Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

25th August 2020 Current Affairs in Tamil & English

25th August 2020 Current Affairs in Tamil & English

25th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

25th August 2020 Current Affairs Pdf Tamil

25th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘பனாரஸ்’ என்று பெயர் மாற்றப்பட்ட மாண்டுவாடி இரயில் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஜார்கண்ட்

ஈ. உத்தரகண்ட்

  • உத்தர பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி இரயில் நிலையத்தை ‘பனாரஸ்’ என்று பெயர்மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேச மாநில அரசு தனது வாரணாசி மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்னர் கோரிக்கை அனுப்பியிருந்தது. இரயில்வே அமைச்சகம், இந்திய அஞ்சல் துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர், உள்துறை அமைச்சகம் ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை வழங்கியது.

2. சீன மக்கள் வங்கியானது எந்த இந்திய தனியார்துறை வங்கியில் பங்குகளை வாங்கியுள்ளது?

அ. YES வங்கி

ஆ. ஆக்ஸிஸ் வங்கி

இ. ஐ சி ஐ சி ஐ வங்கி

ஈ. I D B I வங்கி

  • சீன மக்கள் வங்கியானது ஐ சி ஐ சி ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. `15,000 கோடி மதிப்பிலான தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின்கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் `15 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது.

3. ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை கண்காணிப்புக்கு பயன்படுத்துகிற அமைப்பு எது?

அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

ஆ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

இ. இரயில்வே பாதுகாப்புப் படை

ஈ. இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப்படை

  • கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் ரயில்வே சொத்துக்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இவை பயன்படுத்தும் என இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்துள்ளது.
  • RPF, அண்மையில், `30 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள ஒன்பது ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளது. நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நேரலை திறன்கொண்ட அதிக ஆளில்லா வான்வழி வாகனங்களை விரைவில் வாங்கவுள்ளதாகும் RPF தெரிவித்துள்ளது.

4.ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளைக்கொண்ட இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்கா எது?

அ. திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா

ஆ. மைசூரு உயிரியல் பூங்கா

இ. டார்ஜிலிங் உயிரியல் பூங்கா

ஈ. ‘பேரறிஞர்’ அண்ணா உயிரியல் பூங்கா

  • ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக்கொண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது. விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தின்கீழ், இந்த வனவுயிரிச்சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளை வாங்கியது.15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.

5.பொது தகுதித் தேர்வுகளை நடத்துவதற்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ‘NRA’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. New Recruitment Agency

ஆ. National Recruitment Agency

இ. New Recruitment Administration

ஈ. National Rating Agency

  • தேசிய பொது நுழைவுத்தேர்வினை நடத்துவதற்காக ‘தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA)’ என்ற புதிய நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்தத் தேர்வு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் நுணுக்கம் சாராத பணியிடங்களுக்கான பொதுத் தேர்வாக இருக்கும். SSC, RRB மற்றும் IBPS போன்ற முகமைகளால் தற்போது நடத்தப்படும் முதல்நிலைத்தேர்வுகளை இந்நிறுவனம் நடத்தும்.

6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மரணப்பள்ளத்தாக்கு – Death Valley’ அமைந்துள்ள நாடு எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. கனடா

ஈ. பிரேசில்

  • ‘மரணப்பள்ளத்தாக்கு’ என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு ஆகும்.
  • அண்மையில், இந்த மரணப்பள்ளத்தாக்கின் பர்னஸ் கிரீக்கில், வெப்பநிலை, 54.4°C ஆக பதிவாகியது. உலக வானிலை அமைப்பின்படி, இது, 1913ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை மரணப்பள்ளத்தாக் -கில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக 56.7°C உள்ளது. இது, கடந்த 1913’இல் பதிவுசெய்ய -ப்பட்டது. இது, பூமியின் மேற்பரப்பில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக இன்றும் உள்ளது.

7. ‘Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific’ என்ற அறிக்கையை ILO உடன் இணைந்து வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. UNESCO

ஈ. உலகப் பொருளாதார மன்றம்

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், COVID-19 தொற்றுநோயால், நாட்டில் 41 இலட்சம் இளையோர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific” அறிக்கையில், கட்டுமானம் மற்றும் வேளாண் துறை தொழிலாளர்களே பெரும்பான்மையாக வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திடீர் நெருக்கடியில், பெரியோரைவிட (25 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) இளையோரே (15-24 வயது) மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

8.சுதேச நுண்செயலி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியா தொடங்கிய சவாலின் பெயரென்ன?

