Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th & 26th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆண்டுதோறும் ‘கிரைம் இந்தியா’ அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 

ஆ) NITI ஆயோக்

இ) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்

ஈ) மத்திய புலனாய்வு வாரியம்

  • தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தால் ஆண்டுதோறும் ‘கிரைம் இந்தியா’ என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இந்தியா, 2020’இல், “சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக 1.20 இலட்சம் இறப்புகளைப்” பதிவுசெய்துள்ளது.
  • 2020ஆம் ஆண்டில், வகுப்புவாத கலவரங்கள் முந்தைய ஆண்டைவிட 96% அதிகரித்துள்ளது. அரசுக்கு எதிரான குற்றங்கள், 2019ஐவிட 27% சரிவடைந்துள்ளன. இந்தப்பிரிவில் உயர்வைப் பதிவு செய்த ஒரே பெரிய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.

2. துளிர் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தெற்காசியாவின் மிகப் பெரிய தயாரிப்பு மேம்பாட்டு மையமான ‘Digital Hub’ஐ திறந்துள்ள மாநிலம் எது?

அ) கேரளா 

ஆ) கர்நாடகா

இ) உத்தரகண்ட்

ஈ) உத்தர பிரதேசம்

  • கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் காணொலிக் காட்சிமூலம் 200 துளிர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் மையத்தை திறந்துவைத்தார். தெற்காசியாவின் மிகப்பெரிய தயாரிப்பு மேம்பாட்டு மையமான இது, கொச்சி கலமசேரியில் உள்ள தொழில்நுட்ப புத்ததாக்க மண்டலத்தில் உள்ளது. கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) இத்திட்டத்தை செயல்படுத்த வழிவகுக்கிறது.

3. பாதுகாப்புப் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் பங்கேற்ற இரண்டு நாடுகள் எவை?

அ) இந்தியா மற்றும் இந்தோனேசியா 

ஆ) இந்தியா மற்றும் நேபாளம்

இ) இந்தியா மற்றும் சீனா

ஈ) இந்தியா மற்றும் பூடான்

  • ஜகார்த்தாவில் செப்.20-22 வரை நடந்த இருதரப்பு கடல் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் இந்திய & இந்தோனேசிய கடற்படை பங்கேற்றது.
  • இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் செயல்பாடுகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை கப்பல்கள் ஷிவலிக் மற்றும் கத்மட் மற்றும் கடற்புற கண்காணிப்பு விமானம் P8I ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

4. சமீபத்தில், செஸ்ஸில் இந்தியாவின் 70ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆனவர் யார்?

அ) தனியா சச்தேவ்

ஆ) சூர்யா சேகர் கங்குலி

இ) பத்மினி ரூட்

ஈ) ராஜா ரித்விக் 

  • தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த ராஜா ரித்விக், ஹங்கேரியின் புடா பெஸ்டில் நடைபெற்ற வெசெர்கெப்ஸோ ஜிஎம் செஸ் சாம்பியன்ஷிப்பில் ELO 2500 மதிப்பெண்களைக்கடந்து இந்தியாவின் 70ஆவது கிராண்ட் மாஸ்டராக ஆனார். செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த FIDE மாஸ்டர் பென்னெக் வக்லாவை வீழ்த்திய பிறகு, அவர் 4 புள்ளிகளைப் பெற்றார்.

5. பஞ்சாபின் 16ஆவது முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?

அ) சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா

ஆ) அருணா சௌத்ரி

இ) சரண்ஜித் சிங் சன்னி 

ஈ) அசோக் கெலாட்

  • பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் நபர் இவராவார். பஞ்சாப் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

6. ‘சூர்யா கிரண்’ என்ற இராணுவப் பயிற்சியில், எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா பங்கேற்கிறது?

அ) வங்காளதேசம்

ஆ) இலங்கை

இ) நேபாளம் 

ஈ) இந்தோனேசியா

  • இந்தியாவும் நேபாளமும் செப்.20 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கரில் 15 நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. 15ஆவது இந்தியா-நேபாள இராணுவப் பயிற்சிக்கு ‘சூர்யா கிரண்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இரு ராணுவத்தினருக்கும் இடையே செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கோடு இது நடத்தப்படுகிறது.

