது ஆளில்லா வான்வழி வாகனங்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் ஆகியவற்றைக் கையாள்கிறது. குறைந்த விலை டிரோன்களை உருவாக்குவதில் அந்நிறுவனம் புகழ்பெற்றுள்ளது.

7. தனது மாநிலப்பட்டாம்பூச்சியாக, ‘புளூ டியூக் – Blue Duke’ஐ அறிவித்த இந்திய மாநிலம்/UT எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. சிக்கிம் 

இ. நாகாலாந்து

ஈ. பஞ்சாப்

 • சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, ‘நீல டியூக்’கை மாநிலப் பட்டாம்பூச்சியாக அறிவித்தார். ‘நீல டியூக்’கின் அறிவியல் பெயர் ‘Bassarona durga’ ஆகும். சிக்கிம் மற்றும் கிழக்கு இமயமலையைப் பூர்வீகமாகக் கொண்டதாகும் இவை. ‘நீல டியூக்’, வனவுயிர்கள் பாதுகாப்புச் சட்டம், 1972-இன் அட்டவணை-2இன்கீழ் உள்ளது. இது இமயமலையில் ஒரு பாதுகாக்கப்பட்ட இனமாக உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் 720 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன.

8. 2022 – சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 120

ஆ. 140

இ. 160

ஈ. 180 

 • 2022 – சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை 180ஆக உள்ளது. 180 நாடுகள் இடம்பெற்று உள்ள இக்குறியீட்டில் இந்தியா மிகக்குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளது. காலநிலை மாற்ற செயல்திறன், சுற்றுச்சூழல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் உயிராற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட 11 சிக்கல் வகைகளில் நாற்பது செயல்திறன் குறிகாட்டிகளில் அது நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. கொள்கை நடவடிக்கையின் அடிப்படையில் இந்த அளவுருக்களில் இந்தியாவின் செயல்திறன் மிகமிகமோசமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

9. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 இரன்கள் எடுத்த ஜோ ரூட், எந்த நாட்டுக்காக விளையாடுகிறார்?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. இங்கிலாந்து 

இ. ஆஸ்திரேலியா

ஈ. மேற்கிந்திய தீவுகள்

 • சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 இரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பெற்றார். முன்னதாக, ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 இரன்களைக் கடந்திருந்தார். இந்தச் சாதனையை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரரும் ஒட்டுமொத்தமாக 14ஆவது வீரரும் ஆனார் ஜோ ரூட். இப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ரிக்கி பாண்டிங் (13,378), ஜாக் காலிஸ் (13,289) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

10. 2022-இல் FSSAI-இன் நான்காவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

 • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் 4ஆவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். உணவுப் பாதுகாப்புச் சூழலில், போட்டி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2018-19ஆம் ஆண்டில், 5 அம்சங்களை அடிப்படையாகக்கொண்ட உணவுப் பாதுகாப்புக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இந்த ஆண்டு, தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்திலும், தில்லி இரண்டாமிடத்திலும், சண்டிகர் மூன்றாமிடத்திலும் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. NIA தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகர் குப்தா நியமனம்

தேசிய புலனாய்வு முகமை (NIA) தலைவராக மூத்த இ கா ப அதிகாரி தினகர் குப்தா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்தது. 1987 பஞ்சாப் இ கா ப பிரிவைச் சேர்ந்த தினகர் குப்தா, வரும் 2024 மார்ச்.31-ஆம் தேதி வரை அதாவது பணி ஓய்வுறும் வரை இந்தப்பொறுப்பில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழுமம் ஒப்புதல் அளித்துவிட்டதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. 24-06-2022 – ‘கவியரசு’ கண்ணதாசன் அவர்களின் 96ஆவது பிறந்தநாள்.

3. G20 மாநாடு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீரில் வரும் 2023ஆம் ஆண்டில் G20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அந்த மாநில அரசு அமைத்தது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக விளங்கும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் G20 கூட்டமைப்பின் அடுத்த கூட்டத்தொடர் 2023இல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுகிறது. இதனை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதற்கான தூதராக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், G20 நாடுகளின் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஜம்மு-காஷ்மீர் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், ஐவர்கொண்ட குழுவை அந்த மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 60 சதவீதத்தையும் G20 நாடுகள் கொண்டுள்ளன.

1. A floating city named Oceanix City is going to be set up in which country?

A. Maldives

B. Malaysia

C. South Korea 

D. Singapore

 • The UN announced world’s first–ever floating city named Oceanix City in April this year. It is going to be set up off the coast of South Korea’s second–largest city, Busan. The construction process is going to commence next year.

