Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

24th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

24th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 24th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அண்மையில் நிறைவேற்றியுள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், ஜவுளித்துறை, தோல், அறைகலன்கள், நகைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட இந்தியாவின் 6,000 துறைகளுக்கு ஆஸ்திரேலிய சந்தையில் வரியில்லா அணுகலை வழங்கும். முதல் நாளன்று சுமார் 96.4 சதவீத ஏற்றுமதிகளுக்கு வரியேதும் விதிக்காமல் ஆஸ்திரேலிய இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தியது.

2. கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக, ‘அரிட்டாபட்டி’ அறிவிக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. தெலுங்கானா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • சீர்மேவும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான வல்லூறுகள், கழுகுகள் உட்பட சுமார் 250 பறவையினங்கள் அங்கு காணப்படுவதால் அது வளமான உயிரியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது. இது எறும்புண்ணி, மலைப்பாம்பு மற்றும் தேவாங்குபோன்ற வனவுயிரிகளையும் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு, ‘உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002’இன்கீழ் வருகிறது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற அரசியலமைப்பின் 324ஆவது பிரிவு, எந்தப் பதவி நியமனத்துடன் தொடர்பானது?

அ. குடியரசுத்தலைவர்

ஆ. ஆளுநர்

இ. தேர்தல் ஆணையர்

ஈ. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தேர்தல் ஆணையர்

  • தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்களின் நியமனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் இல்லாதது கவலையளிக்கும் போக்கு என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமம்பற்றி பேசும் அரசியலமைப்பின் 324ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், அத்தகைய நியமனங்களுக்கான வழிமுறையை அது வழங்கவில்லை என்று கூறியது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல், எந்தத் தலைமைத் தேர்தல் ஆணையரும் 6 ஆண்டுகால பதவியை நிறைவு செய்ததில்லை.

4. அண்மைய OECD அறிக்கையின்படி, நிதியாண்டு 2022–23–க்கான இந்தியாவின் GDP முன்கணிப்பு என்ன?

அ. 6.1%

ஆ. 6.6%

இ. 7.2%

ஈ. 7.5%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 6.6%

  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பானது (OECD) நிதியாண்டு 2022–23க்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக் கணிப்பை 6.9 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதீத நடுத்தர கால உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் வேகக்குறைவு ஆகியவை இதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்துவரும் உலகளாவிய தேவை, பணவியல் கொள்கையின் கடுமை ஆகியவை இருந்தபோதிலும், 2022–23 நிதியாண்டில் G20இல் இந்தியா இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும்.

5. உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் தரவரிசை சரிவு குறித்து ஒரு திட்டமிடும் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

இ. பொருளாதார விவகாரங்கள் துறை

ஈ. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

  • பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, “உலகளாவிய கருத்துக் குறியீடுகளில் இந்தியா ஏன் மோசமாக செயல்படுகிறது: 3 கருத்து அடிப்படையிலான குறியீடுகளின் ஆய்வு” என்ற தலைப்பில் ஒரு திட்டமிடும் கட்டுரையை வெளியிட்டுள்ளது. குறியீடுகளில் பயன்படுத்தப்படும் முறையிலுள்ள சிக்கல்களின் காரணமாக பல உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் தரவரிசை சரிந்துள்ளதாக அது கூறுகிறது. உலகளாவிய சுதந்திரக் குறியீடு, V–DEM குறியீடுகள் மற்றும் EIU ஜனநாயகக் குறியீடு முதலான 3 குறியீடுகளை இது பகுப்பாய்வு செய்துள்ளது.

6. பாம்புக்கடிபற்றிய ஓர் அண்மைய உலகளாவிய ஆய்வின்படி, பாம்புக்கடியால் இறந்தவர்களின் எண்ணிக்கை கீழ்க்காணும் எந்த நாட்டில் அதிகமாகப் பதிவாகியுள்ளது?

அ. கானா

ஆ. இலங்கை

இ. இந்தியா

ஈ. எகிப்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • கடந்த 2019ஆம் ஆண்டில் பாம்புக்கடியால் உலகம் முழுவதும் 63,000–க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய உலகளாவிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 51,000–க்கும் மேற்பட்டது இந்தியாவில் பதிவாகியுள்ளது. ‘Global Burden of Disease’ஆல் இயற்றப்பட்ட இந்த ஆய்வில், பாம்புக்கடி நஞ்சு என்பது மிகவும் ஆபத்தான புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய் ஆகும்.

