Tnpsc

24th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

  1. கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட் அறிமுகப்படுத்திய கிராம் உஜாலா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் LED விளக்குகளின் விலை என்ன?

அ) ரூ.5

ஆ) ரூ.10

இ) ரூ.25

ஈ) ரூ.1

  • LED விளக்குகளை ஒரு விளக்குக்கு `10 என்ற விலையில் வழங்கும் ‘கிராம் உஜாலா’ என்ற புதிய திட்டத்தை மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் இராஜ்குமார் சிங் தொடங்கினார். இந்தத் திட்டம், பீகாரிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • உலகிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட இந்த LED விளக்குகளை, எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட் தயாரிக்கின்றது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிட் (BECIL) என்பது எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்?

அ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) எரிசக்தி அமைச்சகம்

ஈ) ஜவுளி அமைச்சகம்

  • பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்பது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
  • சமூக ஊடக தளங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மைதன்மையை சரிபார்ப்பதற்கும் தவறான தகவல்களைக் கண்டறிவதற்குமான தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்க, முகமைகளுக்கு அழைப்புவிடுக்கும் ஒப்பந்தப்புள்ளியை BECIL சமீபத்தில் வெளியிட்டது. BECIL, முகமைகளை அதிகாரபூர்வ பட்டியலில் வைத்திருக்க முற்படுகிறது.

3. 2021ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 139

ஆ) 145

இ) 108

ஈ) 5

  • உலக மகிழ்ச்சி அறிக்கை-2021 ஐநா நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் ஆகிய 3 முக்கிய குறிகாட்டிகளின்கீழ் இவ்வறிக்கை நல்வாழ்வை அளவிடுகிறது. 149 நாடுகளில், இந்தியா 139ஆவது இடத்திலுள்ளது. அறிக்கையின்படி பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. கீழ்காணும் எந்த நாட்டோடு இணைந்து, இந்தியா, சமீபத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி & மேம்பாட்டு முன்னெடுப்பைத் தொடங்கியது?

அ) ஜப்பான்

ஆ) பிரான்ஸ்

இ) அமெரிக்கா

ஈ) பின்லாந்து

  • இந்தோ-அமெரிக்க அறிவியல் & தொழில்நுட்ப மன்றமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலர் முன்னிலையில் அமெரிக்க இந்தியா செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பைத் தொடங்கியது.
  • இந்தோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழினுட்ப மன்றம் என்பது இரு நாடுகளாலும் 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இருதரப்பு அமைப்பாகும். இது, பரஸ்பர தொடர்புகளின்மூலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துகிறது. அமெரிக்க இந்தியா செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பின்கீழ், புதிய ஆராய்ச்சி & வளர்ச்சிப்பகுதிகள் மற்றும் வாய்ப்புகள் அடையாளம் காணப்படும்.

5. இந்திய கடற்படையானது எந்த அமைப்பால் கட்டப்பட்ட நீர்ப்படை கப்பலான L58’ஐ பணியில் சேர்த்துள்ளது?

அ) DRDO

ஆ) ISRO

இ) GRSE

ஈ) HAL

  • போர்ட் பிளேரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்திய கடற்படை நீர்ப்படை கப்பலான L58’ஐ அறிமுகப்படுத்தியது. இது, நீர்ப்படை கப்பல் Mk-IV வகுப்பு கப்பலின் வரிசையில் எட்டாவதும் கடைசியுமாகும். இந்தக் கப்பல் கொல்கத்தாவின் அரசு ரீதியான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ் நிறுவனத்தால் (GRSE) உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்டது. போர் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுத அமைப்புகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படும்.

6. ஆபரேஷன் சங்கல்பின்கீழ் பாரசீக வளைகுடாவில், பின்வரும் எந்த நாட்டோடு இணைந்து, இந்திய கடற்படை, ‘பாஸேஜ்’ என்னும் பயிற்சியை (PASSEX) மேற்கொண்டது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) கத்தார்

இ) பக்ரைன்

ஈ) ஓமான்

  • ஆபரேஷன் சங்கல்பின்கீழ் பாரசீக வளைகுடாவில் ராயல் பக்ரைன் கடற்படையுடன் இந்திய கடற்படை ‘பாஸேஜ்’ என்னும் பயிற்சியை (PASSEX) மேற்கொண்டது. இப்பயிற்சியானது இந்திய நட்பு நாடுகளின் கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையால் தவறாமல் நடத்தப்படுகின்றது. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற குறியீடு பெயரிலான ‘ஆபரேஷன் சங்கல்ப்’, கடந்த 2019’இல் வளைகுடாவில் தொடங்கப்பட்டது.