7. ஒலி தயாரிப்பு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கிராபிக் டிசைனிங் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ‘இசைப்பேருந்து’ என்ற ஒன்றைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) கேரளா

இ) தில்லி 

ஈ) மத்திய பிரதேசம்

  • தில்லி அரசானது ‘இசைப்பேருந்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கு ஒலி தயாரிப்பு, திரைப்படத் தயாரிப்பு மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும். இது இந்தியாவின் முதல் ‘நடமாடும் இசை வகுப்பறை மற்றும் ஒலிப்பதிவுக் கூடம்’ ஆகும். தில்லி மாநிலப் பள்ளியின் குழந்தைகள் மத்தியில் இசை மீதான ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக்கொண்டு, நிகழ்த்துக்கலை மற்றும் காட்சிக் கலைக்கான சிறப்புப் பள்ளியில் இது தொடங்கப்பட்டது.

8. FSSAI’இன் மூன்றாவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், பெரிய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத் 

இ) கேரளா

ஈ) கர்நாடகா

  • உணவுப் பாதுகாப்பின் 5 அளவுருக்களில் மாநிலங்களின் செயல்பாடுக -ளை அளவிடும், உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) 3ஆவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டை (SFSI) மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
  • இந்த ஆண்டு, பெரிய மாநிலங்களில், குஜராத் முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன. சிறிய மாநிலங்களில், கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் அதற்கு அடுத்ததாகவும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புது தில்லி முன்னணியில் உள்ளன.
  • நடமாடும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை 109 ஆக உயர்த்தி நாட்டில் உணவுப் பாதுகாப்பு சூழலியலை உறுதிப்படுத்தும் வகையில், 19 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

9. உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2021-உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 40

ஆ) 46 

இ) 35

ஈ) 31

  • 2021 செப்.20 அன்று, உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் 2021 பதிப்பு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (WIPO) வெளியிடப்பட்டது. 2021 பதிப்பானது 81 வெவ்வேறு குறிகாட்டிகளின் அடிப்படையில், 132 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • சுவிச்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இப்புத்தாக்க தரவரிசையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக இதில் முதல் ஐந்து இடங்களுள் தென் கொரியா இடம்பெற்றுள்ளது. முதல் 15 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஆசியப்பொருளாதாரங்கள்: சிங்கப்பூர் (8), சீனா (12), ஜப்பான் (13) மற்றும் ஹாங்காங் (14). இந்தப் பட்டியலில் இந்தியா 46ஆவது இடத்திலுள்ளது.

10. செப்டம்பர்.20-26 வரை ‘வணிக்ய சப்தா’வை கொண்டாடுகிற அமைச்சகம் எது?

அ) வணிக அமைச்சகம் 

ஆ) நிதி அமைச்சகம்

இ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

  • விடுதலையின் அம்ருத் மகோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் வர்த்தகத்துறை, இந்த மாதம் 20 முதல் 26ஆம் தேதி வரை நாடு முழுவதும் வணிகம் மற்றும் வர்த்தக வார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
  • இதன் சமயம் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மற்றும் தொழிற்பூங்கா மதிப்பீட்டு அமைப்பு தளங்கள் ஆகியவை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையால் தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. குஜராத் சட்டப்பேரவைக்கு முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்வாகிறார்

குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து வந்த ராஜேந்திர திரிவேதி, மாநில பாஜக அரசின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 27-ம் தேதி கூடுகிறது. காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு பெண் எம்எல்ஏ நிமாபென் ஆச்சார்யா பெயரை பாஜக அறிவித்தது.

சபாநாயகர் பதவிக்கு நிமாபென் ஆச்சார்யா சார்பிலும், துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ஜேதா பர்வத் சார்பிலும் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸும் சபாநாயகர் பதவிக்கு நிமாபென்னை ஆதரித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானியும் நிமாபென்னுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம், துணை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ அனில் ஜோஷியாராவை நிறுத்தி உள்ளது. இதனால், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

