Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th, 26th & 27th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th, 26th & 27th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th, 26th & 27th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘சிவப்புக்குடை’ என்பது எவ்வகை தொழிலாளர்களின் உரிமைகளைக் குறிக்கும் சின்னமாகும்?

அ) பாலியல் தொழிலாளர்கள் 

ஆ) LGBT ஆர்வலர்கள்

இ) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

ஈ) விலங்கு ஆர்வலர்கள்

  • பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பன்னாட்டு நாள் ஒவ்வோர் ஆண்டும் டிச.17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்களை முன்னிலைப்படுத்த முயல்கிறது.
  • ‘சிவப்புக்குடை’ என்பது பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான முக்கிய அடையாளமாகும். அது டிச.17 அன்று நடைபெறும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் ‘சிவப்புக்குடை’ சின்னம் முதன்முதலில் கடந்த 2001ஆம் ஆண்டில், இத்தாலியின் வெனிஸில் பாலியல் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

2. அண்மையில் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) விதிகள் – 2021’ஐ வெளியிட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) மேற்கு வங்காளம்

ஈ) ஒடிஸா

  • தெலுங்கானா மாநில அரசானது தெலுங்கானா குழந்தைத் தொழிலாளர் (தடை & கட்டுப்பாடு) (திருத்தம்) விதிகள் – 2021’ஐ வெளியிட்டுள்ளது.
  • இது குழந்தைகளை வெவ்வேறு வேலைகளில் பணி அமர்த்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை -யைத் தொடங்க எண்ணுகிறது. இதன் விதிகளின்படி, குழந்தைகள் பள்ளி நேரங்களிலும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலும் எந்தப் பணியையும் செய்யமாட்டார்கள்.

3. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை__ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது.

அ) 19

ஆ) 20

இ) 21 

ஈ) 25

  • பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை நிறைவேற்றி உள்ளது. ஜெயா ஜெட்லி தலைமையிலான பணிக்குழு கடந்த 2020 டிசம்பரில் NITI ஆயோக்கிற்குச் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

4. UNESCO பாரம்பரிய பட்டியலில் கீழ்காணும் எந்த மொழியின் ‘சித்திர மொழி’ சேர்க்கப்பட்டுள்ளது?

அ) தமிழ்

ஆ) அரபு 

இ) உருது

ஈ) ஜப்பானிய மொழி

  • ‘அரபி சித்திர மொழி: அறிவு, திறன்கள் & நடைமுறைகள்’ என்பது UNESCO’இன் மனிதகுலத்தின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது அரபு கல்வி கூடமைப்பு, கலாசார மற்றும் அறிவியல் அமைப்பின் மேற்பார்வையின்கீழ் சவூதி அரேபியா தலைமையிலான 15 அரபு நாடுகளின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்டது.

5. தேசிய காசநோய் மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) புது தில்லி 

இ) பாட்னா

ஈ) வாரணாசி

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய காசநோய் மாநாட்டை புது தில்லி அறிவியல் அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. துணைக் குடியரசுத் தலைவர் M வெங்கையா தலைமை விருந்தினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கலந்துகொண்டனர்.
  • 2030ஆம் ஆண்டின் SDG காலவரிசைக்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டளவில் காசநோயை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை இந்தியப் பிரதமர் அறிவித்தார்.

6. எந்த வெளியீட்டு நிறுவனம்/ இணையதளம் ‘Allyship’ என்பதை ஆண்டின் சொல்லாகக் குறிப்பிட்டுள்ளது?

அ) டிக்ஷனரி.காம் 

ஆ) காலின்ஸ்

இ) ஆக்ஸ்போர்டு

ஈ) ரென் & மார்ட்டின்

  • Dictionary.com ‘Allyship’ என்பதை ‘ஆண்டின் சொல்’லாக அறிவித்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட பழைய பெயர்ச்சொல்லாகும்.
  • இவ்வலைத்தளத்தின்படி, 1800’களின் இடைப்பகுதியில் “Allyship” சொல் முதன்முதலில் வெளிவந்தாலும், கடந்த சில தசாப்தங்களில், இந்தச் சொல் ஒரு நுணுக்கமான மற்றும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தை கொடுக்கும் வகையில் உருவாகியுள்ளது.

7. கீழ்காணும் எந்த நாட்டிலிருந்து 6 இலட்சம் AK-203 துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ) ரஷ்யா 

ஆ) பிரான்ஸ்

இ) இஸ்ரேல்

ஈ) அமெரிக்கா

  • 6,01,427 ஏகே-203 அசால்டட் ரைபில்கள் கொள்முதல் செய்வதற்கான உடன்பாடு கையெழுத்தானது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்தியா-ரஷ்யா இடையே கூட்டு முயற்சி பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிறுவனங்களில் முறையே 50.5% மற்றும் 49.5% பங்குகள் உள்ளன. இந்த ரைபில்கள் உத்தர பிரதேசத்தின் கோர்வாவில் உள்ள IRRPL தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.

8. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி யானைகள் அதிக அளவில் இறந்த மாநிலம் எது?

அ) ஒடிஸா 

ஆ) மகாராஷ்டிரா

இ) மேற்கு வங்காளம்

ஈ) குஜராத்

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அளித்த தரவுகளின்படி, 2009-2019 வரை நாடு முழுவதும் மின்சாரம் தாக்கி 600 யானைகள் இறந்துள்ளன. இதில் ஒடிஸாவில் 117, கர்நாடகாவில் 116, அஸ்ஸாமில் 105 யானைகள் உயிரிழந்துள்ளன.
  • அருணாச்சல பிரதேசம், திரிபுரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் மின்சாரம் தாக்கி எந்த யானையும் இறக்கவில்லை.

