Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

25th November 2020 Current Affairs in Tamil & English

25th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. 2018ஆம் ஆண்டு மாதிரி பதிவு முறையின்படி, இந்தியாவில் நிலவும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் என்ன?

அ. 1,000 பிறப்புகளுக்கு 15 இறப்பு

ஆ. 1,000 பிறப்புகளுக்கு 18 இறப்பு

இ. 1,000 பிறப்புகளுக்கு 20 இறப்பு

ஈ. 1,000 பிறப்புகளுக்கு 23 இறப்பு

  • தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரமானது மத்திய குடும்பநலம் & சுகாதார அமைச்சகத்தால் நவ.15-21 வரை அனுசரிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நலவாழவுத்துறையின் முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்து உரைக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. “எந்த இடத்திலும், எந்த ஒரு நலவாழ்வு மையத்திலும் அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தரமான, சமமான மற்றும் கண்ணியமான சேவை” என்பதே இந்த ஆண்டு (2020) தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரத்தின் கருப்பொருளாகும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, சொட்டுநீர்ப் பாசன நிதியத்தை உருவாக்கிய அமைப்பு எது?

அ. NABARD

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. SEBI

ஈ. FCI

  • NABARD வங்கியுடன் இணைந்து `5,000 கோடி மூலதன நிதியில் சொட்டுநீர்ப்பாசன நிதியம் 2019-20ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிதியத்தின் நோக்கம், சொட்டுநீர்ப் பாசன திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு, மாநிலங்களுக்கு வட்டி மானிய கடன்களை வழங்குவதும், பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தின் கீழான சொட்டுநீர்ப்பாசன திட்டங்களை ஊக்குவிப்பதுமாகும். சொட்டு நீர்ப்பாசன நிதியின் வழிகாட்டுதல் குழு `3971.31 மதிப்பிலான கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு `1357.93 கோடி வழங்கப்பட்டுள்ளது.

3. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வழிசெலுத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக, Indian Regional Navigation Satellite System (IRNSS)’க்கு ஒப்புதல் அளித்துள்ள அமைப்பு எது?

அ. பன்னாட்டு கடல்சார் அமைப்பு

ஆ. ஐக்கிய நாடுகள் அவை

இ. பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம்

ஈ. உலக சுற்றுலா அமைப்பு

  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் செயல்படுவதற்காக, உலகளாவிய வானொலி வழிசெலுத்தல் அமைப்பின் (WWRNS) ஒருபகுதியாக இந்திய பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பை (IRNSS) பன்னாட்டு கடல்சார் அமைப்பு (IMO) அங்கீகரித்துள்ளது.
  • இதன்மூலம், பன்னாட்டு கடல்சார் அமைப்பால் (IMO) அங்கீகரிக்கப்பட்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது. IMO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட வழிசெலுத்தல் அமைப்புகளைக்கொண்ட பிற மூன்று நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், இரஷ்யா மற்றும் சீனா ஆகும்.

4. நடப்பாண்டு (2020) நடைபெற்ற பதினைந்தாவது G20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. Realising the Opportunities of the 21st Century for All

ஆ. Extraordinary times; Extraordinary Steps

இ. Pandemic preparedness

ஈ. Sustainable Growth and Climate Resilience

  • செளதி அரேபியா கூட்டிய பதினைந்தாவது G20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 19 உறுப்புநாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட இதர நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் கலந்துகொண்ட இந்த உச்சிமாநாடு, COVID-19 தொற்று காரணமாக காணொலிக்காட்சிமூலம் நடத்தப்பட்டது. இவ்வுச்சிமாநாடு, “அனைவருக்குமான 21ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடந்தது.

5. நில அதிர்வு ஆய்வைத் தொடங்கியுள்ள இந்திய நிறுவனம் எது?

அ. இந்திய எண்ணெய் நிறுவனம்

ஆ. ONGC

இ. BHEL

ஈ. GAIL

  • இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (OIL) `220 கோடி மதிப்பிலான நில அதிர்வு ஆய்வினை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தார். மகாநதி படுகையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒடிஸாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என அவர் அப்போது கூறினார்.

6. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஓர் அவசர சட்டத்தை இயற்றியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறினால் `5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

7. ஹவேரி இரயில் நிலையத்திற்கு மகாதேவப்ப மைலாரா இரயில் நிலையம் என மறுபெயரிடுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில அரசு எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. தெலுங்கானா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சார்ந்த விடுதலைப் போராளி மகாதேவப்ப மைலாராவின் பெயரை, ஹவேரி இரயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. மறுபெயரிடுவதற்கான கர்நாடக மாநில அரசின் வேண்டுகோளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

8. குடிநீர் திட்டங்களுக்காக `5,555.38 கோடி மதிப்புள்ள, ‘ஹர் கர் நல் யோஜனா’வை பிரதமர் நரேந்திர மோடி எங்கு தொடங்கிவைத்தார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஒடிசா

  • பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநிலத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் & சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களின் மூலம் 2,995 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் அளிக்கப்படும். இதன்மூலம் சுமார் 42 இலட்சம் பேர் பயனடைவர்.
  • இந்தத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராமப்புற தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக `5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

9. “FDI in India: Now, Next and Beyond” என்ற தலைப்பிலான இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் (CII) அறிக்கையில், அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. உத்தரபிரதேசம்

ஈ. ஒடிசா

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பும் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனமும் இணைந்து, “FDI in India: Now, Next and Beyond” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. 2025ஆம் ஆண்டளவில் இந்தியா $120-160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கக்கூடும் என இவ்வறிக்கை கூறியுள்ளது. மாநில வாரியாக மகாராஷ்டிரா மிக அதிக அளவிலான (28%) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா (19%), தில்லி (16%) மற்றும் குஜராத் (10%) ஆகியவை உள்ளன. இந்த நான்கு மாநிலங்கள் மட்டும் 2019 அக்டோபர் முதல் 2020 ஜூன் வரை 75% அந்நிய நேரடி முதலீட்டைப் ஈர்த்துள்ளன.

10. 48ஆவது பன்னாட்டு எம்மி விருதுகள் 2020’இல் ‘நாடகத்தொடர்’ பிரிவின்கீழ் விருதை வென்றுள்ள இந்திய வலைத் தொலைக்காட்சித் தொடர் எது?

அ. Breathe

ஆ. Mission Over Mars

இ. Special Ops

ஈ. Delhi Crime

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் நகரத்தில் நடிகர் ரிச்சர்ட் கைண்ட் நடத்திய விழாவின்போது பன்னாட்டு தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமியானது 48ஆவது பன்னாட்டு எம்மி விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தது. ரிச்சி மேத்தா எழுதி இயக்கி, நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வெளியான, ‘தில்லி கிரைம்’ என்ற அசல் தொடர் ‘நாடகத்தொடர்’ பிரிவின்கீழ் விருதை வென்றது. இந்தியாவிலிருந்து தொடரொன்று எம்மி விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

1. What is the new-born mortality rate of India, as per the Sample Registration System (SRS), 2018?

[A] 15 per 1,000 live births

[B] 18 per 1,000 live births

[C] 20 per 1,000 live births

[D] 23 per 1,000 live births

  • National New-born Week was observed by the Union Ministry of Health and Family Welfare from Nov.15-21. This week is observed to emphasize the importance given to the health of young children and to take note of the fact that this is also one of the top priorities of the welfare sector. The theme of this year’s (2020) National New-born week is “Quality, Equity, Dignity for every newborn at every health facility and everywhere”.

2. Micro Irrigation Fund, which was seen in the news recently, is created with which organisation?

[A] NABARD

[B] RBI

[C] SEBI

[D] FCI

  • Micro Irrigation Fund with a corpus of Rs. 5000 crores created with NABARD was operationalised in 2019-20. The objective of the Fund is to facilitate the States in availing an interest subvented loan for expanding coverage of Micro Irrigation by taking up special and innovative projects and also for incentivising micro irrigation beyond the provisions available under PMKSY-Per Drop More Crop to encourage farmers to install micro irrigation systems.
  • Steering Committee of MIF has approved projects for loan of Rs. 3971.31 crore comprising Tamil Nadu, Rs. 616.13 for Tamil Nadu.

3. Which organisation has given nod for Indian Regional Navigation Satellite System (IRNSS) to be used for navigation in the Indian Ocean Region?

