Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

24th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 15

ஆ) செப்டம்பர் 17 

இ) செப்டம்பர் 20

ஈ) செப்டம்பர் 23

  • உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்குவிப்பதற்காக உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் செப்.17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. WHOஉம் அதன் பன்னாட்டு பங்காளர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். “Safe maternity and newborn care” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.

2. பன்னாட்டு சம ஊதிய நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 20

ஆ) செப்டம்பர் 18 

இ) செப்டம்பர் 16

ஈ) செப்டம்பர் 14

  • 2021 செப்.18 அன்று பன்னாட்டு சம ஊதிய நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும், பெண்களின் ஊதியம் ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும் உலகளாவிய பாலின ஊதிய இடைவெளி 23% என மதிப்பிடப்பட்டுள்ளது. சம ஊதிய சர்வதேச கூட்டணியானது உலக தொழிலாளர் அமைப்பு, ஐநா பெண்கள் உள்ளிட்ட அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும் மகளிர்க்கும் சமமான ஊதியத்தை அடைவதே இக்கூட்டணியின் குறிக்கோளாகும்.

3. அண்மையில, பெண்கள் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தேசிய சாதனையை முறியடித்தவர் யார்?

அ) B ஐஸ்வர்யா

ஆ) பருல் சௌத்ரி

இ) ஹர்மிலன் கௌர் பெயின்ஸ் 

ஈ) சுசீலா சானு

  • வாரங்கலில் உள்ள நேரு உள்ளரங்கத்தில் நடைபெற்ற அறுபதாவது தேசிய திறந்தநிலை தடகள சாம்பியன்ஷிப்பில், இரயில்வே அணியின் B ஐஸ்வர்யா 6.52 மீட்டர் தனிப்பட்ட மகளிர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். ரயில்வேயின் பருல் சௌத்ரி பெண்கள் 3000 மீ ஸ்டீப்பிள் சேஸில் 9:51.01 என்ற தனிப்பட்ட சிறந்த நேரத்துடன் தங்கப் பதக்கம் வென்றார். பெண்கள் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில், ஹர்மிலன் கௌர் பெய்ன்ஸ் 4:05.39 வினாடிகளில் தங்கம் வென்றார். இதன்மூலம் 2002’இல் சுனிதா ராணியின் தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.

4. ‘கட்லா’ மீனை மாநில மீனாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) சிக்கிம் 

இ) ஒடிஸா

ஈ) அஸ்ஸாம்

  • கட்லாவை மாநில மீனாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது. கட்லா மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை மாநில மீனாக சிக்கிம் அறிவித்துள்ளது. ‘Neolissochilus Hexagonolepis’ என்பது இந்த மீனின் அறிவியல் பெயராகும்.

5. உலக மூங்கில் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) 15 செப்டம்பர்

ஆ) 18 செப்டம்பர் 

இ) 20 செப்டம்பர்

ஈ) 22 செப்டம்பர்

  • ஆண்டுதோறும், செப்.18 அன்று உலக மூங்கில் நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மூங்கில் தொழில் & மூங்கில் தோட்டங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். இந்தச் சிறப்பு நாளை உலக மூங்கில் அமைப்பு (WBO) கொண்டாடுகிறது. அது இயற்கை வளங்கள் & முழு சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “#PlantBamboo: It is time to Plant Bamboo” என்பது 2021 உலக மூங்கில் நாளிற்கான செய்தியாகும். மேலும், “#PlantBamboo” என்ற புதிய ஹேஷ் டேகையும் WBO அறிமுகப்படுத்தியது.

6. பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?

அ) 15 செப்டம்பர்

ஆ) 18 செப்டம்பர் 

இ) 20 செப்டம்பர்

ஈ) 22 செப்டம்பர்

  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று, சிவப்புப் பாண்டாக்களின் பாதுகாப்பிற்கான பொது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டில், செப்.18 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், கடந்த 2010’இல் ரெட் பாண்டா நெட்வொர்க்கால் தொடங்கப்பட்டது. 2010 செப்.18 அன்று, முதன்முதலாக பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்டது.

7. திறன் சுற்றுச்சூழலமைப்பில் அளப்பரிய பங்காற்றியமைக்காக, எத்தனை பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசாலாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன?