2. டிஎன்பிஎல் புதிய வலைதளம் தொடக்கம்: நிலைப்புத் திறன் அறிக்கை நூல் வெளியீடு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) தனது 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை மெய்நிகர் முறையில் நடத்தியது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட டிஎன்பிஎல் வலைதளம் (https://www.tnpl.com/) தொடங்கிவைக்கப்பட்டது; நிலைப்புத்திறன் அறிக்கை நூலும் வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎல் தொடக்கத்திலிருந்தே ‘கழிவிலிருந்து கொழிக்கும் செல்வம்’ என்ற கோட்பாட்டில் இயங்குகின்ற நிறுவனமாகும். கரும்பின் கழிவான சக்கைதான் டிஎன்பிஎல் தயாரிக்கும் காகிதத்தின் முதன்மையான மூலப்பொருள். கைவிடப்பட்ட சுமார் 1,87,680 ஏக்கர் தரிசு நிலங்களை மரக்கூழ் செய்வதற்கான பசுமை நிலங்களாக டிஎன்பிஎல் மாற்றி இருக்கிறது. இந்தியாவிலேயே தன் உற்பத்தி கழிவிலிருந்து உயர் தரமான சிமென்ட் செய்யும் ஒரே காகித நிறுவனம் டிஎன்பிஎல் ஆகும்.

நேர்மறையான எதிர்காலத்தை எதிர்கொள்ள இந்திய காகித உற்பத்தி தொழில் கூடங்களில் முதன்முறையாக உலக அளவில் பின்பற்றுகிற நிலைப்புத்திறன் அறிக்கையை டிஎன்பிஎல் வெளிக்கொணர்ந்துள்ளது. டிஎன்பிஎல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், நிதித் துறை செயலர் கிருஷ்ணன், கூடுதல் அரசு முதன்மைச் செயலர் ஆகியோரின் முன்னிலையில் ‘Circular Economy – The Roots Of Our Business’ (சுழல் வட்ட பொருளாதாரம் எங்கள் வணிகத்தின் வேர்கள்) என்ற நூல் வெளியிடப்பட்டது.

3. தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் தற்போது ‘நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த `100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

4. ரூ.20,000 கோடியில் 56 ராணுவ விமானங்கள் கொள்முதல்: ஏர்பஸ் – மத்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய விமானப் படைக்கு ரூ.20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏர்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. விமானப் படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஏவ்ரோ-748 ரக விமானங்களுக்குப் பதிலாக, சி-295 ரக ராணுவ சரக்குப் போக்குவரத்து விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. அக்கூட்டத்தில் போர்விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நெதா்லாந்தை தலைமையிடமாகக்கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏர்பஸ் நிறுவனத்தின் ஸ்பெயினில் உள்ள தொழிற்சாலையில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் 16 விமானங்கள் இந்தியாவை வந்தடையும். எஞ்சியுள்ள 40 விமானங்கள், இந்தியாவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இதுதொடர்பாக ஏா்பஸ் நிறுவனத்து -க்கும் டாடா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

5. அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 தொல்பொருட்களுடன் தாயகம் திரும்பும் பிரதமர் மோடி

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, திருடப்பட்ட நம்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும் 157 தொல்பொருட்கள் அமெரிக்க அரசால் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களுடன் பிரதமர் மோடி தாயகம் திரும்புகிறார். 157 கலைப் பொருட்களில் 71 பொருட்கள் கைவினைப் பொருட்கள், இந்து மதத்தின் கலைகளை விளக்கும் 60 சிலைகள், பவுத்த மதத்தை விளக்கும்16 சிலைகள், ஜைன மதத்தை விவரிக்கும் 9 சிலைகள் மீட்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்படுகின்றன.

12 நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலத்தில் செய்யப்பட்ட கடவுள் நடராஜர் சிலை, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த 8.5 செமீ நீளமுள்ள ரேவாந்தா சிலை உள்ளிட்ட மிகப் தொன்மையான சிலைகள் இதில் அடங்கும். இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கலைப் பொருட்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்துவருகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் கடந்த 1976ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகளவில் இந்தியா சார்பில் 13 தொன்மையான பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

ஆனால், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின், இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையு -ம் விளக்கும் கலைப்பொருட்கள் பல்வேறு நாடுகளிலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதிலும் 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஒரு தொன்மையான சிலை மட்டுமே மீட்கப்பட்டது” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 40 ஆண்டுகளில் மீட்கப்பட்டதைவிட அதிகமான தொன்மையான பொருட்களை உலகளவில் இருந்து மோடி அரசு மீட்டுள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு பிரதமர் மோடியின் பயனத்தின் போது, 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுவரையிலான சிலைகள், கிமு காலத்து செம்புச் சிலைகள், டெரகோட்டா சிலைகள் உள்ளிட்ட கலைப் பொக்கிஷங்கள் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. அச்சிலைகளில் பல உலோகச்சிலை, கற்சிலை, டெரகோட்டா சிலை போன்றவை அடங்கும்.

