Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

25th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சாமர் (SAAMAR) என்ற திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) ஜார்க்கண்ட்

இ) ஹரியானா

ஈ) உத்தர பிரதேசம்

  • ஜார்கண்ட் மாநில அரசானது SAAMAR (Strategic Action for Alleviation of Malnutrition and Anaemia Reduction) என்ற திட்டத்தைத்தொடங்கியது. இரத்தசோகை உடைய பெண்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்களை அடையாளங்காண்பதன்மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை கையாளுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரத்தசோகை நோயை திறம்பட குறைப்பதற்காக பல்வேறு மாநில துறைகள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைக்கும்.

2. 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

அ) அசுரன்

ஆ) மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்

இ) ஒத்த செருப்பு

ஈ) சூரரைப்போற்று

  • 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 2019ஆம் ஆண்டைச் சார்ந்த திரைப்படங்களை கெளரவிப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்தன. இயக்குநர் பிரியதர்ஷனின் மலையாளப் போர் காவியமான மோகன்லால் நடித்த ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம் ‘சிறந்த திரைப்படத்’துக்கான விருதை வென்றது.
  • சிறந்த நடிகருக்கான விருது ‘போன்ஸ்லே’ திரைப்படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய்க்கும், தமிழ்ப்படமான ‘அசுரனுக்காக’ தனுஷுக்கும் வழங்கப்பட்டது.

3. இமயமலை பனிப்பாறைகளின் தடிமனை மதிப்பிடுவதற்காக வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்தும் நாடு எது?

அ) நேபாளம்

ஆ) இந்தியா

இ) வங்காளதேசம்

ஈ) ரஷியா

  • இமயமலை பனிப்பாறைகளின் தடிமனை மதிப்பிடுவதற்காக, இந்தியா, வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்தவுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் லஹால்-ஸ்பிட்டி படுகையில் சோதனை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது. இந்தச் சோதனை திட்டத்திற்குப் பிறகு, சிந்து, கங்கா மற்றும் பிரம்மபுத்திரா துணைப்படுகைகளிலும் இதேபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும். துருவ & பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், புவி அறிவியல் அமைச்சகம் இந்த ஆய்வை முன்மொழிந்தது.

4. அண்மையில், ‘டயல் 112’ ERSS மற்றும் மாநில அவசரநிலை பதிலளிப்பு மையத்தை தொடங்கிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) ஒடிஸா

ஈ) மத்திய பிரதேசம்

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் `157 கோடி மதிப்புள்ள ‘டயல் 112’ – மாநில அவசரகால ஆதரவு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் நலவாழ்வு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், இந்தக் கட்டணமில்லா எண்ணை மக்கள் பயன்படுத்தலாம். மாநில அவசரநிலை பதிலளிப்பு மையம் மற்றும் மொபைல் டேடா டெர்மினல்கள் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு வாகனங்களும் தொடங்கிவைக்கப்பட்டன.

5. தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் – 2021’இன்படி, எந்தத் துறையின் தனியார் இறுதி நுகர்வு செலவு அதிகபட்ச உயர்வைக் கொண்டிருந்தது?

அ) கல்வி

ஆ) உணவகங்கள்

இ) நலவாழ்வு

ஈ) மதுபானங்கள்

  • நடுவண் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் – 2021’இன்படி, சுகாதாரம், கல்வி மற்றும் உணவகங்களுக்கான தனியார் இறுதிநுகர்வு செலவு, 2019-20ஆம் ஆண்டில் அதிகபட்ச உயர்வைக் கொண்டுள்ளன.
  • சுகாதாரத்துறையில் இந்த உயர்வு 9.5% ஆக பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கல்வி மற்றும் உணவகங்கள் உள்ளன. மதுபானங்கள், ஆடை & காலணிகள் இக்காலகட்டத்தில் வீழ்ச்சியை பதிவுசெய்தன.

