Tnpsc

25th February 2020 Current Affairs in Tamil & English

25th February 2020 Current Affairs in Tamil & English

25th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

25th February 2020 Current Affairs in Tamil

25th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. Vellbergia bartholomaei எந்த இனத்தைச் சார்ந்ததாகும்?

அ. தவளை

ஆ. பல்லி

இ. சிலந்தி

ஈ. பாம்பு

 • ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு புதிய வரலாற்றுக்கு முந்தைய ஊர்வன இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தற்கால பல்லி மற்றும் பாம்பினங்களுக்கு மூதாதையர் எனக்கூறப்படுகிறது. ‘Vellbergia bartholomaei’ என இந்தப் பழங்கால பல்லியினம் அழைக்கப்படுகிறது. இந்தக்கண்டுபிடிப்பு, நான்கு கால் உயிரினங்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.அண்மையில் பதவி விலகிய லியோ வரட்கர், எந்த நாட்டின் பிரதமராக இருந்தார்?

அ. பிரான்ஸ்

ஆ. அயர்லாந்து

இ. நெதர்லாந்து

ஈ. கிரீஸ்

 • அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கர், அண்மையில் தனது பிரதமர் என்று பொருள்படும், ‘தாவோசீச்’ பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது இராஜிநாமாவை, ஐரிஷ் அதிபர் மைக்கேல் ஹிக்கின்ஸிடம் சமர்ப்பித்த போதிலும், தொடர்ந்து இடைக்காலத்தலைவராக பதவியிலிருப்பார். அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பின்படி, ‘தாவோசீச்’ மற்றும் பிற அரசாங்கப் பதவிகளுக்கு பிறிதொரு நபர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே பதவியிலிருக்கும் அந்நபரே தொடர்ந்து அந்தக்கடமைகளைச் செய்திடவேண்டும்.

3.தாய்மங்கூர் மீன்களின் இனப்பெருக்க மையங்களை அழிக்க உத்தரவிட்ட மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. மேற்கு வங்கம்

இ. அஸ்ஸாம்

ஈ. மகாராஷ்டிரா

 • நன்னீர் மங்கூர் போன்ற தோற்றத்தைக்கொண்ட தாய்மங்கூர் மீன், மாநிலத்தில் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் வளர்க்கப்படுகிறது. இதன் நுகர்வின் காரணமாக மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. எனவே, தாய்மங்கூர் மீன்களின் இனப்பெருக்க மையங்களை அழிப்பதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. மீன் விற்பனைக்கு தடைவிதிக்க, மாநில மீன்வளத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த 2000ஆம் ஆண்டில் இவ்வகை மீனினங்களை விற்பனை செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

4.அடல் கிசான் – மஜ்தூர் சிற்றுண்டிச்சாலைகள் திட்டம் தொடர்புடைய மாநிலம் எது?

அ. உத்தரபிரதேசம்

ஆ. ஹரியானா

இ. உத்தரகண்ட்

ஈ. மத்தியப் பிரதேசம்

 • ஹரியானா மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வின்போது, ஹரியானா அரசு, அடல் கிசான்-மஜ்தூர் சிற்றுண்டிச்சாலைகளை மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து சந்தைகள் & சர்க்கரை ஆலைகளிலும் திறக்கும் என அம்மாநில ஆளுநர் அறிவித்தார். வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 10 ரூபாய்க்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக இந்தச் சிற்றுண்டிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதுபோன்ற 25 சிற்றுண்டிச்சாலைகள் மாநிலம் முழுவதும் நிறுவப்படவுள்ளன.

5.ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூபன் திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்

 • ஷியாமா பிரசாத் முகர்ஜி ரூபன் திட்டம் தொடங்கப்பட்ட நான்காவது ஆண்டுவிழா பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ், இதே தேதியில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதன்கீழ், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட ரூபன் தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.

6. ‘வியூ பாயிண்ட்ஸ் – Viewpoints’ என்பது எந்தப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலியாகும்?