7. 2022ஆம் ஆண்டில், ‘தேசிய பழங்குடியினர் நடன விழா’வை நடத்தும் மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. சத்தீஸ்கர்

ஈ. ஜார்கண்ட்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சத்தீஸ்கர்

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் இராய்ப்பூரில், ‘தேசிய பழங்குடியினர் நடன விழா’ அண்மையில் நடத்தப்பட்டது. இந்தத் திருவிழாவில் சுமார் 1 இலட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்தியா முழுவதிலுமிருந்தும் மொசாம்பிக், மங்கோலியா, டோங்கா, ரஷ்யா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், செர்பியா, நியூசிலாந்து மற்றும் எகிப்துபோன்ற நாடுகளிலிருந்தும் சுமார் 1,500 நடனக்கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

8. உணவு மற்றும் உழவின் நிலை குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. UNFCCC

இ. FAO

ஈ. உலக பொருளாதார மன்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. FAO

  • “உணவு மற்றும் உழவின் நிலை” என்பது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் உழவு அமைப்பின்மூலம் ஒவ்வோர் ஆண்டும் தயாரிக்கப்படும் முதன்மை அறிக்கைகளுள் ஒன்றாகும். அவ்வறிக்கையின் 2022ஆம் ஆண்டுக்கானப் பதிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதற்கு நமது வேளாண் உணவு முறைகளில் தானியங்கு முறைமை எவ்வாறு பங்களிக்கும் என்பதைக் கூறுகிறது. நன்மைகளை அதிகப்படுத்துவது மற்றும் அபாயங்களைக் குறைப்பது எப்படி? என்பது குறித்து கொள்கை வகுப்பாளர்களுக்கு இது பரிந்துரைகளையும் வழங்குகிறது.

9. ‘புஷ்கர் மேளா’ என்பது இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெறும் ஒரு கலாச்சாரம் சார்ந்த கண்காட்சியாகும்?

அ. இராஜஸ்தான்

ஆ. பஞ்சாப்

இ. அஸ்ஸாம்

ஈ. கோவா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இராஜஸ்தான்

  • ‘புஷ்கர்’ என்பது இராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் ஈர்க்கத்தகும் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். இங்கு கலாச்சார நிகழ்வுகள், இயற்கை நடைகள், மணற்கலை திருவிழா, காத்தாடி திருவிழா, ஆண்டுதோறும் ஐந்து நாள் நடைபெறும் ஒட்டகம் மற்றும் கால்நடை கண்காட்சி ஆகியவை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும். ஜெய்ப்பூரில், ‘புஷ்கர் மேளா’ கண்காட்சியை இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடக்கிவைத்தார். இந்த ஆண்டு, தோல் கழலை நோய் பரவும் காரணத்தால், எட்டு நாள் நிகழ்வில் புகழ்பெற்ற கால்நடை கண்காட்சி இடம்பெறாது.

10. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்திய புதிய இயலியின் (chatbot) பெயர் என்ன?

அ. UIDAI பாரத்

ஆ. ஆதார் மித்ரா

இ. ஆதார் திஷா

ஈ. ஆதார் பிரஷ்னா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆதார் மித்ரா

  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்ட, ‘குறைதீர்ப்பு குறியீட்டில்’ இந்திய தனித்துவ அடையாள ஆணையமைப்பு (UIDAI) முதலிடம் பிடித்துள்ளது. UIDAI ஆனது இத்தரவரிசையில் தொடர்ந்து மூன்றாம் மாதமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. UIDAI ஆனது ‘ஆதார் மித்ரா’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு / எந்திரக்கற்றல் அடிப்படையிலான இயலியையும் அறிமுகப்படுத்தியது. இப்புதிய இயலி, ஆதார் பதிவு நிலையைச் சரிபார்த்தல், பதிவு மையத்தின் இருப்பிடம் அறிதல்போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாநிலங்களின் புதிய கடன்களுக்கு 7.68% வட்டி விகிதம்

இந்திய மாநில அரசுகள் ஏலத்தில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் அதிக மாற்றமில்லாமல் 7.68 சதவீதமாக இருந்தது.

2. தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமானது மதுரை அரிட்டாபட்டி

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாகும்.

இது குறித்து தமிழ்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பல்லுயிர் மரபுத்தளங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர்த்தன்மைமிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமம் என்பது 7 சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இம்மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீராதாரப் பகுதியாகச் செயல்படுகிறது. 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் மூன்று தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப்பருந்து ஆகிய மூன்று முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்புத்திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris) ஆகிய வனவுயிரிகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழைமையான குடைவரைக் கோவில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன.

24th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country has recently passed its Free trade Agreement (FTA) with India?

A. Sri Lanka

B. Australia

C. France

D. Germany

Answer & Explanation

Answer: B. Australia

  • Australian Parliament has passed the country’s Free trade Agreement (FTA) with India, announced Prime Minister Anthony Albanese. Once implemented, the trade agreement will provide duty–free access to the Australian market for over 6,000 sectors of India, including textiles, leather, furniture, jewellery and machinery. Australia offers zero–duty access to India for about 96.4% of exports from day one.

2. ‘Arittapatti’ has been notified as the first Biodiversity Heritage Site of which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Telangana

D. Odisha

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Arittapatti village in Madurai district has been notified as the first Biodiversity Heritage Site in Tamil Nadu. It has a rich biological and historical significance with the presence of around 250 bird species including 3 Raptor species – Laggar Falcon, Shaheen Falcon, Bonelli’s Eagle. It also has wild–life like Pangolin, Python, and Slender Loris. The notification comes under the Biological Diversity Act, 2002.

