Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

25th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 25th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th August 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ஆண்டுதோறும் எந்த மாதத்தில், ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது?

அ. ஜூலை

ஆ. ஆகஸ்ட்

இ. செப்டம்பர்

ஈ. அக்டோபர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்

  • குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆக.1–7 வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் “Step Up for Breastfeeding: Educate and Support”. கடந்த 1990ஆம் ஆண்டில், உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் UNICEF ஆகியவை தாய்ப்பாலூட்டலை ஆதரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமாக குறிப்பாணையொன்றை உருவாக்கியது. 1991ஆம் ஆண்டு தாய்ப்பாலூட்டும் நடவடிக்கைக்கான உலகக் கூட்டணி (WABA) நிறுவப்பட்டது. கடந்த 1992ஆம் ஆண்டில், முதல் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டது.

2. நடுவண் கலாச்சார அமைச்சகமானது கீழ்க்காணும் எந்நிறுவனத்துடன் இணைந்து, ‘இந்தியா கி உடான்’ என்ற முனைவைத் தொடங்கியது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகுள்

இ. மெட்டா

ஈ. அமேசான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கூகுள்

  • கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா புரிந்த அதன் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், கலாச்சார அமைச்சகமும் கூகுளும் இணைந்து, ‘இந்தியா கி உதான்’ என்ற முனைவைத் தொடங்கின. இந்தக் கொண்டாட்டம், புது தில்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டு முனைவானது விடுதலை அமுதப்பெருவிழாவின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகிய சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கண்காட்சியை கூகுள் கலை மற்றும் கலாச்சார பிரிவு வெளியிட்டது.

3. தனது சுற்றுலா வளர்ச்சியின் ஒருபகுதியாக ‘மோதி சுற்று’ என்றவொன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தரகாண்ட்

இ. சிக்கிம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தரகாண்ட்

  • கார்பெட் புலிகள் சரணாலயத்தில், ‘மோதி சுற்று’ ஒன்றை உருவாக்கப்போவதாக உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில், ‘மேன் vs வைல்ட்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது பிரதமர் நரேந்திர மோதி சென்ற இடங்களை உள்ளடக்குவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, V பிரணவ் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. துப்பாக்கி சுடுதல்

ஆ. சதுரங்கம்

இ. பளு தூக்குதல்

ஈ. தடகளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சதுரங்கம்

  • சென்னையைச்சேர்ந்த செஸ் வீரர் V பிரணவ் ருமேனியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவின் 75ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆனார். 15 வயதான அவர், ருமேனியாவின் பையா மாரில் லிம்பீடியா ஓபனில் தனது மூன்றாவது மற்றும் இறுதி GM நெறியைப்பெற்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். அவர் ஒன்பது சுற்றுகளில் 7 புள்ளிகள் பெற்று போட்டியை நிறைவுசெய்தார். பிரணவ், தமிழ்நாட்டின் 27ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

5. உலகின் மிகவுயரமான இரயில்வே பாலம் அமைந்துள்ள இந்திய மாநிலம்/UT எது?

அ. சிக்கிம்

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜம்மு காஷ்மீர்

  • ஜம்மு–காஷ்மீரில் அமைந்துள்ள செனாப் பாலம் உலகின் மிகவுயரமான இரயில்பாலமாகும். உலகின் மிகவுயரமான இந்த இரயில்வே பாலத்தின் எஃகு வளைவு கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது; அதே வேளையில் மேம்பாலத்தளம் கட்டி முடிக்கப்படவுள்ளது. செனாப் இரயில்வே பாலத்தின் மேல்தளம் பொன்னிணைப்புடன் கட்டி முடிக்கப்படும் போது அது உலகின் மிகவுயரமான இரயில் பாலத்திற்கான சாதனையை அடையும்.

6. அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. Dr N கலைச்செல்வி

ஆ. மார்கரெட் அல்வா

இ. Dr இரஞ்சினி இரகுநாத்

ஈ. ஜெயஸ்ரீ சத்தியநாராயணா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Dr N கலைச்செல்வி

  • Dr N கலைச்செல்வி, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைமை இயக்குநராக ஆனார். ஆற்றல் ஆராய்ச்சியாளரான அவர் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளராக இருப்பார். நடுவண் அரசின் அறிவியல் துறையின் செயலாளராக பதவி வகிக்கும் நான்காவது பெண் அறிவியலாளர் இவர் ஆவார்.

7. லடாக்கின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, 2022 – ‘dPal rNgam Duston’ விருதைப் பெற்றவர் யார்?

அ. நரேந்திர மோதி

ஆ. தலாய் லாமா

இ. திரௌபதி முர்மு

ஈ. M வெங்கையா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தலாய் லாமா

  • திபெத்திய ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவுக்கு லடாக்கின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘dPal rNgam Duston’ விருது வழங்கப்பட்டது. லேவில் உள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலால் ஆறாம் முறையாக இந்த விருது வழங்கப்படுகிறது. மனிதகுலத்திற்கு, குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தலாய் லாமா ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

8. ‘12ஆவது இராணுவக் கண்காட்சி’ நடைபெறும் இடம் எது?

அ. மைசூரு

ஆ. காந்திநகர்

இ. புனே

ஈ. விசாகப்பட்டினம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. காந்திநகர்

  • 2022 அக்.18–22ஆம் தேதிகளுக்கு இடையே குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 12ஆவது இராணுவக் கண்காட்சி நடைபெறும் என நடுவண் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இது தரை, கடற்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் குறித்த இந்தியாவின் முதன்மையான கண்காட்சியாகும்.
  • “Path to Pride” என்பது இந்தப் பதிப்பிற்கானக் கருப்பொருளாக உள்ளது. ஆயுதப்படைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையின் இராணுவ உபகரணங்கள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் நேரடி செய்முறை விளக்கங்கங்கள் சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெறும்.

9. உலக U20 தடகள சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனையான ரூபல் சௌத்ரி சார்ந்த விளையாட்டு எது?

அ. ஈட்டியெறிதல்

ஆ. குண்டெறிதல்

இ. தொடரோட்டம் மற்றும் குறுவிரைரோட்டம்

ஈ. உயரந்தாண்டுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தொடரோட்டம் மற்றும் குறுவிரைரோட்டம்

  • உலக U20 தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ரூபல் சௌத்ரி படைத்தார். அவர் 4×400 மீ தொடரோட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தையும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கத்தையும் வென்றார். உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு கொலம்பியாவில் நடைபெற்றது.

10. ‘வஜ்ர பிரஹார் – 2022’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. பிரான்ஸ்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் சிறப்புப் படைகளுக்கு இடையே இயங்குதிறனை மேம்படுத்துவதற்காக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பக்லோவில், ‘வஜ்ர பிரஹார் – 2022’ என்ற இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. இந்திய–அமெரிக்க கூட்டு சிறப்புப் படைகளின் பதிமூன்றாவது பதிப்பான, ‘வஜ்ர பிரஹார் – 2022’ ஆனது இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, பக்லோவில் உள்ள சிறப்புப்படைகள் பயிற்சிப்பள்ளியில் தொடங்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. சாகித்திய அகாதெமி: யுவ புரஸ்கார், பால சாகித்திய விருதுகள் அறிவிப்பு – தமிழ்மொழிப்பிரிவில் பி காளிமுத்து, ஜி மீனாட்சி தேர்வு

2022ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பி காளிமுத்து, ஜி மீனாட்சி ஆகியோரின் படைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இலக்கிய உலகில் உயரிய விருதாக, ‘சாகித்திய அகாதெமி’ விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப்படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருதையும் இந்திய பிராந்திய மொழிப்படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2022) இரு விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

சாகித்திய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில், மேலும் 23 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழிப்பிரிவில்…: தமிழ்மொழிப்பிரிவில், “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” எனும் கவிதை தொகுப்புக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பி காளிமுத்துவுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி மீனாட்சி எழுதிய, “மல்லிகாவின் வீடு” எனும் சிறுகதை நூலுக்கு ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விருதுகளும் தாமிரப்பட்டயம் மற்றும் `50,000 காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

