TnpscTnpsc Current Affairs

25th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில், “சர்வதேச பொதுச்சுகாதார அவசரநிலை” என அறிவிக்கப்பட்டது எது?

அ. தக்காளி காய்ச்சல்

ஆ. குரங்கம்மை 

இ. பறவைக்காய்ச்சல்

ஈ. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

  • உலக நலவாழ்வு நிறுவனம் உலகளாவிய குரங்கம்மை பாதிப்பை, ‘சர்வதேச பொதுச்சுகாதார அவசரநிலை’ என அறிவித்துள்ளது. இந்த வகைப்பாடு, ‘தொற்றுநோய்க்கு’ம் ஒருபடி கீழே உள்ளது. எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவடைந்து வரும் குரங்கம்மை பாதிப்பானது தற்போது உலகளாவிய அவசரநிலையாக தகுதிபெற்றுள்ளதாக WHO கூறுகிறது.

2. ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் எந்தப் பதக்கம் வென்றார்?

அ. தங்கம்

ஆ. வெள்ளி 

இ. வெண்கலம்

ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

  • ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப்பெற்றதன்மூலம் மற்றொரு வரலாற்றைப்படைத்துள்ளார். மூத்த நீளந்தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்பதால், நீரஜ் சோப்ரா முதல் தடகள வீரர் ஆனார். ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் 88.13 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நடப்புச்சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

3. 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், ‘சிறந்த திரைப்படமாக’ அறிவிக்கப்பட்ட ‘சூரரைப்போற்று’ என்ற திரைப் படத்தில் நடித்த நடிகர் யார்?

அ. இரஜினிகாந்த்

ஆ. சிவகார்த்திகேயன்

இ. சூரியா 

ஈ. கமல்ஹாசன்

  • 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் தில்லியில் அறிவிக்கப்பட்டனர். மதிப்புமிக்க விருதுகள் இந்திய அரசின் திரைப்பட விழா இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, ‘சிறந்த திரைப்படம்’ விருது தமிழ் திரைப்படமான சூரரைப்போற்றுக்கு வழங்கப்பட்டது; அதன் நடிகர் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி இரு விருதுகளை வென்றனர். சிறந்த நடிகருக்கான விருதை தன்ஹாஜி படத்திற்காக அஜய் தேவ்கனும் பகிர்ந்து கொண்டார். மலையாளத்தில் வெளியான, ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படம் சிறந்த இயக்குநர் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றது.

4. சமீபத்தில் இ–FIR அமைப்பை அறிமுகப்படுத்திய மாநில காவல்துறை எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத் 

இ. பஞ்சாப்

ஈ. ஒடிஸா

  • நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநில காவற்துறையின் இ–FIR அமைப்பை காந்திநகரில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, குடிமக்கள், காவல் நிலையங்களுக்குச் செல்லாமல் இணைய முறையில் FIR பதிவுசெய்ய உதவும். குஜராத் மாநில காவல்துறையின் அனைத்து முக்கிய சேவைகளும் இணைய வழியில் கிடைக்கப்பெறும். FIR பதிவு செய்த 48 ம நேரத்திற்குள், புகார்தாரரை காவல்துறை நேரடியாக தொடர்புகொள்ளும்.

5. நாட்டிலேயே முதல், ‘ஹர் கர் ஜல்’ சான்றிதழ்பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்ட புர்ஹான்பூர் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. மத்திய பிரதேசம் 

இ. பீகார்

ஈ. கொல்கத்தா

  • மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள புர்ஹான்பூர் மாவட்டம் நாட்டிலேயே முதல், ‘ஹர் கர் ஜல்’ சான்றிதழ் பெற்ற மாவட்டமாகும். இது, ‘தக்கின் தர்வாசா’ என்றும் அழைக்கப்படுகிறது. 2019–இல், ‘ஜல் ஜீவன் மிஷன்’ தொடங்கப்பட்ட பிறகு, பஞ்சாயத்து பிரதிநிதிகள், பானி சமிதிகள் மற்றும் புர்ஹான்பூரின் மாவட்ட அதிகாரிகள் அதன் அனைத்து 1,01,905 கிராமப்புற வீடுகளுக்கும் 34 மாதங்களுக்குள் குழாய் நீர் இணைப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

6. பன்னாட்டு செலவாணி நிதியத்தின், ‘முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்களின் குழுமத்தில்’ இடம்பெற்ற முதல் பெண்மணி யார்?

அ. ஜெயதி கோஷ்

ஆ. அருந்ததி பட்டாச்சார்யா

இ. கீதா கோபிநாத் 

ஈ. அருணிமா சின்ஹா

  • பன்னாட்டு செலவாணி நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், IMF–இன், ‘முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்களின் குழுமத்தில்’ இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2003 மற்றும் 2006–க்கு இடையில் IMF–இன் தலைமை பொருளாதார நிபுணராகவும், ஆராய்ச்சி இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். இரகுராம் இராஜனுக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் ஆவார் இவர்.

7. நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெவார் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் கீழ்க்காணும் எந்த மாநிலத்திற்கும் இடையே கிரீன்ஃபீல்ட் இணைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ. பீகார்

ஆ. ஹரியானா 

இ. குஜராத்

ஈ. உத்தரகாண்ட்

  • நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஹரியானாவுக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் ஜெவார் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் இடையே கிரீன்ஃபீல்ட் இணைப்பை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கான செலவு மதிப்பீடு மொத்தம் `2,414.67 கோடியாகும். இந்த வானூர்தி நிலையம் தில்லி–மும்பை விரைவுச்சாலையை இணைக்கும்.

8. ‘ஸ்த்ரீ நிதி’ என்பது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடைய திட்டமாகும்?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. தெலுங்கானா 

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • தெலுங்கானா மாநில அரசு, ‘ஸ்திரீ நிதி’மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுமார் `3700 கோடி கடன் வழங்கி உள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட சுமார் `600 கோடி அதிகம். அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, கடந்த 8 ஆண்டுகளில் சுமார் `14,750 கோடியை சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்களை அமைப்பதற்காக தெலுங்கானா மாநில அரசாங்கம் செலவிட்டுள்ளது.

9. ‘தேசிய மீன் விவசாயிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.06

ஆ. ஜூலை.08

இ. ஜூலை.10 

ஈ. ஜூலை.25

  • நாடு முழுவதுமுள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.10 அன்று தேசிய மீன் விவசாயிகள் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் 2022 ஜூலை.10 அன்று 65ஆவது தேசிய மீன் விவசாயிகள் நாள் கொண்டாடப்பட்டது.
  • நாட்டில் முதன்முறையாக கடந்த 1957 ஜூலை.10ஆம் தேதி அன்று, பெரிய கெண்டை மீன்களின் தூண்டப்பட்ட இனப்பெருக்கத்தை அடைவதில் பேராசிரியர் Dr ஹிராலால் சௌத்ரி மற்றும் அவரது சக ஊழியர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

10. ‘சீ கார்டியன்ஸ்–2’ என்பது கீழ்க்காணும் எந்த இரு நாடுகளால் நடத்தப்படும் கூட்டு கடல்சார் பயிற்சியாகும்?

அ. அமெரிக்கா–பாகிஸ்தான்

ஆ. சீனா–பாகிஸ்தான் 

இ. இந்தியா–பாகிஸ்தான்

ஈ. இலங்கை–பாகிஸ்தான்

  • ‘சீ கார்டியன்ஸ்–2’ என்ற கூட்டு கடல்சார் பயிற்சிக் குறியீட்டின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் பாகிஸ்தான் கடற் படைகள் ஷாங்காய் கடற்கரையில் நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சியைத் தொடங்கின. கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கூட்டாக சமாளிக்க கடற்படையினர் தங்களது புதிய உயர்தொழில்நுட்ப கடற்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தவுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. மத்திய பிரதேசத்தில் நிகழாண்டு 27 புலிகள் இறப்பு: நாட்டிலேயே அதிகம்

‘புலிகள் மாநிலம்’ என்று அறியப்படும் மத்திய பிரதேசத்தில் நிகழாண்டு 27 புலிகள் இறந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் 74 புலிகள் இறந்துள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 74 புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 27 புலிகள் இறந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் 15, கர்நாடகத்தில் 11, அஸ்ஸாம் 5, கேரளம், இராஜஸ்தானில் தலா 4, உத்தர பிரதேசத்தில் 3, ஆந்திர பிரதேசத்தில் 2, பிகார், ஒடிஸா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 1 என்ற எண்ணிக்கையில் புலிகள் இறப்பு பதிவாகியிருக்கிறது. புலிகளுக்கு இடையே நடக்கும் சண்டை, வயது மூப்பு, நோய்கள், வேட்டை, மின் வேலியில் சிக்குவது போன்றவை புலிகள் இறப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. அங்கு 526 புலிகள் உள்ளன. கன்ஹா, பாந்தவ்கர், பெஞ்ச், சாத்புரா, பன்னா, சஞ்சை துப்ரி ஆகிய 6 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

1. WHO has recently declared which outbreak as a “public health emergency of international concern” (PHEIC)?

A. Tomato Flu

B. Monkeypox 

C. Bird–Flu

D. African swine fever

  • The World Health Organisation has declared the global monkeypox outbreak a ‘public health emergency of international concern’ (PHEIC). This classification is one step below that of a ‘pandemic.’ WHO says the expanding monkeypox outbreak in over 70 countries is now qualified as a global emergency.