அ) 31

ஆ) 41 

இ) 51

ஈ) 61

  • மத்திய கல்வியமைச்சரும், திறன் மேம்பாட்டமைச்சருமான தர்மேந்திர பிரதன், திறன் சுற்றுச்சூழலமைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 41 தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசலாச்சார்யா விருதை வழங்கினார். இந்த 41 பயிற்சியாளர்களும் ஸ்கில் இந்தியா டைரக்டரேட் ஜெனரல் ஆப் டிரெய்னிங், அப்ரண்டிஸ்ஷிப், பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் மற்றும் தொழில் முனைவோர்போன்ற பல்வேறு முயற்சிகள் & பயிற்சி திட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

8. அண்மையில் புவிசார் குறியீடு (GI) பெற்ற சிரராகோங் மிளகாய் மற்றும் தமெங்லாங் ஆரஞ்சு ஆகியவை சார்ந்த மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) நாகாலாந்து

இ) மணிப்பூர் 

ஈ) மேகாலயா

  • பொதுவாக மணிப்பூர் மாநிலத்தில் காணப்படும் சிரகோங் மிளகாய் மற்றும் தமெங்லாங் ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனை மணிப்பூர் மாநில முதலமைச்சர் N பைரன் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

9. அண்மையில் வெளியிடப்பட்ட 2022 – பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ குறிக்கோள் என்ன?

அ) Together for a Shared Future 

ஆ) Together We Stand for Peace

இ) United by Emotion

ஈ) Great Athletes. Great Performances

  • அண்மையில், “Together for a Shared Future” என்பது 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ குறிக்கோளாக அதன் அமைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங்கில், 2022 பிப்.4-20 வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

10. அண்மையில் நிறுத்தப்பட்ட ‘எளிதாக வணிகம் புரிவது’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி 

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) ஐநா வளர்ச்சித் திட்டம்

  • உலக வங்கி குழுமத்தால் வெளியிடப்படும் ‘எளிதாக வணிகம் புரிவது’ குறித்த அறிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன. பல்வேறு நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறை கொண்டுவரப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. முன்னாள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நெறி முறை விஷயங்களில் உள்ள முறைகேடுகளை களைந்த பிறகு, உலக வங்கி, உலக நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறையைக் கொண்டு வரும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 312 கிமீ தூரம் நீளமுள்ள நான்கு வழித்தடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பராமரிப்புப் பணிகளுக்காக ஒப்படைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவுசெய்துள்ளது. இதனால் அங்கு ஆறு சுங்கச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 54ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதன்படி, வேலூர் – விழுப்புரம் (121 கிமீ), கடலூர் – சேலம் (92 கிமீ), அவினாசி – அவினாசி பாளையம் (33 கிமீ), பெரம்பலூர் – தஞ்சாவூர் (66 கிமீ) ஆகிய சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான நிர்வாகப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், பெரம்பலூர் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதற்கான உத்தரவும் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2. `7,523 கோடியில் 118 நவீன அர்ஜுன் பீரங்கிகள் தயாரிப்பு: ஆவடி கனரக வாகன தொழிற்சாலையுடன் ஒப்பந்தம்

சென்னை அருகே உள்ள ஆவடியில் `7,523 கோடியில் 118 அதிநவீன எம்பிடி எம்கே-1ஏ அர்ஜுன் பீரங்கிகளைத் தயாரிக்க ஆவடி கனரக வாக தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த அதிநவீன பீரங்கிகள் இந்திய ராணுவத்தின் தாக்குதல் பலத்தை மேலும் வலுவாக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்:

இந்திய ராணுவத்தில் போர் டாங்கிகளில் பிரதானமாக உள்ள அர்ஜுன் எம்பிடியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மேலும் பல நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி எம்பிடி எம்கே-1ஏ அர்ஜுன் பீரங்கிகள் இரண்டே ஆண்டுகளில் 2012-இல் ஆவடி கனரக தொழிற்சாலை உருவாக்கி சாதனை படைத்தது. பின்னர் 2015 வரையில் 7000 கிமீ தூரத்துக்கும் அதிகமாக பீரங்கிகளில் வெடி பொருள்களுடன் இணைத்து சோதனை நடத்தப்பட்டது.

