Tnpsc

25th & 26th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th & 26th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. அறிவியலாளர்கள், அரிய வெப்பமான பிரகாசமான புற-ஊதா விண்மீன்களை ஒரு தொகுதியில் கண்டறிந்துள்ளனர். அவர்கள், எந்தச் செயற்கைக்கோளில் உள்ள தொலைநோக்கியை இதற்கு பயன்படுத்தினர்?

அ) AstroSat

ஆ) CartoSat-2

இ) Risat-7E

ஈ) Insat- 4E

  • பால்வெளியில் உள்ள NGC 2808 எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் விண்மீன்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை ஆராய்ந்துவரும் வானியலாளர்கள், அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற-ஊதா விண்மீன்களை அதில் கண்டறிந்துள்ளனர். வானியலாளர்கள், இதற்கென இந்தியாவின் முதல் பல அலைநீள விண்வெளி செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டில் உள்ள புற-ஊதா படமாக்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தினர்.

2. யூரியா ஆலை தொடர்பாக அண்மைச்செய்திகளில் வெளியான ‘நம்ரூப்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சத்தீஸ்கர்

இ) பீகார்

ஈ) உத்தரகண்ட்

  • நம்ரூப் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் தென்கீழைப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரமாகும். சமீபத்தில், நம்ரூப்பில் அமையவிருக்கும் யூரியா ஆலை தொடர்பாக வேதியியல் மற்றும் உர அமைச்சகம் ஒரு கூட்டம் நடத்தியது. 12.7 இலட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடைய திட்டத்தை தேசிய உரங்கள் நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனம், தேசிய வேதிகள் மற்றும் உரங்கள் நிறுவனம், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் அரசு இணைந்து செயல்படுத்தவுள்ளது.

3. சமீபத்தில், NASA’ஆல் பகிரப்பட்ட Abell 370 என்றால் என்ன?

அ) கருந்துளை

ஆ) புறக்கோள்

இ) விண்மீன் திரள்

ஈ) விண்கல்

  • அண்மையில் NASA அதன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட விண்மீன் திரள்களின் மிகப்பெரிய தொகுதியான ஆபெல் 370’இன் நிழற்படத்தை வெளியிட்டது.
  • NASA’இன் அறிக்கையின்படி, இந்தத்தொகுதியின் பேரீர்ப்புவிசை ஆனது, ஒளி கடந்துசெல்லும்போது அதனை வளைக்கச் செய்கிறது. இதன் காரணமாக, புவியிலிருந்து 4.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஆபெல் 370’க்கு புறத்தே உள்ள விண்மீன் திரள்களை நம்மால் காண முடிவதில்லை.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘1776 கமிஷன் அறிக்கை’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) ஜெர்மனி

  • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ‘1776 கமிஷன்’ அறிக்கையை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. நாட்டில் தேசப்பற்றுக் கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘1776 ஆணையம்’ என்னும் பெயரில் தேசிய ஆணையம் அமைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
  • அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க குடிகள் வந்து நானூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், தி நியூயார்க் டைம்ஸின், ‘1619 முன்முயற்சி’க்கு எதிர்ப்பாக ‘1776 ஆணையம்’ காணப்பட்டது.

5. மேகாலயா, மணிப்பூர் & திரிபுரா ஆகிய மும்மாநிலங்களின் மாநில உருவாக்க நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 19

ஆ) ஜனவரி 21

இ) ஜனவரி 23

ஈ) ஜனவரி 25

  • மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது 49ஆவது மாநில நாளை 2021 ஜனவரி.21ஆம் தேதியன்று கொண்டாடின. 1972 ஜனவரி.21 அன்று, இம்மூன்று மாநிலங்களும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் முழுமையான மாநிலங்களாக மாறின.
  • இது, யூனியன் பிரதேசங்களாக இருந்த மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை மாநிலங்களாக உருவாக்கப்ப -டுவதற்கும் பிப்ரவரி 21, 1987 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்படு -வதற்கும் வழிவகுத்தது

6. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘HAWK-I’ இயக்கதளம், பின்வரும் எவ்வமைப்புக்கு உரியதாகும்?