அ. கூகிள்

ஆ. அமேசான்

இ. பேஸ்புக்

ஈ. ஆப்பிள்

 • ‘Viewpoints’ என்பது பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சி பயன்பாடு ஆகும். கருத்துக்கணிப்புகள், பணிகள் மற்றும் தயாரிப்பு-சோதனைகளில் பங்கேற்க பயனரை இது கேட்டுக்கொள்கிறது. பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சு-அங்கீகார தொழினுட்பத்தை மேம்படுத்துவதற்காக, தங்கள் குரலைப்பதிவுசெய்ய ஒப்புக்கொள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களின் குழுவிற்கு நிதிரீதியாக வெகுமதி அளிப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப்பயன்பாட்டில், ‘உச்சரிப்பு’ என்ற புதிய நிரலைப்பயன்படுத்தி பயனர்கள் ஒலியைப் பதிவுசெய்யவேண்டும்.

7.அண்மையில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், ‘தேசிய இயற்கை உணவுத் திருவிழா’ நடைபெற்றது?

அ. இலட்சத்தீவுகள்

ஆ. அஸ்ஸாம்

இ. மகாராஷ்டிரா

ஈ. புது தில்லி

 • மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதல் மற்றும் பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரால், அண்மையில், புது தில்லியில் ‘தேசிய இயற்கை உணவுத்திருவிழா’ திறந்துவைக்கப்பட்டது.
 • “Unleashing India’s Organic Market Potential” என்பது இந்தத் திருவிழாவின் கருப்பொருளாகும். நாடு முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான பெண் தொழில்முனைவோர் மற்றும் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்தோர், இந்த 3 நாள் திருவிழாவில், தங்களது இயற்கைத் தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

8.இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களுக்காக, பெருந்தோட்டப்பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கி -ல், எந்த நாட்டிற்கு மானியம் வழங்க இந்தியா தயாராகவுள்ளது?

அ. வங்கதேசம்

ஆ. இலங்கை

இ. நேபாளம்

ஈ. லாவோஸ்

 • இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களுக்கான பெருத்தோட்டப்பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் கையெழுத்தான இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், ஒன்பது தோட்டப்பள்ளிகளின் உட் கட்டமைப்பு, இந்தியாவால் வழங்கப்படும் `30 கோடி நிதியுதவியுடன் தரப்படுத்தப்படவுள்ளது. இந்திய மானியத்துடன், பல பள்ளி கட்டிடங்களில் புனரமைப்புப்பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9. ‘தல் சேனா பவன்’ கட்டப்படவுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ. ஜம்மு – காஷ்மீர்

இ. புது தில்லி

ஈ. சண்டிகர்

 • இந்தியாவின் புதிய இராணுவ தலைமையகத்துக்கு, ‘தல் சேனா பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், தில்லி கன்டோன்மென்ட்டில், இந்தப்புதிய தலைமையகத்திற்கான அடிக்கல்லை பாதுகாப்பு அமைச்சர் நாட்டினார். இப்புதிய இராணுவ தலைமையகம் 39 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
 • இதில், புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புத் தலைமைத் தளபதி அலுவலகமும் அமைக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்பலமாடிக்கட்டட வளாகத்தில் அனைத்து இராணுவ அலுவலகங்களும் இருக்கும்.

10.எம்மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், இந்தியாவின் முதல் மிதக்கும் படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கோவா

இ. மும்பை

ஈ. குஜராத்

 • இந்தியாவின் முதல் மிதக்கும் படகுத்துறையானது கோவா மாநிலம் பனாஜியில் பாயும் மாண்டவி ஆற்றின்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் படகுத்துறையானது, மாநில துறைமுகத்துறையின் வளாகத்தில் அமைந்துள்ளது. சிமென்ட் கான்கிரீட்டால் ஆன இந்தப் படகுத்துறை, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மர்மகோவா துறைமுகத்தில் அமைந்துள்ள பயண முனையம் மற்றும் குடிவரவு வசதியுடன் கூடிய இந்தப் படகுத்துறையை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!