அ. தற்சார்பு சவால்

ஆ. இந்தியாவில் தயாரிப்போம் சவால்

இ. தன் முன்னேற்றச் சவால்

ஈ. சுதேசி நுண்செயலி சவால்

  • “சுதேசி நுண்செயலி” உற்பத்தி மற்றும் வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு “சுதேசி நுண்செயலி சவால்” என்றவொன்றைத் தொடங்கியுள்ளது. இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 100 நிறுவ -னங்களுக்கு அவர்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கு தேவையான மானியம் வழங்கப்படும். 25 இறுதிப்போட்டியாளர்கள் தலா `1 கோடி ரொக்கப்பரிசை வெல்வார்கள். முதல் பத்து அணிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பன்னிரண்டு மாத அடைவு ஆதரவுடன் மொத்தம் `2.30 கோடி நிதி கிடைக்கும்.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஸ்டெர்லைட் காப்பர்” உடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளம்

ஈ. கர்நாடகம்

  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலைமூலமாக இந்தியாவின் செப்புத்தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்திசெய்துவந்தது. உருக்காலையை மீண்டும் திறக்கும் நோக்கோடு, வேதாந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது.

10. ‘தூய்மை ஆய்வு – 2020’இல், ‘தூய்மையான நகரம்’ என்ற விருதை வென்ற நகரம் எது?

அ. திருச்சி

ஆ. சூரத்

இ. சேலம்

ஈ. இந்தூர்

  • ‘தூய்மை ஆய்வு – 2020’ என்ற பெயரில் தூய்மை குறித்த வருடாந்திர ஆய்வின் முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பட்டியலில், தொடர்ச்சியாக நான்காண்டுகளாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப்பிடித்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் சூரத் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை நகரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இது, ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும். தூய்மை இந்தியா இயக்கத்தில் நகரங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அவை வரிசைப்படுத்தப்படுகின்றன.
  • இப்பட்டியலில், தமிழ்நாடு அளவில், திருச்சி மாநகராட்சி (1-10 இலட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளின் பிரிவில்) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் (தேசிய அளவில் 102ஆவது இடம்) பிடித்துத்துள்ளது. பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட மாநகரா -ட்சிகளின் பிரிவில் மதுரை 42ஆவது இடமும், கோயம்புத்தூர் 40ஆவது இடமும், சென்னை 45ஆவது இடமும் பெற்றுள்ளது.

1. Manduadih railway station, that was renamed as ‘Banaras’, is located in which state?

[A] Bihar

[B] Uttar Pradesh

[C] Jharkhand

[D] Uttarakhand

  • The Union Ministry of Home Affairs has recently approved to rename the Manduadih railway station in Uttar Pradesh as ‘Banaras’. The state government of Uttar Pradesh had earlier sent a request to the Home Ministry for renaming the railway station in its Varanasi district. The Home Ministry issued a no–objection certificate after consulting with the Ministry of Railways, Department of Posts and Survey of India.

2. People’s Bank of China (PBOC) has acquired a stake in which Indian private sector bank?

[A] Yes Bank

[B] Axis Bank

[C] ICICI Bank

[D] IDBI Bank

  • People’s Bank of China (PBOC) has acquired a small equity stake in the leading Indian private sector bank, ICICI Bank. It is one among the 357 institutional investors which had subscribed to the issue of the Qualified institutional investors (QIP) placement, of Rs 15,000 crore. PBOC has invested Rs 15 crore in the issue. It had earlier bought a stake in leading institution, HDFC.

3. Which organisation is deploying ‘Ninja’ unmanned aerial vehicles (UAVs) for surveillance?

[A] ISRO

[B] DRDO

[C] Railway Protection Force

[D] ITBP

  • Indian Railways have announced that it has procured ‘Ninja Unmanned Aerial Vehicles’ (UAV) for surveillance operations. The Railway Protection Force is deploying the Ninja UAVs to improve monitoring and provide safety to railway assets and passengers. RPF has recently procured nine drones worth over Rs 30 lakh. It is to procure more drones shortly, which are capable of for real–time tracking and video streaming.