3. Article 324 of the Constitution, which was seen in the news, is related to the appointment of which position?

A. President

B. Governor

C. Election commissioner

D. Supreme Court Judge

Answer & Explanation

Answer: C. Election commissioner

  • The Supreme Court noted the absence of a law governing the appointments of election commissioners and chief election commissioners a disturbing trend. The court flagged Article 324 of the Constitution, which talks about the appointment of election commissioners, and said it does not provide the procedure for such appointments. Since 2004, no chief election commissioner has completed the six–year tenure.

4. As per the recent OECD report, what is the GDP forecast for India for FY23?

A. 6.1%

B. 6.6%

C. 7.2%

D. 7.5%

Answer & Explanation

Answer: B. 6.6%

  • The Organisation for Economic Co–operation and Development (OECD) cut its gross domestic growth forecast for India for FY23 to 6.6 per cent from 6.9 per cent. The reasons are higher medium–term global uncertainty and slowing domestic economic activity. India is set to be the second–fastest growing economy in the G–20 in FY23, despite decelerating global demand and the tightening of monetary policy.

5. Which institution issued a working paper on decline of India’s rankings on global indices?

A. NITI Aayog

B. Economic Advisory Council to the Prime Minister

C. Department of Economic Affairs

D. Department of Administrative Reforms and Public Grievances

Answer & Explanation

Answer: B. Economic Advisory Council to the Prime Minister

  • The Economic Advisory Council to the Prime Minister, EAC–PM has issued a working paper titled ‘Why India does poorly on global perception indices: Case study of three opinion–based indices’. It says that the decline in India’s rankings on a number of global indices is due to the problems with the methodology used in these opinion–based indices. The Paper has analysed – Freedom in the World Index, V–DEM indices, and EIU Democracy Index.

6. As per a recent global study on snake bites, the number of deaths due to snakebite was the highest in which country?

A. Ghana

B. Sri Lanka

C. India

D. Egypt

Answer & Explanation

Answer: C. India

  • A new global study has found that over 63,000 people died across the world due to snakebites in 2019, and out of this the number of deaths was the highest in India at more than 51,000. In the study authored by the ‘Global Burden of Disease (GBD),’ snakebite envenoming is the deadliest neglected tropical disease (NTD).

7. Which state is the host of the ‘National Tribal Dance Festival’ in 2022?

A. Madhya Pradesh

B. Arunachal Pradesh

C. Chhattisgarh

D. Jharkhand

Answer & Explanation

Answer: C. Chhattisgarh

  • The ‘National Tribal Dance Festival’ has been recently hosted by Chhattisgarh’s Raipur. The festival is attended by nearly 1 lakh people. As many as 1,500 dancers from across India and countries like Mozambique, Mongolia, Tonga, Russia, Indonesia, Maldives, Serbia, New Zealand and Egypt participated in the festival.

8. Which institution releases the State of Food and Agriculture (SOFA)?

A. UNEP

B. UNFCCC

C. FAO

D. World Economic Forum

Answer & Explanation

Answer: C. FAO

  • The State of Food and Agriculture (SOFA) is one of the flagship reports produced each year by the Food and Agriculture Organization of the United Nations (FAO). The 2022 edition of the report looks at how automation in our agrifood systems can contribute to achieving the Sustainable Development Goals. It also offers recommendations to policy makers on how to maximize the benefits and minimize the risks.

9. ‘Pushkar Mela’ is the flagship cultural fair held in which Indian state?

A. Rajasthan

B. Punjab

C. Assam

D. Goa

Answer & Explanation

Answer: A. Rajasthan

  • ‘Pushkar Mela’ is one of the greatest tourist attractions of the state of Rajasthan. It includes cultural performances, nature walks, a sand art festival, kite festival, annual five–day camel and livestock fair held in the town of Pushkar between the months of October and November. Rajasthan Chief Minister Ashok Gehlot inaugurated the ‘Pushkar Mela’ fair in Jaipur. This year, the eight–day event will not include the famous cattle fair, owing to the spread of lumpy skin disease.

10. What is the name of the new chatbot launched by the Unique Identification Authority of India (UIDAI)?

A. UIDAI Bharat

B. Aadhaar Mitra

C. Aadhaar Disha

D. Aadhaar Prashna

Answer & Explanation

Answer: B. Aadhaar Mitra

  • The Unique Identification Authority of India (UIDAI) has topped the ‘Grievance Redressal Index’ published by Department of Administrative Reforms and Public Grievances (DARPG). This is the third month in a row when UIDAI has topped the rankings. The UIDAI also launched a new AI/ML based chatbot named ‘Aadhaar Mitra’. The new Chatbot comes with enhanced features like – checking Aadhaar enrollment status, information on enrollment centre location among others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!