Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th & 27th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

26th & 27th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th & 27th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. எந்தப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் அஞ்சல்தலையை வெளியிட்டார்?

அ. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

ஆ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

இ. தில்லி பல்கலைக்கழகம்

ஈ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

  • அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) என்பது அலிகாரில் உள்ள ஒரு நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். இது முதலில், சர் சையத் அகமத் கான் அவர்களால் 1875’இல் நிறுவப்பட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சட்டத்திற்குப்பிறகு, ‘முகமது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி’ என்ற அதன் அசல்பெயர் 1920’இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. அண்மையில் பிரதமர் மோடி, இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று அலிகார் முஸ்லிம் பல்கலை -க்கழகத்துக்கான ஒரு சிறப்பு அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.

2. லான்செட் அறிக்கையின்படி, இந்தியாவில் நிகழ்ந்த 1.7 மில்லியன் இறப்புகளுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட 1.4% பொருளாதார இழப்புக்கும் காரணமானது எது?

அ. COVID–19

ஆ. காற்று மாசுபாடு

இ. பரவா நோய்கள்

ஈ. புகைத்தல்

  • லான்செட் இதழில் வெளியிடப்பட்ட, ‘இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காற்று மாசு ஏற்படுத்திய தாக்கம்’ குறித்த அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக 1.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த இறப்புகளில் 18% ஆகும். உற்பத்தியின்மை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆக உள்ளது. அது `260,000 கோடிக்கு சமம். இந்த ஆய்வுக்கு UNEP., பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ICMR ஆகியவை உதவியுள்ளன.

3. NPCIஉடன் இணைந்து தொடுதலற்ற ‘RuPay Select’ பற்றட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?

அ. பாரத வங்கி

ஆ. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

இ. பஞ்சாப் தேசிய வங்கி

ஈ. ICICI வங்கி

  • அண்மையில், இந்திய கொடுப்பனவு நிறுவனத்துடன் (NPCI) இணைந்து தொடுதலற்ற ‘RuPay Select’ பற்றட்டையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்தப் பற்றட்டையை, பயனர்கள் உறுப்புத்துவம் பெறுவதற்கு, கால்ப் களம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் உணவகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். National Common Mobility Debit Card (NCMC)மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளையும் பயனர்கள் பெறலாம்.

4. இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்கா நிறுவப்படவுள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. கான்பூர்

  • உத்தர பிரதேச மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்காவை கான்பூரில் நிறுவவுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. கான்பூரின் இராமாய்பூர் சிற்றூரில், `5850 கோடி செலவில், 235 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

5. இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்படவுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஜார்க்கண்ட்

இ. மகாராஷ்டிரா

ஈ. தெலுங்கானா

  • இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையமானது குஜராத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையம், மின்கலத்தரத்திலான பொருளை உற்பத்தி செய்ய லித்தியம் தாதுவை செயலாக்கும். இந்நிலையத்தை அமைக்க, `1000 கோடிக்கு மேல் மணிகரன் பவர் லிட் முதலீடு செய்யும். 2030’க்குள் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை 30% ஆக உயர்த்தவேண்டும் என்ற இலட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

6. போடோவை அதன் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநில அரசு எது?

அ. நாகாலாந்து

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. மேகாலயா

  • 2020 டிச.22 அன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அமைச்சரவை, ‘போரோ’ என்றும் அழைக்கப்படுகிற போடோ (தேவநாகரி எழுத்துவடிவம்) மொழியை மாநிலத்தின் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான ‘அஸ்ஸாம் அதிகாரபூர்வ மொழித்திருத்த மசோதா’வுக்கு தனது ஒப்புதலை அளித்தது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாமில் ஏறக்குறைய 14.16 இலட்சம் போடோ மொழி பேசுபவர்களாக உள்ளனர்.
  • அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். அது அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா & மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது.

