Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th & 26th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

25th & 26th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th & 26th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. மாதிரி பதிவு அமைப்பு அறிக்கை – 2020இன்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் என்னவாக இருந்தது?

அ. 25

ஆ. 32

இ. 37

ஈ. 40

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 32

  • 2022 செப்.22 அன்று வெளியான இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை–2020இன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்துவருகிறது.
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 2020ஆம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 32ஆக இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 35ஆக இருந்தது. சிறுகுழந்தை இறப்பு விகிதமானது (IMR) கடந்த 2020ஆம் ஆண்டில் 1000 உயிர்ப்பிறப்புக்கு 28ஆகவும் கடந்த 2019ஆம் ஆண்டில் 1000 உயிர்ப்பிறப்புக்கு முப்பது ஆகவும் இருந்தது.

2. இந்தியா எந்த மாநிலத்திலிருந்து தாவர அடிப்படையிலான இறைச்சிப்பொருட்களின் முதல் சரக்குகளை ஏற்றுமதி செய்தது?

அ. பீகார்

ஆ. குஜராத்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குஜராத்

  • குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்திலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு தாவர அடிப்படையிலான இறைச்சிப்பொருட்களின் முதல் சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதி ஆணையம் (APEDA) சைவ உணவு வகையின்கீழ் தாவர அடிப்படையிலான இறைச்சிப்பொருட்களின் முதல் சரக்கு ஏற்றுமதியை எளிதாக்கியது. APEDA ஆனது ஆஸ்திரேலியா, இஸ்ரேல், நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளில் சைவ உணவு வகைகளை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

3. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘இந்திய சைகை மொழி அகராதி’ திறன்பேசி செயலியின் பெயர் என்ன?

அ. ISL Seekho செயலி

ஆ. Sign Learn செயலி

இ. Bharat Sign செயலி

ஈ. India Sign Language செயலி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Sign Learn செயலி

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ‘இந்திய சைகை மொழி அகராதி’ என்ற திறன்பேசி செயலியை ‘Sign Learn’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இது 10,000 சொற்களைக்கொண்ட இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் இந்திய சைகை மொழி அகராதியை அடிப்படையாகக் கொண்டதாகும். செவித் திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பாடநூல்களை அணுகும் வகையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான NCERT பாடநூல்களை இந்திய சைகை மொழியில் மாற்றுவதற்காக NCERT உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) கையெழுத்திட்டது.

4. சந்திரனில், ‘Changesite–(Y)’ எனப் பெயரிடப்பட்ட சந்திர படிகத்தைக் கண்டுபிடித்த நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. சீனா

இ. அமெரிக்கா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • நிலவினருகிலுள்ள எரிமலைக்குப்பைகளில் புதிய வகை படிகத்தை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் தூய மற்றும் திறன்மிக்க ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் மிகுந்த ஆற்றல்மூலத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய, ஒளிபுகு அப்படிகமானது, சீன நிலவு தெய்வமான சாங்கேயின் நினைவாக, Changesite–(Y) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

5. ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

  • நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தேசிய மாசற்ற காற்றுத் திட்டம் – 2019 (NCAP) கீழ், ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ திட்டத்தைத் தொடங்கும். 2025–26–க்குள் காற்று மாசுபாட்டை 40 சதவீதம் வரை குறைப்பதற்காக, NCAPஇன் ஒருபகுதியாக தயாரிக்கப்பட்ட நகர்ப்புற செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ நாட்டில் உள்ள 131 நகரங்களைத் தரவரிசைப்படுத்தும்.

6. இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கீழ்க்காணும் எந்நாட்டின் கெளரவ ஜெனரல் பதவியை பெற்றார்?

அ. நேபாளம்

ஆ. வங்காளதேசம்

இ. மியான்மர்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நேபாளம்

  • இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதி மனோஜ் பாண்டேவுக்கு, நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, நேபாள இராணுவத்தின் ஜெனரல் பதவியை வழங்கினார். இவ்விழா இருநாட்டு இராணுவங்களுக்கிடையேயான தனித்துவமான பாரம்பரியத்தின் ஒருபகுதியாக உள்ளது. ஜெனரல் மனோஜ் பாண்டே, நான்கு நாள் அலுவல்பூர்வ பயணமாக நேபாளத்திற்குச் சென்றுள்ளார். பீரங்கி உபகரணங்கள், சுரங்கப்பாதுகாப்பு வாகனங்கள், மருத்துவக் கடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளையும் அவர் நேபாள இராணுவத்துக்கு வழங்கினார்.