2. Olympic champion Neeraj Chopra won which medal in the 2022 World Athletics Championships?

A. Gold

B. Silver 

C. Bronze

D. None of the above

  • Olympic champion Neeraj Chopra scripted another history as he became only the second Indian and to win a medal in the World Championships. He is also the first male track and field athlete as the legendary long jumper Anju Bobby George was the first Indian to win a medal. Neeraj clinched silver in the javelin throw final with his best throw of 88.13m. Defending champion Anderson Peters of Grenada won gold with a throw of 90.54m.

3. Which actor acted in the movie ‘Soorarai Pottru’ which was declared as ‘Best Feature Film’ at the 68th National Film Awards?

A. Rajinikanth

B. Sivakarthikeyan

C. Suriya 

D. Kamalhassan

  • The winners of the 68th National Film Awards were announced in New Delhi. The prestigious awards are administered by the Government of India’s Directorate of Film Festivals. This year, the ‘Best Feature Film’ award was given to the Tamil film Soorarai Pottru, while its actor Suriya and Aparna Balamurali won two awards. Ajay Devgn for Tanhaji also shared the Best Actor award. The Malayalam movie ‘Ayyappanum Koshiyam’ won several awards including Best Director.

4.  Which Indian state police recently launched e–FIR system?

A. Rajasthan

B. Gujarat 

C. Punjab

D. Odisha

  • Union Minister Home Minister Amit Shah launched the e–FIR system of Gujarat Police in Gandhinagar. The system will enable the citizens to file an FIR online, without visiting the police stations. All important services of Gujarat Police will be made available online. Within 48 hours of registering the FIR, the police will contact the complainant directly.

5. Burhanpur, which was declared the first ‘Har Ghar Jal’ certified district in the country, is in which state?

A. Telangana

B. Madhya Pradesh 

C. Bihar

D. Kolkata

  • Burhanpur district in Madhya Pradesh becomes the first ‘Har Ghar Jal’ certified district in the country. It is also called the ‘Darwaza of Dakhin’. After the launch of ‘Jal Jeevan Mission’ in 2019, Panchayat representatives, Pani Samitis and district officials of Burhanpur took efforts to achieve functional tap water connections to all its 1,01,905 rural households within a span of 34 months.

6. Who is the first woman to be featured on the ‘wall of former chief economists’ of the IMF?

A. Jayati Ghosh

B. Arundhati Bhattacharya

C. Gita Gopinath 

D. Arunima Sinha

  • The First Deputy Managing Director of the International Monetary Fund (IMF) Gita Gopinath has become the first woman to be featured on the ‘wall of former chief economists’ of the IMF. She is also the only second Indian to achieve this feat after Raghuram Rajan who was named during his service as IMF’s Chief Economist and Director of Research between the years 2003 and 2006. Gita Gopinath served as the first female chief economist of IMF for– the last three years.

7. The Union Road Ministry has approved the construction of Greenfield connectivity to Jewar International Airport in Uttar Pradesh and which state?

A. Bihar

B. Haryana 

C. Gujarat

D. Uttarakhand

  • Union Minister for Road Transport and Highways Nitin Gadkari announced the construction of Greenfield connectivity to Jewar International Airport in Uttar Pradesh and Haryana has been approved. The budget for the project is aggregated to Rs 2,414.67 crore. The airport will be connecting Delhi Mumbai Expressway.

8. ‘Stree Nidhi’ is a scheme associated with which state/UT?

A. Andhra Pradesh

B. Telangana 

C. Kerala

D. Karnataka

  • The Telangana state government has allotted about Rs 3700 crore credit flow to women self–help groups (SHGs) through ‘Stree Nidhi’. This is about 600 crore rupees more than the allocation of the last year. According to an official release, the government has spent about 14 thousand 750 crore rupees during the past 8 years to the SHGs for setting up businesses.

9. When is the ‘National Fish Farmers Day’ celebrated?

A. July.06

B. July.08

C. July.10 

D. July.25

  • National Fish Farmers Day is celebrated on 10th July every year to display solidarity with fisher folk and fish farmers throughout the country. It is the 65th National Fish Farmers Day being celebrated across the country. Every year, this annual event is celebrated to commemorate Professor Dr. Hiralal Chaudhury and his colleague for their contribution in achieving the induced breeding of major carps on 10th July, 1957, for the first time in the country.

10. ‘Sea Guardians–2’ is a joint maritime exercise conducted by which countries?

A. USA–Pakistan

B. China– Pakistan 

C. India–Pakistan

D. Sri Lanka– Pakistan

  • The Navies of China and Pakistan commenced a live–fire drill off the Shanghai coast as part of joint maritime exercise code named Sea Guardians–2. The Navies are set to deploy their new high–tech naval ships and fighter jets to jointly deal with maritime security threats.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!