தமிழ் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, நேபாளி, ஒடியா, தெலுங்கு, சமற்கிருதம், உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. பிரிட்டனுக்கான அடுத்த இந்தியத்தூதர் விக்ரம் துரைசுவாமி

பிரிட்டனுக்கான அடுத்த இந்தியத்தூதராக மூத்த வெளியுறவுப்பணி அதிகாரி விக்ரம் கே துரைசுவாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனுக்கான தூதர் காயத்ரி இஸ்ஸார் குமார் கடந்த ஜூன்.30 அன்று ஓய்வுற்றார். தற்போது வங்கதேசத்துக்கான தூதராக உள்ள விக்ரம் துரைசுவாமி, பிரிட்டனுக்கான அடுத்த இந்தியத்தூதராக விரைவில் பொறுப்பேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இருநாடுகளுக்கு இடையே வளர்ந்துவரும் இராஜீய ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியப்பொறுப்புக்கு விக்ரம் துரைசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவுப்பணி அதிகாரியான விக்ரம் துரைசுவாமி, 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர். வங்கதேசத்துக்கான இந்தியத்தூதராக கடந்த 2020, அக்டோபர் மாதம் இவர் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா-வங்கதேச உறவு வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.

3. உலகின் முதல் ஹைட்ரஜன் இரயில் சேவை: ஜெர்மனியில் தொடக்கம்

உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் இரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கிமீ இரயில் பாதையில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்கு மாற்றாக, புவியை வெப்பமாக்கும் வளிகளை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் இரயில்கள் இயக்கப்படவுள்ளன.

9.3 கோடி யூரோ (சுமார் `737 கோடி) செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

4. முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஜூடோ போட்டி கௌகாத்தியில் 27-ந்தேதி தொடங்குகிறது

முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஜூடோ போட்டி ஆகஸ்ட்.27 முதல் இந்தியாவில் நான்கு மண்டலங்களில் நடைபெறவுள்ளது. நடுவணரசின் முதன்மைத் திட்டத்தின்மூலம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை முன்னெடுக்க இளையோர் விவகாரங்கள் & விளையாட்டு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு முயற்சியாகும் இது. தேசிய சுற்றுக்கு முன் நான்கு மண்டலங்களில் நடைபெறும் இந்தப் போட்டி, ஒரு திறந்த மண்டல அளவிலான தரவரிசைப் போட்டியாகும். போட்டியாளர்கள் 4 வித வயது பிரிவுகளில் உள்ளனர்.

25th August 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. World Breastfeeding Week is observed every year during which month?

A. July

B. August

C. September

D. October

Answer & Explanation

Answer: B. August

  • World Breastfeeding Week is observed every year, from August 1 to 7, to insist on regular breastfeeding for babies. This year’s theme for World Breastfeeding Week is ‘Step Up for Breastfeeding: Educate and Support’. In 1990, the World Health Organization (WHO) and UNICEF created a memorandum, to support and encourage breastfeeding. The World Alliance for Breastfeeding Action (WABA) was established in 1991. The inaugural World Breastfeeding Week was observed in 1992 to promote the campaign.

2. Ministry of Culture launched an initiative ‘India ki Udaan’ along with which company?

A. Microsoft

B. Google

C. Meta

D. Amazon

Answer & Explanation

Answer: B. Google

  • Ministry of Culture and Google launched an initiative, ‘India ki Udaan’ to celebrate the spirit of India and its achievements in past 75 years. This celebration started in New Delhi. This joint venture was organised under the aegis of Azadi ka Amrit Mahotsav. Google Arts and Culture unveiled an exhibit created to honour the achievers of India in the last 75 years.

3. Which state has announced to develop ‘Modi circuit’ as a part of its tourism development?

A. Gujarat

B. Uttarakhand

C. Sikkim

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Uttarakhand

  • The Uttarakhand tourism department has announced to develop a ‘Modi circuit’ at the Corbett Tiger Reserve. It aims to cover the places visited by Prime Minister Narendra Modi while shooting for the ‘Man vs Wild’ television programme in 2019.