7. தேசிய கூட்டுறவுக் கொள்கை ஆவணத்தை வரைவதற்கான குழுவின் தலைவர் யார்?

அ. அமித் ஷா

ஆ. சுரேஷ் பிரபு

இ. L K அத்வானி

ஈ. முரளி மனோகர் ஜோஷி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுரேஷ் பிரபு

  • நடுவண் கூட்டுறவு அமைச்சகமானது தேசிய கூட்டுறவுக் கொள்கை ஆவணத்தை உருவாக்குவதற்கான குழுவை உருவாக்கியுள்ளது. முன்னாள் நடுவணமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நாற்பத்தெழுவர் (47) கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தேசிய கூட்டுறவுக் கொள்கையானது கடந்த 2002இல் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்தியாவில் சுமார் 8.5 இலட்சம் கூட்டுறவுச் சங்கங்கள் 29 கோடி உறுப்பினர்களைக்கொண்டுள்ளன.

8. ‘Transforming Literacy Learning Spaces’ என்பது செப்டம்பர்.8 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்புநாளின் கருப்பொருளாகும்?

அ. உலக கல்வி நாள்

ஆ. உலக எழுத்தறிவு நாள்

இ. உலக கலாச்சார நாள்

ஈ. உலக சமூக கற்றல் நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக எழுத்தறிவு நாள்

  • எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நம்மைச் சுற்றியுள்ள உள்ளூர் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவுமாக ஒவ்வோர் ஆண்டும் செப்.8 அன்று உலக எழுத்தறிவு நாள் அனுசரிக்கப்படு –கிறது. கடந்த 1966ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) செப்.8 உலக எழுத்தறிவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. “Transforming Literacy Learning Spaces” என்பது இந்த ஆண்டு (2022) உலக எழுத்தறிவு நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. தற்போதைய எரிவாயு விலை சூத்திரத்தை மதிப்பாய்வு செய்வதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. சுரேஷ் பிரபு

ஆ. கிரிட் பரிக்

இ. ஜிதேந்திர சிங்

ஈ. ஹர்தீப் சிங் பூரி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கிரிட் பரிக்

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், தற்போதைய எரிவாயு விலை சூத்திரத்தை மறுபரிசீலனை செய்வதற்காக புகழ்பெற்ற எரிசக்தி நிபுணர் கிரிட் பரிக் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. உலகளாவிய இயற்கை எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதால் எரிசக்தி மற்றும் தொழிற்துறை செலவுகள் அதிகரிப்பது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

10. UNESCO பாரம்பரியக் கள இணைப்பிற்காக முன்மொழியப்பட்ட நீலவூரல்லு மற்றும் சாயா சோமேஸ்வராலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. பஞ்சாப்

இ. குஜராத்

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. தெலுங்கானா

  • தெலுங்கானா மாநிலமானது UNESCOஇன் உலக பாரம்பரியக் களப் பட்டியலில் இணைப்பதற்காக கட்டடக்கலை சிறப்புடன் கூடிய இரண்டு நினைவுச்சின்னங்களை முன்மொழிந்துள்ளது. நீலவூரல்லு பெருங்கற்கால புதைகுழி மற்றும் சாயா சோமேசுவராலயம் ஆகியவை அங்கீகாரத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளன. காகத்திய ருத்ரேஸ்வரா கோவிலானது (இராமப்பா கோவில்) ஏற்கனவே உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகம், ‘ஜல்தூத் செயலி’யை உருவாக்கியுள்ளது.

ஊரக வளர்ச்சி அமைச்சகம், ‘ஜல்தூத் செயலி’யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ‘ஜல்தூத்’ செயலி உதவும். ஒவ்வொரு கிராமத்திலும் போதிய இடங்கள் (2-3) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவை அந்தக் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை அறிய உதவும்.