6. ஐநா அறிவித்தபடி, உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 18

ஆ) மார்ச் 20

இ) மார்ச் 22

ஈ) மார்ச் 24

  • ஐநா அவையின் பொது அவை, கடந்த 2012ஆம் ஆண்டில், மார்ச்.20’ஐ பன்னாட்டு மகிழ்ச்சி நாளாக அறிவித்தது. உலகெங்குமுள்ள மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, இது, 2013 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக மகிழ்ச்சி அறிக்
    -கையின்படி, இந்த ஆண்டு, பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7. கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவோரை வளர் -த்தெடுப்பதற்காக ‘சகி திஷா’ திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) ஐநா வளர்ச்சித் திட்டம்

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) புதிய வளர்ச்சி வங்கி

  • ஐநா வளர்ச்சித் திட்டமானது கிராமப்புற இந்தியாவில், பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதற்காக ‘சகி திஷா’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டமானது ஐநா வளர்ச்சித் திட்டம் மற்றும் IKEA அறக்கட்டளைக்கு இடையிலான ஐந்தாண்டு ஒப்பந்தமாகும். தில்லி NCR, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அணுக, இது, ஏற்கனவே ஒரு மில்லியன் பெண்களுக்கு ஆதரவளித்துள்ளது.

8. INSACOG கூட்டமைப்பானது சமீப செய்திகளில் இடம்பெற்றது. இதில், IN என்பது கீழ்காணும் எதைக்குறிக்கிறது?

அ) Integrated

ஆ) Indian

இ) Inspection

ஈ) Innovation

  • INSACOG என்பது இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பைக் குறிக்கிறது. இது, நாடு முழுவதும் SARS-CoV-2 கண்காணிப்புக்காக இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. புவனேசுவரம், புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் உள்ள 10 பிராந்திய மரபணு வரிசைமுறை ஆய்வகங்களால் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

9. அண்மையில், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதற்காக செய்திகளில் இடம்பெற்ற ஷரத் கமல், சத்தியன், சுதிர்தா முகர்ஜி ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) பூப்பந்து

ஆ) டேபிள் டென்னிஸ்

இ) மல்யுத்தம்

ஈ) வாள் சண்டை

  • சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் நான்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர். மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார். G சத்தியன், மணிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் பிற மூன்று வீரர் / வீரங்கனைகளாவர்.

10. உயர்தொழில்நுட்ப பகுதியில் உற்பத்தி மேற்கொள்வதற்கான அரசாங்கக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) நிர்மலா சீதாராமன்

ஆ) பியூஷ் கோயல்

இ) இராஜ்நாத் சிங்

ஈ) நரேந்திர மோடி

  • உயர்தொழினுட்ப பகுதிகளில் உற்பத்தி மேற்கோள்வதற்கான குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது. அலுவல்பூர்வ அறிவிப்பின்படி, இக்குழுவுக்கு மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கவுள்ளார். இந்நடவடிக்கை, முதலீடுகளை மேம்படுத்துவதோடு தீவிர தொழில்நுட்ப துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சேலம் இரயில்வே கோட்டத்துக்கு செயல்திறன் கேடயம்

தெற்கு இரயில்வே சார்பில், 65ஆவது இரயில்வே வார விழாவில், ஒட்டு மொத்தமாக கோட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டத -ற்காக, சேலம் கோட்டத்துக்கு செயல்திறன் கேடயமும், இயந்திரவியல் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டுக்காக சென்னை இரயில்வே கோட்டத்துக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

கடந்த 1853ஆம் ஆண்டில், மும்பையில் இருந்து தானே வரை முதல் பயணிகள் இரயில் இயக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 10’ஆம் தேதி முதல் ஏப்ரல் 16’ஆம் தேதி வரை இரயில்வே வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பாகச் செயல்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளைக் கெளரவிப்பது வழக்கம்.

இதில், மதுரை கோட்டம் 2’ஆமிடத்தைப்பிடித்தது. மனிதவள திட்டமிடல், பொறியியல், மின்சாரம், திட்டப்பணி ஆய்வு, பயணிகளின் வசதிகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சேலம் இரயில்வே கோட்டத்துக்கு செயல்திறன் கேடயம் வழங்கப்பட்டது. வர்த்தகம், மருத்துவம், மின்சாரம், மின்சேமிப்பு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மதுரை இரயில்வே கோட்டத்துக்கு செயல்திறன் கேடயம் வழங்கப்பட்டது.