9. ‘சக்தி குற்றவியல் சட்ட மசோதாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) மகாராஷ்டிரா 

ஈ) உத்தர பிரதேசம்

  • மகாராஷ்டிர மாநில அரசு, சக்தி மசோதாவில் திருத்தம் செய்வதற்காக, கூட்டுத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தது. மகாராஷ்டிர அரசாங்கத்தின் சக்தி குற்றவியல் சட்டங்கள் (மகாராஷ்டிர திருத்தம்) மசோதா-2020, பாலியல் வன்புணர்வு, அமில வீச்சு போன்ற குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க முன்மொழிகிறது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘Paxlovid’ என்பது எந்த நோய்க்கு எதிரான முதல் அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை?

அ) COVID-19 

ஆ) நிமோகாக்கல் நோய்

இ) இருதய நோய்

ஈ) எய்ட்ஸ்

  • COVID-19’க்கு எதிரான முதல் மாத்திரையை அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்துள்ளனர்.
  • ‘பாக்ஸ்லோவிட்’ எனப் பெயரிடப்பட்ட இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் மருந்து. பாசிட்டிவ் COVID உடன் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் மற்றும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு: முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால ஆடுகள வாழ்க்கை

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று ட்விட்டரில் அறிவித்தார். 1998-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

ஹர்பஜன் சிங் கடந்த 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியில் தனது 17 வயதில் அறிமுகமாகினார். ஒருநாள் போட்டியில் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் அறிமுகமாகினார். டி20 போட்டியில் 2006ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல்முறையாக ஹர்பஜன் அறிமுகமாகினார்.

டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய 4-வது இந்திய வீரர் என்ற பெயரெடுத்த ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடிய பாஜி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2,224 ரன்களையும் அடித்துள்ளார்; இதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 1237 ரன்களை ஹர்பஜன் சேர்த்துள்ளார்.

பஞ்சாப் ரஞ்சிக் கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்துள்ள ஹர்பஜன் சிங், சாம்பியன்ஸ்லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். இவரின் தலைமையில்தான் 2011 சாம்பியன்ஸ் லீக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் ஹர்பஜன் விளையாடியுள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினாலும் 2001-ம்ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ஹர்பஜன் சிங்கை நிமிர்ந்து பார்க்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.

2001-ம் ஆண்டு கும்ப்ளே காயத்தால் அவதிப்பட்டபோது, இந்திய அணியில் இருந்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜன் இருந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஹர்பஜன் பெற்றார். 2001-ம் ஆண்டு ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தைப் பார்த்த பஞ்சாப் அரசு இவருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது.

2007-ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார்.

ஹர்பஜன் சிங் என்றாலே சர்ச்சை என்பதையும் மறக்க முடியாது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸுடன் மோதலில் இனவெறியுடன் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தடையிலிருந்து ஹர்பஜன் சிங் தப்பித்தார். அதன்பின் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறை ஐபிஎல் தொடர்முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

2. புதிய வகை ரோஜா பூவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்

இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரான கொடைக்கானலைச் சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன், புதிய வகை ரோஜா ஒன்றைவளர்த்துள்ளார். இதற்கு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டியுள்ளார்.

இந்த வகை ரோஜாவானது, மெஜந்தா ஊதா நிறத்தை கொண்டுள்ளது. மேலும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். கரும் பச்சை இலைகளுடன் காணப்படும் இதன் செடி, 4 முதல் 5 அடி வரை வளரக்கூடிதாகும்.

உணவுப்பயிர் சாகுபடியில் புதிய அணுகுமுறைகளை கொண்டுவருவதில் பேராசிரியர் சுவாமிநாதன் முன்னோடியாக திகழ்ந்தார். இது உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நர்சரி ஒன்றில் மற்றொருவகை ரோஜாவை கே.எஸ்.ஜி.சோன் என்பவர் உருவாக்கியுள்ளார். பளபளக்கும் இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த ரோஜாவுக்கு ‘மான்கொம்பு ரோஜா’என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 2 ரோஜாக்களையும் டெல்லியைச் சேர்ந்த மலர் வளர்ப்பு விஞ்ஞானியும் மத்திய அரசின் தோட்டக்கலை துறை முன்னாள் இயக்குநருமான நரேந்திர தத்லானி, சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லத்தில் அவரை சந்தித்து வழங்கினார்.

3. மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

விசிகவின் அம்பேத்கர் சுடர் விருது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டது. இவ்விருதினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.

மேலும் பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் விருதும், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும் அல்ஹாஜ் மு. பஷீர் அகமதுக்கு காயிதேமில்லத் பிறை விருதும், க.இராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

4. இணைய வழக்குகளில் விரைவாக துப்புதுலக்க வசதி; தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் ‘சைபர் தடய ஆய்வகம்’ – அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

இணைய குற்ற வழக்குகளில் விரைவாகவும், துல்லியமாகவும் துப்புதுலக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தல், தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாகப் பயன்படுத்தல், இணையம் மூலம் ஏமாற்றுதல், கணினிமற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களைத் திருடுதல், மற்றவர்களின்தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாகப் பயன்படுத்துவது, மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுவது, இணையவழி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளதங்களில் அவதூறு பரப்பும் செயல்களும் அதிகமாகி விட்டன.வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகக்கூறி, விவரங்களைப் பெற்று, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுதல், பேஸ்புக் மூலம் பணம் மோசடி செய்தல்,வெளிநாட்டில் இருந்து பேசுவதாகக் கூறி, திருமணம் செய்து கொள்வதாக பெண்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக காவல் நிலையங்களில் தினமும் புகார்கள் அளிக்கப்படுகின்றன.

2020-ல் இந்தியாவில் சைபர்க்ரைம் தொடர்பாக 50 ஆயிரம்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 11.8 சதவீதம் அதிகமாகும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் க்ரைம் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக, சென்னை போலீஸாருக்கு கணினித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், சைபர் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் விரைந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும், சந்தேகமின்றி துல்லியமாக குற்றம்புரிந்த நபர்களை அடையாளம் காணும் வகையிலும் சென்னையில் ‘சைபர் தடயங்கள் ஆய்வகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இந்த ஆய்வகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வகத்தில் தடய அறிவியல் துறையினர், காவல் துறையினர் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தனியார் துறையைச் சேர்ந்த இருவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பது:

முன்களம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர்:

முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள கோவின் கணக்கு மூலம் தான் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.