7. காப்பீட்டு (திருத்த) மசோதா, 2021’இன்படி, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் புதிய வரம்பு என்ன?

அ) 26%

ஆ) 49%

இ) 74%

ஈ) 100%

  • அண்மையில் மாநிலங்களவையால் காப்பீட்டு (திருத்த) மசோதா, 2021 அங்கீகரிக்கப்பட்டது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம் -பை தற்போதைய 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்த இது முற்படுகிறது. மசோதாவின்படி, இயக்குநர்கள் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலோர் மற்றும் முக்கிய நிர்வாக நபர்கள், குடியுரிமைபெற்ற இந்தியர்களாக இருப்பார்கள், குறைந்தபட்சம் 50 சதவீத இயக்குநர்கள் சுயாதீன இயக்குநர்களாக இருப்பார்கள்.

8. மேகக்கணிமை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக கீழ்காணும் எந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் NITI ஆயோக் கூட்டு சேர்ந்துள்ளது?

அ) HP

ஆ) அமேசான்

இ) சாம்சங்

ஈ) ஹூவாவே

  • அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்மூலம் மேகக்கணிமையின் அடிப்படைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக NITI ஆயோக், அமேசன் வலைத்தள சேவைகள் (AWS) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. திட்டத்தின் கீழ், கிளவுட் ஸ்டோரேஜ், வெப் ஹோஸ்டிங், செயற்கை நுண்ணறிவு, எந்திரகற்றல் மற்றும் மெய்நிகர்போன்ற மேகக்கணிமை கருத்துக்களை AWS, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

9. ‘ஆற்றல் சுவராஜ் யாத்திரை’ பேருந்தை உருவாக்கிய நிறுவனம் எது?

அ) IIT பாம்பே

ஆ) IIT மெட்ராஸ்

இ) IIT கெளகாத்தி

ஈ) IISc, பெங்களூரு

  • மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஆற்றல் சுவராஜ் யாத்திரை பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்தை, பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சேதன் சிங் சோலங்கி வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இது, சூரிய ஆற்றலில் இயங்கும் ஒரு வாகனமாகும்.

10. இந்தியாவின் H2Ooooh – நீர்குறித்த விழிப்புணர்வுத்திட்டத்திற் -கு தனது ஆதரவை நீட்டித்துள்ள நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) UNESCO

இ) UNICEF

ஈ) OECD

  • நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்திற்காக, UNESCO யுனைடெட் ஸ்கூல்ஸ் ஆர்கனைசேஷன் இந்தியா (USO இந்தியா), வாட்டர் டைஜஸ்ட் இதழ் மற்றும் டூன்ஸ் மீடியா குழுமத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
  • H2Ooooh! – நீர்குறித்த விழிப்புணர்வுத்திட்டமானது தேசிய தூய்மை கங்கை திட்டத்துடன் இணைந்து பள்ளிமாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. மாணவர்கள் உருவாக்கிய அனிமேஷன் காணொளிகள் உலக நீர் நாளான மார்ச்.22 அன்று வெளியிடப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இலங்கைக்கு எதிராக ஐநா’வில் தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

இலங்கை இறுதிக்கட்டப்போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனிதவுரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்க -ணித்தது. எனினும், அந்தத் தீர்மானம் பிறநாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 2009’ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரின்போது, இருதரப்பிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் தொடற்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து, சர்வதேச உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை அதிபர் சிறீசேனா தலைமையிலான முந்தைய அரசு அமைத்தது. எனினும், கடந்த 2019’ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கோத்தபய இராஜபட்ச அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அந்தக்குழு கலைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இலங்கை விவகாரத்துக்கான ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் மையக்குழு, வரைவுத் தீர்மானமொன்றை தாக்கல் செய்தது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மான்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் அந்தக்குழு, போர்க் குற்றங்கள் தொடர்பான நியாயமான விசாரணையை மேற்கொள்வதற்கான வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியதாக அந்த வரைவுத்தீர்மானத்தில் குற்றம்சாட்டியிருந்தது.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. போர்க் குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையத்தில், 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், ரஷியா உள்ளிட்ட பதினொரு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

2. மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: சென்னை ரயில்வே கோட்ட அணி முதலிடம்

ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே மண்டல அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் சென்னை இரயில்வே கோட்டஅணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. தெற்கு இரயில்வே சார்பில், இரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே மண்டல அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி 3 நாள்கள் திருச்சியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு இரயில்வே கோட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆய்வாளர் விரேந்திர சிங் தலைமையிலான சென்னை இரயில்வே கோட்ட அணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தது.