4. Which is the second Indian zoo to have African hunting cheetahs?

[A] Thiruvananthapuram Zoo

[B] Mysuru Zoo

[C] Darjeeling Zoo

[D] ‘Perarignar’ Anna Zoological Park

  • The Mysuru Zoo in Karnataka is the second Indian zoo to have African hunting cheetahs after the Hyderabad zoo. Under the Animal Exchange Programme, the zoo has acquired one male and two female African hunting Cheetah from Ann Van Dyke Cheetah Centre at Johannesburg, South Africa. One female Cheetah of age 15 months and two male Cheetahs of age 14 and 16 months are brought by air.

5. What is the expansion of ‘NRA’, that has been approved by the Cabinet, for conducting common entrance examinations?

[A] New Recruitment Agency

[B] National Recruitment Agency

[C] New Recruitment Administration

[D] National Rating Agency

  • The Union Cabinet has recently approved to set up a new entity named ‘National Recruitment Agency (NRA)’ to carry out a national Common Entrance Test (CET). This exam would be a common screening test for non–gazetted vacancies in both departments of Central government and public sector organisations. It is to conduct first level tests currently conducted by agencies like SSC, RRB and IBPS among others. Related Questions

6. Death Valley, that is seen in news recently, is located in which country?

[A]  South Africa

[B] USA

[C] Canada

[D] Brazil

  • The Death Valley is a desert valley which is located in Eastern California, USA. Recently, the temperature at the Death Valley’s Furnace Creek is recorded at 54.4°C. This would be hottest temperature officially verified since 1913, as per World Meteorological Organization. According to the WMO, Death Valley’s all–time record high is 56.7°C that was recorded in the year 1913.It still stands as the hottest ever temperature recorded on the surface of the earth.

7. Which organisation along with ILO released the report “Tackling the COVID–19 Youth Employment Crisis in Asia and The Pacific”?

[A] World Bank

[B] Asian Development Bank

[C] UNESCO

[D] World Economic Forum

  • A joint report by the International Labour Organization (ILO) and the Asian Development Bank (ADB) stated that, 41 lakh youth in the country lost jobs due to the COVID–19 pandemic. The ‘Tackling the Covid–19 youth employment crisis in Asia and the Pacific’ report stated that construction and farm sector workers account for the majority of job losses. Youth (15–24 years) will be hit harder than adults (25 and older) in the immediate crisis.

8. What is the name of the challenge that is launched by India, to promote indigenous microprocessor manufacturing?

[A] Atma Nirbhar Challenge

[B] Make in India Challenge

[C] Self–Reliance Challenge

[D] Swadeshi Microprocessor Challenge

  • “Swadeshi Microprocessor Challenge” has been launched by the Government of India to promote indigenous microprocessor manufacturing and designing. 100 shortlisted companies will be given grant to build their prototype. 25 finalists will win Rs.1 crore each.
  • The top ten teams will get a fund of total Rs.2.30 crore with 12–month incubation support, from the Ministry of Information Technology.

9. “Sterlite Copper” which is in news recently is associated with which state?

[A] Tamil Nadu

[B] Andhra Pradesh

[C] Kerala

[D] Karnataka

  • The High Court of Madras has rejected reopening of “Sterlite Copper” smelting plant in Tuticorin, Tamil Nadu. Sterlite Copper, a unit of Vedanta Ltd had been catering to nearly 40 % of India’s copper demand from its smelting plant at Tuticorin.
  • The High Court’s order dismissed all 10 petitions filed by Vedanta to reopen the plant. The Court upheld the orders issued to close the plant by the Tamil Nadu Government and Tamil Nadu Pollution Control Board.

10. Which city has won the ‘cleanest city award’ in the Swachh Survekshan 2020 survey?

[A] Trichy

[B] Surat

[C] Salem

[D] Indore

  • The Union Government has announced the results of annual survey of cleanliness, the ‘Swachh Survekshan 2020’. Indore of Madhya Pradesh bagged the top spot in the list, for four years consecutively. Gujarat’s Surat was ranked at the second place while Maharashtra’s Navi Mumbai on third place. This is the fifth edition of the survey, that ranks states based on their performance in Swachh Bharat Mission.
  • In Tamil Nadu, Trichy Corporation (in the category of corporations with a population range of 1–10 lakhs) has topped the list for the 5th consecutive year (102nd nationally). Madurai is ranked 42nd, Covai – 40th and Chennai – 45th in the category of municipalities with a population of over 1M.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!