7. தென்னிந்தியாவின் முதல், குரங்கிற்கான மீட்பு & மறுவாழ்வு மையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • குரங்குகளுக்கான முதல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் தெலுங்கானாவின் வடக்கு மாவட்டமான நிர்மலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்காக `2.25 கோடியை அம்மாநில வனத் துறை செலவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் மையம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.

8. நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் (Submarine Day) கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 08

ஆ. டிசம்பர் 12

இ. டிசம்பர் 18

ஈ. டிசம்பர் 22

  • கடந்த 1967ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியக் கடற்படையில் INS கல்வாரி என்னும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கு சேர்க்கப்பட்டது. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர்.8 அன்று நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாக்ஸ்டிராட் வகையிலான இந்தக்கப்பல், 29 ஆண்டு சேவைக்குப்பின் 1996 மே 31 அன்று சேவையிலிருந்து நீக்கப்பட்டது.

9. பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 09

ஆ. டிசம்பர் 15

இ. டிசம்பர் 19

ஈ. டிசம்பர் 25

  • ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதனை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பது குறித்து பரப்புவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2003’ஆம் ஆண்டில் மெக்சிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தின் அங்கீகாரத்திற்காகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. “United Against Corruption” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

10.தேசிய கணித நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 21

ஆ. டிசம்பர் 22

இ. டிசம்பர் 23

ஈ. டிசம்பர் 24

  • இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இராமானுஜத்தின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இராமானுஜத்தின் பிறந்தநாள், ‘தேசிய கணித நாள்’ என நிறுவப்பட்டது. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ‘தேசிய கணித ஆண்டு’ எனவும் அறிவிக்கப்பட்டது.
  • ‘கணிதமேதை’ ஸ்ரீநிவாச இராமானுஜன், கடந்த 1887ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 1918’இல் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக இராமானுஜன் ஆனார் (FRS பட்டம்). 1920 ஏப்ரல்.6 அன்று அவர் காலமானார்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • 2019-20ஆம் ஆண்டில் செய்த சிறப்பான சேவைகளுக்காக ‘மேக்தூத் விருது’களை அஞ்சல் துறை பணியாளர்களுக்கு அஞ்சல் துறை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை மண்டலத்தின் சந்தைப்படு -த்துதல் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் சீனிவாசன், ‘மேக்தூத் விருது’ பெற்றவர்களுள் ஒருவராவார். சென்னையில் உள்ள அஞ்சல் தொழில்நுட்பத்துக்கான திறன்மிகு மையத்தின் துணை இயக்குநரான V M சக்திவேலும் இந்த விருதைப் பெற்றார்.
  • தஞ்சாவூர் கரந்தையைச்சார்ந்த மாணவர் ரியாஸூதீன் வடிவமைத்துள்ள விஷன் 1 மற்றும் விஷன் 2 என்ற இரு சிறிய செயற்கைக்கோள்கள், 2021’இல் NASA விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளன.

26th & 27th December 2020 Tnpsc Current Affairs in English

1. The Prime Minister released a postage stamp during the centenary celebrations of which University?

[A] Aligarh Muslim University

[B] Jawaharlal Nehru University

[C] University of Delhi

[D] Banaras Hindu University

  • Aligarh Muslim University (AMU) is a Central university in Aligarh. It was originally established by Sir Syed Ahmad Khan in 1875. After the Aligarh Muslim University Act, its original name of ‘Muhammadan Anglo–Oriental College’ was changed to Aligarh Muslim University in 1920. The Prime Minister addressed the Centenary celebrations of the University and also released a postage stamp dedicated to AMU.

2. As per a Lancet report, which issue has caused 1.7 million deaths and economic loss of 1.4% of the GDP, in India?

[A] COVID–19

[B] Air Pollution

[C] Non Communicable Diseases

[D] Smoking

  • As per a recent study on Health and economic impact of air pollution in the States of India published in the Lancet journal, 1.7 million deaths were regarded to have caused due to air pollution in 2019 in India. This figure is 18% of the total deaths in the country. The economic loss due to the lost output was 1.4% of the GDP in India, which is equivalent to 260,000 crores. The study was funded by the UNEP, the Bill and Melinda Gates Foundation and ICMR.

