Tnpsc

25th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீபத்தில், அறிவியலாளர்கள், எந்தப் பண்டையகால விலங்கின் புதைபடிவத்திலிருந்து மிகப்பழமையான DNA’ஐக் கண்டறிந்தனர்?

அ) தொன்மா

ஆ) திமிங்கலம்

இ) மாமூத்

ஈ) புலி

  • அண்மையில், அறிவியலாளர்கள் மிகப்பழமையான DNA கூறைப் பதிவு செய்துள்ளனர். அது, வடகீழை சைபீரியாவில் 1.2 மில்லியன் ஆண்டுகள் வரை இருந்த மாமூத்துகளின் பற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலும், அழிவு நிலைக்காளான உயிரினங்களின் பண்புகளை தீர்மானிப்பதிலும் இது ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, துப்ரி புல்பாரி பாலம், பின்வரும் எந்த ஆற்றின்மீது கட்டப்படவுள்ளது?

அ) பிரம்மபுத்திரா

ஆ) கோபிலி

இ) டீஸ்டா

ஈ) லோகித்

  • அண்மையில் பிரதமர் மோடி, பிரம்மபுத்திரா ஆற்றின்மீது கட்டப்படவுள்ள துப்ரி-புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்பாலம், அஸ்ஸாமில் உள்ள துப்ரி முதல் மேகாலயாவில் உள்ள புல்பாரி வரையிலான 19 கிமீ., நீளத்திற்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இப்பாலம், பராக் பள்ளத்தாக்கில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.
  • இது, வடகீழை மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் இடையேயான தொலைவையும் குறைக்கிறது.

3. “2021 TIME100 Next”, TIME இதழின் 100 வளர்ந்துவரும் தலை -வர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய ஆர்வலர் யார்?

அ) சந்திரசேகர் ஆசாத்

ஆ) கைலாஷ் சத்தியார்த்தி

இ) திஷா ரவி

ஈ) சபூரா சர்கர்

  • “2021 TIME100 Next” என்ற தலைப்பிலான TIME இதழின் 100 “எதிர்கா -லத்தை வடிவமைக்கும் தலைவர்களின்” பட்டியல் வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், சாதி அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும் பணியாற்றி வரும் பீம் படையின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய ஆர்வலராவார்.
  • ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக், டுவிட்டர் வழக்குரைஞர் விஜயா கட்தே, இன்ஸ்டாகார்ட் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரி -யுமான அபூர்வா மேத்தா, இலாப நோக்கற்ற நிறுவனமான Get Us PPE’ இன் ஷிகா குப்தா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமான Upsolve’இன் நிறுவனர் ரோகன் பவுலூரி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற இந்திய வம்சாவளியினராவர்.

4. நூறாவது K9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ள நிறுவனம் எது?

அ) DRDO

ஆ) OFB

இ) L&T

ஈ) HAL

  • லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனமானது நூறாவது K9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை உருவாக்கி வழங்கியுள்ளது. இது, 2017’இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கடைசி தெறோச்சியாகும். இந்த அமைப்பானது தென்கொரிய பாதுகாப்பு நிறுவனமான ஹன்வா டிபென்ஸிலிருந்து பெறப்பட்ட நுட்பத்துடன் கட்ட -ப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹசிராவில் உள்ள இந்திய இராணுவத்தின் வளாகத்திலிருந்து இந்தத் தெறோச்சி பணியில் சேர்க்கப்பட்டது.

5. ‘QUAD’ என்பது இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் கீழ்க்காணும் எந்த நாடும் இணைந்த ஓர் அமைப்பாகும்?

அ) ஐக்கியப்பேரரசு

ஆ) ஆஸ்திரேலியா

இ) கனடா

ஈ) பிரான்ஸ்

  • இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் குழுமமான ‘QUAD’இன் மெய்நிகராக நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் பங்கேற் -றார். சீனாவின் ஆக்கிரமிப்பைக் கையாளுவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் வலிமையை மேம்படுத்துவதற்குமாக கடந்த 2017ஆம் ஆண்டில் QUAD சங்கம் புதுப்பிக்கப்பட்டது.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ஜோ பிடன், தற்போது இதே சிக்கலு -க்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

6. ஜிலிங்-லாங்லோட்டா இரும்புத்தாது சுரங்கம் & குவாலி இரும்புத் தாது சுரங்கம் ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) ஜார்க்கண்ட்

இ) ஒடிசா

ஈ) சத்தீஸ்கர்

  • சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும், ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அம்மாநிலத்திலுள்ள ஜிலிங்-லங்லோடா இரும்புத்தாது தொகுதி, குவாலி இரும்புத்தாது தொகுதியில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்கள். இந்த இரண்டு சுரங்கங்களும் ஒடிஸா மாநிலத்திற்கு சுமார் `5000 கோடி வருவாயையும் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளையும் ஈட்டித்தரும்.