6. வங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி, ‘குலாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘குலாப்’ என்னும் பெயரை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

7. அமெரிக்க மாகாணங்களில் ‘ஹிந்து பாரம்பரிய மாதம்’ கொண்டாட்டம்

அமெரிக்காவில் டெக்சாஸ், ஜெர்ஸி, ஒஹையோ உள்ளிட்ட பல மாகாணங்களில் அக்டோபர் மாதமானது ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு ஹிந்துக்களின் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பல ஹிந்து பண்டிகைக -ள் கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட டெக்சாஸ், புளோரிடா, ஜெர்ஸி, ஒஹையோ, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் தீர்மானத்தை இயற்றியுள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தின் தீர்மானத்தில், ‘நம்பிக்கை, சேவை, கொள்கைப்பகிர்வு உள்ளிட்டவற்றின் ஒளிவிளக்காக ஹிந்துக்கள் திகழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்கள் ஹிந்து நம்பிக்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஹிந்துத்துவமானது தனது தனிப்பட்ட கலாசாரம், வரலாறு காரணமாக மாகாணத்துக்கும் அமெரிக்க நாட்டுக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும் கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும் என்று அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. உலக வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிர் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இரு பிரிவுகளின் இறுதிச்சுற்றிலுமே இந்தியாவிடம் இருந்து கொலம்பியா தங்கத்தை தட்டிப் பறித்தது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதற்கு முந்தைய சீசன்களில் 8 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தங்கம் வெல்வதற்கான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது. உலக சாம்பியன்ஷிப்பின் காம்பவுண்ட் பிரிவில் கொலம்பியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இத்துடன் இப்பிரிவில் அந்த அணிக்கு மொத்தமாக 4 தங்கங்கள் கிடைத்துள்ளன.

9. செப்.25 – உலக மருந்தாளுநர் நாள்.

10. தமிழகத்தில் மாமல்லபுரம், ஏற்காடு, காஞ்சி, குமரி, குற்றாலம், தஞ்சை உட்பட தேசிய கல்விச் சுற்றுலாவுக்காக 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு

ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கல்விச் சுற்றுலாவுக்கு 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், ஏற்காடு உட்பட 6 இடங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற திட்டம் மத்திய அரசால் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தேசிய கல்விச் சுற்றுலாவுக்கு தகுதியான 100 நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

11. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக மீட்டு பறவைகள் சரணாலயமாக மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமிப்புகளில் இருந்து முழுமையாக மீட்டு பறவைகள் சரணாலயமாகவும், அரிய தாவரம், விலங்கினங்களின் சுற்றுச்சூழலியல் வாழ்விடமாகவும் மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12. ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் ரூ.7,523 கோடியில் 118 அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கிகள் தயாரிப்பு: பணி ஆணை வழங்கியது பாதுகாப்புத் துறை

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில், ரூ.7,523 கோடி மதிப்பில் 118 அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கி வாகனங்களைத் தயாரித்து வழங்குவதற்கான பணி ஆணையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. நவீன பீரங்கி வாகனமான எம்கே-1ஏ, அர்ஜுன் பீரங்கி வாகனத்தின் புதிய வகையாகும். எம்கே-1வகை பீரங்கி வாகனத்துடன் ஒப்பிடும்போது 72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு உபகரணங்களும், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பீரங்கி வாகனம், அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாக செல்லும் திறன் பெற்றது. அதோடு, பகலிலும், இரவிலும், துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இந்த பீரங்கி வாகனத்தை, பல மேம்பட்ட வசதிகளுடன் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதனால் இந்த பீரங்கி வாகனம், உலகத் தரத்துக்கு இணையாக இருக்கும்.

