Tnpsc

25th & 26th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th & 26th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “மரண தண்டனை குறித்த உலகளாவிய ஆய்வு” அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) ILO

ஆ) பன்னாட்டு மன்னிப்பு அவை

இ) NHRC

ஈ) பன்னாட்டு நீதிமன்றம்

  • பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வருடாந்திர அறிக்கையான “மரண தண்டனை குறித்த உலகளாவிய ஆய்வு” என்பதை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளாவிய மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக சரிவு காணப்படுகிறது. ஆனால் சில நாடுகள் மரணதண்டனைகளை அதிகரித்துள்ளன. இந்த அறிக்கையின்படி, சீனா, உலகில் அதிகம் மரணதண்டனை விதிக்கும் நாடாக கருதப்படுகிறது.

2. தொடங்கிடு இந்தியா விதை நிதியத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீ -டு செய்யப்பட்டுள்ளது?

அ) `145 கோடி

ஆ) `500 கோடி

இ) `945 கோடி

ஈ) `2000 கோடி

  • தொடங்கிடு இந்தியா விதை நிதியத்தை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த நிதியத்துக்காக `945 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதன்மூலம், நாட்டில், 3600’க்கும் மேற்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது, அடுக்கு-2 மற்றும் 3 நகரங்களில் துளிர் நிறுவன சூழலமைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. ஜெகனண்ணா வித்யா தீவேனா திட்டம் செயல்படுத்தப்படுகிற மாநிலம் எது?

அ) தெலங்கானா

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • ஆந்திர பிரதேச மாநில அரசு ஜெகனண்ணா வித்யா தீவேனா திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர நிதியுதவி வழங்கப்படுகிறது. அண்மையில், அம்மாநில முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி, 10.88 இலட்சம் தாய்மார்களின் வங்கிக் கணக்குகளுக்கு, இந்தத் திட்டத்தின்கீழ் முதல் தவணை கல்வி கட்டணத்தை வைப்பு வைத்தார்.

4. பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?

அ) வாஷிங்டன்

ஆ) ஜெனீவா

இ) பாரிஸ்

ஈ) புது தில்லி

  • பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு எரிசக்தி முகமை, அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, உலகெங்கிலும் எரிசக்தி தொடர்பான கரியமிலவாயு (CO2) உமிழ்வு, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறது. 2010ஆம் ஆண்டிற்குப்பிறகு கரியமிலவாயு உமிழ்வின் மிகப்பெரிய அதிகரிப்பாக இது கருதப்படுகிறது.

5. இந்தியாவின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, எந்த மாநிலத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டுசென்றது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மகாராஷ்டிரா

இ) அஸ்ஸாம்

ஈ) ஹரியானா

  • நாட்டின் முதல் ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. COVID தொற்றுநோயால் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய இரயில்வேயால் இயக்கப்படும் Ro-Ro (roll-on, roll-off) சேவை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துச்சென்றது.

6. “2020ஆம் ஆண்டில் உலகளாவிய காலநிலையின் நிலை” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) ஐக்கிய நாடுகள் அவை

  • ஐநா அவை, கடந்த 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா-வங்கதேசம் எல்லையில் நிலச்சரிவை ஏற்படுத்திய ஆம்பன் சூறாவளி, வட இந்தியப் பெருங்கடலில் பதிவான மதிப்புமிக்க வெப்பமண்டல சூறாவளி என்று அவ்வறிக்கை கூறியுள்ளது. இது பாதிக்கப்பட்ட நாடுகளில் 14 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

7. உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 74

ஆ) 84

இ) 94

ஈ) 104

  • உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகளாவிய ‘ஆற்றல் மாற்றம் குறியீட்டை’ வெளியிட்டது. நாடுகளின் எரிசக்தி அமைப்புகளின் தற்போதைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளுக்கு மாறுவதற்கான அவற்றின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக்குறியீடு 115 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. முந்தைய ஆண்டைவிட இந்தியா இரு இடங்கள் முன்னேறி 74ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அனைத்து முக்கிய அளவுருக்களிலும் இந்தியா முன்னேறியுள்ளது.
  • ஆற்றல் மாற்றம் குறியீட்டில் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக சுவீடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சுவிச்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, FACT கிளர்ச்சிக் குழுவுடன் தொடர்புடைய நாடு எது?