இரண்டாம் தவணை செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படும்.

முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் டோஸாக ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும்.

பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவுடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும்.

ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.

15 – 18 வரையிலான சிறார்:

2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.

ஜனவரி 3 முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே போடப்படும்.

ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 3, 2022 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. ஏ.ஓ. ஹியூம்: இந்தியர்களின் உரிமைக் குரலை எதிரொலித்த ஆங்கிலேயர்

பம்பாய் மாகாணத்தில் பம்பாய் அசோசியேஷன், பூனா சர்வோஜனிக் சபா, வங்காளத்தில் இந்தியன் அசோசியேஷன், சென்னையில் மெட்ராஸ் மகாஜன சபா என இந்தியா முழுக்க தனித் தனியாக இந்தியர்களுக்கான உரிமைக் குழுக்கள் இயங்கிவந்த வேளை அது. இந்த அமைப்புகளின் சக்தியை ஒன்றாகத் திரட்டுவதன் மூலம்தான் இந்திய மக்களின் உரிமைக்கான குரல் வலுப்பெறும் என அனைவரையும் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்று ஒரே குடைக்குள் திரட்டியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.

1829-ல் ஸ்காட்லாந்தில் பிறந்து, இந்தியன் சிவில் சர்வீஸ் பணிக்காக இந்தியா வந்தவர் ஹியூம். 1885-ல், மும்பை நகரின் கோவாலியா குளக்கரையில் உள்ள பள்ளிக்கூடத்தில் டிசம்பர் 28-ல் அவரால் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. உலக அளவில் பழமையானதும், இன்று வரை நிலைத்திருக்கக்கூடியதுமான ஒருசில அமைப்புகளுள் இந்திய தேசிய காங்கிரஸும் முக்கியமான ஒன்று. ஆங்கிலேயரின் நடவடிக்கைகளை எதிர்த்துப் புரட்சிகள் எழுந்துவிடாமல் தணிக்கும் ‘பாதுகாப்பு வால்வு’ போல அமைந்திருப்பதாகத்தான் காங்கிரஸ் அமைப்பின் தொடக்கத்தை இந்தியர்கள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆங்கில ஆட்சியாளர்களும் ஆரம்பத்தில் அப்படியான மனநிலையில்தான் காங்கிரஸை வரவேற்றனர். ஆனால், அந்த அமைப்புதான் பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் தலைவலியாகி, இந்திய விடுதலைக்கு வித்திட்டு இன்று வரை 146 வருடங்களாக நிலைத்திருக்கிறது.

மாவட்ட அதிகாரியாக இருந்தபோதே, மக்கள் முன்னேற்றத்துக்குக் கல்விதான் அடிப்படைத் தேவை என்பதால், தொடக்கக் கல்வி கிடைப்பதில் பல முன்னெடுப்புகளை எடுத்தார் ஹியூம். ஆங்கிலம் தாண்டி தாய்மொழிக் கல்வியை முன்வைத்தார். இந்திய மொழிகளில் சர்வதேசத் தகவல்களை மேம்படுத்த ‘லோகமித்ரா’ என்ற இந்தி பத்திரிகையையும், ‘முகிப்-இ-ரியா’ (Muhib-i-riaya) என்ற உருதுப் பத்திரிகையையும் தொடங்கினார். மேல்படிப்புக்கு உதவித்தொகை பெறும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது, வைசிராயாக இருந்த மாயோ, ஹியூமின் மக்கள் நல முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

செயலாளராக ஹியூம் பதவி உயர்வு பெற்றவுடன், இந்திய விவசாயிகள் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். விவசாயிகள், தங்கள் நிலத்தை அடமானம் வைத்து, விவசாயம் செய்து அதிகப்படியான வட்டியைக் கட்ட முடியாமல் தவித்த சூழலில், பெரும் வியாபாரிகள் மட்டுமே பயன்பெறும் வகையில் இருந்த வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றி, விவசாயிகளுக்கு உதவத் திட்டம் வகுத்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே கூட்டுறவு வங்கித் திட்டத்தை விவசாயிகளுக்காகக் கொண்டுவந்தார்.

இந்திய விவசாய முன்னேற்றத்தில், பருவமழையும், தட்பவெப்பச் சூழலும் முக்கியப் பங்காற்றுகிறது என்று உணர்ந்த ஹியூம், பருவநிலை சார்ந்த தரவுகளை முறையாகத் தயார்செய்து, பருவநிலையை முன்னதாகவே கணித்து, அதற்கேற்ப விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவை முன்வைத்தார். இன்று வரை செயல்பட்டு வரும் ‘இந்திய வானிலைத் துறை’ (Indian Meteorological Department) உருவாக்கத்துக்கு 1875-ல் கையெழுத்திட்டவர் ஹியூம். மாதிரிப் பண்ணையை மாவட்டம்தோறும் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாயோவுக்கு அடுத்து வந்த வைசிராய் நார்த் புரூக், அதற்கடுத்து வந்த லிட்டன் இருவருக்குமே ஹியூமின் திட்டங்களின் மீது கடும் அதிருப்தி இருந்தது. வைசிராய்கள் மீது ஏற்படும் கருத்து வேறுபாட்டையும் ஹியூம் வெளிப்படையாக முன்வைக்கத் தயங்கவில்லை. லிட்டனின் பொருளாதார நிர்வாகத்தில் உள்ள குறையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிய ஹியூமைப் பதவிக் குறைப்பு செய்து, செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் லிட்டன். தொடர்ந்து, 1882-ல் சிவில் சர்வீஸ் பணியை ராஜினாமா செய்த ஹியூம், இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்புக்கான கருத்துருவை வளர்த்தெடுத்தார்.

