TnpscTnpsc Current Affairs

24th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

24th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்திய NCRB தரவுகளின்படி, சிறைகளில் அதிக விசாரணைக் கைதிகளைக்கொண்ட மாநிலங்கள் எவை?

அ. உத்தரபிரதேசம் மற்றும் பீகார்

ஆ. தில்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் 

இ. குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்

ஈ. மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம்

  • கடந்த 2020ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB) தொகுத்துள்ள சமீபத்திய தரவுகளின்படி, மொத்தமுள்ள 4.88 இலட்சம் சிறைக்கைதிகளில், 76% அல்லது 3.71 இலட்சம் பேர் விசாரணைக் கைதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 68% பேர் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள். விசாரணைக்குட்பட்டவர்களில் சுமார் 20% பேர் இசுலாமியர்கள், 73 சதவீதம் பேர் தலித்துகள், பழங்குடியினர் அல்லது OBC-க்கள். தில்லி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சிறைகளில் விசாரணைக்கைதிகளின் விகிதம் அதிகபட்சமாக 91% ஆகவும், பீகார் மற்றும் பஞ்சாப் 85% ஆகவும், ஒடிஸாவில் 83% ஆகவும் உள்ளது.

2. இந்தியப் பிரதமரின் ஆலோசகராக (2022-இல்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. தருண் பஜாஜ்

ஆ. தருண் கபூர் 

இ. மைக்கேல் D பத்ரா

ஈ. ஜெயதி கோஷ்

  • மத்திய அமைச்சரவையின் நியமனக்குழுவானது தருண் கபூரை பிரதமரின் ஆலோசகராக 2 ஆண்டுகாலத்திற்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளரும், கடந்த 1987-ம் ஆண்டு இமாச்சல பிரதேச பிரிவிலிருந்து இஆப அதிகாரியுமான இவர், கடந்த 2021-இல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளராகப் பதவியேற்றார்.

3. PMFME திட்டம் மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. உணவுப்பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சகம் 

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சரானவர் புது தில்லியில் பிரதம மந்திரி முறைப்படுத்தப்பட்ட நுண்ணுணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களின் (PMFME) திட்டத்தின்கீழ் மூன்று ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ பிராண்டுகளை அறிமுகப்படுத்தினார்.
  • PMFME திட்டத்தின், ‘பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் கூறுகளின்’கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ODOP-களின் 10 பிராண்டுகளை உருவாக்குதற்காக உணவுப்பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புடன் (NAFED) ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.

4. ஐந்து இலட்சம் மாணாக்கருக்கு கைக்கணினி வழங்கும் ‘இ-அதிகம்’ திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹரியானா 

இ. மத்திய பிரதேசம்

ஈ. கேரளா

  • ஹரியானா அரசின்கீழ், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் சுமார் ஐந்து இலட்சம் பள்ளி மாணாக்கருக்கு கைக் கணினிகள் வழங்கப்படும். இந்தச் சாதனங்கள் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தகவமைப்பு கற்றல் மென்பொருள் மற்றும் 2 GB இலவசத் தரவு வசதிகளுடன் முன்பே ஏற்றப்பட்ட உள்ளடக்கத்துடன் தரப்படும். ஹரியானா அரசு, பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக, கல்வித்துறைக்காக இரண்டு பணிக்குழுக்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது.

5. 2022-இல் 24ஆவது கோடைகால காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரேசில் 

இ. ஆஸ்திரேலியா

ஈ. கிரேக்கம்

  • 2022 மே.1 முதல் பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரத்தில் 24ஆவது கோடைகால காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 65 விளையாட்டு வீரர்களைக் கொண்ட வலுவான இந்தியக் குழு இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கமும், சௌர்யா சைனி வெண்கலமும் வென்றனர். இந்திய பாட்மிண்டன் அணி இறுதிப்போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

6. ‘ஒயிட்லி கோல்ட்’ விருதானது கீழ்காணும் எந்தத் துறையில் பங்களிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது?