இயந்திரவியல் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டுக்காக சென்னை இரயில்வே கோட்டத்துக்கும், பாதுகாப்பு மற்றும் இயக்ககப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவனந்தபுரம் இரயில்வே கோட்டத்துக்கும், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு மற்றும் பணியாளர் திறன் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கும் செயல்திறன் கேடயம் வழங்கப்பட்டது.

2. கரோனா பலி: 88% பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இந்தியாவில் COVID நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களில் 88 சதவீதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. சிறார் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியது. சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த மார்ச்.15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். சிறார் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டிய அமைப்புகளை மாவட்ட ஆட்சியரும், கூடுதல் ஆட்சியரும் கண்காணிப்பதற்கு அந்த மசோதா வழிவகை செய்கிறது. அடுத்ததாக, மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது.

4. வாரத்தில் 4 நாள்கள் மட்டும் பணி: மத்திய அரசு அலுவலகங்களில் அமல்படுத்தும் திட்டமில்லை

மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாள்களை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வர் தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூவமாக அளித்த பதில்:

மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாட்களை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்க அல்லது வாரத்தில் 40 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் எந்தத் தீர்மானமும் மத்திய அரசிடம் இல்லை. மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாட்கள், விடுமுறை நாட்கள், பணிநேரம் ஆகியவற்றை மத்திய ஊதியக் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. நான்காவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு அலுவலகங்களின் வேலைநாட்கள் வாரத்தில் 5 நாட்களாகவும், நாள்தோறும் 8½ மநே பணிபுரியவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. தற்போதுள்ள இந்த நிலையே தொடர வேண்டும் என ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.

5. 6.5 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் இணைப்பு: இரவிசங்கர் பிரசாத்

நாடு முழுவதும் 6.5 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்து வருகிறது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் கூறினார். மாநிலங்களவையின் கேள்விநேரத்தின்போது இதுகுறித்து மத்திய அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

டிஜிட்டல் தகவல்தொடர்பு உட்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்தும் வகையிலும், அனைவருக்குமான குறைந்தவிலை அகண்ட அலைவரிசை பயன்பாட்டு வசதி கிடைக்கச்செய்யும் நோக்கத்துடனும் தேசிய அகண்ட அலைவரிசை இயக்கத்தை நடுவண் அரசு கடந்த 2019’ஆம் ஆண்டு டிச.17 அன்று அறிமுகம் செய்தது. இந்தத்திட்டத்தின்கீழ், உலகளாவிய சேவை நிதிமூலமாக `70,000 கோடி செலவில் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் அகண்ட அலைவரிசை சேவையை அளிக்க திட்டமிடப்பட்டு -ள்ளது என்று அவர் கூறினார்.

6. இந்தியா-சீனா இடையே நம்பிக்கையின்மை அதிகரிப்பு

அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் நம்பிக்கையின்மை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அட்மிரல் ஜான் சி அக்குலினோ, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் படைக்கான தளபதியாக அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை உறுதிசெய்யும் நடைமுறை அந்நாட்டின் செனட் அவையில் நடைபெற்றது. அப்போது, அந்த அவையின் ஆயுதப்படைக் குழு உறுப்பினர்களிடம் அக்குலினோ கூறியதாவது:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நம்பிக்கையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக, இருநாடுகளிடையேயான உறவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வணிக வழித்தடத்திட்டத்தை மிகுந்த சந்தேகப் பார்வையுடன் இந்தியா அணுகுகிறது. பாகிதானின் குவாடர் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்டவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவது இந்தியாவை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் தனது அத்துமீறல் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து வருகிறது. அதன்காரணமாக பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால், நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளிலும் பன்னாட்டமைப்புகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன.