இந்தச் செயலியானது, சரியான தரவுகளுடன் பஞ்சாயத்துகளின் பணிகளை எளிதாக்குவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தடிநீர் தரவுகள், கிராமப்பஞ்சாயத்து வளர்ச்சித்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்களின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும். நீர்நிலைகளை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல், காடுகள் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களின்மூலம், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நீர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

2. 5ஜி சேவைகள்: அக்.1இல் பிரதமர் தொடக்கம்

இந்தியாவில் அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை அக்.1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைக்கவிருப்பதாக நடுவண் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் அக்.1 முதல் 4 வரை இந்திய கைப்பேசி மாநாடு நடைபெறவுள்ளது. முதல்நாளில் 5ஜி சேவையை பிரதமர் மோதி தொடக்கிவைக்கவுள்ளதாக, நடுவண் தகவல் தொடர்புத்துறையின் தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

3. ‘பசுமைத்தமிழ்நாடு’ இயக்கத்துக்கு தனி இணையதளம்

‘பசுமைத்தமிழ்நாடு’ இயக்கத்துக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வியக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வண்டலூரில் தொடக்கிவைத்தார். இந்த இயக்கத்தின் தொடக்க கட்டமாக, நிகழாண்டில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்படும். தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33%ஆக உயர்த்த பசுமைத்தமிழ்நாடு இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

திட்டத்தின் நோக்கம்: ‘பசுமைத்தமிழ்நாடு’ இயக்கத்தின்கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப்பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள், பிற பொது நிலங்களில் உள்ளூர் மரவகைகள் நடப்படும். மேலும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டிமரம் போன்ற மரங்களை வளர்க்க, ‘பசுமைத்தமிழ்நாடு’ இயக்கத்தின்கீழ் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர்.

‘பசுமைத்தமிழ்நாடு’ இயக்கத்துக்காக பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாற்றங்கால்கள் மூலமாக, 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமைத்தமிழ்நாடு இயக்கத்துக்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத் திறன் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.

4. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் 8 ஆண்டுகாலம் நிறைவு: அந்நிய நேரடி முதலீடு `6.27 இலட்சம் கோடியாக இரட்டிப்பு

பிரதமர் நரேந்திர மோதியின் முதல் முன்முயற்சியான, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டு செப்.25ஆம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இந்தத் திட்டத்தில் 2021-22 நிதி ஆண்டில் `6,27,000 கோடி ($83 பில்லியன் டாலர்) அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக நடுவண் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகால சீர்திருத்த நடவடிக்கைகளில் இது இரட்டிப்பு வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டை எளிதாக்குவதற்கான வசதிகள், புத்தாக்க ஊக்குவிப்பு, திறன் மேம்பாடு, சிறந்த உற்பத்தி உள்கட்டமைப்பு போன்ற நோக்கங்களுடன், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் உருவானது. பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின்கீழ் ஆட்சியமையப்பட்டு 2014ஆம் ஆண்டு இந்த, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. புதிய இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் நாட்டை உலகளாவிய அளவில் ஒரு முன்னணி உற்பத்தி, முதலீட்டு இடமாக உருவாக்கும் நோக்கத்துடன் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இதில் நிகழ்ந்துள்ள சாதனைகளை நடுவண் வர்த்தகம், தொழிற்துறை அமைச்சகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: நடுவணரசின் முதன்மைத் திட்டமான, ‘மேக் இன் இந்தியா’ நாட்டை ஒரு முன்னணி உற்பத்தி முதலீட்டு இடமாக உருவாக்கி இருக்கின்றது. உற்பத்தி, சேவைத்துறை உள்ளிட்ட 27 துறைகளில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை புரிந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இந்திய அரசு ஒரு தாராளமயமான, வெளிப்படையான கொள்கையை வகுத்தது. இதன் விளைவு இந்தத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை தங்குதடையின்றி பெறமுடிந்தது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகள் 2014-15 நிதியாண்டில் `2,75,415 கோடியாக ($45.15 பில்லியன் அமெரிக்க டாலர்) இருந்தது. இக்கொள்கை அறிவிப்புக்குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்து 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அந்நிய நேரடி முதலீடாக `6,27,000 கோடியாக ($83.6 பில்லியன் டாலர்கள்) கிடைத்துள்ளது. இந்த FDI சுமார் 101 நாடுகளில் இருந்து வந்துள்ளன. இது 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாட்டை விருப்பத்தக்க முதலீட்டிடமாக மாற்ற சமீபத்தில் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், வணிகத்தை எளிதாக்குதல் போன்ற நடவடிக்கைகள்மூலம், நிகழ் நிதியாண்டில் `7,50,000 கோடி ($100 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் பாதையிலும் நாடு உள்ளது.