அ) சூடான்

ஆ) சாட்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) நைஜீரியா

  • FACT கிளர்ச்சிக் குழுவானது 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதிபர் இட்ரிஸ் டெபியை பதவியிலிருந்து தூக்கியெறியும் நோக்கத்துடன் இந்தக்குழு சமீபத்தில் சாட் நகருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. டெபி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருநாள் கழித்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரின்போது ஏற்பட்ட காயங்களால் டெபி இறந்துவிட்டதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது.

9. ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரள் ‘Arp 273’இன் படத்தை வெளியிட்ட விண்வெளி நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) JAXA

இ) ROSCOSMOS

ஈ) NASA

  • அண்மையில் NASA, ‘காஸ்மிக் ரோஸ்’ வடிவத்திலான அளவளாவும் விண்மீன் திரளான ‘Arp 273’இன் நிழற்படத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்த நிழற்படம், NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த நிழற் படத்தில், சுருள் வடிவ விண்மீன் திரள்களின் குழு, ரோஜாவை ஒத்த வடிவத்தை உருவாக்குகிறது. விண்மீன் திரள்களாலான இந்த அமைப்பு ஆண்ட்ரோமெடா பேரடையிலிருந்து சுமார் 300 மில்லியன் ஒளியாண் -டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

10. நடப்பாண்டு (2021) புவி நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Covid and Climate Change

ஆ) Restore Our Earth

இ) One Earth

ஈ) Earth is our asset

  • ஏப்.22 அன்று உலகம் முழுவதும் புவி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு நிகழ்வாகும் இந்தச் சிறப்பு நாள். நடப்பாண்டு (2021) வரும் இந்நாள், இந்நாளின் 51ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • “Restore Our Earth” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். ஐநா அவை ஏப்ரல்.22’ஐ ‘சர்வதேச தாய்பூமி நாள்’ என்று அறிவித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு

தேசிய கல்விக்கொள்கையின் உள்ளூர் மொழிகளுக்கான மொழிபெயர்ப் -பை 17 மொழிகளில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. தேசிய கல்விக்கொள்கை 1968ஆம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்படி கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து 1986, 1992ஆம் ஆண்டுகளில் கல்விக்கொள்கை திருத்தப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டில் TSR சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து கடந்த 2020ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இது தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய கல்விக்கொள்கையின்படி 10+2 என்ற பள்ளிப்பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்படும். மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக் -கு பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாமி, பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு – 2020 என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. எனினும் இதில் தமிழ் மொழிக்கா -ன மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் இருந்துவரும் சூழலில் தற்போது அதன் மொழிபெயர்ப்பில் கூட தமிழ்மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலா்கள், கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியிலும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக NV ரமணா பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக N V ரமணா பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், N V ரமணா பொறுப்பேற்றார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா, ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், கடந்த 2000ஆம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவருக்கு குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அடுத்தாண்டு ஆக.26 வரை ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்.

3. கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசு

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா சிகிச்சை தொடர்பான உபகரணங்களுக்கு சுங்க வரி விதிப்பிலிருந்து மத்திய அரசு விலக்களித்தது. நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களுக்கு மும்மாத காலத்துக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பது என பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவு உடனடியா -க நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிக்கான சுங்க வரி
-யையும் மும்மாத காலத்துக்கு ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த நடைமுறையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மீட்டருடன் கூடிய ஆக்சிஜன் செலுத்தும் கருவி, டியூப் மற்றும் இணைப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் குப்பி, வாயு நிரப்பும் உபகரணம், சேமிப்பு டேங்குகள், சிலிண்டர்கள், கிரையோஜெனிக் சிலிண்டர் மற்றும் டேங்குகள் உள்பட ஆக்சிஜன் தொட -ர்பான 16 உபகரணங்களுக்கு சுங்க வரி மற்றும் சுகாதார வரி விதிப்பில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உபகரணங்களுக்கு இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகளுக்கு தற்போது 10% சுங்க வரி அல்லது இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்து வருகிறது. வரும் மே.1 தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த வரி விலக்கு வெளிநாட்டு தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைப்பதையும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்.