இருநாடுகளின் இராணுவங்களுக்கிடையே கூட்டுப்பயிற்சியும் மேற்கொள் -ளப்பட்டு வருகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

7. கடந்த நான்கு ஆண்டுகளில் NGO’கள் பெற்ற வெளிநாட்டு நன்கொடை ரூ.50,975 கோடி: மத்திய அரசு

இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் (NGO) கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து `50,975 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் அமெரிக்காவிலிருந்தே அதிக நிதி வந்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவுசெய்துள்ள இந்தியாவில் செயல்பட்டு வரும் NGO’கள் கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து `50,975 கோடி நிதியைப்பெற்றுள்ளன. இதில், அமெரிக்காவிலிருந்து மட்டும் அதிகபட்சமாக `19,941 கோடி நன்கொடை வந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2016-17’ஆம் ஆண்டில் 18,304 NGO’கள் வெளிநாடுகளிலிருந்து `15,355 கோடி நிதிபெற்றுள்ளன.

அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் `5,869 கோடி வந்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 18,235 NGO’கள் `16,940 கோடி நிதியைப்பெற்றுள்ளன. அதில் அமெரிக்காவிலிருந்து `6,199 கோடி வந்துள்ளது. 2018-19’ஆம் ஆண்டில் 17,540 NGO’கள் `16,490 கோடி நிதியைப் பெற்றுள்ளன. அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் `6,907 கோடி வந்துள்ளது. 2019-20’ஆம் ஆண்டில் 3,475 NGO’கள் வெளிநாடுகளிலிருந்து `2,190 கோடி நிதி பெற்றுள்ளன. அதில், அமெரிக்காவிலிருந்து `9,66 கோடி வந்துள்ளது.

8. தேசிய சுகாதாரப் பணிகள் ஆணைய மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான கல்வித்தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணிகள் தேசிய ஆணைய மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதையடுத்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகள், அவர்களுக்கான கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. அந்த ஆணையத்துக்கான தலைவர்களும் துணைத்தலைவர்களும் ஈராண்டுகள் பதவிக் காலத்தில் நியமிக்கப்படுவர். மாநில அளவில் இதேபோன்ற ஆணையங்களை அமைக்கவும் இம்மசோதா வழிவகுக்கிறது.

9. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: வேலையின்மை பிரச்னையிலிருந்து மீண்டு வருகிறது இந்தியா

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 25-03-21 உடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், வேலையின்மை பிரச்னையிலிருந்து நாடு மெல்மெல்ல மீண்டு வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் முதல் முறையாக 21-நாள் தொடர் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியிழந்தனர். பணியில்லாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து பொது முடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இது தொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகள் விவரம்: கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் இது 8.8 சதவீதமாக இருந்தது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் 6.9 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக 23.5 சதவீதமாக உயர்ந்தது. இது மே மாதத்தில் 21.7 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஜூன் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கியது. ஜூனில் 10.2 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாகவும் பதிவாகியது. ஆகஸ்டில் மீண்டும் 8.3 சதவீதமாக உயர்ந்து, செப்டம்பரில் 6.7 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் மீண்டும் 7 சதவீதமாக உயர்ந்து, நவம்பரில் 6.5 சதவீதமாக குறைந்தது. டிசம்பரில் வேலையின்மை விகிதம் 9.1 சதவீதமாகவும், ஜனவரியில் 6.5 சதவீதமாகவும் பதிவாகியது என்று அந்தத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

வேலையின்மை சதவீதம் 2020: (இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய தரவு)

பிப்ரவரி – 7.8 மார்ச் – 8.8

ஏப்ரல் – 23.5 மே – 21.7

ஜூன் – 10.2 ஜூலை – 7.4

ஆகஸ்ட் – 8.3 செப்டம்பர் – 6.7

அக்டோபர் – 7.0 நவம்பர் – 6.5

டிசம்பர் – 9.1 2021 ஜனவரி – 6.5

2021 பிப்ரவரி – 6.9

10. உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றது.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றது. புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் 50 மீட்டர் பிரிவில் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமரும், மகளிர் 25 மீட்டர் பிரிவில் சிங்கி யாதவும் தங்கப்பதக்கம் வென்றனர். இப் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

11.கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட புதிய ரோந்துகப்பல்: ‘வஜ்ரா’ இணைப்பு