நாட்டின் 14 முக்கிய உற்பத்தி துறைகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ) அறிவிக்கப்பட்டு இதன்மூலம் ‘மேக் இன் இந்தியா’ ஊக்கம் பெற்றுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஒப்புதல்கள், அனுமதிகளுக்கு ஒற்றைசாளர முறையில் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்த, ‘தேசிய ஒற்றைச்சாளர அமைப்பு’ கடந்தாண்டு இதே மாதம் தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளத்தில் ஒன்றிய-மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள், துறைசார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கப்பட்டு முதலீட்டாளர்கள் பயன்பட்டுள்ளனர்

‘மேக் இன் இந்தியா’ பார்வையின் மற்றொரு வெளிப்பாடாக, ‘ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு’ என்ற முன்முயற்சி உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய தளத்தை வழங்கி வருகின்றது. இதன்மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேன்மையடைந்து வருகின்றது. இந்தியாவில் வணிகம் செய்யும் முதலீட்டாளர்களுக் -கு, தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் வகையில், இந்தத்திட்டத்தின்மூலம் அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக நாட்டில் பொம்மைகள் இறக்குமதி பெருவாரியாக குறைந்தது. கடந்த 2013 ஆண்டைவிட நிகழ் நிதியாண்டில் 636 சதவீதம் பொம்மைகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மொம்மை ஏற்றமதி `1612 கோடியாக இருக்க 2021-22 நிதியாண்டில் `2,601.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது பலவிதமான சீர்திருத்தங்கள் முதலீடு அதிகரிப்பு போன்றவைகள்மூலம் வளர்ச்சிக்கு வழிவகுத்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. சப்தகோசி அணை திட்டத்தை முன்னெடுக்க இந்தியா-நேபாளம் முடிவு

வெள்ளத்தடுப்பு, நீர்மின்னுற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும் சப்தகோசி அணை திட்டப்பணிகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் நேபாளமும் முடிவெடுத்துள்ளன.

இந்தியா-நேபாளம் இடையேயான நீர்வளங்கள் கூட்டுக்குழுவின் ஒன்பதாவது கூட்டம் நேபாளத்தின் தலைநகரம் காத்மாண்டு நகரத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத்துறைச்செயலர் பங்கஜ் குமார் தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது. நேபாள நீர்வளத்துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இரு நாடுகளுக்கிடையேயான நீர்ப்பகிர்வு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, மகாகாளி ஆற்றுநீர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், சப்தகோசி அணை திட்டத்தை விரைந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பிகார் வழியே இந்தியாவுக்குள் நுழையும் சப்தகோசி ஆற்றில் அணை கட்டுவது தொடர்பான பணிகளை முன்னெடுக்க கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டுமானம் சார்ந்த பணிகள், நீர்த்தேக்கப்பகுதிகள், சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இருநாடுகளின் நிபுணர்கள் குழுவும் விரைவில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாகாளி ஆற்றுநீர் ஒப்பந்தம் இந்தியா-நேபாளம் இடையே கடந்த 1996-ஆம் ஆண்டில் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின்கீழ் மகாகாளி ஆறு, அதன் கிளைநதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. வெள்ளத்தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான கூட்டுக்குழு, கோசி-கண்டக் திட்டத்துக்கான கூட்டுக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

6. நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை…

நாட்டில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இளையோர் பட்டப்படிப்பை முடித்து கல்லூரியைவிட்டு வெளியேறுகி -ன்றனர். ஆனால், அதற்கேற்ப பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகுவதில்லை. புதிய முதலீடுகளை ஈர்த்து, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் (அனைத்துத் தரவுகளும் சதவீதத்தில்)

