Tnpsc

25th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பாலைவனமயமாக்கலுக்கு எதிரான 14ஆவது ஐநா உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?

அ) நரேந்திர மோடி

ஆ) யோஷிஹைட் சுகா

இ) ஜி ஜின்பிங்

ஈ) கோத்தபய இராஜபக்ஷ

  • இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, பாலைவனமாதலை எதிர்த்துப்போரா -டுவதற்கான ஐநா உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14ஆவது உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.
  • அண்மையில் ஐநா – ‘பாலைவனமாதல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப்பேச்சுவார்த்தை’யில் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வை ஐநா பொது அவையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் கூட்டினார்.

2. COVID-19 இரண்டாவது அலைக்குப் பிறகு மருத்துவ உயிர்வளி தேவையைச் சமாளிக்க, ‘இந்தியாவுக்கான O2 திட்டத்’தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

அ) இலங்கை

ஆ) இந்தியா

இ) ரஷ்யா

ஈ) இந்தோனேசியா

  • COVID-19 இரண்டாவது அலைக்குப் பிறகான மருத்துவ உயிர்வளியின் தேவையை எதிர்கொள்வதற்கு, ‘இந்தியாவிற்கான O2 திட்டத்’தை இந் -தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின்கீழ், அவசரகால மூலப் பொருட்களை தேசிய அளவில் விநியோகிப்பது, சிறிய அளவிலான O2 ஆலைகளை நிறுவுவது, அழுத்த கருவிகள், O2 கருவிகள், செறிவூட்டிகள், செயற்கை சுவாச வழங்கிகள் உள்ளிட்ட இறுதிகட்ட பொருட்களைத் தயாரிப்பது முதலிய பணிகளை தேசிய பிராணவாயுக் கூட்டமைப்பு மேற்கொள்கிறது.

3. நடப்பாண்டு (2021) உலக யோகா நாளை முன்னிட்டு AYUSH அமைச்சகம் வெளியிட்ட செயலியின் பெயர் என்ன?

அ) யோகா சைன்ஸ்

ஆ) நமஸ்தே யோகா

இ) யோகா ஃபார் ஆல்

ஈ) பாரத் யோகா

  • 7ஆவது உலக யோகா நாளின் தொடக்க நிகழ்வின்போது, “நமஸ்தே யோகா” என்ற திறன்பேசிசெயலி வெளியிடப்பட்டது. DD இந்தியா அலை வரிசையில் ஒளிபரப்பப்படவுள்ள காமன் யோகா புரோட்டோகால் தொடரி -ன் தொடக்கத்தை இந்நிகழ்வு குறித்தது. மொரார்ஜி தேசாய் தேசிய யோ -கா நிறுவனம் இந்தத்தொடரை தயாரிக்கிறது. உலக யோகா நாளானது ஜூன்.21 அன்று கொண்டாடப்படுகிறது.

4. COVID தடுப்பூசிகளுக்கு, இந்தியாவில், எத்தனை சதவீதம் GST வரி விதிக்கப்படுகிறது?

அ) 5%

ஆ) 10%

இ) 18%

ஈ) 28%

  • 44ஆவது GST கவுன்சில் கூட்டத்தின்போது, பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது மற்றும் கருப்புப்பூஞ்சை நோய்த்தொற்றுக்கு சிகிச்சைய -ளிப்பதற்கான மருந்துகளுக்கு GST’யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன.
  • COVID தொடர்பான அத்தியாவசிய பொருட்களின் வரிவிகிதங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு -வின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது முடிவுசெய்யப்பட்டது. COVID தடுப்பூசிகளுக்கு 5% GST வரிவிதிக்கப்பட்டுள்ளது.

5. நடப்பாண்டு (2021) ‘குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாளின்’ கருப்பொருள் என்ன?

அ) Act now: end child labour

ஆ) Leaving No one Behind

இ) Child Labour against Humanity

ஈ) Stop Child Labour

  • குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள் ஜூன்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்காக ஜூன் 10 அன்று “Week of Action” என்பது தொடங்கப்பட்டது. “Act now: end child labour” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற PRABANDH வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) கல்வி அமைச்சகம்

இ) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • பள்ளிசெல்லா குழந்தைகள்குறித்த தரவுகளை தொகுப்பதற்காக கல்வி அமைச்சகம், இணைய தொகுப்பியை அறிமுகப்படுத்தியுள்ளது. சமக்கிர சிக்ஷாவின் ‘பிரபந்த்’ வலைத்தளத்துடன் இந்தத்தரவுகள் இணைக்கப்பட உள்ளது. 6-14 வயதுக்குட்பட்ட பின்தங்கிய பிரிவுகளைச்சார்ந்த சிறார்க ளின் சேர்க்கைகளை விரைவாக கண்காணிக்க இது உதவலாம். 16-18 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு, தொலைதூரக் கல்விமுறை மூலம் கல்வியைத் தொடர நிதியுதவி வழங்கப்படும்.