அ) DRDO

ஆ) BHEL

இ) HAL

ஈ) CSIR

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதத்தை (Smart Anti-Airfield Weapon – SAAW) பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரைக்கு அருகிலுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஹாக்-I தளத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
  • ஹைதராபத்தில் உள்ள DRDO’இன் இமாரத் ஆராய்ச்சி மையத்தால் இவ்வாயுதம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களின் சான்றளிப்பிற்காக HAL அதன் ஹாக்-I தளத்தை பயன்படுத்துகிறது.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘MASCRADE – 2021’ என்பது பின்வரும் எந்த இந்திய அமைப்பின் முன்முயற்சியாகும்?

அ) CII

ஆ) FICCI

இ) CAIT

ஈ) ASSOCHAM

  • FICCI எனப்படும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கடத்தல், போலியான நடவடிக்கைகளுக்கு எதிரான குழு ஏற்பாடு செய்திருந்த 7ஆம் ‘MASCRADE-2021’ கடத்தல், போலியான வர்த்தகங்களுக்கு எதிரான இயக்கத்தை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
  • அதிகரித்துவரும் கடத்தல், போலியான பொருட்களுக்கு எதிராக புதுமையான கொள்கை மற்றும் தீர்வுகள் தொடர்பாக விவாதிக்க இந்த நிகழ்ச்சி நோக்கம் கொண்டுள்ளது.

8. “The New Normal and Safe and Healthy Tourism” என்ற கருப் பொருளின்கீழ், சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டம் எது?

அ) ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை – அமைச்சரவைக் கூட்டம்

ஆ) BRICS அமைச்சரவைக் கூட்டம்

இ) G20 அமைச்சரவைக் கூட்டம்

ஈ) G7 அமைச்சரவைக் கூட்டம்

  • ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் 17ஆவது அமைச்ரவைக் கூட்டம், சமீபத்தில், “The New Normal and Safe and Healthy Tourism” என்ற கருப்பொருளின்கீழ் நடத்தப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரிவா கங்குலி தாஸ் இந்தக் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பு குறித்து அவர் உரையாற்றினார்.

9. ‘Asia and the Pacific Regional Overview of Food Security and Nutrition’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) உலக பொருளாதார மன்றம்

ஆ) ஐக்கிய நாடுகள்

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) உலக வங்கி

  • ஐக்கிய நாடுகளின் முகமைகளான, UNICEF, FAO, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து Asia and the Pacific Regional Overview of Food Security and Nutrition’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டன. இது, ஆசிய & பசிபிக் பிராந்தியத்தில் ஊட்டச்சத்தின் நிலைகுறித்த மூன்றாவது ஆண்டறிக்கையாகும். ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், 24 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

10. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் எரிவாயு பரிமாற்றகம் எது?

அ) இந்திய வாயு பரிமாற்றகம்

ஆ) இந்திய எண்ணெய் பரிமாற்றகம்

இ) இந்திய இயற்கை எரிவாயு பரிமாற்றகம்

ஈ) இந்திய பெட்ரோலிய பரிமாற்றகம்

  • இந்திய எரிவாயு பரிமாற்றகம் (IGX) என்பது இந்திய ஆற்றல் பரிமாற்றகத்திற்கு (IEX) முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். ஆற்றல் பரிமாற்றக விதிமுறைகள்-2020’இன்கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்திலிருந்து அங்கீகாரம்பெற்ற நாட்டின் முதல் எரிவாயு பரிமாற்றகம் இதுவாகும்.
  • அதானியின் டோட்டல் கேஸ் மற்றும் டோரண்ட் கேஸ் ஆகியவை அண்மையில் இந்திய ஆற்றல் பரிமாற்றகத்தில் தலா ஐந்து சதவீத சமபங்குகளை வாங்கியுள்ளன.

1. Scientists have spotted rare hot UV–bright stars in a cluster, using the telescope onboard which satellite?

A) AstroSat

B) CartoSat–2

C) Risat–7E

D) Insat– 4E

  • Scientists at the Indian Institute of Astrophysics (IIA) an autonomous institute of the Department of Science & Technology, have spotted rare hot UV–bright stars in a massive cluster in our Galaxy called NGC 2808.
  • The Astronomers have used the Ultraviolet Imaging Telescope (UVIT) onboard the first multi–wavelength space satellite of India, AstroSat.

2. Namrup, which was recently making news for its Urea Plant, is located in which state?

A) Assam

B) Chhattisgarh

C) Bihar

D) Uttarakhand

  • Namrup is a town located in the southeastern part of Assam state. Recently a meeting was held by the Ministry of Chemicals & Fertilizers regarding the upcoming urea plant at Namrup.
  • The 12.7 lakh MMTPA capacity project is to be implemented jointly by the National Fertilizers Limited (NFL), Oil India Limited (OIL), Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF), Brahmaputra Valley Fertilizer Corporation Limited (BVFCL) and Assam government.