கடந்த ஓராண்டில் வேலையின்மை விகிதம்

மாதம் இந்தியா நகர்ப்புறம் கிராமப்பகுதிகள்
ஆகஸ்ட்-2022 8.28% 9.57% 7.68%
ஜூலை-2022 6.83% 8.22% 6.17%
ஜூன்-2022 7.83% 7.32% 8.07%
மே-2022 7.14% 8.24% 6.63%
ஏப்ரல்-2022 7.83% 9.22% 7.18%
மார்ச்-2022 7.57% 8.28% 7.24%
பிப்ரவரி-2022 8.11% 7.57% 8.37%
ஜனவரி-2022 6.56% 8.14% 5.83%
டிசம்பர்-2021 7.91% 9.30% 7.28%
நவம்பர்-2021 6.97% 8.20% 6.41%
அக்டோபர்-2021 7.74% 7.37% 7.91%
செப்டம்பர்-2021 6.86% 8.64% 6.04%

ஆகஸ்டில் மாநில வாரியாக வேலையின்மை விகிதம்

ஆந்திரம் – 6%
பிகார் – 12.8%
சத்தீஸ்கர் – 0.4%
தில்லி – 8.2%
கோவா – 13.7%
குஜராத் – 2.6%
ஹரியானா – 37.3%
ஹிமாச்சல பிரதேசம் – 7.3%
ஜார்க்கண்ட் – 17.3%
ஜம்மு-காஷ்மீர் – 32.8%
கர்நாடகம் – 3.5%
கேரளம் – 6.1%
மத்திய பிரதேசம் – 2.6%
மகாராஷ்டிரம் – 2.2%
மேகாலயம் – 2%
ஒடிஸா – 2.6%
பஞ்சாப் – 7.4%
இராஜஸ்தான் – 31.4%
தமிழ்நாடு – 7.2%
தெலங்கானா – 6.9%
திரிபுரா – 16.3%
உத்தர பிரதேசம் – 3.9%
மேற்கு வங்கம் – 7.4%

கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான வேலையின்மை விகிதம்

இந்தியா 7.43%
நகர்ப்புறம் 7.8%
கிராமப்பகுதிகள் 7.2%
ஆண்கள் 6.6%
பெண்கள் 15.2%
நகர்ப்புற ஆண்கள் 6.7%
நகர்ப்புற பெண்கள் 21.6%
கிராமப்புற ஆண்கள் 6.5%
கிராமப்புற பெண்கள் 13%

வயதுவாரியான வேலையின்மை விகிதம்

15-19 – 58%
20-24 – 44%
25-29 – 12.5%
30-34 – 2.5%
35-39 – 1%
40-44 – 0.5%
45-49 – 0.5%
50-54 – 0.5%
55-59 – 0.5%
60-64 – 0.5%

கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலையின்மை விகிதம்

5-ஆம் வகுப்பு வரை – 1%
6-9-ஆம் வகுப்பு – 1.8%
10-12-ஆம் வகுப்பு – 10.7%
பட்டப்படிப்பு – 17.4%

25th & 26th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the Sample Registration System (SRS) Report 2020, what is the Under five mortality rate in 2020, in India?

A. 25

B. 32

C. 37

D. 40

Answer & Explanation

Answer: B. 32

  • As per the Sample Registration System (SRS) Statistical Report 2020 released on September 22, 2022 by Registrar General of India (RGI), India has been witnessing progressive reduction in IMR, U5MR and NMR. Under–five mortality rate was recorded at 32 per 1000 live births in 2020 against 35 per 1000 live births in 2019. Infant Mortality rate (IMR) has also registered 2–point decline to 28 per 1000 live births in 2020 from 30 per 1000 live births in 2019.

2. India exported the first consignment of plant–based meat products from which state?

A. Bihar

B. Gujarat

C. Andhra Pradesh

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Gujarat

  • India has exported the first consignment of plant–based meat products from Kheda district of Gujarat to California in the United States. Agricultural and Processed Food Products Export Authority (APEDA) facilitated the export of the first consignment of plant–based meat products under the Vegan Food category. APEDA has planned to promote a variety of vegan food products to Australia, Israel, New Zealand, and others.