அண்மையில், மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் இந்தியா வந்தடையவுள்ளன. அதுபோல மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களும் அவற்றின் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளன. இத்தகையச் சூழலில் மத்திய அரசு இந்த வரி விலக்கை அறிவித்திருக்கிறது.

முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு அத்தியா -வசியமான ரெம்டெசிவிர் மருந்துக்கு இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு அளித்தது. அந்த மருந்து ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.

4. இந்தியா-ஸ்வீடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தது அமெரிக்கா

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் ஸ்வீடனும் ஒருங்கிணை -ந்து செயல்படுத்திவரும் திட்டத்தில் அமெரிக்கா இணைந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ‘தொழிற்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு’ (லீட் இட்) என்ற திட்டத்தை இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. அண்மையில் அமெரிக்கா சார்பில் நடைபெற்ற பருவகாலமாற்ற மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற் -கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுட -ன் இணைந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

5. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51% அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கரோனா பேரிடர் தொடா்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51% அதிகரித்து `43,798 கோடியை எட்டியுள்ளது.

குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், பழச்சாறுகள், நிலக்கடலை, ஆல்கஹால் பானங்கள், பிண்ணாக்கு, அரவைப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் மேம்பட்டது. பதப்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் ஆல்கஹால் பானங்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. ஆக்சிஜன் தேவைக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டு மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின்கீழ் 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

7. புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க பிரதமர் உத்தரவு

நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். நாட்டில் கரோனா இரண்டாமலை வேகமாக பரவிவரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், PM கேர்ஸ் நிதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மொத் -தம் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க மோடி உத்தரவிட்டுள் -ளார். மேலும், இந்த நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் அந்த மாவட்டத்தில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

8.‘அஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள் தரவுகளைப்பெற விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள வானியலாளர்கள், ஆர்வலர்கள் ‘அஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோளின் தரவுகளைப் பெற மே.31’க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாகும் நபர்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் ISRO அறிவித்துள்ளது. ISRO சார்பில் வானியல் ஆய்வுக்காக PSLV ஏவுகலம்மூலம் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் ஆந்திர பிரதேச மாநிலத்துக்குட்பட்ட ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2015ஆம் ஆண்டு செப்.28’இல் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் X கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வுசெய்ய அஸ்ட்ரோசாட் பயன்படுத்தப்படுகிற -து. 2018ஆம் ஆண்டு முதல் அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள், தரவுகள் உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் ISRO வெளியிட்டு வருகிறது.

இவை பல்வேறு முக்கிய அறிவியல் ஆய்வுகளுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள் மூலம், பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அஸ்ட்ரோசாட்டின் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்வதற்கு ISRO மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ISRO வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தரவுகளைக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலா -ம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் திட்ட ஆய்வறிக்கை விவரங்களை மே 31’க்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்வாகும் நபா்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும்.

9. கோத்தகிரியிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒலித்த சிறுவன் குரல்

கோத்தகிரியிலுள்ள குழந்தை உரிமை ஆர்வலர் பி ராகுல், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகள் மாநாட்டின் முதல் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார். கோத்தகிரி அருகேயுள்ள காக்காசோலை கிராமத்தில் வசித்து வருபவர் ராகுல் (13).