பெண்களுக்கான திருமண வயதை 10-லிருந்து 12 ஆக உயர்த்த சட்டம் கொண்டுவருவதை ஹியூம் ஆதரித்தபோது, அவர் தொடங்கிய காங்கிரஸ் அமைப்புக்குள்ளேயே பலர் அதை எதிர்த்தனர். அதே காலகட்டத்தில் பெருநிலவுடைமையாளர்கள் காங்கிரஸ் அமைப்பில் இருந்துகொண்டே, ஜனநாயகத்தை ஆதரிக்காத நிலையில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில், ஹியூம் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து லண்டனுக்கே திரும்பிவிட்டார். எனினும், இந்தியர்கள் மீது அவர் கொண்ட பற்று போகவில்லை. ‘இந்தியன் டெலிகிராப் யூனியன்’ தொடங்கி ஆங்கிலேயர்களால் முடக்கப்படும் இந்திய மக்களின் செய்திகளை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாளிதழ்களில் வெளிக்கொணர வழிசெய்தார். சமூகச் சீர்திருத்தம் தொடர்பில் முரண்பாடுகளைக் கொண்டிருந்த காங்கிரஸ், பின்னாளில் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டது. அனைத்து மக்களுக்குமான சுதந்திரத்தை முன்வைக்கும் வலுவான அமைப்பாக உருவெடுத்தது.

டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்

7. கான்பூர் மாநாடு: விடுதலைப் போரின் புரட்சிமுகம்

இந்தியாவில் செயல்படும் பழமையான அரசியல் கட்சி என்றால் 1885-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ். அதற்கடுத்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட அரசியல் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அது தனது 97-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு இந்திய விடுதலைப் போராளிகள் பலர் இந்திய விடுதலைக்கான, உறுதியான சாத்தியங்கள் குறித்துக் கனவு காண ஆரம்பித்தனர்.

இதன் வழியே நடைபெற்ற புரட்சிகரமான பல எழுச்சிகளுக்குப் பிறகு, இந்தியாவின் பல இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. அவற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் 1924-ல் எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது, நளினி குப்தா, உஸ்மானி ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கான்பூர் சதி வழக்குப் போடப்பட்டு, கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துவிட்டோம் என்று வெற்றிக் களிப்பில் மிதந்தது ஆங்கிலேய அரசு. பிறக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடையும் விதித்திருந்தது. இந்தத் தடையையும் மீறித்தான் அந்தக் கட்சி பிறந்தது.

புகழ்பெற்ற கவிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஹஸ்ரத் மொஹானி வரவேற்புக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்க, தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் மா.சிங்காரவேலர் தலைமை உரையுடன் அமைப்பின் முதல் மாநாடு தலைமறைவாக கான்பூர் நகரில் நடந்தேறியது. பலர் சதி வழக்குகளால் சிறைச்சாலையில் வாடிவந்த நிலையில், போர்க்குணமிக்க புரட்சியாளர்களும், தேசபக்தர்களும் இணைந்து உருவாக்கியதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஈடு இணையற்ற தியாகங்களால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய தேசபக்தர்கள் புதிய வழியைக் காண இக்கட்சியில் சங்கமித்தனர்.

புகழ்பெற்ற கதார் கட்சியை (கதார் என்றால் புரட்சி என்று பொருள்) சார்ந்த லாலா ஹர்தயால், சர்தார் சிங், ராஷ்பிகாரி போஸ், சோகன்சிங் பாக்னா ஆகியோர் இந்தக் கட்சியில் இணைந்தனர். இந்தியாவை ஆயுதப் போராட்டம் மூலம் கைப்பற்றுவதற்காக வெளிநாட்டிலிருந்து காமகட்டமாரு கப்பல் மூலம் 1915-ல் பிப்ரவரி 15 அன்று வருகைதந்த போராளிகள் பலர் கொல்லப்பட்டனர், அவர்களில் எஞ்சியவர்களும் இந்தக் கட்சியில் இணைந்தனர்.

1922-லிருந்து 1924 வரை இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைந்த முஹாஜிர்கள் எனப்படும் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் மீது நான்கு பெஷாவர் சதி வழக்குகள் போடப்பட்டன. இதிலிருந்து பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நவஜவான் சோஷலிஸ்ட் படையை நடத்திய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடைய தோழர்கள் அஜய்கோஷ், ஷிவ்வர்மா, சோஹன் சிங் கோஷ் முதலானோர் இக்கட்சியில் இணைந்தனர். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதலால் பிரபலமான சூரியா சென்னின் சீடர்களும், புரட்சிப் போராளிகளுமான கணேஷ் கோஷ் மற்றும் கல்பனா தத் ஆகியோரும் இக்கட்சியில் இணைந்தனர்.

ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி அறைகூவல் விடுத்தபோது, சத்தியாகிரகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த, கார்வால் ஆயுதப்படை சார்ஜன்ட் சந்திரசிங் கார்வாலி சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளியே வந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். காலனியாதிக்கத்துக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய மணிப்பூர் ஜன நேத்தா (மக்கள் தலைவர்) ராபோர்ட் சிங் சிறை வாசத்தின்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

விடுதலைப் போராட்டப் புரட்சியின் பல்கலைக்கழகங்களாக விளங்கிய அந்தமான், தியோலி, பக்ஸா, ஹிஜ்லி மற்றும் பிற சிறைகளிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இவர்கள் மீது வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பிரிட்டிஷ் இந்திய இறையாண்மையைப் பேரரசிடமிருந்து பறித்துக்கொள்ள இந்தியாவிலிருந்து தங்களுக்குத் தெரிந்த, தெரியாத ஒவ்வொருவருடனும் சேர்ந்து சதி செய்ததாக ஆங்கிலேயர்களின் காவல் துறை குற்றம் சுமத்தியது.