அ. வனவுயிரிகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு 

ஆ. நீர்வளப் பாதுகாப்பு

இ. கனிமவளப் பாதுகாப்பு

ஈ. நிலவளங்கள் பாதுகாப்பு

  • ‘ஒயிட்லி கோல்ட்’ விருதென்பது வனவுயிர்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பைத்தரும் மாந்தர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிற ஒரு விருதாகும். பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பாளரான சாருதத் மிஸ்ரா, பனிச் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுக்காக 2022-இல் ‘ஒயிட்லி கோல்ட்’ விருது பெற்றுள்ளார். மிஸ்ரா, பனிச்சிறுத்தை அறக்கட்டளையின் (SLT) முதல் சர்வதேச நிர்வாக இயக்குநரும் ஆவார். அவர் உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை நிறுவவும் உதவியுள்ளார்.

7. ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் – 2021’ஐ வென்ற பல்கலைக்கழகம் எது?

அ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஆ. அண்ணா பல்கலைக்கழகம்

இ. ஜைன் பல்கலைக்கழகம் 

ஈ. பஞ்சாப் பல்கலைக்கழகம்

  • ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் – 2021’ஐ வழங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ஜெயின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்), ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் (KIUG) 2021’இல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி 20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (LPU) மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகம் முறையே முதல் இரன்னர்-அப் மற்றும் இரண்டாவது இரன்னர் அப் நிலைகளை பெற்றன. இந்தப் பதிப்பில், 2 தேசிய சாதனைகள் மற்றும் 76 முந்தைய கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

8. சமீபத்தில் அதிக வயதான உலக சாம்பியனான ரோனி ஓ’சுல்லிவன் சார்ந்த விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. ஸ்னூக்கர் 

இ. ஸ்குவாஷ்

ஈ. கோல்ப்

  • தற்போதைய உலகின் முதல்நிலை வீரரான இங்கிலாந்து ஸ்னூக்கர் வீரர் ரோனி ஓ’சுல்லிவன் தனது ஏழாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஜட் ட்ரம்பை வீழ்த்தியதன்மூலம் பெற்றார். இதன்மூலம் ஸ்டீபன் ஹென்றியின் சாதனையை அவர் சமன்செய்தார். 46 வயதான ஸ்னூக்கர் வீரரான ரோனி ஓ’சுல்லிவன், குரூசிபிள் வரலாற்றில் அதிக வயதுடைய உலகச் சாம்பியனானார். அவர் தனது முதல் தொழிற்முறை தரவரிசை நிகழ்வை 17 வயதில் வென்றார். 19 வயதில் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற இளைய வீரரும் இவரே. ஸ்னூக்கருக்கான சேவைகளுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில் ஓ’சுல்லிவனுக்கு ‘ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பையர்’ விருது வழங்கப்பட்டது.

9. ஜிலின்-1 01C மற்றும் ஜிலின்-1 காஃபென் சீரிஸ் செயற்கைக்கோள்கள் உட்பட எட்டு தொலையுணரி செயற்கைக் கோள்களை ஏவிய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. சீனா 

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ரஷ்யா

  • ஜிலின்-1 01C மற்றும் ஜிலின்-1 காஃபென் சீரிஸ் செயற்கைக்கோள்கள் உட்பட எட்டுச் செயற்கைக்கோள்களை தாழ் புவி சுற்றுப்பாதைக்கு லாங் மார்ச் ஏவுகலத்தில் சீனா ஏவியது. இது லாங் மார்ச் ஏவுகலத்தொடரின் 419ஆவது விண் வெளிப்பயணத்தையும் குறித்தது. கடந்த வாரம், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) லாங் மார்ச் 2C ஏவுகலத்தில் 2 செயற்கைக்கோள்களை ஏவியது; அது நாட்டின் நகர்ப்புற பாதுகாப்பை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்காணிக்கவும் ஏவப்பட்டது.

