Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

25th September 2020 Current Affairs in Tamil & English

25th September 2020 Current Affairs in Tamil & English

25th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

25th September Tamil Current Affairs 2020

25th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

  1. நிலுவைத்தொகை செலுத்தப்படாத காரணத்தால் சூடானிலிருந்து வெளியேறிய இந்திய பொதுத்துறை நிறுவனம் எது?

அ. ONGC

ஆ. SAIL

இ. NTPC

ஈ. NHPC

  • எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்க்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், சூடானிலிருந்து இந்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் & இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) வெளியேறியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ONGC’இன் அயல்நாட்டு முதலீட்டுக் குழுமமான விதேஷ் (OVL) மற்றும் அதன் சீன பங்குதாரரான CNPC மற்றும் மலேசியாவின் பெட்ரோனாஸ் ஆகியவையும் எண்ணெய் வயல்களிலிருந்து விலகியுள்ளன. 2011ஆம் ஆண்டு முதல் வாங்கிய எண்ணெய்க்கு, $430.69 மில்லியனை சூடான் செலுத்தாமல் உள்ளது.

2.பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வாரத்தின் பெயர் என்ன?

அ. சேவா சப்தா

ஆ. பாரத் சப்தா

இ. தற்சார்பு சப்தா

ஈ. தூய்மை சப்தா

  • பிரதமர் மோடியின் பிறந்தநாளை சேவை வாரமாகக் கொண்டாட பா. ஜ. க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் செப்.17 அன்று கொண்டாடப்பட்டது. செப்டம்பர்.14-20 வரையிலான ஒரு வார காலத்திற்கு, ‘சேவா சப்தா’வைக் கொண்டாடவுள்ளதாக பா. ஜ. க தலைமை தீர்மானித்துள்ளது. இந்த ஒருவார காலத்தில், மோடி தலைமையிலான அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பா. ஜ. க ஏற்பாடு செய்துள்ளது.

3.2025ஆம் ஆண்டுக்குள், பிரதமர் பாரதிய ஜனசாதி கேந்திரங்களின் எண்ணிக்கையை எத்தனையாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

அ. 4500

ஆ. 6500

இ. 8500

ஈ. 10500

  • எதிர்வரும் 2024 மார்ச் இறுதிக்குள், பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,500ஆக அதிகரிக்க நடுவணரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் & உரங்கள் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் நல மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. 2020 செப்.15 நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 6,603ஆக அதிகரித்துள்ளது.

4. AICTE’இன், நடப்பாண்டுக்கான (2020) உத்கிருஷ்ட சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதை வென்றுள்ள நிறுவனம் எது?

அ. பொறியியல் கல்லூரி, புனே

ஆ. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி

இ. பொறியியல் கல்லூரி, சென்னை

ஈ. S R பொறியியல் கல்லூரி

  • அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின்கீழ் (AICTE) வரும் நிறுவனங்களுக்கு 14 பிரிவுகளில் 2ஆம் உத்கிருஷ்ட சன்ஸ்தான் விஸ்வகர்மா விருதை மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ மெய்நிகர் முறையில் வழங்கினார். புனே பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த பிரிவில் முதல் பரிசை வென்றது. 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்து சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற செய்வதை இலட்சியமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, விருதுக்கான கருப்பொருளாக, “கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடுகிறது” என்பது இருந்தது.

5.ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு, பசுக்களை வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. பீகார்

  • மாநிலத்தில் வசித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கு பசுக்களை வழங்குவதாக உத்தர பிரதேச மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ திட்டத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது. உ பி மாநில அரசானது, இதனை, ‘முதலமைச்சரின் ஆதரவற்ற பசுக்கள் பங்கேற்பு திட்டத்தின்’கீழ் மேற்கொள்ளும்.

6.டொராண்டோ பன்னாட்டுத் திரைப்பட விழாவில், ஊடகத்தினூடாக தாக்கத்தை ஏற்படுத்துவோருக்கு வழங்கப்படும், ‘ஜெப் ஸ்கோல்’ விருதை வென்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் யார்?