3. What is the name of the Indian Sign Language dictionary mobile application recently launched?

A. ISL Seekho App

B. Sign Learn App

C. Bharat Sign App

D. India Sign Language App

Answer & Explanation

Answer: B. Sign Learn App

  • The Ministry of Social Justice and Empowerment launched an Indian Sign Language (ISL) dictionary mobile application called ‘Sign Learn’. It is based on the Indian sign language dictionary of the Indian Sign Language Research and Training Centre (ISLRTC) which contains 10,000 words. ISLRTC signed MoU with NCERT to convert NCERT textbooks from classes 1 to 12 into the Indian Sign Language to make the textbooks accessible to children with hearing disabilities.

4. Which country has discovered ‘Lunar crystal named ‘Changesite–(Y)’ on the Moon?

A. Israel

B. China

C. USA

D. UAE

Answer & Explanation

Answer: B. China

  • Researchers in China have discovered a new type of crystal in the volcanic debris of the near side of the moon. They also discovered potential fuel source for production of clean and efficient energy on Earth. The small, transparent crystal has been named Changesite–(Y), after the Chinese moon goddess Chang’e.

5. ‘Swachh Vayu Sarvekshan’ programme is implemented by which Union Ministry?

A. Ministry of Rural Development

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Ministry of Agriculture and Farmers Welfare

D. Ministry of Renewable Energy

Answer & Explanation

Answer: B. Ministry of Environment, Forest and Climate Change

  • The Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) will launch the ‘Swachh Vayu Sarvekshan’ programme under National Clean Air Programme 2019 (NCAP). Swachh Vayu Sarvekshan will rank 131 cities in the country for implementing City Action Plans prepared as part of NCAP to reducie air pollution up to 40 per cent by 2025–26.

6. Indian Army Chief General Manoj Pande was conferred with the honorary rank of General of which country?

A. Nepal

B. Bangladesh

C. Myanmar

D. Sri Lanka

Answer & Explanation

Answer: A. Nepal

  • Indian Army Chief General Manoj Pande was conferred with the honorary rank of General of Nepal Army by President of Nepal Bidhya Devi Bhandari. The ceremony was part of the unique tradition between the Armies of both the countries. General Pande is on a four–day official visit to Nepal. He also handed over non–lethal military aids including Artillery Equipment, Mine Protected Vehicles, Medical Stores and Horses to Nepal Army.

7. Who is the head of the ‘Committee for drafting of the national cooperative policy document’?

A. Amit Shah

B. Suresh Prabhu

C. L K Advani

D. Murli Manohar Joshi

Answer & Explanation

Answer: B. Suresh Prabhu

  • The Union Cooperative Ministry announced the constitution of a committee for drafting of the national cooperative policy document. The 47–member committee will be headed by former Union Minister Suresh Prabhu. The existing National Policy on Cooperatives was formulated in 2002. At present, India has around 8.5 lakh co–operative societies with a member base of around 29 crore.

8. “Transforming Literacy Learning Spaces” is the theme of which special day celebrated on September 8?

A. International Education Day

B. International Literacy Day

C. International Culture Day

D. International Community Learning Day

Answer & Explanation

Answer: B. International Literacy Day

  • International Literacy Day is observed every year on September 8 to highlight the importance of literacy and to focus on issues that exist and affect local communities around us. September 8 was proclaimed as International Literacy Day (ILD) by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) in 1966. The theme for International Literacy Day this year is ‘Transforming Literacy Learning Spaces’.

9. Who is the head of the Committee recently set up to review the current gas pricing formula?

A. Suresh Prabhu

B. Kirit Parikh

C. Jitendra Singh

D. Hardeep Singh Puri

Answer & Explanation

Answer: B. Kirit Parikh

  • The Ministry of Petroleum and Natural Gas has set up a committee under noted energy expert Kirit Parikh to review the current gas pricing formula. There have been concerns over rising global natural gas prices increasing energy and industrial costs.  The committee has been asked to submit the report by the end of this month.

10. Nilivurallu and Chaya Someshwaralayam, which were proposed for UNESCO Heritage tag, are located in which state?

A. Karnataka

B. Punjab

C. Gujarat

D. Telangana

Answer & Explanation

Answer: D. Telangana

  • Telangana has proposed two monuments with architectural magnificence for UNESCO World Heritage tag. The Nilivurallu megalithic burial site and Chaya Someshwaralayam were proposed for the recognition. The state has already achieved the World Heritage tag for the Kakatiya Rudreshwara temple (Ramappa temple).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!