கல்வி கற்க வெளிநாட்டுக்குச் சென்ற எம்.என்.ராய், அபானி முகர்ஜி, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, டாக்டர் பூபேந்திரநாத் தத்தா (சுவாமி விவேகானந்தரின் தம்பி), எம்.பி.டி.ஆச்சார்யா எனும் திருமலாச்சாரி (சோவியத் நாட்டில் லெனினை நேரில் சந்தித்தவர்களில் இவரும் ஒருவர்) ஆகியோருடன் மேலும் சிலர் மாஸ்கோவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920-ல் நிறுவினர். ஆனால், ஒன்றுபட்ட கட்சி வெளிநாட்டில் கட்சி உருவானதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், அதை ஒரு தொடக்க கால முயற்சியாக மட்டுமே எடுத்துக்கொண்டது. 1925 டிசம்பர் 26-தான் கட்சி அமைக்கப்பட்ட தினமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 26: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவன தினம்

8. நல்லாட்சி பட்டியல்: நாட்டில் குஜராத் முதலிடம்; நீதி, பொதுப் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று (சனிக்கிழமை) வெளியிட்டார்.

நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாட்சி குறியீடு 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை. இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மற்ற பிரிவுகளின் முதலிடம் பிடித்த மாநிலங்கள்: விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் – ஆந்திரப் பிரதேசம்; வணிகம் & தொழில்கள் – தெலங்கானா; மனித வள மேம்பாடு – பஞ்சாப்; பொது சுகாதாரம் – கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் – கோவா; பொருளாதார நிர்வாகம் – குஜராத்; சமூக நலன் & மேம்பாடு – தெலங்கானா; சுற்றுச்சூழல் – கேரளா; குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை – ஹரியானா.

9. அறிவியல் அதிசயங்களை அறிய உதவும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்காக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்துகொள்ள வழி வகுத்தது.

அதன் அடிப்படையில் நாசா ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த திட்டமிட்டனர். 1989-ல் தொடங்கப்பட்ட, ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம், தற்போதுதான் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், இந்த விண்வெளி தொலைநோக்கி அதிநவீன ராக்கெட் மூலம், பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் இது சுமார் 9,30,000 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது நாசா.

1960-களில் நாசாவின் பல விண்வெளி செயல்பாடுகளுக்கு காரணமான முக்கிய விஞ்ஞானியான ஜேம்ஸ் இ வெப்பின் நினைவாக புதிய தொலைநோக்கிக்கு ஜேம்ஸ் வெப் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளதால் பிரபஞ்ச ரகசியங்கள், நெபுலாக்கள், நட்சத்திரங்கள் உருவாக்கம், பூமி உருவான விதம் உள்ளிட்ட அரிய தகவல்களை விஞ்ஞானிகளால் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. ‘சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’: பஞ்சாபில் 22 விவசாய அமைப்புகள் இணைந்து அரசியல் அணி தொடக்கம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபின் 22 விவசாய அமைப்புகள் இணைந்து ‘சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’ என்ற பெயரில் புதிதாக அரசியல் அணியைத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் ‘சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’ உழவர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த பஞ்சாபின் 22 விவசாய அமைப்புகள் இணைந்து ‘சம்யுக்த சமாஜ் மோர்ச்சா’ என்ற பெயரில் புதிய அரசியல் அணியைத் தொடங்கியுள்ளன.

இந்த அணியின் தலைவராக பாரதிய கிஸான் யூனியன் (ராஜேவால்) அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பொறுப்பு வகிக்கவுள்ளார்.

11. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு ‘சிறந்த தென் ஆப்பிரிக்கர்’ விருது

இந்திய வம்வசாவளியைச் சோ்ந்த இம்தியாஸ் சூலிமானுக்கு இந்த ஆண்டுக்கான ‘சிறந்த தென் ஆப்பிரிக்கர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச்சேர்ந்தவர் மருத்துவர் இம்தியாஸ் சூலிமான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், ‘கிஃப்ட் ஆப் தி கிவர்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 44க்கும் மேற்பட்ட நாடுகள், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் இயற்கைப் பேரிடர்களின்போது அந்த அமைப்பு உதவி புரிந்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தினசரி இணையவழி நாளிதழான ‘டெய்லி மேவ்ரிக்’ இம்தியாஸ் சூலிமானுக்கு இந்த ஆண்டுக்கான ‘சிறந்த தென் ஆப்பிரிக்கர்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதும் இம்தியாஸுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

12. இந்திய இளம் எழுத்தாளர்களுக்கான போட்டி- 3 தமிழ் இளம் எழுத்தாளர்கள் தேர்வு

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின்கீழ், ‘இந்திய தேசிய இயக்கம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற அகில இந்திய போட்டியின் முடிவுகளை அறிவித்துள்ளது.

உதவித்தொகையுடன் கூடிய இந்த வழிகாட்டுதல் திட்டத்தின்படி, 30 வயதுக்கு குறைந்த 75 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய போட்டி கடந்த ஜூன் 1-ம்தேதி முதல் ஜூலை 31 முடிய ‘மைகவ்’ இணைய தளத்தின் மூலம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களிடமிருந்தும், வெளி நாட்டு இந்தியர்களிடம் இருந்தும், 22 அலுவல் மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த நிபுணர்கள் போட்டிக்கு வந்த நூல்களை ஆய்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள 75 எழுத்தாளர்களில், 38 பேர் ஆண்கள், 37பேர் பெண்கள்.

