Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார்?

அ) கோவா

ஆ) பஞ்சாப் 

இ) மணிப்பூர்

ஈ) இராஜஸ்தான்

  • பஞ்சாப் மாநிலத்தின் 18ஆம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பகவந்த் மான் சமீபத்தில் சண்டிகரில் உள்ள மாநில சிவில் செயலகத்தில் பதவியேற்றார். அவர் பஞ்சாபின் 18ஆவது முதலமைச்சராக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான நவன்ஷஹரில் உள்ள கஹ்தர் கலனில் பதவியேற்றார்.

2. 2022இல் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் இந்திய நகரம் எது?

அ) ஹைதராபாத்

ஆ) சென்னை 

இ) புது தில்லி

ஈ) கொல்கத்தா

  • 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடக்கவுள்ளது. 190 நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியிடும் ஈராண்டுக்கொருமுறை நடக்கும் ஒரு நிகழ்வாகும் இது. கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பிறகு இந்தியாவில் நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய உலகளாவிய விளையாட்டுப் போட்டி இதுவாகும். இந்த நிகழ்வு, முன்னர் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து அது சென்னைக்கு மாற்றப்பட்டது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சக்ஷம்’ என்பது எந்த ஆயுதப்படையின் கடற்புற ரோந்துக் கப்பலாகும்?

அ) இந்திய கடற்படை

ஆ) இந்திய இராணுவம்

இ) இந்திய கடலோரக் காவல்படை 

ஈ) இந்திய வான்படை

  • இந்திய கடலோர காவல்படையானது 105 எம்-வகுப்பு கடற்புற ரோந்துக் கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது கடலோர காவல்படை கப்பலான ICGS ‘சக்ஷம்’ஐ பணியில் இணைத்துக் கொண்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி கடற்புற ரோந்துக் கப்பலாக ICGS ‘சக்ஷம்’ கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.

4. எந்த மாநிலத்தின் முதலமைச்சராக N பைரன் சிங் பதவியேற்றார்?

அ) கோவா

ஆ) மணிப்பூர் 

இ) பஞ்சாப்

ஈ) சத்தீஸ்கர்

  • N பைரன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், 60 உறுப்பினர்களில், பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றது.

5. ‘உலக கவிதை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.18

ஆ) மார்ச்.21 

இ) மார்ச்.23

ஈ) மார்ச்.25

  • உலக கவிதை நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற UNESCOஇன் (ஐநா கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 30ஆவது மாநாட்டில் முதன்முதலாக இந்த நாள் கொண்டாடப்பட்டது.
  • உலக கவிதை நாளானது மொழியியலை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கவிதை வெளிப்பாடுமூலம் பன்முகத்தன்மை மற்றும் அழிந்துவரும் மொழிகளைக் காக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

6. ‘தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாடுத் திட்டமானது’ எவ்வகை திட்டத்தின்கீழ் வருகிறது?

அ) முதன்மை திட்டம்

ஆ) மத்திய துறை திட்டம் 

இ) மத்திய அரசு ஆதரவு திட்டம்

ஈ) முதன்மை திட்டத்தின் மையக்கரு

  • ஏப்.1 முதல் மார்ச்.31, 2026 வரை தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட மத்திய துறைத் திட்டமாகும். இத்திட்டத்தின் கட்டம் V, `15471.94 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய AIDS மீட்புக் குழு, 1992இல் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.

7. 2030’க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்வதற்கு எண்ணும் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) எது?

அ) முதலாவது

ஆ) மூன்றாவது

இ) ஆறாவது 

ஈ) எட்டாவது

  • நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தண்ணீரைப் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுமாக மார்ச்.22 அன்று உலக நீர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்யும் ஐநாஇன் நிலையான வளர்ச்சி இலக்கு -6ஐ அடைய உதவுவதே உலக நீர் நாளின் நோக்கமாகும்.
  • “Groundwater, Making the Invisible Visible – நிலத்தடி நீர், தெரியாததை தெரிய வைத்தல்” என்பது இந்த ஆண்டு (2022) உலக நீர் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. ‘ஜோதி சஞ்சீவினி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா 

இ) தெலுங்கானா

ஈ) ஒடிஸா

  • கர்நாடக மாநில அரசு ‘ஜோதி சஞ்சீவினி’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது விலையில்லா திட்டமாகும்; இது தீவிர நோய்களுக்கான சேவைசெய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடக மாநில அரசு ஓய்வூதியர்களை, சோதி சஞ்சீவினி திட்டத்தின்கீழ் கொண்டு வர முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

9. ‘உலக தூக்க நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.12

ஆ) மார்ச்.14

இ) மார்ச்.16

ஈ) மார்ச்.18 

  • உடல் மற்றும் மனதுக்கு தரமான உறக்கத்தின் முக்கியத் -துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில், ‘உலக உறக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு (2022) உலக தூக்க நாள், மார்ச்.18 அன்று வருகிறது. “Quality Sleep, Sound Mind, Happy World” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கா -னக் கருப்பொருளாகும். இந்நாள் உலக உறக்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, முதன்முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

10. 2022 – M3M ஹூரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில், முதல் 10இல் இடம்பெற்ற ஒரே இந்தியர் யார்?