[A] International Maritime Organization

[B] United Nations

[C] International Telecommunication Union

[D] World Tourism Organisation

  • The Indian Regional Navigation Satellite System (IRNSS) has been recognised by the International Maritime Organisation (IMO) as a part of the World-Wide Radio Navigation System (WWRNS) for operation in the Indian Ocean Region.
  • India has become the fourth country in the world to have its independent regional navigation satellite system recognised by the International Maritime Organisation (IMO). The other three countries that have its navigation systems recognised by the IMO are the US, Russia and China.

4. What is the theme of the 15th G20 Summit of the year 2020?

[A] Realising the Opportunities of the 21st Century for All

[B] Extraordinary times; Extraordinary Steps

[C] Pandemic preparedness

[D] Sustainable Growth and Climate Resilience

  • Prime Minister Modi attends the 15th G20 Summit convened by Saudi Arabia. The summit, which was attended by leaders of 19 member states, the European Union and other invited countries and multinational organizations, was held on video due to the COVID-19 infection. The theme of the conference was “Realizing the Opportunities of the 21st Century for All”.

5. Seismic survey campaign is launched by which Indian Company?

[A] Oil India Ltd

[B] ONGC

[C] BHEL

[D] GAIL

  • Union Petroleum and Natural Gas Minister Dharmendra Pradhan has launched the Oil India Ltd’s (OIL) seismic survey campaign worth Rs 220 crore. He said at the time, that oil and gas produced from the Mahanadi basin would play a key role in the socio-economic development of Odisha.

6. Which state has enacted emergency law against online gambling?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Karnataka

  • Governor Banwarilal Purohit has approved an ordinance banning online games such as online gambling in Tamil Nadu. The law provides for a fine of Rs 5,000 and imprisonment for six months for violating the ban.

7. Which State Government issued a notification to rename the Haveri Railway station as Mahadevappa Mailara Railway Station after a freedom fighter?

[A] Andhra Pradesh

[B] Telangana

[C] Karnataka

[D] Kerala

  • The Government of Karnataka issued a notification to rename the Haveri Railway station as Mahadevappa Mailara Railway Station, after Mahadevappa Mailara, a freedom fighter from Haveri district, Karnataka. Following the State Government’s request to rename, The Ministry of Home affairs issued the no objection for the name change of the Haveri Railway station as Mahadevappa Mailara Railway Station.

8. Where did PM Narendra Modi launch “Har Ghar Nal Yojna” worth Rs 5,555.38 crore for drinking water projects?

[A] Uttar Pradesh

[B] Telangana

[C] Karnataka

[D] Kerala

  • Prime Minister Narendra Modi launched “Har Ghar Nal Yojna” (tap water to every household) worth Rs 5,555.38 crore for drinking water projects in Mirzapur and Sonbhadra districts in Vindhyachal region of Uttar Pradesh. In this regard, Rs 3212.18 crore will be spent in Sonbhadra and Rs 2343.20 crore will be utilized in Mirzapur. This will benefit 41,41,438 families in both the districts by ensuring water supply through pipelines to 2,995 villages. The scheme will be completed within 24 months.

9. Which State received maximum FDI According to the report titled “FDI in India: Now, Next and Beyond” by Confederation of Indian Industry (CII)?

[A] Maharashtra

[B] Telangana

[C] Karnataka

[D] Kerala

  • In accordance with the report titled “FDI in India: Now, Next and Beyond” by Confederation of Indian Industry (CII) and Ernst & Young Global Limited (EY), India may attract foreign direct investment (FDI) of $120-160 billion per year by 2025. States-wise Maharashtra remains the most attractive destination (28%), followed by Karnataka (19%), Delhi (16%) and Gujarat (10%). These four alone received 75% of the FDI between October 2019 and June 2020.

10. Which Indian web television series has won the award under the ‘drama series’ category at the 48th International Emmy Awards 2020?

[A] Breathe

[B] Mission Over Mars

[C] Special Ops

[D] Delhi Crime

  • The International Academy of Television Arts & Sciences announced the winners of the 48th International EmmyAwards 2020 during a live ceremony hosted by actor Richard Kind in New York City, USA. Netflix’s India Original series ‘Delhi Crime’ written and directed by Richie Mehta won the award under the ‘drama series’ category. Delhi Crime wins the 1st Emmy for a program from India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!