4. V Pranav, who was seen in the news, is associated with which sports?

A. Shooting

B. Chess

C. Weightlifting

D. Athletics

Answer & Explanation

Answer: B. Chess

  • A Chennai–based chess player V Pranav became India’s 75th Grandmaster by winning a tournament in Romania. The 15–year–old player won the Limpedea Open in Baia Mare, Romania to secure his third and final GM norm and attain the Grandmaster title. He also finished the tournament with 7 points from 9 rounds. Pranav is the 27th GM from the state of Tamil Nadu.

5. The world’s highest railway bridge is located in which Indian state/UT?

A. Sikkim

B. Jammu and Kashmir

C. Arunachal Pradesh

D. Assam

Answer & Explanation

Answer: B. Jammu and Kashmir

  • The Chenab Bridge is the world’s highest railway bridge, which is located in Jammu and Kashmir. The steel arch of the world’s highest railway bridge was completed last year, while the overarch deck is set to be completed. Another milestone at the world’s highest railway bridge will be achieved when the overarch deck of the Chenab Railway Bridge is completed with a golden joint.

6. Who was appointed as the first woman chief of the Council of Scientific and Industrial Research?

A. Dr N Kalaiselvi

B. Margaret Alva

C. Dr Ranjini Raghunath

D. Jayashree Sathyanarayana

Answer & Explanation

Answer: A. Dr N Kalaiselvi

  • Dr N Kalaiselvi has become the first woman Director General of the Council of Scientific and Industrial Research (CSIR). The Energy researcher will be the Secretary to the Department of Scientific and Industrial Research. She is the only fourth woman scientist to occupy the position of a secretary of a scientific department under the central government.

7. Who is the recipient of the ‘2022 dPal rNgam Duston’ award, the highest civilian honour of Ladakh?

A. Narendra Modi

B. Dalai Lama

C. Draupadi Murmu

D. M Venkaiah

Answer & Explanation

Answer: B. Dalai Lama

  • Tibetan spiritual leader Dalai Lama was honoured with the ‘dPal rNgam Duston’ award, the highest civilian honour of Ladakh. The sixth award was conferred by Ladakh Autonomous Hill Development Council (LAHDC), Leh to Dalai Lama, for his immense contribution to humanity, especially towards the union territory.

8. Which is the location of the ‘12th edition of the Defence Expo’?

A. Mysuru

B. Gandhinagar

C. Pune

D. Visakhapatnam

Answer & Explanation

Answer: B. Gandhinagar

  • The Ministry of Defence announced that the 12th edition of the Defence Expo, will be held in Gandhinagar, Gujarat between October 18 and 22, 2022 It is India’s flagship exhibition on Land, Naval and Homeland Security systems. The theme for this edition is ‘Path to Pride’. Live demonstrations showcasing the military equipment and skill set of the Armed Forces, Defence PSUs and Industry will be held at the Sabarmati River Front.

9. Rupal Chaudhary, who became the first Indian athlete to win two medals at the World U20 Athletics Championships, plays which sport?

A. Javelin throw

B. Shot Put

C. Relay and Sprint

D. High Jump

Answer & Explanation

Answer: C. Relay and Sprint

  • Rupal Chaudhary created history by becoming the first Indian athlete to win two medals at the World U20 Athletics Championship. She clinched silver medal in the 4x400m relay as well as a bronze medal in the women’s 400m. Also known as the World Junior Championships, the event was held in Colombia.

10. ‘Ex Vajra Prahar 2022’ is a military exercise between India and which country?

A. Japan

B. USA

C. France

D. Sri Lanka

Answer & Explanation

Answer: B. USA

  • India and the US commenced a military exercise named ‘Ex Vajra Prahar 2022’ in Himachal Pradesh’s Bakloh to improve interoperability between their Special Forces. The 13th Edition of the Indo–US Joint Special Forces exercise ‘Ex Vajra Prahar 2022’ commenced at the Special Forces Training School (SFTS), Bakloh, as per the Indian Army.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!