இரண்டு பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். 16 எழுத்தாளர்கள் 15-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 21-25 வரம்பில் 32 பேரும், 26-30 வயது வரம்பில் 25 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் ஆறு மாத கால வழிகாட்டுதல் பயிற்சி பெறுவார்கள். தேசியப் புத்தக அறக்கட்டளைமூலம் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மற்றும் பிரதித் திருத்த ஆதரவு வழங்கப்படும். எழுத்தாளர்களின் நூல்கள் பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் மாதம்தோறும் `50,000 வீதம் ஆறு மாதங்களுக்கு உதவித்தொகை பெறுவார்கள். மேலும் சிறந்த, வெற்றிகரமான பிரசுரங்களுக்கு 10 சதவீத ராயல்டி தொகையும் வழங்கப்படும். தமிழில் நூல்களை எழுதிய ஜே யு சுகானா, ஜி சரவணன், கே கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

13. நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை சாவி ஏலம் விட முடிவு

தென் ஆப்பிரிக்க நாட்டின் முதல் அதிபரான நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிற வெறிக்கு எதிராகப் போராடியவரும், அந்நாட்டின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலா வாழ்வில் 27 ஆண்டுகளை சிறையிலேயே செலவிட்டார். ராபன் தீவுகளில் உள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிறைக்காவலராக இருந்தவரும், மண்டேலாவின் நெருங்கிய நண்பருமான கிறிஸ்டோ பிராண்ட், நெலசன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை ஏலம் விட முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென்ஆப்பிரிக்க அரசு, “இந்த சாவி தென்னாப்பிரிக்க மக்களுக்குச் சொந்தமானது” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

14. 2004 டிசம்பர்.26 – தமிழகத்தில் சுனாமி தாக்கிய நாள்

15. நிறவெறிக்கு எதிராக போராடிய பிஷப் டெஸ்மண்ட் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 90. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு.

வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது.

16. விஜய் ஹஸாரே: ஹிமாசல் சாம்பியன்: ‘விஜேடி’ முறையில் வென்றது

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘விஜேடி’ முறையில் தமிழகத்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹிமாசல் வெற்றிக்கு 15 பந்துகளில் 16 ரன்கள் தேவை இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னா் ‘விஜேடி’ முறையில் அந்த அணி வென்ாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணி இன்னிங்ஸில் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் அரோரா ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஹிமாசல பிரதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த தமிழகம் 49.4 ஓவா்களில் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பா் தினேஷ் காா்த்திக் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 116 ரன்கள் விளாசினாா்.

பாபா இந்திரஜித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80, ஷாருக் கான் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்த்து உதவ, கேப்டன் விஜய் சங்கா் 22, சாய் கிஷோா் 18, ஜெகதீசன் 9, முருகன் அஸ்வின் 7, பாபா அபராஜித் 2, வாஷிங்டன் சுந்தா் 1, சிலம்பரசன் 1 ரன்கள் சோ்த்தனா். சந்தீப் வாரியா் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஹிமாசல் பௌலிங்கில் பங்கஜ் ஜஸ்வால் 4, ரிஷி தவன் 3, வினய் கலேதியா, சித்தாா்த் சா்மா, திக்விஜய் ரங்கி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஹிமாசல் இன்னிங்ஸில் மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அந்த அணி 47.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் அடித்திருந்தது.

ஷுபம் அரோரா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 136, கேப்டன் ரிஷி தவன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். முன்னதாக அமித் குமாா் 6 பவுண்டரிகளுடன் 74, பிரசாந்த் சோப்ரா 21, நிகில் கங்தா 18 ரன்கள் சோ்த்தனா்.

இறுதியில், விஜேடி முறையில் அந்த அணியின் வெற்றிக்கு 47.3 ஓவா்களில் 289 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி 299 ரன்கள் அடித்திருந்ததால், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாசல் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

17. சேதி தெரியுமா?

டிச.20: டெல்டா, ஒமைக்ரான் வரிசையில் ‘டெல்மைக்ரான்’ என்கிற புதிய வேற்றுருவ கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

டிச.21: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழி வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

டிச.22: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

டிச.23: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

டிச.23: ‘பேக்ஸ்லோவிட்’ என்கிற பெயரில் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா மாத்திரையை அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்கா அங்கீகரித்தது.

டிச.23: கர்நாடக சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

டிச.24: வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 4 – 3 என்கிற கோல் கணக்கில் தோற்கடித்தது.

டிச.24: 15 வயதுக்குட்பட்ட ஜூனியர் அமெரிக்க ஸ்குவாஷ் ஓபன் கோப்பையில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி அனாஹட் சிங் வென்றார். இத்தொடரை வெல்லும் முதல் இந்திய பதின்பருவச் சிறுமி இவர்.

டிச.25: ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 -18 வயதுள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

18. நீதி ஆயோக் சுகாதாரக் குறியீட்டில் கேரளம் முதலிடம்

நீதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரக் குறியீட்டில் கேரளம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும், உத்தர பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தொடா்பான குறியீட்டை மத்திய அரசின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு 4-ஆவது சுகாதாரக் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான பட்டியலில் பெரிய மாநிலங்கள் பிரிவில், கேரளம் முதலிடத்தையும் தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளன.

சிறிய மாநிலங்கள் பிரிவில் மிஸோரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா, சிக்கிம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் தாத்ரா-நகா் ஹவேலி & டாமன்-டையு முதலிடத்திலும், சண்டீகா் இரண்டாவது இடத்திலும், லட்சத்தீவுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஓராண்டில் சுகாதார சேவைகளை சிறப்பாக மேம்படுத்திய பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அஸ்ஸாம் இரண்டாவது இடத்திலும், தெலங்கானா மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிஸோரம், மேகாலயம், நாகாலாந்து ஆகியவை முன்னணியில் உள்ளன.

நீதி ஆயோக் ஒட்டுமொத்த சுகாதாரக் குறியீட்டில் கேரளம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின்போது 24 காரணிகள் ஆராயப்பட்டதாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், உலக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் குறியீட்டை நீதி ஆயோக் தயாரித்துள்ளது.

சுகாதார சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்கும்போது இந்தப் பட்டியலை மாநில அரசுகள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படலாம் என நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

19. சுகாதார துறை செயல்பாட்டில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடம்: உத்தரபிரதேச மாநிலத்துக்கு கடைசி இடம்

தேசிய அளவிலான சுகாதார துறை செயல்பாட்டில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம், தெலங்கானா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2019-20-ம் ஆண்டுக்கான சுகாதார குறியீடு டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், கூடுதல் செயலாளர் ராகேஷ் சர்வால், உலக வங்கியின் மூத்த அதிகாரி ஷீனா சாப்ரா ஆகியோர் சுகாதார குறியீட்டை வெளியிட்டனர்.