இந்நிலையில், அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கிகளைத் தயாரிக்கும் பணி ஆவடி கனரக தொழிற்சாலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறு, சிறு தொழில்நிறுவனங்கள் உட்பட 200 இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

அத்துடன், 8000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த வாகனத்
-தை, போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுநிறுவனம் (சிவிஆர்டிஇ), டிஆர்டிஓ’இன் இதர ஆய்வகங்களுடன் இணைந்து 2 ஆண்டுக்குள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

13. கோவளம் கடற்கரை பகுதியில் திரவக் கழிவுகள் 100 சதவீதம் மறுசுழற்சி: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி சுமார் 1,076 கிமீ நீளம் கொண்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு இந்தியாவின் 9-வது நீலக்கொடி கடற்கரைசான்றிதழை டென்மார்க் நாட்டைச்சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கியுள்ளது. இந்த அமைப்புஉலகளவில் பாதுகாப்பு, துய்மையான கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து இந்த அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

கோவளம் கடற்கரையில் பசுங்கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்களைக் கவர 37 வசதிகள் உள்ளன. இதில் பாதுகாப்பான நீச்சல் மண்டலம், உடைமாற்றுப் பகுதி, சாய்ந்திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள், கழிப்பறை மற்றும் 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மணலை சுத்தம் செய்யும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்கரை மணலும் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகிறது.

கடற்கரையின் நீராடும் மண்டலத்தில் பாதுகாப்பாக நீந்தக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஆம்பிபியஸ் வீல் நாற்காலியும் உள்ளது. கடற்கரையில் குளிப்பதற்கான காலம் ஜனவரி 15 முதல் செப்டம்பர் 15 வரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக 4 கண்காணிப்பு சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த அவசர அழைப்புக்கும் உயிர்காக்கும் காவலர்கள் கண்காணிப்பு கோபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அங்கு உடனடி மருத்துவ கவனிப்பும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 60 எல்இடி ஒளிரும்தெரு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கடற்கரை, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். குளியல் மண்டலத்தில் தூய்மையான நிலையில் நீர் பராமரிக்கப்படுகிறது.

இந்த கடற்கரை, ஒரு பூஜ்ஜிய திரவ கழிவு மேலாண்மை கடற்கரையாக உள்ளது. இங்கு உருவாகும் திரவக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு 100 சதவீதம் மீண்டும்பயன்படுத்தப்படுகிறது. அவற்றைவெளியில் விட்டு மாசுபடுத்தப்படுவதில்லை. அங்கு இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 40 கிலோவாட் சூரிய மின் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 50 கிலோ செயலாக்க திறன் கொண்ட தானியங்கி உரம் தயாரிக்கும் இயந்திரம் கொண்ட திடக்கழிவு மேலாண்மை அலகும் உள்ளது.

1. Which institution releases the ‘Crime India’ report every year?

A) National Crime Records Bureau 

B) NITI Aayog

C) Narcotics Control Bureau

D) Central Board of Investigation

  • The annual ‘Crime India’ report is released by National Crime Records Bureau. The report for the year 2020 was released recently. As per the report, India recorded 1.20 lakh cases of “deaths due to negligence relating to road accidents” in 2020. Communal riots marked an increase of 96% in 2020 over the previous year.
  • Offences against the State’, had a drop of 27% over 2019 but Uttar Pradesh was the only major state to record an increase in this category.

2. Which state has inaugurated South Asia’s largest Product development centre ‘Digital Hub’, to support start–ups?

A) Kerala 

B) Karnataka

C) Uttarakhand

D) Uttar Pradesh

  • Chief Minister of Kerala Pinarayi Vijayan inaugurated Digital Hub with a capacity to support 200 start–ups via video conferencing recently. The product development centre, one of the largest in South Asia, at the Technology Innovation Zone (TIZ) in Kalamassery, Kochi. The Kerala Startup Mission (KSUM) leads the implementation of the project.