3. காசநோய்க்கு ஓராண்டுக்கு சுமார் 4.5 இலட்சம் பேர் பலி: ஜெ இராதாகிருஷ்ணன்

இந்தியாவில் காசநோயினால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் பேர் மரணமடைகின்றனர் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ இராதாகிருஷ்ணன் சென்னையில் தெரிவித்தார். உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு நாளையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் Dr ஜெ இராதாகிரு -ஷ்ணன் கலந்துகொண்டு ’மறைமுக காசநோய்’, ’சிகிச்சைக்கு கடினமா -ன காசநோய்’ ஆகிய இரண்டு சிறுபுத்தகங்களை வெளியிட்டார்.

காசநோயினால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 14 இலட்சம் பேர் நோய் முற்றிய நிலையில் இறந்துபோகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 26 இலட்சம் பேர் பாதிப்பு உள்ளாகின்றனர். இதில் சுமார் 4.5 லட்சம் பேருக்கு மரணம் ஏற்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

4. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: அங்கத் – கனிமத் ஜோடிக்கு தங்கம்

தில்லியில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அங்கத் வீர்சிங் பாஜ்வா, கனிமத் சிகோன் இணை தங்கப்பதக்கம் வென்றது. பதக்கத்துக்கான சுற்றில் அங்கத்-கனிமத் இணை 33 ஷாட்களுடன் முதலிடம் பிடித்தது. இத்தங்கத்துடன் சேர்த்து, இப்போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றுள்ளது.

5. டி20 தரவரிசை: ஷஃபாலி முதலிடம்

மகளிர் கிரிக்கெட்டில் ICC T20 தரவரிசையில் பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஓரிடம் முன்னேறி முதலிடம்பிடித்தார். தீப்தி சர்மா 4 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்துக்கும், ரிச்சா கோஷ் 59 இடங்கள் ஏற்றங்கண்டு 85ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர் ஹர்லீன் தியோல் 262 இடங்கள் ஏற்றங்கண்டு 99ஆவது இடத்துக்கு வந்துள்ளார். தென்னாப்பிரிக்க வீராங்கனை லிஸெலெ லீ 3 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்துக்கும், லௌரா வோல்வார்டட் 5 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கேப்டன் சுனே லஸ் ஐந்து இடங்கள் ஏற்றங்கண்டு 38ஆவது இடத்தையும், நாடினே டி கிளெர்க் 3 இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். பௌலர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்லீன் தியோல் 76 இடங்கள் முன்னேறி 146ஆவது இடத்துக்கு வர, இராஜேஷ்வரி கெய்க்வாட் 34ஆவது இடத்திலிருந்து 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

6. 45 வயதுக்கு மேற்பட்டோர் ஏப்.1 முதல் தடுப்பூசி செலுத்தலாம்; சான்றிதழ் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போர், இல்லாதோர் அனைவரும் ஏப்ரல் 1 முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இரண்டாம்கட்ட கரோனா தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஏப்.1 தொடங்கும் முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் இணை நோய்கள் இருந்தாலும் சான்றிதழ்பெறவேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ICMR, பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தும், சீரம் மருந்து நிறுவனத்துடன் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16 அன்று தொடங்கியது. இந்த முகாமில் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர் -களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது கட்ட தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைநோய்கள் இருப்போர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அரசு கேட்டுக்கொண்டது.

அரசு மருத்துவமனைகளிலும், தேர்வுசெய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்.1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் COVID தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

1. What is the cost of LED bulbs under the GRAM UJALA Programme, launched by Convergence Energy Services Ltd?

A) Rs.5

B) Rs.10

C) Rs.25

D) Re.1

  • A new scheme GRAM UJALA Programme for providing LED bulbs at a price of Rs.10 per bulb has been launched by Power and New and renewable energy minister Raj Kumar Singh. The scheme has been launched from Bihar. These bulbs are priced lowest in the world and are manufactured by Convergence Energy Services Ltd (CESL) – a subsidiary of Energy Efficiency Services Ltd (EESL).