இவர் கோத்தகிரி அருகேயுள்ள கேர்கொம்பை அரசு உயர்நிலைப்பள்ளியி -ல் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தனது ஏழாவது வயதிலிருந்தே சுற்றுச்சூழல், குழந்தைகளின் உரிமை உள்ளிட்டவற்றின்மீது அதிக அக்கறை கொண்டவராவார். இதன் காரணமாக கேர் அறக்கட்டளையின் சார்பில் காக்காசோலை கிராமத்தில் நடத்தப்படும் குழந்தைகள் செயல்பாட் -டு மையத்தில் இணைந்து வாழ்வியல் கல்வி, குழந்தைகளின் உரிமை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பிரிவுகளில் இவருக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பாகப் பங்கேற்ற ராகுல் கேர் அறக்கட்டளையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுவது, விதைப்பந்துகள் தயாரிப்பது, நெகிழி பைகளுக்கு எதிரான பிரசாரம் உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளா -ர். தன்னை ‘வனங்களின் சகோதரர்’ என அழைத்துக்கொள்ளும் இவர், சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை உரிமைகள் என்ற தலைப்பில் இந்தியாவி -லிருந்து பங்கேற்ற ஒரே சிறுவன் ஆவார்.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சுற்றுச்சூழல் உரிமைகள் குறித்த குழந்தைகளின் கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்தக் கருத்தரங்கில் ஐநா சபையின் குழந்தைகள் நல உரிமைக்குரல் உறுப்பினர்கள், குழுவின் முந்தைய தலைவர்கள், சர்வதேச குழந்தைகள் உரிமை நல அமைப்புகள் பங்கேற்று, பருவநிலை மாற்றம் குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வாறு கடுமையாக பாதிக்கிற -து என்பது குறித்தும் விவாதித்துள்ளனர். இக்கருத்தரங்கில் அரசுகளும், சமூகங்களும் தூய்மையான சூழலுக்கான உரிமையை வழங்கவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாகவும் மாற்ற வேண்டிய நேரம் இதுவென ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

10. பத்திரிகையாளர்கள் இழந்த சுதந்திரம்!

சமூக நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பத்திரிகையாளர்களு -க்கு முக்கிய பங்குண்டு. உண்மை நிகழ்ச்சிகளை மக்களுக்குக்கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்ற -ன. பத்திரிகைகள், பத்திரிகையாளர்களின் செயல்பாட்டுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எந்தவிதத் தலையீடும் இல்லாமல் அவர்கள் செய -ல்பட்டால்தான் உண்மையான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டமே வழிகோலுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவானது, சுதந்திரமாகக் கருத்து வெளி -யிடும் உரிமையை வழங்குகிறது. அதுவே, பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதுமான வன்முறை அதிகரித்துள்ளது. அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை பயங்கரவாத அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தடுக்க முயற்சிக்கின்றன. சில நாட்டு அரசுகளே பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன. சில நாடுகளில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் நிகழ்கிறது.

இந்தியாவின் கௌரி லங்கேஷ், சவூதி அரேபியாவின் ஜமால் கஷோகி என அந்தப் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. உலக அளவில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 50 பத்திரிகையாளர்க -ள் கொல்லப்பட்டதாக ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பு தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 180 நாடுகளி -ல் நார்வே முதலிடத்தில் உள்ளது. முதல் 4 இடங்களை ஸ்கான்டினேவ -யியா என்று அறியப்படும் நாடுகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 142ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா இதே இடத்தில்தான் இருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டில் 133ஆவது இடத்தில் இருந்தது. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

காவல்துறையினர், அரசியல் செல்வாக்கு கொண்டோர், சில அமைப்புகளைச் சேர்ந்தோர் உள்ளிட்டோரிடமிருந்து பத்திரிகையாளர்கள் திட்டமிட்ட தாக்குதலை அதிகம் எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயகம் தழைப்பதற்கும் நாட்டின் சுதந்திரம் நிலைப்பதற்கும் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் எந்தவிதத் தலையீடுமி -ன்றி சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என்பதை அறிஞர்களும் நிபு ணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம் – முதல் ஐந்து நாடுகள்

1-நார்வே

2-பின்லாந்து

3-ஸ்வீடன்

4-டென்மார்க்

5-கோஸ்டா ரிகா

பத்திரிகை சுதந்திரம் – கடைசி ஐந்து நாடுகள்

176-ஜிபூட்டி

177-சீனா

178-துர்க்மெனிஸ்தான்

179-வட கொரியா

180-எரித்ரியா

1. Which organization has released the “Global review of the death penalty” report?

A) ILO

B) Amnesty International

C) NHRC

D) International Court of Justice

  • The Amnesty International has released its annual report “global review of the death penalty”. As per the report, there is an overall decrease in the number of global death penalties in the year 2020, but some countries have increased the death penalty of executions.
  • As per the report, China is considered to be the world’s most prolific executioner in the world.