3. Which two countries are set to participate in the Defence Exercise ‘Samudra Shakti’?

A) India and Indonesia 

B) India and Nepal

C) India and China

D) India and Bhutan

  • Indian & Indonesian Navy are participating in the two–day bilateral maritime exercise ‘Samudra Shakti’ in Jakarta scheduled from September 20–22. The exercise aims to strengthen the bilateral relationship, enhance mutual understanding and interoperability in maritime operations between the two navies. The Indian Navy ships Shivalik and Kadmatt, and Anti–Submarine Warfare–Long Range Maritime Reconnaissance Aircraft P8I are participating in the exercise.

4. Recently, who has become India’s 70th Grandmaster in Chess?

A) Tania Sachdev

B) Surya Shekhar Ganguly

C) Padmini Rout

D) Raja Rithvik 

  • Raja Rithvik from the state of Telangana has become India’s 70th Grand Master after crossing the ELO 2,500 mark at the Vezerkepzo GM Chess Championship which was held in Budapest, Hungary. After defeating the FIDE master Fennek Vaclav from Czechoslovakia, he scored 4 points.

5. Who has been sworn–in as the 16th chief minister of Punjab?

A) Sukhjinder Singh Randhawa

B) Aruna Chaudhary

C) Charanjit Singh Channi 

D) Ashok Gehlot

  • Charanjit Singh Channi was sworn–in as the 16th chief minister of Punjab and he became the first individual from the Dalit community in Punjab to hold this post. He was sworn in by Banwarilal Purohit, the governor of Punjab.

6. With which country, India is participating in the military training exercise ‘Surya Kiran?’

A) Bangladesh

B) Sri Lanka

C) Nepal 

D) Indonesia

  • India and Nepal on 20th September has begun a 15–day military exercise in Pithoragarh located in the state of Uttarakhand with a focus on counter–terror drills and disaster relief operations. The 15th India–Nepal military training exercise is named ‘Surya Kiran’ and it is being held to boost inter–operability between the two militaries.

7. Which state has launched ‘Music Bus’ to train students in audio production, film production, and graphic designing?

A) Karnataka

B) Kerala

C) Delhi 

D) Madhya Pradesh

  • The Delhi government has launched a “music bus”, which will train students in audio production, film production and graphic design. This is the first “mobile music classroom and recording studio” in India.
  • It was launched at the School of Specialized Excellence in Performing and Visual Arts with the aim to help the children of Delhi State School to pursue their passion for music.

8. In FSSAI’s 3rd State Food Safety Index, which state has topped among the larger states?

A) Tamil Nadu

B) Gujarat 

C) Kerala

D) Karnataka

  • Mansukh Mandaviya, Minister for Health and Family Welfare, released Food Safety and Standards Authority of India (FSSAI)’s third state food safety index (SFSI) to measure the performance of states in five food safety parameters. In this year, Gujarat was the highest ranked state among the larger states, followed by Kerala and Tamil Nadu.
  • Among the smaller states, Goa appeared first, followed by Meghalaya and Manipur. In UT, Jammu and Kashmir, Andaman and Nicobar Islands, and New Delhi topped the list. 19 Mobile Food Testing Vans (Food Safety on Wheels) were also flagged off by the minister to supplement the national food safety ecosystem, bringing the total number of these mobile inspection vehicles to 109.

9. What is India’s rank in the 2021 edition of Global Innovation Index launched by World Intellectual Property Organization?

A) 40

B) 46 

C) 35

D) 31

  • On September 20, 2021, the 2021 edition of the Global Innovation Index (GII) was published by the World Intellectual Property Organization (WIPO). The 2021 edition of GII shows the latest global innovation rankings of 132 economies based on 81 different indicators. Switzerland, Sweden, the United States and the United Kingdom continue to lead the innovation rankings and have entered the top five in the past three years.
  • South Korea will be among the top five in GII for the first time in 2021, while 4 other Asian economies are in the top 15: Singapore (8), China (12), Japan (13) and Hong Kong (14th). India ranks 46th in this list.

10. Which ministry is celebrating ‘Vanijya Saptah’ from 20 to 26 September?

A) Ministry of Commerce 

B) Ministry of Finance

C) Ministry of Corporate Affairs

D) Ministry of Information & Broadcasting

  • During 20–26 September 2021, the Ministry of Commerce is organizing special programmes and events named ‘Vanijya Saptah’, as part of the “Azadi Ka Amrit Mahotsav” celebration.
  • National Single Window System and Industrial Park Rating System platforms will be launched by The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) during this event period.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!