TnpscTnpsc Current Affairs

25th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

25th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 25th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தணிக்கைத் தலைமை இயக்குநர் என்ற பதவியை உருவாக்கிய முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. கேரளா

ஈ. இராஜஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • இந்தியாவிலேயே தணிக்கைத் தலைமை இயக்குநர் என்ற பதவியை உருவாக்கிய முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்தப் பதவிக்காக இந்தியத் தணிக்கை மற்றும் கணக்கு சேவையிலிருந்து ஓர் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளக தணிக்கைத் துறைகளின் செயல்பாட்டை வலுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் இந்தப் புதிய அதிகாரியின் பொறுப்பாகும்.

2. ‘சின்–குகி–மிசோ’ இனச் சமூகங்களுடன் தொடர்புடைய நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. வங்காளதேசம்

ஈ. தாய்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வங்காளதேசம்

  • வங்காளதேச பாதுகாப்புப் படையினருக்கும் குகி–சின் தேசிய இராணுவத்திற்கும் இடையிலான சண்டையைத் தொடர்ந்து, சின்–குகி இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர்கள் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். வங்காளதேசத்திலிருந்து வெளியேறிய 274 வங்கதேச பழங்குடியினருக்கு தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் நிவாரணம் வழங்குவதாக மிசோரம் அரசு அறிவித்துள்ளது.

3. ‘ஆபரேஷன் டர்ட்ஷீல்டு’ என்றவொன்றைத் தொடங்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் தொடர்பான கூட்டமைப்பிற்கான கட்சிகளின் மாநாட்டின் (CoP–19) 19ஆவது கூட்டம் பனாமா நகரத்தில் நடைபெற்றது. நன்னீர் ஆமையான, ‘படகுர் கச்சுகா’வை இதில் இணைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவு, CITESஇன் CoP–19இல் உள்ள கட்சிகளின் ஆதரவைப்பெற்றது. நன்னீர் ஆமைகளை வேட்டையாடுதல் மற்றும் அதன் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழிப்பது ஆகிய நோக்கத்திற்காக, ‘ஆபரேஷன் டர்ட்ஷீல்ட்’ என்றவொன்றைத் தொடங்கியது. இது குறித்து CITES இந்தியாவைப் பாராட்டியது.

4. ‘ஓரியன்’ விண்கலத்தை ஏவிய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • NASAஇன் ஓரியன் விண்கலம் ஆர்ட்டெமிஸ்–I திட்டத்தின் ஒருபகுதியாக தனது முதல் நிலவு இலக்கு அணுகலை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது நிலவின் மேற்பரப்பிலிருந்து 130 கிமீட்டர் தொலைவில் கடந்துள்ளது. ஓரியன் நிலவுக்கு அப்பால் சுமார் 57,287 மைல்கள் தொலைவில் பயணம் செய்து அப்பல்லோ–13இன் சாதனையை விஞ்சும். ஓரியன் விண்கலமானது நிலவுக்கு அப்பால் உள்ள தொலைதூர பிற்போக்குச் சுற்றுப்பாதையில் நுழையும்.

5. ஐரோப்பிய நாடாளுமன்றம் கீழ்க்காணும் எந்த நாட்டை பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக அறிவித்துள்ளது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. பாகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரஷ்யா

  • ஐரோப்பிய நாடாளுமன்றமானது ரஷ்யாவை பயங்கரவாதத்தின் அரச ஆதரவாளராக அறிவித்துள்ளது. எரிசக்தி உட் கட்டமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்கள்போன்ற உக்ரேனிய இலக்குகள் மீதான அதன் இராணுவத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக வாதிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான ஒரு சட்ட ரீதியான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைகளை அது ஏற்கனவே விதித்துள்ளது.

6. உலகின் முதல் வேத கடிகாரம் கட்டப்படுகிற நகரம் எது?

அ. காஞ்சிபுரம்

ஆ. ஜெய்ப்பூர்

இ. உஜ்ஜைனி

ஈ. துவாரகா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உஜ்ஜைனி

  • உலகின் முதல் வேத கடிகாரத்தின் கட்டுமானப் பணிக்கான அடிக்கல், மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் அரசு ஜிவாஜி ஆய்வகத்தில் `1.62 கோடி செலவில் ‘வேத கடிகாரம்’ நிறுவப்படும். இந்தக் கடிகாரம் வேதகால கணக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வேத கடிகாரத்தின் பயன்பாடு சந்திரனின் நிலை, பண்டிகை, மங்கள நேரம், பிறந்தநாள், விரதம், பண்டிகை முக்கிய விடுமுறை நாட்களில் பயன்படுத்தப்படும்.

7. 2022ஆம் ஆண்டில், ‘ரைசிங் சன் வாட்டர் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சியை நடத்திய மாநிலம் எது?