3. What is Abell 370, whose picture was recently shared by the NASA?

A) Black Hole

B) Exoplanet

C) Galaxy Cluster

D) Meteor

  • NASA has recently posted a picture of Abell 370, a massive cluster of galaxies, captured through its Hubble Space Telescope.
  • As per the statement of NASA, the massive gravity of the cluster makes the light to bend as it passes through. This phenomenon distorts the view of the galaxies behind Abell 370, which is located at 4.9 billion light–years away from the Earth.

4. The ‘1776 Commission report’, which was making news recently, is associated with which country?

A) Japan

B) China

C) United States of America

D) Germany

  • The White House has recently released the 1776 Commission report, which was initiated by former US President Donald Trump in September last year.
  • Trump signed an order to set up a National commission to promote patriotic education in the country, also called as the ‘1776 Commission’. This was seen as a counter to 1619 Project, The New York Times initiative, to mark the completion of 400 years since the enslaved Africans arrived.

5. When is the statehood day of the three states of Meghalaya, Manipur & Tripura celebrated?

A) January 19

B) January 21

C) January 23

D) January 25

  • Meghalaya, Manipur & Tripura celebrated their 49th statehood day on January 21, 2021.
  • On January 21, 1972, these three states became full–fledged states under the North Eastern Region (Reorganisation) Act of 1971. It also led to the formation of the Union territories of Mizoram and Arunachal Pradesh, which were declared as states on February 21, 1987.

6. Hawk–I platform, which was making news recently, is owned by which organisation?

A) DRDO

B) BHEL

C) HAL

D) CSIR

  • The Smart Anti–Airfield Weapon (SAAW) has been indigenously developed by the Defence Research and Development Organisation’s research centre Imarat.
  • Recently, the Hindustan Aeronautics Limited (HAL) successfully test fired a Smart Anti–Airfield Weapon (SAAW) from a Hawk–I aircraft, off the coast of Odisha. HAL deploys its Hawk–I platform for certification of systems and weapons.

7. ‘MASCRADE 2021’, which was making news, is an initiative of which Indian body?

A) CII

B) FICCI

C) CAIT

D) ASSOCHAM

  • The 7th Edition of ‘MASCRADE 2021’– Movement against Smuggled & Counterfeit Trade has been organised by FICCI Committee Against Smuggling and Counterfeiting Activities Destroying the Economy.
  • Union Minister of Health and Family welfare Harsh Vardhan has inaugurated the event, which aims to discuss innovative policy solutions to curb counterfeit and smuggled products.

8. Which meeting was recently conducted under the theme of “The New Normal and Safe and Healthy Tourism”?

A) Asia Cooperation Dialogue – Ministerial Meeting

B) BRICS – Ministerial Meeting

C) G20 – Ministerial Meeting

D) G7 – Ministerial Meeting

  • The 17th Ministerial Meeting of Asia Cooperation Dialogue (ACD) was recently organised under the theme, “The New Normal and Safe and Healthy Tourism” virtually. Riva Ganguly Das, Secretary of the Union Ministry of External Affairs represented India at the meeting.
  • She highlighted about the Indo–Pacific Oceans Initiative announced by Prime Minister Narendra Modi in 2019.

9. The agencies of which organisation released ‘Asia and the Pacific Regional Overview of Food Security and Nutrition’ report?

A) World Economic Forum

B) United Nations

C) Asian Development Bank

D) World Bank

  • The United Nations agencies namely the UNICEF, FAO, WFP and WHO jointly released the ‘Asia and the Pacific Regional Overview of Food Security and Nutrition’ report. It is the third annual report on nutrition in the Asia and Pacific region. 24 million in the Asia and Pacific region are likely to suffer food insecurity.

10. Which is India’s first gas exchange to be authorised by Petroleum and Natural Gas Regulatory Board?

A) India Gas Exchange

B) India Oil Exchange

C) India Natural Gas Exchange

D) India Petroleum Exchange

  • India Gas Exchange (IGX) is a wholly–owned subsidiary of the Indian Energy Exchange (IEX). It is the first gas exchange in the country to be authorised from Petroleum and Natural Gas Regulatory Board under Gas Exchange Regulations 2020.
  • Adani Total Gas and Torrent Gas have recently acquired five percent equity stake each in Indian Gas Exchange (IGX).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!