Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

25th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஒட்டுமொத்தமாக 10 GW-க்கும் மேல் மின்னுற்பதி செய்யும் சோலார் நிறுவல்களைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. இராஜஸ்தான் 

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

  • ஒட்டுமொத்தமாக 10 GW-க்கும் மேல் மின்னுற்பத்தி செய்யும் சோலார் நிறுவல்களைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் மாநிலமாக இராஜஸ்தான் ஆனது. நாட்டின் 49,346 MW சூரிய ஆற்றல் திறனில் 10,506 MW ஆற்றல் இந்த மாநிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தின் மொத்தத்திறனில், 9,542 MW ஆற்றல் நிலத்தில் நிறுவப்பட்ட மின்னுற்பத்தித் திட்டங்கள்மூலமும், 668 MW மேற்கூரையில் நிறுவப்பட்ட மின்னுற்பத்தித் திட்டங்கள் மூலமும் 296 MW ஆற்றல் ஆஃப்-கிரிட் மூலமும் உருவாக்கப்படுகிறது. இம்மாநிலம், மேற்கூரை சூரிய ஆற்றலின் மையமாகவும் உருவாகி வருகிறது. “இன்வெஸ்ட் இராஜஸ்தான்” பிரச்சாரத்தின்போது எரிசக்தித் துறையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அம்மாநிலம் கையெழுத்திட்டது.

2. ஆண்டுதோறும் மே.9 அன்று ‘வெற்றி நாளை’க் கொண்டாடுகிற நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ரஷ்யா 

இ. ஜெர்மனி

ஈ. இந்தியா

  • 1945ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே.9 அன்று ரஷ்யாவால் ‘வெற்றி நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளின்போது, பொதுவாக மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் இருபத்தேழு மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்; இது ரஷ்யர்களால் ‘பெரும் தேசபக்தி போர்’ என்று அழைக்கப்பட்டது.

3. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர (2022) கூட்டம் நடைபெறும் இடம் எது?

அ. நியூயார்க்

ஆ. தாவோஸ் 

இ. ஜெனிவா

ஈ. பாரிஸ்

  • உலகப்பொருளாதார மன்றம் (WEF) அதன் வருடாந்திரக் கூட்டத்தை 2022ஆம் ஆண்டு மே.22 முதல் 26 வரை சுவிச்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடத்தவுள்ளது. WEF வருடாந்திர (2022) கூட்டத்தின் கருப்பொருள் “Working Together, Restoring Trust” என்பதாகும். விவாதிக்கப்படவேண்டிய பிரச்சினைகளுள் தொற்றுநோய்க்கு இடையில் அரசாங்கக்கொள்கைகள் & வணிக உத்திகள் மற்றும் உக்ரைனில் போர் மற்றும் புவி-பொருளாதார சவால்கள் ஆகியவை அடங்கும்.

4. ஓர் உயிரினத்தின் DNA’ஐ மாற்றும் தொழில்நுட்பத்தின் பெயர் என்ன?

அ. மரபணு மாற்றுரு

ஆ. மரபணுத்தொகுதியைத் திருத்தியமைத்தல் 

இ. மரபணு மாற்றம்

ஈ. மரபணு ஒழுங்குமுறை

  • மரபணுத்தொகுதியைத் திருத்தியமைக்கப்பட்ட தாவரங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்களை உயிரித்தொழில்நுட்பத்துறை அறிவித்தது. இந்த வழிகாட்டுதல்கள் மரபணுத்தொகுதியைத் திருத்தியமைப்பதற்கான தொழில்நுட்பங்களின் நிலையான பயன்பாட்டிற்கான செயல் திட்டத்தை வழங்குகின்றன. அவை பொது மற்றும் தனியார் துறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மரபணுத்தொகுதியைத் திருத்தியமைப்பது (Genome Editing) என்பது ஓர் உயிரினத்தின் DNA-ஐ மாற்றும் தொழில்நுட்பமாகும். இது மரபணு மாற்றப்பட்ட உயிரி (GMO) தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

5. 2022 – குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு நடத்தப்படுகிற நாடு எது?

அ. ஜப்பான் 

ஆ. அமெரிக்கா

இ. இந்தியா

ஈ. ஆஸ்திரேலியா

  • இரண்டாவது குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. நாற்கர பாதுகாப்பு உரையாடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். இந்தியப்பிரதமர் மோடி குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். நான்கு நாடுகளின் தலைவர்களும் குழுவின் முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்கின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் முதல் முறையாக இணைகிறார்.

6. இந்திய கடற்படையானது அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் (CORPAT) பயிற்சியை மேற்கொண்டது?