அ) கௌதம் அதானி

ஆ) முகேஷ் அம்பானி 

இ) சைரஸ் பூனவல்லா

ஈ) ரத்தன் டாடா

  • புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் செல்வந்த நிலை பதிப்பகக் குழுமமமான ஹூரூன் இந்தியா, 2022ஆம் ஆண்டுக்கான உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலை, M3M நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ‘இந்தியா மற்றும் ஆசியாவின் செல்வந்தர்’ பட்டத்தைப் பெற்றார். $103 பில்லியன் நிகர மதிப்புடன் 2022 – M3M ஹூரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலின் முதல் 10இல் இடம்பெற்ற ஒரே இந்தியராகவும் அவர் ஆனார். அவர், ‘கோடீசுவர தொலைத்தொடர்பு தொழிலதிபர்’ என்ற பட்டத்தையும் வென்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உடனடி கவனம் தேவை! | காற்றின் தரம் குறித்த தலையங்கம்

மனித இனம் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் காற்றின் தரம் தொடர்ந்து மாசடைந்து வருவதை ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வறிக்கையில், காற்று மிகவும் மாசடைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 63 நகரங்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உலக நாடுகளில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் வரிசையில் புதுதில்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்திலேயே உள்ளது என்பதையும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த “ஐக்யூ ஏர்” என்ற அமைப்பு உலகளாவிய காற்றின் தரம் குறித்த இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. 117 நாடுகளில் உள்ள 61,475 நகரங்களில் காற்றின் தரம் குறித்து மிக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உலகம் முழுவதும் காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் அரசு அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், கல்விக்கூடங்கள், தனிநபர்கள் திரட்டிய தகவல்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. உத்தர பிரதேசத் தலைநகர் லக்னௌ, அந்த மாநிலத்தின் கான்பூர், மீரட், ஆக்ரா, வராணசி, நொய்டா உள்ளிட்ட 14 நகரங்கள் மிகவும் மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரங்களில் காற்றின் தரம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதையும், இதுவிஷயத்தில் மாநில அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

காற்றின் தரம் பிஎம் 2.5 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்து உள்ளது. ஆனால், இந்த 14 நகரங்களில் நிர்ணய அளவைவிட 10-15 மடங்கு அதிகமாக காற்று மாசடைந்து உள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்து உள்ள இந்த அளவீட்டுக்குள் உலகின் எவ்வொரு நகரமும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாம் ஓரளவு திருப்திபட்டுக் கொள்ளலாம்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா தீநுண்மிப் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், உலகின் பல நகரங்களில் காற்றின் தரம் சற்று மேம்பட்ட போதிலும் அது தொடர்ந்து நீடிக்கவில்லை. உலக அளவில் தற்போது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வது காற்று மாசுதான். காற்று மாசால் நுரையீரல் கோளாறுகள், காசநோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

அவ்வப்போது எழுந்து அடங்கும் தீநுண்மிகளால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைவிட, காற்று மாசால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். மேலும், காற்று மாசு, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் `60,000 கோடி அளவுக்கு பொருளாதாரப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், வாகனங்கள், மின்சார ஜெனரேட்டர்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, சமையலுக்காக விறகுகளை எரிப்பது, புதிய கட்டுமானப் பகுதிகளிலிருந்து கிளம்பும் தூசு, பயிர் கழிவுகளை எரித்தல் போன்றவற்றால் காற்று பெரிதும் மாசடைகிறது.

சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள காற்று மாசைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, கட்டுமானத் தூசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதோடு, பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு மானிய உதவியும் அளிக்கலாம். மிக முக்கியமாக, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் விதத்தில் அதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதேபோல, அடர்ந்த வனப்பகுதிகளில் ஏற்படும் திடீர் தீயைக் கட்டுப்படுத்த நவீன உத்திகளைக் கண்டறிந்து, அவற்றை உலக நாடுகள் செயல்படுத்த முன்வர வேண்டும். வேளாண்மைக் கழிவுகள், குப்பைகள் எரிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் ஆய்வு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். திடீரென தலைதூக்கும் பல்வேறு வகையான தீநுண்மிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் ஏற்கெனவே தத்தளித்து வருகின்றன.

ஆனால், கண்ணுக்குப் புலப்படாத இத்தகைய தீநுண்மிக -ளால் ஏற்படக்கூடிய ஆபத்தைவிட, காற்று மாசால் மனிதகுலம் பேராபத்தை எதிர்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஆக்கபூர்வ நடவடிக்கைளை எடுத்தால் மட்டுமே, நமது வருங்கால சந்ததியினர் நோய்களின்றி நிம்மதியாக வாழ முடியும். இது விஷயத்தில் நமது மத்திய – மாநில அரசுகளும் உடனடியாக கவனஞ்செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுத்தால்தான் தூய காற்றை நம்மால் சுவாசிக்க முடியும்!