நிதி ஆயோக், மத்திய சுகாதாரத் துறை, உலக வங்கி ஆகியவை இணைந்து தயாரித்துள்ள சுகாதார குறியீட்டில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள் என 3 பிரிவுகளில்தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களின் பட்டியலில் 19 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 4-வது முறையாக அந்த மாநிலம்முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. தமிழகம் 2-வது இடத்தையும், தெலங்கானா 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியாணா, அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார்ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் 8 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மிசோரம் மாநிலம்முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா, சிக்கிம், கோவா, மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

யூனியன் பிரதேசதங்களில் தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் டையு-டாமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சண்டிகர், லட்சத்தீவு, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், அந்தமான் – நிகோபர் அடுத்தடுத்த இடங்களில்உள்ளன.-பிடிஐ

20. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டத்தில் பணியாற்றிய இந்திய பெண் விஞ்ஞானி

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் இந்திய பெண் விஞ்ஞானி ஒருவர் பணியாற்றியுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சிமையம், கனடா ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (ஜேடபிள்யூஎஸ்டி) உருவாக்கி உள்ளது.

தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவிலுள்ள கொரு விண்வெளி தளத்திலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி கடந்த சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. ரூ.75 ஆயிரம்கோடி செலவில் இந்தத் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் தோன்றியது எப்படி என்பது உட்பட பல்வேறு அறிவியல் அதிசயங்களை இந்த தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்தும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராயவுள்ளது.

இந்த விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் ஏராளமானவிஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். இதில் இந்திய விஞ்ஞானி டாக்டர் ஹஷிமா ஹசனும் ஒருவர். இந்தியா உட்பட 7 நாடுகளின் விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று இருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்த ஹஷிமா ஹசன், இந்தத் திட்டத்தில் பங்கேற்று இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஹஷிமா கூறும்போது, “ரஷ்யாவின் சார்பில்ஸ்புட்னிக் விண்கலம் ஏவப்பட்டபோது எனது பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசித்தனர். அப்போதே எனக்கு விண்வெளி துறை மீது ஆர்வம் வந்துவிட்டது. நிலவில் மனிதர்கள் இறங்கியபோது நானும் ஒரு நாள் நாசாவில் பணிபுரிவேன் என்று கனவு கண்டேன். அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. விண்வெளித் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபண்டமண்டல் ரிசர்ச் (டிஐஎஃப்ஆர்) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹஷிமா, பின்னர் லண்டன் சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அணு அறிவியலில் டாக்டரேட் படிப்பைமுடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று 1994-ல் நாசாவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். தற்போது விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் இணைந்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

21. 2022-இல் மாநகரங்களில் 5ஜி சேவை: தொலைத்தொடா்பு துறை

அடுத்த ஆண்டு முதல் சென்னை, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டீகா், தில்லி, ஜம்நகா், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னெள, புணே, காந்திநகா் போன்ற மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 5ஜி அலைக்கற்றை சேவை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் இந்த மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்திருப்பதன் மூலம் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடா்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

5ஜி அலைக்கற்றை ஏலம் மற்றும் அதற்கான அடிப்படை விலை, ஏலம் விடப்பட வேண்டிய அளவு, ஏல வழிமுறை ஆகியவற்றில் உள்ள பல்வேறு நடைமுறைகளுக்கு அனுமதி கேட்டு இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் (டிராய்) கடந்த செப்டம்பரில் பரிந்துரை சமா்ப்பிக்கப்பட்டது. அதன் அனுமதி கிடைத்ததும், தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஆகிய தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சென்னை, குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டீகா், தில்லி, ஜாம்நகா், ஆமதாபாத், ஹைதராபாத், லக்னெள, புணே, காந்திநகா் ஆகிய நகரங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்திருக்கின்றன. அதன் மூலம், இந்த மாநகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் அடுத்த ஆண்டு 5ஜி தொழில்நுட்பம் முதல்கட்டமாக அறிமுகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22. கலை பண்பாட்டுத் துறை சார்பாக சென்னையில் ஜன.14 முதல் ‘நம்ம ஊரு திருவிழா’

தமிழக கலைப் பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற தலைப்பின் தமிழக பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு சென்னையில் 7 இடங்களில் ஜன. 14, 15, 16-ம் தேதிகளில் கலை விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் 7 வெளி மாநில கிராமியக் கலைக் குழுவினரும் பங்கு கொள்ளவுள்ளனர்.

கலை விழாவைச் சிறப்பாக நடத்துவது தொடர்பாகத் தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், சென்னையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியைப் போல, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும் நடத்த ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

23. பெண்களின் தற்காப்புக்காக “அன்மியூட்” இயக்கம் ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடங்கினர்

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சமூக நல இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். “அன்மியூட்” என்று அழைக்கப்படும் அந்த திட்டத்தில் மாதவிலக்கின்போது சுத்தமாக இருத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சியின் மூலமாக, பெண்களை குரல் எழுப்பும்படி தூண்டுவது மாணவர்களின் நோக்கமாகும். மேலும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் மாணவர்கள் நடத்திட முனைந்துள்ளனர். ஆண்டுதோறும் சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் ‘சாஸ்த்ரா-2022′ என்னும் தொழில்நுட்ப திருவிழாவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் சுடர், கோ ஹைஜீன், கிரை, சாக்யா, ஸ்வயம் போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் மாணவர்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 16-ந்தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சாஸ்த்ரா குழுவினர் ஒரு சமூகநல பிரச்சினையை கையில் எடுத்து, அதை சமாளிப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் சாஸ்த்ரா-2022 என்னும் திட்டத்தின் கீழ், “அன்மியூட்” இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த “அன்மியூட்” இயக்கம் கடந்த அக்டோபர் 24-ந்தேதியன்று நடிகர் ஆஹ்ஸாஸ் சன்னா முன்னிலையில் காணொலி நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது.