அ. ஜப்பான்

ஆ. பிரான்ஸ்

இ. வங்காளதேசம் 

ஈ. இலங்கை

  • இந்திய கடற்படையும் வங்காளதேச கடற்படையும் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் (CORPAT) பயிற்சியின் நான்காவது பதிப்பை சமீபத்தில் வடக்கு வங்காள விரிகுடாவில் தொடங்கியது. பன்னாட்டு கடல் எல்லைக்கோடு வழியாக இந்திய கடற்படையும் வங்காளதேச கடற்படையும் இணைந்து இந்த ரோந்துப்பணியை மேற்கொள்ளும். வங்காளதேச கடற்படைக் கப்பல்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 கப்பல்களான INS கோரா மற்றும் INS சுமேதா ஆகியவை இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இரு கடற்படைகளின் கடற்புற ரோந்து வானூர்திகளும் இந்த ரோந்துப்பணியில் பங்கேற்கும்.

7. ‘பிரம்ம சமாஜம்’ என்னும் சீர்திருத்த இயக்கத்தை நிறுவியவர் யார்?

அ. தயானந்த சரஸ்வதி

ஆ. இராஜாராம் மோகன் இராய் 

இ. இரவீந்திரநாத் தாகூர்

ஈ. அன்னி பெசன்ட்

  • 19ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் இந்து மதத்தின் சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவினார். சமுதாயத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள், ‘சதி’போன்ற பழக்கவழக்கங்கள், குழந்தைத் திருமணம், சாதி ஏற்றத்தாழ்வுகள்போன்ற சமூகத்தீமைகளை எதிர்த்துப் போராடுவதை இந்த இயக்கம் தனது நோக்கமாகக்கொண்டு செயல்பட்டது. அவர் 1772 மே.22 அன்று வங்காள மாகாணத்தில் பிறந்தார். கொல்கத்தாவில் இராஜாராம் மோகன் இராயின் 250ஆவது பிறந்தநாளின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார அமைச்சகம் தொடக்க விழாவை நடத்தியது.

8. உலக சுகாதார சபையின் 75ஆவது பதிப்பு நடைபெறும் இடம் எது?

அ. ரோம்

ஆ. பாரிஸ்

இ. ஜெனிவா 

ஈ. நியூயார்க்

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) ஜெனிவாவில் உலக சுகாதார சபையின் 75ஆம் பதிப்பை ஏற்பாடு செய்கிறது. பத்து லட்சம் ASHA (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்) பணியாளர்கள் உலகளாவிய சுகாதார தலைவர்கள் விருது-2022-ஐப்பெற்றுள்ளனர். விருதுபெற்ற ஆறுள் ASHA பணியாளர்களும் ஒன்று. ஆப்கானிஸ்தானில் ஆயுதம் ஏந்திய துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எட்டுத் தன்னார்வ போலியோ தொழிலாளர்களும் இதிலடங்குவர்.

9. எந்த நாட்டுடனான, ‘முதலீட்டு ஊக்க ஒப்பந்தத்தில்’ இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா 

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • இந்தியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் டோக்கியோவில் ‘முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன. US இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆனது இந்தியாவில் முதலீட்டு ஆதரவைத் தொடர்ந்து வழங்குவது சட்டப்பூர்வமான தேவையாகும். இந்த ஒப்பந்தம், டோக்கியோவில், இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா மற்றும் DFC-இன் CEO ஸ்காட் நாதன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

10. ‘Child Alert’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. NTI ஆயோக்

இ. UNICEF 

ஈ. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

  • UNICEF ஆனது சமீபத்தில், ‘Child Alert’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. 600,000 குழந்தைகள் அத்தியாவசிய சிகிச்சையை பெறமாட்டார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது. உணவு மற்றும் உயிர்க்காக்கும் சிகிச்சையின் விலை உயர்ந்துவருவதால், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இறக்கக்கூடும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவுகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின்தாக்கம் மற்றும் காலநிலைமாற்றத்தால் தொடர்ந்து ஏற்படும் இடர் மற்றும் சேதம் ஆகியவை உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ‘பரம்பொருள்’ சூப்பர் கம்ப்யூட்டர்: தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின்கீழ் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்முயற்சி

இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் (NSM) திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்பக்கழகம் இணைந்துள்ளது. ‘பரம்பொருள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள மையத்தை, இக்கழகத்தின் இயக்குநர் திறந்து வைத்தார்.

உயர்செயல்திறன்கொண்ட கணினித் திறன்களைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதே தேசிய கம்ப்யூட்டிங் மிஷனின் முக்கிய நோக்காகும். NSM உட்கட்டமைப்புக் குழுவிடம் தேசிய தொழில் நுட்பக்கழகம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை ஆகியவற்றால் `19 கோடி மதிப்பிலான சூப்பர் கம்ப்யூட்டர், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2. உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு

எத்தியோப்பியாவைச்சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், 2ஆம் முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில், டெட்ரோஸ் அதனோமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால், அவர் மீண்டும் இந்த அமைப்பின் தலைவராகி உள்ளார். அடுத்த 5 ஆண்டுக்கு அவர் தலைவராக செயல்படுவார். கொரோனா வைரஸ் தொற்றின்போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை டெட்ரோஸ் திறம்பட வழிநடத்தினார்.