3. Which Indian bank has launched contactless ‘RuPay Select’ debit card in association with NPCI?

[A] State Bank of India

[B] Central Bank of India

[C] Punjab National Bank

[D] ICICI Bank

  • Central Bank of India has recently launched contactless ‘RuPay Select’ debit card in association with the National Payments Corporation of India (NPCI). Through this card, the users can avail membership and access to golf courses, gyms, spas and restaurants. The users can also avail discounted health check–ups with the National Common Mobility Debit Card (NCMC).

4. Where was India’s 1st Mega Leather Park planned to be established?

[A] Mumbai

[B] Chennai

[C] Hyderabad

[D] Kanpur

  • The Government of Uttar Pradesh is set to establish India’s First Mega Leather Park in Kanpur. The Union Ministry of Commerce has given approval to the project. The project is set to be built across 235 acres in Ramaipur village, Kanpur at an expense of Rs.5850 crores.

5. Where was India’s 1st Lithium refinery planned to be established?

[A] Gujarat

[B] Jharkhand

[C] Maharashtra

[D] Telangana

  • The 1st Lithium refinery of India is to be set up in Gujarat. It will process Lithium ore to produce battery–grade material. More than Rs 1,000 crore will be invested by Manikaran Power Limited to set up this refinery. India has set an ambitious goal of increasing the Electric Vehicle numbers to 30% by 2030.

6. Which state government has adopted Bodo as its associate official language?

[A] Nagaland

[B] Arunachal Pradesh

[C] Assam

[D] Meghalaya

  • On December 22, 2020, Assam Cabinet headed by Chief Minister Sarbananda Sonowal approved the ‘Assam Official Language Amendment Bill’ for making Bodo (Devanagari script) also known as ‘Boro’ as an associate official language of the state.
  • According to the census 2011, There are ~ 14.16 Lakh Bodo speakers in Assam. It is one of the 22 languages listed in the 8th Schedule of the Constitution. It is spoken in the states of Assam, Arunachal Pradesh, Nagaland, Meghalaya & West bengal.

7. Where is South India’s first, Rescue and Rehabilitation Center for Monkey located?

[A] Telangana

[B] Andhra Pradesh

[C] Kerala

[D] Karnataka

  • The first rescue and rehabilitation center for monkeys was launched in Telangana’s northern district of Nirmal. The Forest department has spent Rs 2.25 crore in setting up the center, which is only the second such facility in the country after the one available in Himachal Pradesh.

8. On which date India Navy celebrated the Submarine Day?

[A] December 08

[B] December 12

[C] December 18

[D] December 22

  • The Submarine Day is celebrated every year by the Indian Navy on December 08 to commemorate the induction of the first submarine, the erstwhile INS Kalvari, into the Indian Navy on this day in 1967. The Foxtrot class submarine was decommissioned on the 31st May, 1996, after 29 years of service.

9. On which date, the 2018 International Anti–Corruption Day is observed?

[A] December 09

[B] December 15

[C] December 19

[D] December 25

  • The International Anti–Corruption Day is observed every year on December 09 to raise public awareness about corruption and how to fight it. The day is also observed in recognition of the United Nations Convention against corruption which was signed in Mexico in 2003. This year’s theme is, “United Against Corruption”.

10. On which date, the 2020 National Mathematics Day was observed in India recently?

[A] December 21

[B] December 22

[C] December 23

[D] December 24

  • The National Mathematics Day is celebrated every year in India on December 22 to commemorate the birth anniversary of great mathematical genius Srinivasa Ramanujan and to recognize his contribution to mathematics. It was in 2012 that then Prime Minister Dr Manmohan Singh declared December 22 as National Mathematics Day.
  • In 1917, Ramanujan was elected to be a member of the London Mathematical Society. In 1918 he also became a Fellow of the Royal Society, becoming the youngest person to achieve the feat. He passed away on April 6, 1920.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!