அ. மேகாலயா

ஆ. மேற்கு வங்காளம்

இ. மகாராஷ்டிரா

ஈ. இராஜஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மேகாலயா

  • ரைசிங் சன் வாட்டர் ஃபெஸ்ட்–2022 ஆனது மேகாலயா மாநிலத்தில் உமியாம் ஏரியில் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த நீர் விளையாட்டு மற்றும் கலாச்சார கண்காட்சி வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த இளையோர் படகோட்டம்போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இது வடகிழக்கில் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில அரசாங்கங்களுடன் இணைந்த இந்திய இராணுவத்தின் கிழக்குப் படையின் முனைவாகும்.

8. இந்தியாவின் முதல் வாக்காளரான மாஸ்டர் ஷியாம் சரண் நேகி சார்ந்த மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • நாட்டின் முதல் வாக்காளரான 106 வயதான மாஸ்டர் ஷியாம் சரண் நேகி அண்மையில் காலமானார். அவர் ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் வசித்தார். அவரது இறுதிச்சடங்குகளை மாவட்ட நிர்வாகம் முழு மரியாதையுடன் மேற்கொண்டது. நேகி, ஹிமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக தபால் வாக்குமூலம் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. உலகம் முழுவதும், ‘உலக கதிரியக்க வரைவியல் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.05

ஆ. நவம்பர்.08

இ. நவம்பர்.15

ஈ. நவம்பர்.25

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.08

  • உலக கதிரியக்க வரைவியல் நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவ.08 அன்று, X–கதிர் கண்டுபிடிக்கப்பட்டதை நினைவைக் குறிக்கிறது. கடினமாக உழைக்கும் கதிரியக்க வரைவியலாளர்கள் / கதிரியக்க நிபுணர்களையும் இந்நாள் கொண்டாடுகிறது. ஜெர்மனி பேராசிரியர் வில்ஹெம் இரான்ட்ஜென் என்பவரால் கடந்த 1895ஆம் ஆண்டில் X–கதிர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.

10. ஐநா பொதுச்சபையால் சிறார் பாலியல், வன்கொடுமை/வன்முறையைத்தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமான உலக நாள் என அறிவிக்கப்பட்ட தேதி எது?

அ. நவம்பர்.15

ஆ. நவம்பர்.18

இ. நவம்பர்.25

ஈ. நவம்பர்.27

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.18

  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது நவ.18ஆம் தேதியை “சிறார் பாலியல், வன்கொடுமை / வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமான உலக நாள் – World Day for the Prevention of and Healing from Child Sexual Exploitation, Abuse and Violence” என அறிவித்துள்ளது. சிறார் பாலியல் வன்கொடுமையின் பாதிப்புகளை உலகளாவியப் பார்வையைக் கொண்டுவருவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விடுதலையின் அமுதப்பெருவிழாவின்கீழ், சங்கீத நாடக அகாடமி அமுத விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஐந்து பேருக்கு விருதுகள் அறிவிப்பு.

75 ஆண்டு இந்திய விடுதலையின் அமுதப்பெருவிழாவின்கீழ், 75 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி அமுதா விருதுகளை சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு `1 லட்சம் ரொக்கப்பரிசும், தாமிரப்பத்திரமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.

இந்த விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (நாதஸ்வரம்), புருசை சுப்பிரமணியம் (தெருக் கூத்து), சுந்தரேசன் இராமமூர்த்தி (நாடக நடிகர்), வி ஏ கே இரங்காராவ் (நடன இசை), பி இரமணி (வீணை இசை) ஆகிய கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. புதுச்சேரிசார் நாடக இசைக்கலைஞர் கே எம் சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞர் வீராசாமி சீனிவாசன் ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

2. நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-54

புவிக்கண்காணிப்பு செயற்கைக்கோள், எட்டுச் சிறிய இரக செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ஏவுகலம் நவ.26 அன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மைய ஏவுதளத்தில் இருந்து அந்த ஏவுகலம் செலுத்தப்படவிருக்கிறது.

புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-3) என்ற நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இதை ISRO வடிவமைத்துள்ளது. இதுதவிர, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், இந்தியா-பூடான் கூட்டுத்தயாரிப்பான ஐஎன்எஸ்-2பி, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பிக்சலின் ஆனந்த் உள்பட 8 நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-54 ஏவுகலம்மூலம் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

இஓஎஸ்-06 செயற்கைக்கோள் 1,117 கிலோ எடைகொண்டது. ஒசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4ஆவது செயற்கைக்கோள் இதுவாகும். கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின்திசை மாறுபாடுகள், வளி மண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அந்தச் செயற்கைக்கோள் அளிக்கவல்லது. அதேபோல், இந்தியா-பூடான் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின்கீழ் வடிவமைக்கப்பட்ட ஐன்எஸ்-2பி செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

25th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which is the first state to create the role of Director General of Audit?