1. Which is the first state in India to surpass 10 GW of cumulative large–scale solar installations?

A. Uttar Pradesh

B. Rajasthan 

C. Bihar

D. Madhya Pradesh

  • Rajasthan became the first state in India to surpass 10 GW of cumulative large–scale solar installations. The state houses 10,506 MW out of the country’s 49,346 MW–solar energy capacity.
  • Out of the state’s total capacity, 9,542 MW is ground–mounted, 668 MW is rooftop and 296 MW has been developed in off–grid sector. It is also emerging as a hub in roof–top solar capacity. The state has signed several MoUs in energy sector during the “Invest Rajasthan” campaign.

2. Which country marks ‘Victory Day’ on May 9 annually?

A. France

B. Russia 

C. Germany

D. India

  • ‘Victory Day’ is celebrated by Russia every year on May 9, marking victory of Soviet Union over Nazi Germany in 1945. The day, usually includes a military parade in Red Square in Moscow, is also celebrated to remember the sacrifices of World War Two. Twenty–seven million Soviet citizens died in the World War 2, called as the Great Patriotic War by Russians.

3. Which is the venue of the World Economic Forum (WEF) Annual meeting 2022?

A. New York

B. Davos 

C. Geneva

D. Paris

  • The World Economic Forum (WEF) is set to hold its Annual Meeting 2022 in the Switzerland town of Davos from May 22 to 26. The theme of the WEF Annual Meeting 2022 will be “Working Together, Restoring Trust”. The issues to be discussed include government policies and business strategies amidst global pandemic, and the war in Ukraine and geo–economic challenges.

4. What is the name of the technology in which the DNA of an organism is changed?

A. Genetic Modification

B. Genome Editing 

C. Genetic Change

D. Genome Regulation

  • The Department of Biotechnology notified the guidelines for safety assessment of genome edited plants. The guidelines provide a road map for sustainable use of genome editing technologies. They are applicable to public and private sector research institutions. Genome editing is the technology in which the DNA of an organism is changed and it is different from genetically–modified organisms (GMO) technology.

5. Which country is the host of the Quad Leaders’ Summit 2022?

A. Japan 

B. USA

C. India

D. Australia

  • The second in–person Quad Leaders’ Summit is hosted by Japan. The Quadrilateral Security Dialogue comprises India, the US, Japan and Australia. Indian Prime Minister Narendra Modi attended the Quad Leaders’ Summit. The leaders of four countries review the progress of the group’s initiatives. The newly–elected Australian Prime Minister Anthony Albanese also joins the Quad Leaders’ Summit for the first time.

6. Indian Navy recently undertook Coordinated Patrol (CORPAT) Exercise with which country?

A. Japan

B. France

C. Bangladesh 

D. Sri Lanka

  • The fourth edition of the Indian Navy–Bangladesh Navy Coordinated Patrol (CORPAT) commenced in the Northern Bay of Bengal recently. Indian Navy and Bangladesh Navy will undertake joint patrolling along the International Maritime Boundary Line (IMBL). Two indigenously built ships INS Kora and INS Sumedha are participating in the exercise along with Bangladesh Navy Ships. Maritime Patrol Aircraft of both navies would also participate in the Patrol.

7. Who established the ‘Brahmo Samaj’ reformist movement?

A. Dayanand Saraswati

B. Rajaram Mohan Roy 

C. Rabindranath Tagore

D. Annie Besant

  • 19th century social and religious reformer Raja Ram Mohan Roy founded Brahmo Samaj a reformist movement of Hindu religion. It aimed to fight the social evils that were prevalent in the society, such as superstitious practices, customs such as Sati, child marriage, caste inequalities. He was born on May 22, 1772 in the then Bengal Presidency.
  • Ministry of Culture held the inaugural ceremony to commemorate the yearlong celebrations of Raja Ram Mohan Roy’s 250th birth anniversary in Kolkata.

8. Which is the venue of the 75th edition of the World Health Assembly?

A. Rome

B. Paris

C. Geneva 

D. New York

  • The World Health Organization (WHO) is organising the 75th edition of the World Health Assembly in Geneva. The one million ASHA (Accredited Social Health Activist) workers have received the Global Health Leaders Award–2022. They were one among the six recipients of the award. The other recipients include eight volunteer polio workers who were shot and killed by armed gunmen in Afghanistan.

9. India signed ‘Investment Incentive Agreement (IIA)’ with which country?

A. Japan

B. USA 

C. Australia

D. UAE

  • India and the United States recently signed the Investment Incentive Agreement (IIA) in Tokyo. It is a legal requirement for US International Development Finance Corporation (DFC) to continue providing investment support in India. The IIA was signed in Tokyo by India’s Foreign secretary Vinay Kwatra and Scott Nathan, CEO of DFC.

10. Which institution released a report titled ‘Child Alert’ Report?

A. World Bank

B. NITI Aayog

C. UNICEF 

D. Oxfam International

  • UNICEF recently released a report titled “Child Alert”. It highlighted those 600,000 more children may miss out on essential treatment. An increasing number of children may die from severe wasting as the price of food and life–saving treatment rises. The effects of Russia’s invasion of Ukraine, and the impact of the coronavirus pandemic and ongoing damage due to climate change, are causing a spiraling global food crisis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!