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி கப்பல்கட்டுந்தளத்தில் கட்டப்பட்ட ‘வஜ்ரா’ என்ற ரோந்துகப்பல் கடலோர காவற்படையில் இணைக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் L&T தனியார் கப்பல்கட்டும்தளம் உள்ளது. இங்கு பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தேவையான கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடற்படை, கடலோரக் காவல்படைக்குத் தேவையான ரோந்துக்கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 7 ரோந்து கப்பல்கள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இதில் 6ஆவது கப்பலான ‘வஜ்ரா’ கடந்தாண்டு பிப்ரவரியில் கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிநவீன வசதிகள்: 2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமார் 5000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ளது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு -க்கருவிகள், கண்காணிப்புக் கருவிகள் அதிநவீன இரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 2 கடல்வழி ரேடார்கள், அதிநவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது ரோந்துக் கப்பல்

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறாவது ரோந்துக்கப்பலான ‘வஜ்ரா’, கீழை பிராந்திய ஆளுகைக்குட்பட்ட தூத்துக்குடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்படும் எனக் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

12.தமிழ்நாடு உட்பட கடல்சார் மாநிலங்களில் நீலப்புரட்சிக்கு `20,000 கோடி முதலீடு: மக்களவையில் அமைச்சர் தகவல்

நீலப்புரட்சியை நீடித்த வளர்ச்சியாக மாற்றும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு `20,000 கோடிக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து கடல்சார் மாநிலங்களில் முதலீடுசெய்யப்படுவதாக மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார்.

13. சி-விஜில் செயலி மூலம் தமிழகத்தில் 2,313 புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் சி-விஜில் செயலி மூலம் 2,313 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்தார். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை புகைப்படம், வீடியோவுடன் சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் அளிக்கலாம். சி-விஜில்மூலம் இதுவரை 2,313 புகார்கள் பெறப்பட்டு, அதில் 1,607 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக கரூரில் 487 புகார்கள், கோயம்புத்தூரில் 365, திருப்பூரில் 131, சென்னையில் 130 புகார்கள் வந்துள்ளன.

14. சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட பாக்டீரியாவுக்கு தமிழக விஞ்ஞானியின் பெயர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட ஒரு வகை பாக்டீரியாவு -க்கு தமிழக விஞ்ஞானி சையது அஜ்மல் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் விண்ணில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 4 இன பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுப்பணியில் நாசாவுடன் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஒரு வகை பாக்டீரியா, மெத்திலோரூப்ரம் ரோடீசியனம் ஆக அடையாளம் காணப்பட்டாலும் மற்ற வகை பாக்டீரியாக்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு வகை பாக்டீரியாவை தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் சையத் அஜ்மல் கான் பெயரில் ‘மெத்திலோ பாக்டீரியம் அஜ்மலி’ என்று அழைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. உருளை வடிவிலான இந்த பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜன் வாயுவை தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றுவது, தாவர வளர்ச்சி, தாவர நோய்க்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும். எனவே இந்த பாக்டீரியா விண்வெளியில் பயிர்களை வளர்ப்பதற்கான திறவுகோலை கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். என்றாலும் இதனை நிரூபிக்க தொடர் பரிசோதனைகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1. SAAMAR campaign has been launched by which state?

A) Bihar

B) Jharkhand

C) Haryana

D) Uttar Pradesh

  • The state Government of Jharkhand launched a campaign named SAAMAR (Strategic Action for Alleviation of Malnutrition and Anaemia Reduction). It aims to tackle malnutrition in the state by identifying anaemic women and malnourished children.
  • It would converge various state departments and agencies to effectively reduce anaemia in the state.

2. Which Indian film won the ‘Best Feature Film’ award in the 67th National Film Awards?

A) Asuran

B) Marakkar: Lion of the Arabian Sea

C) Otha Seruppu

D) Soorarai Potru

  • The 67th National Film Awards were announced to honour the films from the year of 2019. The event was organised by the Directorate of Film Festivals, Ministry of Information and Broadcasting.
  • Director Priyadarshan’s Malayalam war epic Marakkar: Lion of the Arabian Sea, starred by Mohanlal, won the Best Feature Film. The best actor award was given to Manoj Bajapayee for Bhonsle, Dhanush for Tamil film Asuran.