7. ‘CAIMS’ எனப்படும் மேலாண்மை அமைப்புடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இ) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய தடகள காய மேலாண்மை முறையை (CAIMS) தொடங்கினார். இது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மருந்து & மறுவாழ்வு ஆதரவை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விளையாட்டு வீரர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சிறந்த விளை -யாட்டு காய மேலாண்மை ஆதரவை வழங்குவதையும் CAIMS தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, காய சிகிச்சை நெறிமுறையை தரப்படுத்த இது உதவும்.

8. ஒரே நாளில் ஐம்பது இலட்சம் மரங்களை நடவு செய்வதற்காக நாடு முழுவதும் பேரியக்கத்தை நடத்திய ஆப்பிரிக்க நாடு எது?

அ) கானா

ஆ) நைஜீரியா

இ) காங்கோ

ஈ) சூடான்

  • மேலை ஆப்பிரிக்க நாடான கானா, “பசுமை கானா” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அது 50 இலட்சம் கன்றுகளை நடவுசெய்வதற்கான பேரியக்கமாகும். இவ்வியக்கம், குறைந்துவரும் வனப்பரப்புகளைக் காப் -பாற்றுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • கானா அதிபர் நானா அகுபோ-அடோ, தலைநகர் அக்ராவில் ஜூபிலி இல்ல தோட்டத்தில் நினைவுமரக்கன்று ஒன்றை நட்டார். உலகில் அதி -க சதவீதம் மழைக்காடுகளை இழந்துவரும் வெப்பமண்டல நாடுகளுள் கானாவும் ஒன்றாகும்.

9. அண்மையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற ஜர்தாலு மாம்பழங்களை விளைவிக்கின்ற மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) மகாராஷ்டிரா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம்

  • புவிசார் குறியீடுபெற்ற ஜர்தாலு மாம்பழங்கள் பீகாரிலிருந்து இங்கிலாந்து -க்கு வர்த்தக ரீதியில் முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டன. லக்னோவில் உள்ள APEDA’இன் கட்டும் மையத்திலிருந்து பீகார் அரசு, இந்திய தூதரகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து சாறு மற்றும் வாசனைமிக்க மாம்பழங்களை இங்கிலாந்துக்கு APEDA அனுப் -பியது. சிறந்த சுவை மற்றும் வாசனை கொண்ட ஜர்தாலு மாம்பழங்கள் 2018’ல் புவிசார் குறியீட்டை பெற்றன.

10. உலகின் முதல் மர செயற்கைக்கோளான ‘WISA Woodsat’ஐ ஏவவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) நியூசிலாந்து

இ) ஜெர்மனி

ஈ) இத்தாலி

  • ‘WISA Woodsat’ என்பது ஒரு நானோ செயற்கைக்கோளாகும். அது, நியூ -சிலாந்திலிருந்து இவ்வாண்டின் இறுதிக்குள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. இது உலகின் முதல் மர செயற்கைக்கோள் ஆகும். இந்த நானோ செயற்கைக்கோள் என்பது கனசதுர வடிவ கட்டமைப்பாகும். பிர்ச் ஒட்டுப்பலகையால் ஆன அதன் உணரிகள் ஐரோப்பிய விண்வெளி முகாமையால் உருவாக்கப்பட்டதாகும். இது, ஓர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘இராக்கெட் லேப்’ உருவாக்கிய ஏவுகணை எலக்ட்ரானி -லிருந்து ஏவப்படும்.

1. Who was the President of the 14th session of the Conference of the Parties to the United Nations Convention to Combat Desertification?

A) Narendra Modi

B) Yoshihide Suga

C) Xi Jinping

D) Gotabaya Rajapaksa

  • Indian Prime Minister Narendra Modi was the President of the 14th session of the Conference of the Parties to the United Nations Convention to Combat Desertification (UNCCD COP14 President).
  • Recently, PM Modi is set to address a high–level virtual dialogue on desertification, land degradation and drought at the UN. The event will be convened by the President of the 75th session of the General Assembly, Volkan Bozkir.

