Tnpsc

24th November 2020 Current Affairs in Tamil & English

24th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, PM-FME திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது வழங்கல் அமைச்சகம்

ஆ. உணவுப் பதனிடுதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

இ. உழவு அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம்

  • பிரதமரின், சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (PM-FME), திறன் மேம்பாட்டு பயிற்சியை மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காணொலிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார்.
  • 5 ஆண்டு காலப்பகுதியில் `10,000 கோடி செலவினத்துடன், உணவு பதப்படுத்தும் துறையின் அமைப்பு சாரா பிரிவில் நுண் நிறுவனங்களை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ‘காற்றாலை பூங்காக்கள் / காற்று-சூரிய ஆற்றல் கலப்பின பூங்கா’ ஆகியவற்றை உருவாக்குவதற்கு முன்மொழிந்துள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம்

இ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்

ஈ. உழவு & உழவர்கள் அமைச்சகம்

  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது, ‘காற்றாலை பூங்காக்கள் / காற்று-சூரிய ஆற்றல் கலப்பின பூங்கா’க்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நாட்டில் காற்று மற்றும் காற்று-சூரிய கலப்பின பூங்காக்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகளையும் அமைச்சகம் கோரியுள்ளது. காற்றாலை ஆற்றல் திட்டங்களை நிறுவுவதை விரைவுபடுத்துவதற்காக, வெளியேற்ற வசதிகள் உள்ளிட்ட முறையான உட்கட்டமைப்புகளைக் கொண்ட திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

3. நில நிர்வாக அமைப்பை முதன்முறையாக தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • இராணுவத்துக்கு சொந்தமான நிலங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை மேம்படுத்தும் விதமாக, நில நிர்வாக அமைப்பு ஒன்றை முதன்முறையாக பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது இதற்கான இணையதளத்தை பாதுகாப்பு படைகளின் உயரதிகாரிகளின் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

4. இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்காக, ‘Project Kirana’ என்றவொன்றைத் தொடங்க, கீழ்க்காணும் எந்த நிதியியல் சேவை நிறுவனம் USAID’உடன் கூட்டு சேர்ந்துள்ளது?

அ. விசா

ஆ. மாஸ்டர்கார்டு

இ. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

ஈ. ரூபே

  • ‘கிராணா திட்ட’த்தின்கீழ், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஈராண்டுகால வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது. வருவாய், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை விரிவாக்குவதற்கு இந்தத் திட்டம் செயல்படும்.
  • இத்திட்டம், அம்மாநிலத்தில் உள்ள பெண்களின் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிதிசார் கல்வியறிவை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெண்களின் வணிக மேலாண்மை திறனை மேம்படுத்தும். அதிகமான மகளிரை தொழில்முனைவை நோக்கிக்கொண்டுவருவதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் GDP 12% முதல் 25% வரை வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

5. கீழ்க்காணும் எந்த அண்டை நாட்டில், RuPay அட்டையின் 2ஆம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்?

அ. இலங்கை

ஆ. பூட்டான்

இ. மியான்மர்

ஈ. வங்கதேசம்

  • ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் லயஞ்சென் டாக்டர் லோட்டே ஷெரிங் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் தொடக்கி வைத்தனர். ரூபே அட்டைகள் பூட்டானில் செயல்படுத்தப்பட்டதன்மூலம் பூட்டான் முழுவதிலும் உள்ள ATM மையங்கள் & விற்பனை முனையங்களை இந்தியாவிலிருந்து பூட்டானுக்கு செல்பவர்கள் பயன்படுத்த முடியும்.
  • இத்திட்டத்தின் இராண்டாம் கட்டம்மூலம் பூட்டானிலிருந்து இந்தியா வருபவர்கள் இங்குள்ள ரூபே மையங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களிடையே உள்ள வலுவான உறவுகளின் மூலமான பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் இந்தியா மற்றும் பூட்டானுக்கிடையே சிறப்பான நட்புறவு நிலவுகிறது.