அ. மீரா நாயர்

ஆ. ஜோயா அக்தர்

இ. அஞ்சலி மேனன்

ஈ. சுதா கொங்கரா

  • இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர், அண்மையில், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், ஊடகத்தினூடாக தாக்கத்தை ஏற்படுத்துவோர்க்கு வழங்கப்படும், ‘ஜெப் ஸ்கோல்’ விருதைப் பெற்றார். சர் அந்தோனி ஹாப்கின்ஸ், ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கேட் வின்ஸ்லெட் என இவ்விருது பெற்ற அறுவருள் ஒருவராக மீரா இருந்தார். ‘A Suitable Boy’ என்ற தொலைக்காட்சி தொடருக்காக மீராவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

7. ‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ உள்ளிட்ட திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை & உழவர்நலத்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • ‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ ஆகிய இரண்டு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய MSME அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஊதுவத்தி உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளோருக்கான ஆதரவை விரிவுபடுத்தி இரட்டிப்பாக்குவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. மத்திய MSME அமைச்சகத்தின் SFURTI திட்டத்தின்கீழ், மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான அமைப்பை நிறுவுவதற்கும், தேனீ வளர்ப்புக்கான அமைப்பை உருவாக்குவதற்கும் தலா `50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

8.அண்மையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட SWAMIH நிதியம் சார்ந்த துறை எது?

அ. சாலைப் போக்குவரத்து

ஆ. விண்வெளித் தொழில்நுட்பம்

இ. வீட்டுவசதி

ஈ. வேளாண்மை

  • இந்திய அரசாங்கம் ஒரு புதிய “குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம்” திட்டத்தை (SWAMIH நிதியம்) உருவாக்கியுள்ளது. இது நிகர மதிப்புள்ள நேர்மறையான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டங்களில், NPA’ஆக அறிவிக்கப்பட்டவையும், IBC’இன்கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளவையும் அடங்கும்.

9.ஹில்சா மீன்களை குறிப்பிட்ட அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. மியான்மர்

இ. வங்கதேசம்

ஈ. பாகிஸ்தான்

  • ஹில்சா மீன்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. வரும் துர்கா பூசையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம், ஒன்பது ஏற்றுமதியாளர்களுக்கு, 1500 டன் ஹில்சாவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. 2012’இல் ஹில்சா ஏற்றுமதிக்கு வங்கதேசம் தடைவிதித்திருந்தது.

10.உலக வங்கியின் நடப்பாண்டுக்கான (2020) மனிதவளக் குறியீட்டில், இந்தியா அடைந்த தரநிலை என்ன?

அ. 76

ஆ. 96

இ. 106

ஈ. 116

  • ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் உலக வங்கியின் மனிதவளக் குறியீட்டின் அண்மைய பதிப்பில், இந்தியா 116ஆம் இடத்தில் உள்ளது. மனிதவளத்தின் முக்கிய கூறுகளின் அடிப்படையில், இக்குறியீடு, நாடுகளை வரிசைப்படுத்துகிறது. இந்தியாவின் மதிப்பெண், 2018ஆம் ஆண்டில் அது பெற்றிருந்த 0.44 என்ற அளவிலிருந்து தற்போது 0.49ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு (2020) மார்ச் மாதம் வரை 174 நாடுகளுக்கான நலவாழ்வு மற்றும் கல்விசார் தரவுகளை இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இதுவரை பள்ளிக்கல்வி கிடைக்கப்பெறவில்லை என்ற தகவலையும் இந்தக் குறியீடு வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (74) இன்று காலமானார். ஆறு தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 2001’இல், ‘பத்மஸ்ரீ’, 2011’இல், ‘பத்மபூஷன்’ விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

1. Which Public sector Unit of India exited from Sudan, after non–payment of dues from the country?

[A] ONGC

[B] SAIL

[C] NTPC

[D] NHPC

  • India’s Oil and Natural Gas Corp (ONGC) has exited from Sudan after the country has refused to pay for oil it lifted from the fields. The overseas investment arm of the state–owned oil company, ONGC Videsh (OVL) along with its Chinese partner CNPC and Malaysia’s Petronas have withdrawn from the oil fields. The African country had not paid USD 430.69 million for the Oil it bought from the block since 2011.

2. What is the name of the special week organised across the country, to mark the birthday of Prime Minister Narendra Modi?

[A] Seva Saptah

[B] Bharat Saptah

[C] Atmanirbhar Saptah

[D] Swachhata Saptah

  • Bharatiya Janata Party has organised a week–long Seva Saptah to celebrate the birthday of Prime Minister Narendra Modi. Under this programme, several welfare activities were organised across the country. Several programmes related to cleanliness, distribution of sanitary pads and wheel chairs and other social service events are organized from 14th to 20th September.