7. COVID-19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?

அ) இலங்கை

ஆ) இந்தியா

இ) ஐக்கியப்பேரரசு

ஈ) வங்காளதேசம்

  • COVID-19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் உயர்மட்ட அளவிலான சட்டஅமைச்சர்கள் கூட்டம், லங்கையின் சட்ட அமைச்சரால் தலைமைதாங்கப்பட்டது. இது, காமன்வெல்த் செயலகத்தால் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.
  • மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ இரவிசங்கர் பிரசாத் சார்பாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் அனூப் குமார் மெண்டிராட்டா இந்தியாவை பிரதிநிதித்துவப் -படுத்தினார். COVID-19 தொற்றுகாலத்தின்போது வழக்குகளுக்கு சரியான நேரத்தில் தீர்வுகாண்பதற்காக, இந்தியா, காணொலி முறையை பயன்படுத்தியதாக அமைச்சர் அப்போது கூறினார்.

8. நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக இந்திய அரசு அமைத்த நிதியத்தின் பெயரென்ன?

அ) SWAYAM

ஆ) SVAGRUH

இ) SWAMIH

ஈ) AHAM

  • Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) நிதியத்தை `250 பில்லியன் மதிப்பில் இந்திய அரசு அமைத்துள்ளது.
  • இந்தியாவில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக இந்த நிதியம் நிறுவப்பட்டுள்ளது. SBICAP நிறுவ -னம் இதன் நிதி மேலாளராக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 16 திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலா நாமக் அரிசி’ அல்லது பெளத்த அரிசி என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • உத்தரபிரதேச மாநிலமானது இருபது டன் பெளத்த அரிசி (‘கலா நாமக்’ அரிசி என்றும் அழைக்கப்படுகிறது) சரக்குகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இவ்வகை அரிசி, இந்தியாவில் விளையும் நறுமண அரிசிகளின் வகைகளுள் மிகச்சிறந்த ஒன்றாகும். பெளத்தத்தை ஏற்றுக்கொ -ண்டுள்ள நாடுகளை இலக்காக வைத்து இது விளைவிக்கப்படுகிறது. இதை, சித்தார்த் நகர் மாவட்டத்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என உபி மாநில அரசு அறிவித்துள்ளது.

10. புகழ்பெற்ற ‘கஜுராகோ நடன விழா’வை நடத்துகிற மாநில அரசு எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மேற்கு வங்கம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) பீகார்

  • மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுராஹோ நகரத்தில் பண்டைய காலத்திய பல்வேறு ஹிந்து மற்றும் சமணக்கோவில்கள் உள்ளன. இது, UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமுமாகும். 6 நாள் நடைபெறும் ‘கஜுராஹோ நடன விழா’வானது 44 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கோவில் வளாகத்தில் தொடங்கியுள்ளது.
  • நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது தொடர்பா -க எழுந்த புகார்களை அடுத்து, இந்திய தொல்லியல் ஆய்வகம், கோவில் வளாகத்தினுள் இவ்விழாவை நடத்துவதற்கான அனுமதியை இரத்து செய்திருந்தது. கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக, இந்தத் திருவிழா திறந்தவெளியிலேயே நடத்தப்பட்டு வந்தது.

1. Recently, Scientists have discovered the oldest DNA on record from the fossil of which ancient animal?

A) Dinosaur

B) Whale

C) Mammoth

D) Tiger

  • Recently, Scientists have recovered the oldest DNA on record. It has been extracted from teeth of mammoths found in north–eastern Siberia that existed to 1.2 million years. This is seen as a major breakthrough in understanding the evolution of species and determine the characteristics of extinct species.

2. The Dhubri Phulbari bridge which was making news recently, is to be built over which river?

A) Brahmaputra

B) Kopili

C) Teesta

D) Lohit

  • Prime Minister Narendra Modi recently laid the foundation stone for Dhubri–Phulbari Bridge over Brahmaputra river. It is a 19 km long 4–lane bridge to be laid from Dhubri in Assam to Phulbari in Meghalaya.
  • The bridge will improve transport connectivity in the Barak valley. It also reduces the distance between the four North eastern states of Meghalaya, Manipur, Mizoram and Assam.