2. Bashi Channel, which was making news recently, is part of which strait in the Pacific Ocean?

A. Taiwan Strait

B. Luzon Strait 

C. Karimata Strait

D. Malacca Strait

 • The Bashi Channel, which connects the South China Sea with the western Pacific Ocean, is a waterway between the Philippines’ northern island of Luzon and the Taiwanese island of Orchid. It is part of the Luzon Strait, which connects the Philippine Sea to the South China Sea.

3. Russian enclave Kaliningrad, that was in news recently, is located in which sea?

A. North Sea

B. Labrador Sea

C. Baltic Sea 

D. Beaufort Sea

 • The Russian enclave Kaliningrad is located on the Baltic Sea. It is sandwiched between Lithuania and Poland. It was captured by the USSR from Nazi Germany in April 1945. It became part of the USSR territory as the result of the Potsdam Agreement. It was recently in news because of a row after Lithuania decided to ban goods part of EU sanctions from moving through its territory to reach Kaliningrad.

4. Which tissue / organ of human body is affected by myelodysplastic syndrome?

A. Blood cells 

B. Thymus gland

C. Lymphatic vessels

D. Pancreas

 • Myelodysplastic syndrome is a rare type of blood cancer that affects the body’s ability to make healthy blood cells in the bone marrow. It obstructs the body’s ability to produce blood cells. Its treatments range from blood transfusion to chemotherapy or stem cell transplantation.

5. Which body is responsible for the implementation of the NIPUN project of the Ministry of Housing and Urban Affairs?

A. National Skill Training Institute

B. National Skill Development Fund

C. National Skill Development Corporation 

D. National Council for Vocational Education and Training

 • National Skill Development Corporation (NSDC), which comes under the aegis of the Union Ministry of Skill Development and Entrepreneurship, is responsible for the implementation of the NIPUN project of the Ministry of Housing and Urban Affairs. It will train potential candidates under this initiative.

6. Which Indian personality has been signed on as brand ambassador of ‘Garuda Aerospace’?

A. Sivakarthikeyan

B. Mahendra Singh Dhoni 

C. Rajinikanth

D. Kamal Haasan

 • Mahendra Singh Dhoni has been signed on as brand ambassador and a minority shareholder of Garuda Aerospace. It is a Chennai–based aviation and aerospace component manufacturing firm that deals with designing and building of unmanned aerial vehicles. The company is known for developing low–cost drone solutions.

7. Which Indian state/UT declared ‘Blue Duke’ as the state butterfly?

A. Arunachal Pradesh

B. Sikkim 

C. Nagaland

D. Punjab

 • Sikkim Chief Minister Prem Singh Tamang declared Blue Duke the state butterfly, on the occasion of World Environment Day. Blue Duke whose scientific name is ‘Bassarona durga’, is endemic to Sikkim and the eastern Himalayas. Blue Duke falls in Schedule 2 of the Wildlife Protection Act, 1972 and is a protected species in the Himalayas. As many as 720 species of butterflies are found in Sikkim.

8. What is the rank of India in the ‘2022 Environmental Performance Index’?

A. 120

B. 140

C. 160

D. 180 

 • India’s rank is 180 in the 2022 Environmental Performance Index (EPI) and has scored the lowest among 180 countries. The report ranks the countries on 40 performance indicators across 11 issue categories on climate change performance, environmental health, and ecosystem vitality. India’s performance on these parameters in terms of policy action is considered to be poor.

9. Joe Root, who recently scored 17,000 runs in international cricket, plays for which country?

A. South Africa

B. England 

C. Australia

D. West Indies

 • England batter Joe Root became the first English player to complete 17,000 runs in international cricket. Earlier, Joe Root completed 10,000 runs in Test cricket, becoming the second English player and 14th overall player to reach the feat. This list is led by Sachin Tendulkar (15,921), Ricky Ponting (13,378), Jacques Kallis (13,289).

10. Which state topped the FSSAI’s 4th State Food Safety Index (SFSI) in 2022?

A. Tamil Nadu 

B. Kerala

C. Maharashtra

D. Gujarat

 • nion Minister for Health and Family Welfare Mansukh Mandaviya released the Food Safety and Standards Authority of India’s (FSSAI) 4th State Food Safety Index (SFSI). It measures the performance of States across five parameters of food safety.
 • Among the larger states, Tamil Nadu was the top–ranking state, followed by Gujarat and Maharashtra. Among the smaller states, Goa was first followed by Manipur and Sikkim. Jammu & Kashmir, Delhi and Chandigarh were at first, second and third ranks among UTs.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!