2. What sum has been allocated to the Start Up India Seed Fund?

A) Rs 145 Crore

B) Rs 500 Crore

C) Rs 945 Crore

D) Rs 2000 Crore

  • The Startup India Seed Fund has been officially unveiled by the Union Minister for commerce Piyush Goyal. A sum of Rs.945 crore is allocated for the fund and is expected to benefit more than 3600 startups in the country. Also, it is expected to boost the start–up ecosystem in tier–2 and 3 cities.

3. Jagananna Vidya Deevena scheme is being implemented by which state?

A) Telangana

B) Andhra Pradesh

C) Odisha

D) Karnataka

  • The state government of Andhra Pradesh is implementing a scheme named Jagananna Vidya Deevena scheme, under which financial assistance is given to students for pursuing higher education. Recently, the Chief Minister Y.S. Jagan Mohan Reddy released the 1st instalment of education fee reimbursement under the scheme to the bank accounts of 10.88 lakh mothers.

4. Where is the International Energy Agency headquartered?

A) Washington

B) Geneva

C) Paris

D) New Delhi

  • The International Energy Agency, which is headquartered in Paris (France) has recently released a report, which states that energy related carbon dioxide (CO2) emissions across the globe have risen by about 1.5 billion tonnes in the year 2021. This is considered to be the largest increase in carbon emission since the year 2010.

5. India’s first ‘Oxygen Express’ carried oxygen to which state?

A) Uttar Pradesh

B) Maharashtra

C) Assam

D) Haryana

  • The country’s very first ‘Oxygen Express’ departed from Andhra Pradesh to supply oxygen to the state of Maharashtra. The Ro–Ro (roll–on, roll–off) service operated by Central Railways is ferrying oxygen from Vishakhapatnam steel plant to meet the sudden surge in oxygen demand in Maharashtra due to COVID–19 pandemic.

6. “State of the Global Climate 2020” is the report released by which organization?

A) World Bank

B) IMF

C) Asian Development Bank

D) United Nations

  • The United Nation’s ‘State of the Global Climate report has been released for the year 2020.
  • The report has stated that Cyclone Amphan that made landfall in the India–Bangladesh border last year, was the costliest tropical cyclone on record for the North Indian Ocean. It has led to economic losses amounting $14 billion to the affected nations.

7. What is the rank of India in the recently released global ‘Energy Transition Index’ (ETI) of the World Economic Forum?

A) 74

B) 84

C) 94

D) 104

  • The World Economic Forum has recently released the global ‘Energy Transition Index’. The index ranks 115 economies on the current performance of their energy systems and their readiness for transition to secure and sustainable energy systems.
  • India has moved up two positions to rank 74th from previous year, and has improved on all key parameters. Sweden has topped the Energy Transition Index (ETI) for the third consecutive year. Switzerland and Finland were ranked in the next two positions.

8. FACT rebel group, who were seen in the news recently, are associated with which country?

A) Sudan

B) Chad

C) Afghanistan

D) Nigeria

  • Fighters of the Front for Change and Concord in Chad (FACT) rebel group was formed in 2016. The group said to have crossed into Chad recently with the aim of overthrowing President Idriss Deby.
  • A day after provisional results of Deby being re–elected, the military announced that President, had died due to wounds suffered during a battle against the rebels.

9. Which space agency released the image of interacting galaxies Arp 273, in the shape of a ‘Cosmic Rose’?

A) ISRO

B) JAXA

C) ROSCOSMOS

D) NASA

  • The NASA has recently released the image of interacting galaxies Arp 273, in the shape of a ‘Cosmic Rose’. The image has been shared on the official Instagram handle of NASA’s Hubble Space Telescope. In the image, a group of spiral galaxies create a shape resembling a rose. This structure made of galaxies lies in the Andromeda constellation, at about 300 million light–years away.

10. What is the theme of the ‘Earth Day 2021’?

A) Covid and Climate Change

B) Restore Our Earth

C) One Earth

D) Earth is our asset

  • April 22 is observed as the Earth Day throughout the world. It is an international event celebrated around the world to support for environmental protection. This year marks the 51st anniversary of the annual celebrations. The theme for Earth Day 2021 is ‘Restore Our Earth’.
  • The United Nations designated April 22 as ‘International Mother Earth Day’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!