2. Broadcast Engineering Consultants India Limited (BECIL), that was seen in news, is a public sector enterprise under which Ministry?

A) Ministry of Information and Broadcasting

B) Ministry of Home Affairs

C) Ministry of Power

D) Ministry of Textiles

  • Broadcast Engineering Consultants India Limited (BECIL) is a central public sector enterprise (CPSE) under the Ministry of Information and Broadcasting. The CPSE was seen in news as it has recently released a tender that invited agencies to provide solutions and services related to fact verification and detection of misinformation on social media platforms. BECIL seeks to empanel the agencies.

3. What is India’s rank in the World Happiness Report 2021?

A) 139

B) 145

C) 108

D) 5

  • The World Happiness Report 2021 has been released recently by the UN Sustainable Development Solutions Network.
  • The report measures the well–being by relying on three main indicators: life evaluations, positive emotions, and negative emotions. Out of 149 countries, India has been ranked at 139. Finland is adjudged as the world’s happiest country as per the report.

4. India recently launched an Artificial Intelligence (AI) research and development initiative with which country?

A) Japan

B) France

C) USA

D) Finland

  • The Indo–US Science and Technology Forum (IUSSTF) launched the US India Artificial Intelligence (USIAI) initiative, in the presence of the Department of Science & Technology Secretary. IUSSTF is a bilateral organisation established by the two countries in 2000, to promote Science, Technology and innovation through mutual interactions. Under the USIAI initiative, new R&D areas and opportunities will be identified.

5. The Indian Navy inducted a landing craft utility ship L58, built by which organisation?

A) DRDO

B) ISRO

C) GRSE

D) HAL

  • The Indian Navy inducted a landing craft utility ship L58 at an event in Port Blair. It is the eighth and last of the landing craft utility (LCU) mark–IV class ship. The ship was indigenously designed and built by state–run Garden Reach Shipbuilders and Engineers Ltd (GRSE), Kolkata. It will be used for several activities like transporting battle tanks and heavy weapons systems.

6. Indian Navy carried out Passage Exercise (PASSEX) with which country in the Persian Gulf under Operation Sankalp?

A) UAE

B) Qatar

C) Bahrain

D) Oman

  • Indian Navy carried out Passage Exercise (PASSEX) with Royal Bahrain Naval Force in the Persian Gulf under Operation Sankalp. PASSEXs are conducted regularly by the Indian Navy with the navies of friendly foreign countries. Maritime Security Operations, code–named Op Sankalp were initiated in the Gulf in 2019.

7. As per the Insurance (Amendment) Bill, 2021, what is the new FDI limit in the insurance sector?

A) 26%

B) 49%

C) 74%

D) 100%

  • The Insurance (Amendment) Bill, 2021 was approved by the Rajya Sabha recently. It seeks to increase foreign direct investment limit in the insurance sector to 74 per cent from the current 49 per cent. As per the bill, majority of those in board of directors and key management persons would be resident Indians, with at least 50 per cent of directors being independent directors.

8. NITI Aayog has partnered with which technology major to train students on Cloud Computing?

A) HP

B) Amazon

C) Samsung

D) Huawei

  • NITI Aayog has partnered with IT major Amazon Web Services (AWS) to train students on the fundamentals of cloud computing through Atal Tinkering Labs. Under the program, AWS will introduce the concepts of cloud computing such as cloud storage, web hosting, artificial intelligence (AI), machine learning (ML), and virtual reality (VR) to students.

9. Which institution developed the ‘Energy Swaraj Yatra’ bus?

A) IIT Bombay

B) IIT Madras

C) IIT Guwahati

D) IISc, Bangalore

  • The Union Education Minster Shri. Ramesh Pokhriyal ‘Nishank’ took a ride in the Energy Swaraj Yatra’ bus. This bus has been designed and developed by Dr Chetan Singh Solanki, Professor, Indian Institute of Technology (IIT) Bombay. It is a vehicle that runs on solar energy.

10. Which organisation has extended its support for India’s H2Ooooh! – Waterwise Program?

A) World Bank

B) UNESCO

C) UNICEF

D) OECD

  • UNESCO has partnered with United Schools Organization India (USO India), Water Digest magazine and Toonz Media Group for water conservation awareness programme.
  • The H2Ooooh! – Waterwise Program is conducted for school students, in partnership with National Mission for Clean Ganga. The animation videos created by students will be launched on March 22, the World Water Day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!