10. ஆண்டுதோறும், ‘உலக கைத் தூய்மை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.2

ஆ. மே.4

இ. மே.5 

ஈ. மே.7

  • உலக சுகாதார நிறுவனமானது (WHO) ஆண்டுதோறும் மே.5 அன்று ‘உலக கைத் தூய்மை நாளைக்’ கடைப்பிடிக்கிறது. குறித்த நேரத்தில் குறித்த தயாரிப்புகளுடன் கைகளைச் சுத்தம் செய்ய மக்களை இந்தச் சிறப்பு நாள் ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு (2022) பிரச்சாரத்தின் கருப்பொருள், “A Healthcare “Quality and Safety Climate or Culture” that Values Hand Hygiene and Infection Prevention and Control” என்பதாகும். முழக்கவரியாக, “Unite for safety: clean your hands” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பதிமூன்று நாடுகள் ஒருங்கிணைந்து, ‘வளர்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பை’ (IPEF) ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டமைப்பானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கான கேந்திரமாக மாற்றும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக்கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும்வகையில் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூஸிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இணைவதாகத் தெரிவித்துள்ளன.

கூட்டமைப்பின் குறிக்கோள்: IPEF கூட்டமைப்பில் இணைந்துள்ள 13 நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “நீடித்த வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி, நாடுகளின் பொருளாதாரப் போட்டி உள்ளிட்டவற்றை ஆக்கபூர்வமாக மேம்படுத்தும் நோக்கில் IPEF அமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் தங்களுக்கு இடையேயான பொருளாதாரத் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பாக IPEF பேச்சுவார்த்தையில் விரிவாக விவாதிக்கப்படும். சர்வதேச விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தூய்மையான எரிசக்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், தொழில்நுட்ப வசதிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. வாட்ஸ்ஆப் வாயிலாக அரசின் சேவைகள்

கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எண்ம வடிவில் சேகரித்து வைப்பதற்கான மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை இனி வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய ஆவணங்களை எண்மவடிவில் சேகரித்து வைப்பதற்கான வசதிகளை ‘டிஜிலாக்கர்’ செயலி வழங்கி வருகிறது. ‘மைகௌ ஹெல்ப்டெஸ்க்’ வாயிலாக அச்செயலி வழங்கும் சேவைகளை இனி வாட்ஸ்ஆப் மூலமாகவே மக்கள் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அச்சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். இதன்மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற்றுவிட முடியும்.

3. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்…

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியது:

கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரகவளர்ச்சித்துறையின்மூலமாக பண்ணைக்குட்டை அமைத்தல், கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கால்நடைகளின் நலங்காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த் துறையின்மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு-குறு உழவர்களுக்குச் சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின்மூலம் அதிகளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், பாசன நீர்வழித்தடங்களை தூர்வாருதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

1. Which states have the highest ratio of undertrials in jails, as per latest NCRB Data?

A. Uttar Pradesh and Bihar

B. Delhi and Jammu & Kashmir 

C. Gujarat and Madhya Pradesh

D. West Bengal and Assam

  • According to the latest data compiled by the National Crime Records Bureau (NCRB) for 2020, of the total 4.88 lakh prison inmates, 76 % or 3.71 lakh were found to be undertrials, of which about 68% were either illiterate or school dropouts.
  • Among the undertrials, about 20% were Muslims, while about 73% were Dalits, tribals or OBCs. Delhi and Jammu and Kashmir (J&K) were found to have the highest ratio of undertrials in jails at 91%, followed by Bihar and Punjab at 85%, and Odisha at 83%.

2. Who has been appointed as the advisor to the Indian Prime Minister (in 2022)?

A. Tarun Bajaj

B. Tarun Kapoor 

C. Michael D Patra

D. Jayati Ghosh

  • The Appointments Committee of the Cabinet has approved appointment of Tarun Kapoor, as an advisor to the Prime Minister, in the Prime Minister’s Office (PMO), in the rank and scale of Secretary to Government of India, initially for a period of two years Former petroleum secretary and 1987–batch IAS officer of the Himachal Pradesh cadre, superannuated as the Secretary of the Ministry of petroleum and natural gas in 2021.