6. நவம்பர் மாதத்தில் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் சூரியக் கடவுளுக்காக கொண்டாடப்படும் விழாவின் பெயர் என்ன?

அ. சத் பூசை

ஆ. தசரா

இ. கர்வா செளத்

ஈ. கார்த்திகை தீபம்

  • சூரியக்கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘சத் பூசை’ எனப்படும் திருவிழா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் நோன்பு நோற்கிறார்கள், சூரியக்கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தத் திருவிழா, அண்டை நாடான நேபாளத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, துங்கபத்ரா புஷ்கரலு கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. தெலுங்கானா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • ‘துங்கபத்ரா புஷ்கரலு’ என்பது துங்கபத்ரா ஆற்றை கெளரவிக்கும் விதமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்படும் 12 நாள் விழாவாகும். இது, இந்த ஆண்டு நவ.20ஆம் தேதி தொடங்கியது. துங்கபத்ரா ஆறானது கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு அண்டை மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. நாடு முழுவதுமுள்ள 12 பேராறுகளில், ‘புஷ்கரலு’ அல்லது புஷ்கரம்’ என்ற திருவிழா நடத்தப்படுகிறது.

8. இந்தியா மற்றும் எவ்விரு நாடுகளிடையே, ‘SITEMEX’ என்ற முத்தரப்பு கடற்படைப் பயிற்சி நடந்தது?

அ. வங்கதேசம் & மியான்மர்

ஆ. சிங்கப்பூர் & தாய்லாந்து

இ. ஆஸ்திரேலியா & ஜப்பான்

ஈ. சீனா & பிலிப்பைன்ஸ்

  • இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான ‘SITEMEX-20’ என்றழைக்கப்படும் முத்தரப்பு பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது. இப்பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் கப்பலான INS ‘கமோர்தா’ மற்றும் ஏவுகணை தாங்கிக்கப்பலான, ‘கர்முக்’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்குபற்றின. முதலாவது SITEMEX பயிற்சி கடந்த ஆண்டு போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
  • இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், பொதுவான புரிதலை வளர்க்கவும், கடல்சார் பாதுகாப்பை மேம்ப -டுத்துவதற்கு தேவையான சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடப் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை தலைமையேற்று நடத்தியது.

9. ‘இந்தோ-தாய் CORPAT’ என்பது இந்தியா மற்றும் தாய்லாந்தின் எந்த ஆயுதப்படை சம்பந்தப்பட்ட பயிற்சியாகும்?

அ. இராணுவம்

ஆ. கடற்படை

இ. வான்படை

ஈ. கடலோர காவல்படை

  • இந்தியா மற்றும் தாய்லாந்தின் கடற்படைகளுக்கிடையேயான இந்திய-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்தின் (CORPAT) முப்பதாவது பதிப்பு நவம்பர் 20 வரை நடைபெற்றது. இந்தியக் கப்பலான INS கார்முக், தாய்லாந்து கப்பலான கிரபூரி ஆகியவை இந்த ரோந்தில் பங்கேற்றுள்ளன. இந்திய அரசின் சாகர் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் இதர உதவிகளை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.
  • கடற்சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, 2005’ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு இரு முறை கூட்டு ரோந்து நடவடிக்கையை இருநாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. வர்த்தக கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு உகந்ததாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதிசெய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

10. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால், ‘சிறந்த கடல்சார் மாவட்டம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டம் எது?