இந்த நவீன அர்ஜுன் பீரங்கி கூடுதல் தூரத்தில் உள்ள இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் உள்பட 72 புதிய தொழில்நுட்ப அம்சங்கள் உடையது. மலைப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளில் செல்லும் வகையிலும், கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடனும் இரவிலும்- பகலிலும் தாக்குதல் நடத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்பம் இதில் உள்ளது. ஆவடி கனரக வாக தொழிற்சாலையில் `7,523 கோடியில் 118 அதிநவீன எம்பிடி எம்கே-1ஏ அர்ஜுன் பீரங்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம் பாதுகாப்புத் துறையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் ஊக்குவிக்கப்படுவதுடன், ‘தற்சார்பு பாரதம்’ திட்டத்தின் முன்னோடியாகவும் இது திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கும் அனைத்து வகையிலான நவீன தொழில்நுட்ப பயிற்சி உபகரணங்கள் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. மாநில ஏற்றுமதி அபிவிருத்திக் குழு அமைப்பு

மாநிலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தியை ஊக்குவிக்கவும், கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 6 முக்கிய துறைகளின் செயலர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஏற்றுமதி அபிவிருத்திக்கான கூட்டமைப்
-பைச் சேர்ந்த ஆறு பேரும் இடம்பெறவுள்ளனர். ‘ஏற்றுமதியில் ஏற்றம்-முன்னணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தொழிற்துறை கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு க ஸ்டாலின், ஏற்றுமதி அபிவிருத்திக்கென தனிக்குழுவை தமிழக அரசு அமைக்கும் என அறிவித்தார். மேலும், தமிழ்நாடு ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கை 2021-ஐயும் அவர் வெளியிட்டார். இந்தக் கொள்கையில் மாநில ஏற்றுமதி அபிவிருத்திக் குழு குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குழுவில் யார் யார்? : தமிழ்நாடு மாநில ஏற்றுமதி அபிவிருத்தி குழுவின் தலைவராக, தலைமைச் செயலாளர் செயல்படுவார். மாநில நிதித்துறை செயலாளர், தொழிற்துறை செயலர், கைத்தறி-கைத்திறன்கள் மற்றும் துணிநூல் துறை செயலாளர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை செயலாளர், சிறு, குறு & நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர், மத்திய அரசின் அயல்நாட்டு வர்த்தகத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் குழுவின் இணை ஒருங்கிணைப் -பாளர்களாக இருப்பர்.

இந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள், நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். இந்தக் கூட்டத்துக்கு வேறு எந்தத் துறைகளையோ அல்லது முகமைகளையோ அழைக்கும் அதிகாரம் குழுவின் தலைவரான தலைமைச் செயலாளருக்கு உள்ளது.

இதேபோன்று, தொழில் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவது, ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகள், குறைகளை அணுகி அதற்குத் தீர்வுகாண்பது, ஏற்றுமதி தொடர்பான பணிகளைச் செய்யும் அமைப்புகளுக்கு போதிய ஆதார உதவிகளைச் செய்வது போன்றவற்றை தொழில்துறை செயலாளர் தலைமையிலான குழு ஒருங்கிணைக்கும்.

மாவட்ட அளவிலான குழு: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஏற்றுமதி அபிவிருத்தி குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைவர்களாக இருப்பர். 38 மாவட்டங்களிலும் ஏற்றுமதிக்கு உகந்த சூழல் கொண்ட பொருள்களை அடையாளம் கண்டு அதனை ஏற்றுமதி செய்வதற்கான மாவட்ட அளவிலான திட்டங்கள் அந்தக் குழுக்கள் மூலமாக வகுக்கப்படும் என மாநில ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பில் இந்தியாவும் ஜப்பானும் இணைத்துக் கொள்ளப்படாது என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து க்வாட் நாற்கரக் கூட்டமைப்பை அமைத்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ராஜீய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு அக்கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பை ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 15-ஆம் தேதி அமைத்தன. அதன்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய நாடாகத் திகழும் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து வழங்கவுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் மற்றொரு கூட்டணியை அமைப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கமளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்-தொடர்புத் துறை அமைச்சர் ஜென் சாகி செய்தியாளா்களிடம் கூறுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என்று பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விரும்புகின்றன.

அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. வெறும் அடையாளத்துக்காக மட்டும் ‘ஆக்கஸ்’ கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அந்தப் பதிய கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வேறெந்த நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்தியா, ஜப்பான் இடம் பெற்றுள்ள க்வாட் கூட்டமைப்பு தொடர்கிறது. ஆக்கஸ் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானிடமும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பார் என நினைக்கிறேன்” என்றார்.

5. மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் குறியீடு: முதல் 500 இடங்களில் 12 இந்திய கல்வி நிறுவனங்கள்

உலக அளவில் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலின் முதல் 500 இடங்களில் 12 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த குவாக்குவரெல்லி சைமண்ட்ஸ் (க்யூஎஸ்) என்ற நிறுவனம், உலக அளவில் உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை க்யூஎஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, கரக்பூர் ஐஐடி, கான்பூர் ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பல்கலைக்கழகங்களில் தில்லி பல்கலை, மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் (ஐஐஎஸ்சி) பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தனியார் பல்கலைகளில் ஓ பி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தக் குறியீடு தொடர்பாக க்யூஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டுவரும் நிலையில், மாணவர்க
-ளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவது முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நவீன பணியிடத்துக்கு ஏற்ப மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்ப -டுத்தியுள்ளன. வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதில் பல்கலை -கள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதை மாணவர்களும் முறையாக அறிந்துகொள்ளவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6. தொழில் தொடங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல்: 23ஆவது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு

உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சிறந்த சூழல் அமைந்துள்ள நகரங்களின் வருடாந்திரப் பட்டியலில் பெங்களூரு 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டைவிட அந்தப் பட்டியலில் பெங்களூரு 3 இடங்கள் முன்னேறியுள்ளது. சர்வதேச அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற பல்வேறு சூழல்களின் அடிப்படையில் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சோ்ந்த ‘ஸ்டாா்ட்டப் ஜினோம்’ அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் புது தில்லி 36-ஆவது இடத்தில் உள்ளது. மும்பை நகரம் வளர்ந்து வரும் சூழல் அமைப்புகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தொழில்முனைவுக்கான சிறந்த சூழலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னேறியிருப்பதற்கு, அந்த நகரில் முதலீடுகளின் வளர்ச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது. குறிப்பாக, உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த நகரில் 130 கோடி டாலர் (சுமார் `9,594 கோடி) முதலீடு செய்துள்ளது. சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட் பெங்களூருவில் 50.2 கோடி டாலர் (சுமார் `3,706 கோடி) முதலீடு செய்துள்ளது. கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூ இந்த நகரில் 46 கோடி டாலர் (சுமார் `3,396 கோடி) முதலீடு செய்துள்ளது.

இப்பட்டியலில் தில்லியின் தொழில்முனைவுச் சூழல் வளர்ச்சியடைந்து வருவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 1,210 கோடி டாலரை (சுமார் `89,275 கோடி) முதலீடாகப் பெற்றுள்ளதாக இந்தப் பட்டியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சிலிகான் பள்ளத்தா -க்கு முதலிடத்தில் உள்ளது என PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

7. ஒடிஸாவில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை

FIH ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி ஒடிஸாவில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். அத்துடன் போட்டிக்கான லச்சினை மற்றும் கோப்பையும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தப் போட்டியை நடத்துவதற்காக ஒடிஸா, உத்தர பிரதேச மாநிலங்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்த முறை அந்த வாய்ப்பு ஒடிஸாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 2016-இல் நடைபெற்ற கடந்த சீசனில் இந்தியா சாம்பியனாகியிருந்தது.

தற்போது எதிர்வரும் உலகக் கோப்பை போட்டி நவம்பர் 24 முதல் டிச.5 வரை ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, எகிப்து, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, சிலி, ஆர்ஜென்டீனா ஆகிய 16 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

கரோனா சூழல் காரணமாக பயணக்கட்டுப்பாடு இருப்பதால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை. ஒடிஸாவில் ஏற்கெனவே 2018 உலகக் கோப்பை போட்டி, 2017 FIH உலக லீக், 2014 சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகியவை நடைபெற்றுள்ளது நினைவு கூரத்தக்கது.

8. உலகளவில் தூய்மைக் கடற்கரையாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் தேர்வு

உலகளவில் தூய்மை கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ‘ஈடன் கடற்கரை’ தேர்வு செய்யப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பானது, உலகளவில் பாதுகாப்பு, தூய்மையான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘நீலக்கொடி கடற்கரை’ என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ‘ஈடன் கடற்கரை’க்கு, நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே அமைந்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, 2 கிமீ தொலைவுக்கு மணல் பரப்பைக் கொண்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலாத்துறைமூலம் சீரமைக்கப்பட்டு, 800 மீ தொலைவு மணல் பரப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடிநீர் வசதி, கழிப்பறைகள், பூங்கா, குடில்கள், ஓய்வு அறைகள் போன்றவை இங்குள்ளன. நெகிழிக்கு தடை, கடலில் குளிப்பவா்கள் மூழ்கினால் மீட்பதற்கு குழுக்கள் எனப் பல்வேறு வசதிகளை இந்தக் கடற்கரை கொண்டுள்ளது.