3. Who is the only Indian activist to feature in the 2021 TIME100 Next, TIME magazine’s annual list of 100 emerging leaders?

A) Chandrashekhar Azad

B) Kailash Satyarthi

C) Disha Ravi

D) Safoora Zargar

  • The TIME magazine’s annual list of 100 “emerging leaders who are shaping the future”, named the “2021 TIME100 Next”, was released recently. Chandrashekhar Azad, the leader of the Bhim army, which runs school to educate Dalit children and works to curb caste–based violence, featured in the list.
  • Other 5 Indian origin personalities are UK finance minister Rishi Sunak, Twitter lawyer Vijaya Gadde, Instacart founder and CEO Apoorva Mehta, ED of nonprofit Get Us PPE Shikha Gupta and founder of nonprofit Upsolve Rohan Pavuluri.

4. Which organisation delivered the 100th K9 Vajra tracked self–propelled howitzer to the Indian Army?

A) DRDO

B) OFB

C) L&T

D) HAL

  • Larsen & Toubro (L&T) has built and delivered the 100th K9 Vajra tracked self–propelled howitzer. This is the last howitzer of the contract awarded in 2017. This system has been built with technology transfer from South Korean defence major Hanwha Defense.
  • The howitzer was flagged off at the Indian Army’s armoured system complex at Hazira in Gujarat.

5. ‘QUAD’ is a group of four countries: India, United States, Japan and …………………?

A) United Kingdom

B) Australia

C) Canadsa

D) France

  • External Affairs S. Jaishankar participated in a virtual ministerial meeting of the QUAD, which is a group of four countries: India, United States, Japan and Australia. The QUAD association was revived in the year 2017, to tackle the aggression of China and enhance the strength of the Indo–Pacific regions. President Joe Biden has reiterated the US commitment for the same issue.

6. Jiling–Langlota Iron ore Block and Guali Iron ore Block are situated in which Indian state?

A) Bihar

B) Jharkhand

C) Odisha

D) Chhattisgarh

  • Union Minister for Mines, Pralhad Joshi and Chief Minister of Odisha, Naveen Patnaik jointly inaugurated the production in two new iron ore mines of Odisha namely Jiling–Langlota Iron ore Block and Guali Iron ore Block.
  • These mines will generate approxiately Rs 5000 crores of annual revenue for Odisha and a wide variety of employment opportunities.

7. Which country chaired the Commonwealth Law Ministers Meeting on the legal aspects of COVID–19?

A) Sri Lanka

B) India

C) United Kingdom

D) Bangladesh

  • The Commonwealth High–Level Law Ministers Meeting on the Legal aspects of COVID–19 was chaired by the Law Minister of Sri Lanka. It was organised in virtual mode by Commonwealth Secretariat. Anoop Kumar Mendiratta, Secretary, Department of Legal Affairs, Ministry of Law & Justice represented India on behalf of Union Minister for Law & Justice Shri Ravi Shankar Prasad.
  • He said that India used video–conferencing to dispose the cases in a timely fashion during the pandemic.

8. What is the name of the fund set up by Government of India to complete stalled housing projects?

A) SWAYAM

B) SVAGRUH

C) SWAMIH

D) AHAM

  • Special Window for Completion of Construction of Affordable and Mid–Income Housing Projects’ (SWAMIH) fund was set up by the Government of India with a corpus of Rs.250 billion.
  • The fund was established to complete stalled housing projects in India. SBICAP Ventures Ltd is the fund manager. It is proposed to handover 16 projects in the current financial year.

9. ‘Kala Namak Rice’ or Buddha Rice, which was making news recently, is associated with which Indian state?

A) Bihar

B) Uttar Pradesh

C) Madhya Pradesh

D) Maharashtra

  • Uttar Pradesh is set to export a consignment of 20 tonnes of Buddha Rice, also known as “Kala Namak” Rice to Singapore. This variety of rice is one of the finest varieties of aromatic rice in India.
  • This will boost the farm exports of the states with more focus on the Buddhist countries. The state Government has declared it as the ‘One District One Product’ of Siddharth Nagar district.

10. Which Indian state hosts the famous ‘Khajuraho Dance Festival’?

A) Uttar Pradesh

B) West Bengal

C) Madhya Pradesh

D) Bihar

  • Khajuraho city in the state of Madhya Pradesh has several ancient Hindu and Jain temples. It is also a UNESCO World Heritage site.
  • The six–day Khajuraho Dance Festival began on the temple premises after 44 years. ASI had cancelled the permission as there were reports of destruction of monuments and defacement of idols. For the last 44 years, the festival was organised in open grounds.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!