அ. கிருஷ்ணா

ஆ. கடலூர்

இ. தூத்துக்குடி

ஈ. கன்னியாகுமரி

  • மீன்வளத்துறையில் முதன்முறையாக, இந்திய அரசு, 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் உடைய மாநிலங்களுக்கு விருது வழங்கி கெளரவித்தது. அதில், கடற்புற மாநிலங்களில் ஒடிசாவும்; உள்நாட்டு மாநிலங்களில் உத்தரபிரதேசமும்; மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமும் தெரிவாகின.
  • 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த அமைப்புகளுக்கும் இந்திய அரசு விருது வழங்கி கெளரவித்தது. அதில், ‘கடல்சார்’ பிரிவில் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகமும்; ‘உள்நாட்டு’ பிரிவில் தெலுங்கானா மாநில மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கூட்டமைப்பும்; ‘மலைப்பாங்கான’ பிரிவில் அஸ்ஸாம் கூட்டுறவு மீன் சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டமைப்பும் தெரிவாகின.
  • சிறந்த கடல்சார் மாவட்டமாக ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டமும்; ஒடிசா மாநிலத்தின் கலஹந்தி சிறந்த உள்நாட்டு மாவட்டமாகவும்; அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான் சிறந்த மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாவட்டமாகவும் தெரிவாகின.

1. Which Union Ministry implements the PM–FME Scheme, which was seen in the news recently?

[A] Ministry of Consumer Affairs, Food & Public Distribution

[B] Ministry of Food Processing Industries

[C] Ministry of Agriculture

[D] Ministry of Heavy Industries

  • The Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises (PM–FME) Scheme is a centrally sponsored scheme, launched under the Aatmanirbhar Bharat Abhiyan, under Food Processing Ministry. Recently, Union Minister for Food Processing Industries Narendra Singh Tomar inaugurated the capacity building component of the scheme.
  • With an outlay of Rs 10,000 crore over a period of five years it aims to formalise micro–enterprises in the unorganized segment of the food processing industry.

2. Which Union Ministry launched ‘Development of Wind Parks/Wind–Solar Hybrid Park’?

[A] Ministry of New & Renewable Energy

[B] Ministry of Power

[C] Ministry of Road Transport & Highways

[D] Ministry of Agriculture & Farmers Welfare

  • The Union Ministry of New and Renewable Energy has proposed the scheme of ‘Development of Wind Parks/Wind–Solar Hybrid Park’. The Ministry has also sought feedbacks for developing wind and wind–solar hybrid parks in the country. The scheme with proper infrastructure including evacuation facilities in place has been proposed, to speed up installation of wind power projects.

3. Which Union Ministry of India has launched a portal for Land management system (LMS), for the first time?

[A] Ministry of Agriculture and Farmers Welfare

[B] Ministry of Defence

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Home Affairs

  • Defense Minister Rajnath Singh has launched a website in the presence of senior defense officials, the first of which has been implemented by the Ministry of Defense to improve the overall management of defense lands.

4. Which financial services company has partnered with USAID to launch ‘Project Kirana’ for women entrepreneurs in India?

[A] VISA

[B] Mastercard

[C] American Express

[D] Rupay

  • Under Project Kirana, a two–year programme is to be rolled out in selected cities such as Kanpur, Lucknow and Varanasi of Uttar Pradesh. The project will work to increase revenue, digital payments and expand financial inclusion. The project aims to build digital literacy and financial literacy of the women in the state. It will improve business management skills of women. It is estimated that the GDP of the country will grow between 12% and 25% in the next five years by bringing in more women.

5. Prime Minister Narendra Modi launched RuPay Card phase–2 in which neighbouring country?

[A] Sri Lanka

[B] Bhutan

[C] Myanmar

[D] Bangladesh

  • A virtual ceremony for the joint launch of RuPay card Phase–II by Prime Minister Shri Narendra Modi and Prime Minister of Bhutan Lyonchhen Dr. Lotay Tshering held on 20 November 2020. The implementation of Phase–I of RuPay cards in Bhutan has enabled visitors from India to access ATMs and Point of Sale (PoS) terminals across Bhutan.
  • Phase–II will now allow Bhutanese card holders to access RuPay network in India. India and Bhutan share a special partnership, anchored in mutual understanding and respect, reinforced by a shared cultural heritage and strong people to people links.