3. PMFME Scheme and One District One Product (ODOP) scheme are associated with which Union Ministry?

A. Ministry of Food Processing Industries 

B. Ministry of Agriculture

C. Ministry of MSME

D. Ministry of Home Affairs

  • Union Minister of Food Processing Industries (MoFPI) launched Three One District One Product (ODOP) brands under the Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises (PMFME) Scheme in New Delhi.
  • The Ministry of Food Processing Industries has signed an agreement with National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED) for developing 10 brands of selected 20 ODOPs under the ‘branding and marketing component’ of the PMFME scheme.

4. Which state government launched ‘e–Adhigam’ scheme to provide tablets to five lakh students?

A. Tamil Nadu

B. Haryana 

C. Madhya Pradesh

D. Kerala

  • Under the Haryana Government, around five lakh school students of classes 10th and 12th will receive tablets. These devices come with pre–loaded content along with personalised and adaptive learning software, and 2GB of free data. Haryana government has also announced to form two task forces for the education sector, to work on the infrastructure and sanitation of schools.

5. Which country is the host of 24th Summer Deaflympics in 2022?

A. India

B. Brazil 

C. Australia

D. Greece

  • The 24th Summer Deaflympics is being held in Caxias do Sul, Brazil from 1st May 2022. A strong Indian contingent of 65 athletes is participating in the Games. Dhanush Srikanth clinched gold in the men’s 10m air rifle competition while Shourya Saini won bronze. India’s badminton team also won gold beating Japan 3–1 in the final.

6. ‘Whitely Gold Award’ is presented to people who contribute in which field?

A. Wildlife and Biodiversity Conservation 

B. Water Resources Conservation

C. Mineral Resources Conservation

D. Land Resources Conservation

  • ‘Whitely Gold Award’ is annually awarded to people in recognition of their outstanding contribution to conservation. Charudutt Mishra, a snow leopard conservationist, was awarded the Whitely Gold Award in 2022, for his efforts to involve local communities in conserving snow leopards. Mishra is also the first international Executive Director of the Snow Leopard Trust (SLT). He also helped establish the Global Snow Leopard and Ecosystem Protection Programme.

7. Which University won the ‘Khelo India University Games (KIUG) 2021’?

A. Madras University

B. Anna University

C. Jain University

D. Punjab University

  • Bengaluru–based Jain (Deemed–to–be University), the host for the Khelo India University Games (KIUG) 2021, has bagged the top position in ‘Khelo India University Games (KIUG) 2021’. The team won 20 gold, seven silver and five bronze medals. Lovely Professional University (LPU) and Punjab University bagged the first runner–up and the second runner–up positions respectively. In this edition, 2 national records and 76 previous Khelo India University games records were broken.

8. Ronnie O’Sullivan, who recently became the oldest World Champion, plays which sports?

A. Tennis

B. Snooker 

C. Squash

D. Golf

  • English snooker player Ronnie O’Sullivan, the current world number one, claimed his seventh World Championship title with a win over Judd Trump to equal Stephen Hendry’s record. The 46–year–old snooker player becomes the oldest world champion in Crucible history. He won his first professional ranking event at 17 years. He is also the youngest player to win the Masters at 19. O’Sullivan has been awarded an Order of the British Empire in 2016, for services to snooker.

9. Which country recently launched eight remote sensing satellites including Jilin–1 01C and Jilin–1 Gaofen series satellites?

A. Israel

B. China 

C. UAE

D. Russia

  • China has recently launched eight satellites on a Long March rocket to Low Earth Orbit including Jilin–1 01C and Jilin–1 Gaofen series satellites. This also marked the 419th flight mission of the Long March rocket series. Last week, the China National Space Administration (CNSA) launched two satellites on a Long March 2C rocket, aimed to boost the country’s urban security and monitoring environmental changes.

10. When is the ‘World Hand Hygiene Day’ celebrated every year?

A. May.2

B. May.4

C. May.5

D. May.7

  • World Health Organization (WHO) marks May 5 every year as ‘World Hand Hygiene Day’, to encourage people to clean hands at the right times with the right products. This year, the Campaign theme is “A health care “quality and safety climate or culture” that values hand hygiene and infection prevention and control” and the Slogan is “Unite for safety: clean your hands”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!