1. On which date, World Patient Safety Day is observed?

A) September 15

B) September 17 

C) September 20

D) September 23

  • World Patient Safety Day was observed around the world on September 17 to raise global patient safety awareness and encourage individuals to demonstrate their commitment to safer healthcare. WHO and its international partners celebrate this day. Theme for World Patient Safety Day 2021 is “Safe maternity and newborn care.”

2. On which date, International Equal Pay Day was celebrated?

A) September 20

B) September 18 

C) September 16

D) September 14

  • On September 18, 2021 the International Equal Pay Day was celebrated. In all regions, women’s pay is lower than men’s, and the global gender pay gap is estimated to be 23%. The Equal Pay International Coalition is led by the International Labour Organization, UN Women and partners. The goal of the alliance is to achieve equal pay for men and women everywhere.

3. Recently, who broke the national record in women’s 1500 m race?

A) B Aishwarya

B) Parul Chaudhary

C) Harmilan Kaur Bains 

D) Sushila Chanu

  • At the 60th National Open Atheltics Championships at the Nehru Stadium in Warangal, B Aishwarya of the railway won the women’s long jump gold medal with a personal best of 6.52 meters.
  • Railways’ Parul Chaudhary won the gold medal in women’s 3000m steeplechase with a personal best time of 9:51.01. In the women’s 1500m, Harmilan Kaur Bains won gold in a time of 4:05.39s breaking 19–year–old national record of Sunita Rani’s made in the year 2002.

4. Which state has declared ‘Katley’ as the state fish?

A) West Bengal

B) Sikkim 

C) Odisha

D) Assam

  • The Sikkim government has declared “Cooper Mahseer” which is locally named “Katley” as a state fish to emphasize the importance of the fish and emphasize its protection measures. “Neolissochilus Hexagonolepis” is the biological name of this fish.

5. On which date, World Bamboo Day is observed?

A) 15 September

B) 18 September 

C) 20 September

D) 22 September

  • Annually, on 18 September the World Bamboo Day is observed globally. The purpose of this day is to raise the world’s awareness of the protection and promotion of the bamboo industry and bamboo plantations. This special day was celebrated by the World Bamboo Organisation (WBO), which aims to protect natural resources and the entire environment.
  • The message for World Bamboo Day 2021 is “#PlantBamboo: It is time to Plant Bamboo.” WBO also launched new hashtag #PlantBamboo.

6. On which date, The International Red Panda Day was celebrated?

A) 15 September

B) 18 September 

C) 20 September

D) 22 September

  • Every year on the third Saturday of September the International Red Panda Day (IRPD) is celebrated to increase public awareness and support for the protection of red pandas. In 2021, the IRPD was observed on September 18, 2021. This day was initiated by Red Panda Network in 2010. On September 18, 2010, the first International Red Panda Day was celebrated.

7. How many trainers have been presented with Kaushalacharya Awards 2021 for their exemplary contribution to the skill ecosystem?

A) 31

B) 41 

C) 51

D) 61

  • Dharmendra Pradhan, Union Education Minister and Skill Development Minister, has virtually presented the Kaushalacharya Award 2021 to 41 qualified trainers in recognition of their exemplary contributions to the skill ecosystem. These 41 trainers are from various initiatives and training programs of Skill India Directorate General of Training, Apprenticeship, Pradhan Mantri Kaushal Vikas Yojana, Jan Shikshan Sansthan and Entrepreneurship.

8. Recently, Sirarakhong Chilli and Tamenglong Orange belonging to which state have received GI tag?

A) Assam

B) Nagaland

C) Manipur 

D) Meghalaya

  • Sirarakhong Chilli and Tamenglong Orange which are famous and found in the state of Manipur have received the Geographical Index (GI) tag. Manipur’s CM N Biren Singh made this announcement.

9. What is the official motto of the Olympic and Paralympic Winter Games Beijing 2022 that was revealed recently?

A) Together for a Shared Future 

B) Together We Stand for Peace

C) United by Emotion

D) Great Athletes. Great Performances

  • Recently, “Together for a Shared Future” was revealed as the official motto of the 2022 Beijing Winter Olympics and Paralympics by the organizing team. The Winter Olympics will be held in Beijing, China from February 4 to 20, 2022.

10. Which organization used to publish the ‘Ease of Doing Business’ reports which have been recently discontinued?

A) International Monetary Fund

B) World Bank 

C) Asian Development Bank

D) United Nations Development Programme

  • ‘Ease of Doing Business’ reports which are published by the World Bank Group will be discontinued.
  • It added that it will study a new method to assess the business and investment environment in various countries. After ethical matters irregularities were raised involving former bank employees and board members, the World Bank will study a new method to assess the business and investment environments of countries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!