6. What is the name of the festival, celebrated across Bihar, Jharkhand and Uttar Pradesh in November, dedicated to Sun God?

[A] Chhath Pooja

[B] Dussehra

[C] Karva Chauth

[D] Kaarthikai Deepam

  • The festival named ‘Chhath Puja’ dedicated to Sun God, is celebrated across Bihar, Jharkhand and Uttar Pradesh in November, dedicated to Sun God. Devotees from across the country observe fast, offer prayers to the Sun God. It is one of the biggest festivals celebrated in the states and in some parts of the neighbouring country, Nepal.

7. Tungabhadra Pushkaralu, which was seen in news recently, is celebrated in which state/UT?

[A] Andhra Pradesh

[B] Telangana

[C] Karnataka

[D] Kerala

  • The Tungabhadra Pushkaralu is a 12–day festival celebrated in the state of Andhra Pradesh, to honour the Tungabhadra river. It commenced on November 20, this year.
  • Tungabhadra river starts from the state of Karnataka and continues to flow through two neighbouring states – Telangana and Andhra Pradesh. 12 major rivers across the country are worshipped by a festival named ‘Pushkaralu or Pushkaram’.

8. The trilateral naval exercise ‘SITEMEX’ has started among India and which countries?

[A] Bangladesh & Myanmar

[B] Singapore & Thailand

[C] Australia & Japan

[D] China & Philippines

  • The trilateral exercise called ‘SITEMEX–20’ between the navies of India, Singapore and Thailand was recently completed. The exercise took place in the Andaman Sea. The Indian Navy–owned submarine INS Kamortha and the missile carrier Karmuk took part in the exercise.
  • The first SITEMEX training took place in Port Blair last year. The exercise is aimed at strengthening mutual trust between the navies of Singapore and Thailand, building common understanding and adopting the best practices needed to improve maritime security. This year’s exercise was led by the Singapore Navy.

9. The ‘Indo–Thai CORPAT’ is the exercise involving which armed force of India and Thailand?

[A] Army

[B] Navy

[C] Air Force

[D] Coast Guard

  • The 30th edition of India–Thailand Coordinated Patrol (Indo–Thai CORPAT) between the Indian Navy and the Royal Thai Navy is conducted from 18 – 20 November 2020. Indian Naval Ship (INS) Karmuk, an indigenously built Missile Corvette and His Majesty’s Thailand Ship (HTMS) Kraburi, a Chao Phraya Class Frigate along with Dornier Maritime Patrol Aircraft from both the navies are participating in the CORPAT.
  • As part of Government of India’s vision of SAGAR (Security and Growth for All in the Region), the Indian Navy has been involved in assisting countries in the Indian Ocean Region with EEZ Surveillance, Humanitarian Assistance and Disaster Relief (HADR), and other capacity building and capability–enhancement activities, on their request. To reinforce maritime links, the two navies have been carrying out CORPAT along their International Maritime Boundary Line twice a year since 2005, with the aim of keeping this vital part of the Indian Ocean safe and secure for commercial shipping and international trade.

10. Which district has been selected for the ‘Best Marine District’ award by the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying?

[A] Krishna

[B] Cuddalore

[C] Thoothukudi

[D] Kanyakumari

  • For the first time in Fisheries Sector the Government of India will award best performing States for 2019–20 namely, Odisha (amongst Marine states), Uttar Pradesh (amongst Inland states) and Assam (amongst Hilly and NE states).
  • The Government of India will also award best Organisations for 2019–20 [Tamil Nadu Fisheries Development Corporation Ltd. (for Marine); Telangana State Fishermen Cooperative societies Federation Ltd (for Inland), and Assam Apex Cooperative Fish Marketing and Processing Federation Ltd. (for Hilly region)]; Krishna District, Andhra Pradesh as best Marine District; Kalahandi, Odisha as best Inland District; Nagaon, Assam as Best Hilly and NE District.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!