A. Tamil Nadu

B. Odisha

C. Kerala

D. Rajasthan

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu is the first State to create the role of Director General of Audit in India. The state has appointed an officer from the Indian Audit and Accounts Service on deputation, for this role. The officer’s responsibility will be to strengthen and streamline the functioning of internal audit departments in the state.

2. ‘Chin–Kuki–Mizo Ethnic Communities’ are associated with which country?

A. China

B. Russia

C. Bangladesh

D. Thailand

Answer & Explanation

Answer: C. Bangladesh

  • Following the fights between Bangladeshi security forces and the Kuki–Chin National Army (KNA), tribals of Chin–Kuki ethnic community are fleeing Bangladesh. Mizoram government announced to provide temporary shelter, food and relief to as many as 274 Bangladeshi tribal nationals who fleed Bangladesh.

3. Operation Turtshield was launched by which country?

A. China

B. India

C. Russia

D. Indonesia

Answer & Explanation

Answer: B. India

  • The 19th Meeting of the Conference of the Parties (CoP 19) to the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) is being held at Panama City. India’s proposal for induction of fresh water turtle ‘Batagur kachuga’ earned support of the parties in CoP 19 of CITES. CITES also lauded the result achieved by the country in operations initiated by the Wildlife Crime Control Bureau namely Operation Turtshield, to eliminate poaching and illegal trade of fresh water turtles.

4. Which country launched the ‘Orion spacecraft’?

A. Japan

B. USA

C. UAE

D. Israel

Answer & Explanation

Answer: B. USA

  • NASA’s Orion spacecraft has successfully performed its first Moon flyby as part of the uncrewed Artemis I mission. It has passed within 130 kilometres of the lunar surface. Orion will travel about 57,287 miles beyond the Moon at its farthest point from the Moon, passing the record set by Apollo 13. Orion will enter a distant retrograde orbit beyond the Moon.

5. The European Parliament has designated which country as state sponsor of terrorism?

A. China

B. Russia

C. Afghanistan

D. Pakistan

Answer & Explanation

Answer: B. Russia

  • The European Parliament has designated Russia a state sponsor of terrorism. It has argued that its military strikes on Ukrainian civilian targets such as energy infrastructure, hospitals, schools and shelters violated international law. Though the European Union does not have a legal framework in place to back it up, the bloc has already imposed unprecedented sanctions on Russia over its invasion of Ukraine.

6. World’s First Vedic Clock is being constructed in which city?

A. Kanchipuram

B. Jaipur

C. Ujjain

D. Dwaraka

Answer & Explanation

Answer: C. Ujjain

  • The foundation stone of the construction work of the World’s First Vedic Clock has been done in the city of Ujjain, Madhya Pradesh. The ‘Vedic Clock’ will be constructed at Jantar Mantar Government Jiwaji Observatory at a cost of Rs 1.62 cr. This clock will be fixed on the basis of the principles of Vedic time calculation. The application of the Vedic Clock will be used for moon position, festival, auspicious time, birth anniversary, fast, festival major holidays among others.

7. Which state is the host of ‘Rising Sun Water Fest–2022’ event?

A. Meghalaya

B. West Bengal

C. Maharashtra

D. Rajasthan

Answer & Explanation

Answer: A. Meghalaya

  • The Rising Sun Water Fest–2022 was held in the state of Meghalaya at Umiam Lake. The three day water sports and cultural fair was a first of its kind in the North East. It is aimed at encouraging the youth of North East to take up water sports like Rowing and Sailing. It also aimed at promoting tourism in the North East. It was an initiative by the Indian Army’s Eastern Command with the governments of Assam and Meghalaya.

8. India’s first voter Master Shyam Saran Negi was from which state?

A. Assam

B. Himachal Pradesh

C. West Bengal

D. Gujarat

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • The country’s first voter 106–year–old Master Shyam Saran Negi passed away, after a prolonged illness. He was a resident of Kinnaur district of Himachal Pradesh. His last rites were performed with full honours by the district administration. Mr. Negi had cast his vote for the Himachal Pradesh assembly elections through postal ballot three days ago through postal ballot.

9. When is the ‘World Radiography Day’ observed across the world?

A. November.05

B. November.08

C. November.15

D. November.25

Answer & Explanation

Answer: B. November.08

  • World Radiography Day is celebrated every year on November 8, marking the anniversary of the discovery of X–rays. The day also celebrates the hard–working radiographers and radiologists. X–rays were discovered accidentally by Professor Wilhelm Röntgen of Germany in 1895.

10. UNGA has designated which date as the ‘World Day for the prevention of and healing from child sexual exploitation, abuse and violence’?

A. November.15

B. November.18

C. November.25

D. November.27

Answer & Explanation

Answer: B. November.18

  • The UN General Assembly has adopted a resolution to designate November 18 every year as the World Day for the prevention of and healing from child sexual exploitation, abuse and violence. It encourages commitments to raise awareness of those affected by child sexual abuse and the need to prevent child sexual exploitation, abuse and violence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!