3. Which country is to conduct airborne radar surveys to estimate the thickness of Himalayan glaciers?

A) Nepal

B) India

C) Bangladesh

D) Russia

  • India is set to conduct airborne radar surveys to estimate the thickness of Himalayan glaciers. A pilot study is to be conducted in Lahaul–Spiti basin of Himachal Pradesh. After the pilot project, similar studies will be conducted in Indus, Ganga and Brahmaputra sub–basins.
  • National Centre for Polar and Ocean Research (NCPOR), Ministry of Earth Sciences proposed this survey.

4. Which state has recently launched ‘Dial 112’ ERSS and State Emergency Response Centre?

A) Tamil Nadu

B) Karnataka

C) Odisha

D) Madhya Pradesh

  • Odisha Chief Minister Naveen Patnaik has launched ‘Dial 112’ Emergency Response Support System (ERSS) worth Rs 157–cr. People can call the toll–free number for all emergency services including police, fire and health in the state.
  • The State Emergency Response Centre and the emergency response vehicles fitted with mobile data terminals were also inaugurated.

5. As per the National Accounts Statistics 2021, the private final consumption expenditure of which sector had the steepest rise?

A) Education

B) Restaurants

C) Health

D) Alcoholic Beverages

  • As per the National Accounts Statistics (NAS) 2021, released by MoSPI, the private final consumption expenditure (PFCE) on health, education and restaurants recorded an increase in 2019–20.
  • The highest increase is recorded in the field of health at 9.5%, followed by education and restaurants. The PFCE on Alcoholic beverages, clothing and foot wear recorded a steep fall during the said period.

6. When is the International Day of Happiness celebrated across the world, as proclaimed by the UN?

A) March 18

B) March 20

C) March 22

D) March 24

  • The United Nations General Assembly, in the year 2012, proclaimed 20 March the International Day of Happiness. It has been celebrated across the world since 2013, to recognise the importance of happiness in the lives of people around the world.
  • This year, Finland was declared the happiest country in the world, as per the World Happiness report.

7. Which organisation has launched ‘Sahi Disha’ campaign to promote women’s entrepreneurship in rural India?

A) World Bank

B) UN Development Program

E) Asian Development Bank

D) New Development Bank

  • The United Nations Development Program–UNDP has launched ‘Sahi Disha’ campaign to promote women’s livelihoods and entrepreneurship in rural India. The initiative is a five–year collaboration between UNDP and the IKEA Foundation. It has already supported one million women to access job and livelihood opportunities across five states including Delhi NCR and Maharashtra.

8. INSACOG Consortium is in the news recently. What does IN stand for?

A) Integrated

B) Indian

C) Inspection

D) Innovation

  • INSACOG stands for Indian SARS–CoV–2 Genomics Consortium. It has been set up by the Government of India for surveillance of SARS–CoV–2 across the country. The consortium is made up of 10 Regional Genome Sequencing Laboratories (RGSLs) present in Bhubaneswar, Pune, Hyderabad, Bengaluru and New Delhi.

9. Sharath Kamal, Sathiyan, Sutirtha Mukherjee who were in the news recently for qualifying for the Olympics, are the players of which sports?

A) Badminton

B) Table Tennis

C) Wrestling

D) Fencing

  • In the Asian Olympic Qualification tournament held recently in Doha four Indian Table Tennis players sealed Tokyo Olympic seats. Veteran paddler Sharath Kamal will participate in the Olympics for the fourth time. Other three players are G Sathiyan, Manika Batra and Sutirtha Mukherjee.

10. Who is set to be head of the Government committee for manufacturing in the high technology area?

A) Nirmala Sitharaman

B) Piyush Goyal

C) Rajnath Singh

D) Narendra Modi

  • The Government of India is set to form an empowered committee for manufacturing in high technology areas. As per the official notification, the committee is to be headed by Union Minister for Commerce and Industry Piyush Goyal. This move is expected to improve investments and promote manufacturing in technology intensive sectors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!