24. ‘தி இந்து’ பத்திரிகையாளருக்கு கோயங்கா விருது

‘தி இந்து’ பத்திரிகையின் செய்தியாளர் சிவ் சஹாய் சிங், ராம்நாத் கோயங்கா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘தி இந்து’ பத்திரிகையின் மேற்கு வங்க மாநிலப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிபவர் சிவ் சஹாய் சிங். இவர் 2019-ல்ஜார்க்கண்ட் மாநில அரசின் டிஜிட்டல் பொது விநியோக முறைத் திட்டத்தால் அடித்தட்டு மக்கள் ரேஷன் பொருட்களை இழந்தது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

ஆதார் அட்டைகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க முடியாததாலும், ஆதார் அட்டை இல்லாதவர்களும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டதை இந்த கட்டுரை விளக்கியது. பெரும்பாலும் பழங்குடி இனத்தவர் இந்த புதிய டிஜிட்டல்மயமாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்டதை கட்டுரை எடுத்துக்காட்டியிருந்தது.

இந்த கட்டுரைக்காக சிவ்சஹாய் சிங், ராம்நாத் கோயங்காவிருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘கண்ணுக்கு தெரியாத இந்தியாவை வெளிக்கொணர்தல்’ என்ற பிரிவின் கீழ் விருதுக்கு சிவ் சஹாய் சிங் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

1. ‘Red umbrella’ is a symbol for the rights of which section of the population?

A) Sex workers 

B) LGBT Activists

C) Environmental Activists

D) Animal Activists

  • International Day to End Violence Against Sex Workers is observed every year on December 17. It seeks to highlights the hate crimes committed against sex workers all over the globe. ‘Red umbrella’ is an important symbol for sex worker rights and is used for events which are held on December 17. The red umbrella symbol was first used by sex workers in Venice, Italy, in the year 2001.

2. Which state recently issued Child Labour (prohibition and regulation) (amendment) Rules 2021?

A) Tamil Nadu

B) Telangana 

C) West Bengal

D) Odisha

  • The Telangana State Government has issued the Telangana Child Labour (prohibition and regulation) (amendment) Rules 2021. It seeks to initiate stringent action against those employing child labour in different works. As per the rules, children would not perform any tasks during school hours and between 7 p.m and 8 a.m the next day.

3. The Union Cabinet passed a proposal to raise the legal age of marriage for women to ….. years

A) 19

B) 20

C) 21 

D) 25

  • The Union Cabinet passed a proposal to raise the legal age of marriage for women from 18 to 21 years — the same as men. This step is based on recommendations submitted to NITI Aayog in December 2020 by the task force headed by Jaya Jaitly.

4. Which language’s calligraphy has been added to UNESCO heritage list?

A) Tamil

B) Arabic 

C) Urdu

D) Japanese

  • ‘Arabic Calligraphy: Knowledge, Skills and Practices’ has been officially added to UNESCO’s Representative List of the Intangible Cultural Heritage of Humanity. This was done after collaboration between 15 Arab countries, led by Saudi Arabia and under the supervision of the Arab League Educational, Cultural and Scientific Organization.

5. Which city hosted the “National Conference on Tuberculosis”?

A) Chennai

B) New Delhi 

C) Patna

D) Varnasi

  • Ministry of Women and Child Development has organised a National Conference on Tuberculosis at Vigyan Bhawan, New Delhi. Vice President M. Venkaiah Naidu was the Chief Guest, along with Minister of Women & Child Development Smriti Irani and Minister of Health & Family Welfare Mansukh Mandaviya.
  • Prime Minister of India announced the government’s vision to eliminate TB by 2025, ahead of the SDG timeline of 2030.

6. Which publishing company/ website has named ‘Allyship’ as the word of the year?

A) Dictionary.com 

B) Collins

C) Oxford

D) Wren and Martin

  • Allyship has been named as Dictionary.com’s word of the year. It is an old noun made new again, in the recent years. As per the website, though “allyship” first surfaced in the mid–1800s, in the past few decades, the term has evolved to take on a nuanced and specific meaning.

7. India signs agreement for procurement of 6 lakh AK–203 rifles from which country?

A) Russia 

B) France

C) Israel

D) USA

  • A contract for procurement of quantity 6,01,427 Assault Rifles AK–203 was signed on December 06, 2021 between Ministry of Defence and Russia, in the share holding of 50.5% and 49.5% respectively. These rifles will be produced by Indo–Russian Rifles Private Limited (IRRPL) at Korwa, Uttar Pradesh.

8. As per the recent data from Environment Ministry, which state has recorded the highest deaths of elephants due to electrocution during 2009 and 2019?

A) Odisha 

B) Maharashtra

C) West Bengal

D) Gujarat

  • As per the data given by Union Ministry of Environment, Forest and Climate Change, 600 elephants have died due to electrocution across the country between 2009 and 2019. Of this, 117 deaths have taken place in Odisha, 116 in Karnataka and 105 in Assam. Arunachal Pradesh, Tripura and Maharashtra are the only states which recorded zero elephant deaths due to electrocution.

9. ‘Shakti Criminal Laws Bill’ is associated with which state?

A) Bihar

B) Gujarat

C) Maharashtra 

D) Uttar Pradesh

  • Maharashtra government tabled a report with recommendations of a joint selection committee, to amend the Shakti Bill. The Maharashtra government’s Shakti Criminal Laws (Maharashtra Amendment) Bill, 2020, proposes to increase the punishment for offences such as rapes, acid attacks.

10. Paxlovid, which was seen in the news recently, is the first authorised pill against which disease?

A) COVID–19 

B) Pneumococcal Disease

C) Cardiovascular Disease

D) AIDS

  • US health regulators have authorised the first pill against COVID–19. Named Paxlovid, it is a Pfizer drug that has been approved by Food and Drug Administration. The drug has been authorised for adults and children ages 12 and older at home with a positive COVID–19.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!