1. Bhagwant Mann sworn in as the Chief Minister of which Indian state?

A) Goa

B) Punjab 

C) Manipur

D) Rajasthan

  • Aam Aadmi Party (AAP) leader Bhagwant Mann recently assumed office as the 18th chief minister of Punjab, at the state civil secretariat in Chandigarh. He took oath as the 18th chief minister of Punjab at Kahtar Kalan, the ancestral village of freedom fighter Bhagat Singh in Nawanshahr.

2. Which Indian city is the host of 44th World Chess Olympiad in 2022?

A) Hyderabad

B) Chennai 

C) New Delhi

D) Kolkata

  • The 44th World Chess Olympiad will be organised in Chennai later this year. It is a biennial team event in which teams from 190 countries compete. This is the second major global event of the sport to be held in India after the World Championship match in 2013.
  • The event was previously scheduled in Russia and has been moved out after its invasion of Ukraine.

3. ‘Saksham’, which was seen in the news recently, is an Offshore Patrol Vessel of which armed force?

A) Indian Navy

B) Indian Army

C) Indian Coast Guard 

D) Indian Air Force

  • The Indian Coast Guard (ICG) has commissioned ICGS ‘Saksham’, the fifth Coast Guard Ship in the series of 105 M–Class offshore patrol vessels. ICGS Saksham is the fifth and last Offshore Patrol Vessel designed and developed by Goa Shipyard Limited (GSL) for Coast Guard.

4. N Biren Singh was sworn in as the Chief Minister of which Indian state?

A) Goa

B) Manipur 

C) Punjab

D) Chhattisgarh

  • N Biren Singh was sworn in as the Chief Minister of Manipur for the second consecutive term. The oath of office was administered by Manipur Governor La Ganesan. In the recently held Assembly polls, the Bharatiya Janata Party (BJP) won an absolute majority by winning 32 seats in the 60–member House.

5. When is the ‘World Poetry Day’ observed every year?

A) March.18

B) March.21 

C) March.23

D) March.25

  • The ‘World Poetry Day’ is observed every year on March 21. The day was first started by UNESCO (United Nations Educational Scientific and Cultural Organization) at its 30th General Conference in Paris in the year 1999.
  • The World Poetry Day aims to support linguistic diversity through poetic expression and increase the opportunity for endangered languages to be heard.

6. The ‘National AIDS and STD control programme’ comes under which category of scheme?

A) Core Scheme

B) Central Sector Scheme 

C) Centrally Sponsored Scheme

D) Core of the Core Scheme

  • The Union Cabinet approved the continuation of the National AIDS and STD control programme from April 1 to March 31, 2026. It is a Central Sector Scheme fully funded by the Government of India.
  • The phase–V of the programme has been extended with an outlay of Rs 15471.94 crore. The National AIDS response was initiated by the Government of India in 1992.

7. Which Sustainable Development Goal (SDG) seeks to ensure safe water and sanitation for all by 2030?

A) First

B) Third

C) Sixth 

D) Eighth

  • World Water Day is observed on March 22 to raise awareness about the importance of water and sensitise people to conserve water.
  • The focus of World Water Day is to aid the achievement of United Nations’ Sustainable Development Goal’ (SDG) 6, which is to ensure safe water and sanitation for all by 2030. The theme of World Water Day this year is “Groundwater, making the invisible visible”.

8. Which Indian state implements the ‘Jyothi Sanjeevini Scheme’?

A) Kerala

B) Karnataka 

C) Telangana

D) Odisha

  • Karnataka Government implements the ‘Jyothi Sanjeevini Scheme’. It is a cashless scheme meant for serious diseases/illnesses extended to serving Government employees and their family members. Chief Minister Basavaraj Bommai recently assured the Legislative Council that the Government would review if State Government pensioners could be brought under the Jyothi Sanjeevini scheme.

9. When is the ‘World Sleep Day’ observed?

A) March 12

B) March 14

C) March 16

D) March 18 

  • World Sleep Day is observed on the Friday before the March equinox every year to highlight the importance of quality sleep on body and mind. This year, the World Sleep Day falls on March 18. ‘Quality Sleep, Sound Mind, Happy World’ is the theme for World Sleep Day this year.
  • World Sleep Day is organised by the World Sleep Society and was first observed in 2008.

10. Who is the only Indian to feature in the Top 10 2022 M3M Hurun Global Rich List?

A) Gautam Adani

B) Mukesh Ambani 

C) Cyrus Poonawalla

D) Ratan TATA

  • Hurun India, the famous Research and luxury publishing group released 2022’s Global Rich List, in association with realty firm M3M.
  • Reliance Industries Chairman Mukesh Ambani took home the ‘Richest Man in India and Asia’ title, becoming the only Indian to feature in the Top 10 2022 M3M Hurun Global Rich List with a USD 103 billion net worth. He also won the ‘Richest Telecom Entrepreneur’ title.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!