3. What is the target fixed for number of Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendras by 2025?

[A] 4500

[B] 6500

[C] 8500

[D] 10500

  • As per the recent statement of the Ministry of Chemicals and Fertilizers, the government has set a target to increase the number of PMBJKs to 10,500 by March 2025.
  • The Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras (PMBJK) were launched with an aim to provide quality medicines at affordable rates to common citizens. At present, there were just over 6000 Kendras across the country.

4. Which institution won the Utkrisht Sansthan Vishwakarma Award (USVA) 2020 of AICTE?

[A] College of Engineering, Pune

[B] National Institute of Technology, Tiruchirappalli

[C] College of Engineering, Chennai

[D] S R Engineering College

  • Union Education Minister Shri Ramesh Pokhriyal Nishank virtually conferred Second Utkrisht Sansthan Vishwakarma Award. The USVA Award is being organized by All India Council for Technical Education (AICTE) since 2019, to motivate AICTE approved institutions.
  • This year, the theme of the award is “India Fights Corona”. College of Engineering, Pune won the award in the overall category.

5. Which state government has decided to give cows to the families of malnourished children?

[A] Gujarat

[B] Uttar Pradesh

[C] Madhya Pradesh

[D] Bihar

  • The Uttar Pradesh government has recently announced that it will give cows to the families of malnourished children in the state. This programme has been launched as a part of ‘Poshan Maah’ (Nutrition Month) launched for the month of September across the country. The UP government would be carrying out this exercise under the ‘Chief Minister Destitute Cow Participation Scheme’.

6. Which Indian–American filmmaker has won the Jeff Skoll Award for Impact Media at Toronto International Film Festival?

[A] Mira Nair

[B] Zoya Akhtar

[C] Anjali Menon

[D] Sudha Kongara

  • Indian–American filmmaker Mira Nair has recently received the Jeff Skoll Award for Impact Media at the Toronto International Film Festival. Nair was one of the six recipients of the TIFF Tribute Awards ceremony along with veteran actor Sir Anthony Hopkins, Oscar–winning actress Kate Winslet among others. The presentation of the award to Nair was initiated by Tabu, star of Mira’s television series ‘A Suitable Boy’.

7. Which Union Ministry has announced guidelines for schemes that include ‘Pottery Activity’ and ‘Beekeeping Activity’?

[A] Ministry of Agriculture & Farmers’ Welfare

[B] Ministry of MSME

[C] Ministry of Social Justice & Empowerment

[D] Ministry of Women & Child Development

  • Ministry of Micro Small and Medium Enterprises (MSME) has recently released guidelines for schemes that include ‘Pottery Activity’ and ‘Beekeeping Activity’. The Ministry had earlier announced expanding the support to Artisans engaged in making Agarbatti. Additional amount of Rs. 50.00 crore each has been provisioned for setting up of clusters in Pottery making and developing Beekeeping honey clusters under the SFURTI scheme of the Ministry.

8. The SWAMIH fund that has been created recently by the Government pertains to which sector?

[A] Road Transport

[B] Space Technology

[C] Housing

[D] Agriculture

  • The Government of India has created a new “Special Window for Completion of Affordable and Mid–Income Housing” Investment Fund (SWAMIH investment fund). This is created to fund stalled housing projects that are net worth positive.
  • These projects would include the ones that have been declared as NPA and those pending before the National Company Law Tribunal (NCLT) under the IBC.

9. Which country has decided to export Hilsa fish to India on a limited scale?

[A] Sri Lanka

[B] Myanmar

[C] Bangladesh

[D] Pakistan

  • The Government of Bangladesh has decided to export Hilsa fish to India on a limited scale. This is in view of the forthcoming Durga Pooja. The country’s commerce ministry has permitted nine exporters to export 1500 tonnes of Hilsa to India. Bangladesh imposed a ban on the export of Hilsa in 2012.

10. What is the rank of India in the World Bank’s 2020 Human Capital Index?

[A] 76

[B] 96

[C] 106

[D] 116

  • In the latest edition of the World Bank’s annual Human Capital Index, India has been ranked at the 116th position. The index ranks countries on the basis of key components of human capital. India’s score increased to 0.49 from its earlier score of 0.44 in 2018.
  • This year, the index includes health and education data for 174 countries, up to March 2020. It also reveals that more than 1 billion children are out of school.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!