2. Which country has launched the ‘Project O2 for India’ to tackle the medical oxygen demand after Covid 19 second wave?

A) Sri Lanka

B) India

C) Russia

D) Indonesia

  • The Indian Government has introduced the ‘Project O2 for India’ to tackle the medical oxygen demand after COVID 19 second wave. Under the project, a National Consortium of Oxygen would enable the national level supply of critical raw materials. It includes setting up of small oxygen plants, manufacturing compressors, oxygen plants, concentrators, and ventilators among others.

3. What is the name of the app launched by the Ayush Ministry for the ‘International Yoga Day 2021’?

A) Yoga Science

B) Namaste Yoga

C) Yoga for All

D) Bharat Yoga

  • The curtain raiser event for the 7th International Day of Yoga was organised recently. A mobile application, “Namaste Yoga” was also launched during the event. The event also marked the beginning of a series on Common Yoga Protocol to be telecast on DD India channel. The series is produced by produced Morarji Desai National Institute of Yoga (MDNIY). International Day of Yoga is celebrated on June 21.

4. What per cent of GST is levied for COVID vaccines in India?

A) 5%

B) 10%

C) 18%

D) 28%

  • During the 44th GST Council meeting, the tax rate on the supplies was cut and medicines for treating the black fungus infection were exempted off GST.
  • This was decided based on the recommendations of the group of ministers constituted to advise on the tax rates of COVID–related essential items. COVID vaccines will continue to be taxed at 5% GST.

5. What is the theme of the ‘World Day against Child Labour’ 2021?

A) Act now: end child labour

B) Leaving No one Behind

C) Child Labour against Humanity

D) Stop Child Labour

  • World Day against Child Labour is observed on June 12. The 2021 World Day Against Child Labour marks a “Week of Action” that began on June 10. The theme of this year’s World Day Against Child Labour is ‘Act now: end child labour’.

6. PRABANDH portal, which was making news recently, is associated with which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Education

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Health and Family Welfare

  • The Ministry of Education has launched an online module to compile data on out–of–school children. The data is to be mapped with ‘PRABANDH’ portal of Samagra Siksha.
  • Admissions of children in the age group of 6–14 years in disadvantaged sections can be fast–tracked. Financial assistance will be provided for out of school children in the 16–18 years age group, to continue their education through distance learning mode.

7. A Management System called ‘CAIMS’ is an initiative of which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Youth Affairs and Sports

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Health and Family Welfare

  • Union Minister for Youth Affairs and Sports Kiren Rijiju launched the Central Athlete Injury Management System (CAIMS). It aims to streamline the medicine and rehabilitation support offered to the athletes. CAIMS also aims to provide the best sports injury management support nearest to the athlete’s location.
  • It will help to standardize injury treatment protocol for athletes across the country.

8. Which African country conducted a nationwide massive campaign to plant five million trees on a single day?

A) Ghana

B) Nigeria

C) Congo

D) Sudan

  • West African nation Ghana launched the “Green Ghana” programme, a massive drive to plant five million trees. The campaign aims to save depleting forest reserves. President Nana Akufo–Addo planted a memorial tree in the garden of Jubilee House, in the capital, Accra.
  • The government provided free seedlings to people across the country. Ghana is one of the tropical countries with the highest percentage of rainforest loss in the world.

9. Which Indian state produces GI certified Jardalu mangoes, which were recently exported to the UK?

A) Bihar

B) Maharashtra

C) Andhra Pradesh

D) Uttar Pradesh

  • The first commercial consignment of GI–certified Jardalu mangoes from Bhagalpur, Bihar was exported to the United Kingdom. APEDA, in collaboration with Bihar government, Indian High Commission & Invest India, exported the mangoes that were packed and treated at APEDA packhouse, Lucknow.
  • Jardalu mangoes from Bhagalpur district of Bihar received GI certification in 2018, due to their distinct aroma and taste.

10. Which country has announced to launch the world’s first wood satellite ‘WISA Woodsat’?

A) Russia

B) New Zealand

C) Germany

D) Italy

  • WISA Woodsat is a nano satellite, which would be the world’s first wooden satellite to be launched to space by the end of this year from New Zealand. This nanosatellite is a cube shaped structure made of birch plywood with its sensors developed by the European Space Agency (ESA). It would be launched from a rocket electron which is developed by “Rocket Lab” – an American space company.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!