Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

26th & 27th November 2020 Current Affairs in Tamil & English

26th & 27th November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. CEFPPC என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகம்

ஆ. உழவு மற்றும் உழவர் நல அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

  • தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவத -ற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சக -த்தின் கீழான உணவுப் பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (CEFPPC) என்னும் திட்டத்தின்கீழ் `107.42 கோடி மானியத்துடன், `320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

2. நடப்பாண்டு (2020) கடைப்பிடிக்கப்பட்ட தேசிய மருந்தியல் வாரத்துக்கான கருப்பொருள் என்ன?

அ. Pharmacists: Frontline Health Professionals

ஆ. COVID-19 Warriors

இ. Responsible Pharmacy

ஈ. Ethical Pharmacy

  • 59ஆவது தேசிய மருந்தியல் வாரமானது நவ.16 முதல் 22 வரை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. “Pharmacists: Frontline Health Professionals” என்பது இந்த வாரத்துக்கான கருப்பொருளாகும். இந்திய மருந்துக் கழகமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் இந்த வாரத்தை ஏற்பாடு செய்கிறது. சமுதாயத்தில் மருந்தாளுநர்களின் இருப்பை அனைவருக்கும் உணர்த்துவதும்; மருந்துகள், அவற்றின் பயன்பாடு, கையாளுதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒரு மருந்தாளுநரின் பங்கை அறிந்துகொள்வதும் இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

3. எந்த அமைச்சகத்தின்கீழ், அண்மையில், 43 செயலிகளைத் தடை செய்து (இன்றுவரை மொத்தம் 220 சீன செயலிகள்) இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 திறன்பேசி செயலிகளை தடைசெய்ய மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தகவலளித்ததை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • இதற்கு முன்பு கடந்த ஜூன் 29 அன்று 59 திறன்பேசி செயலிகளையும், கடந்த செப்.2 அன்று 118 திறன் பேசி செயலிகளையும் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

4. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐநா அவையின் பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Orange the World: HearMeToo

ஆ. Orange the World: Generation Equality Stands Against Rape

இ. Orange the World: Fund, Respond, Prevent, Collect!

ஈ. Orange the World: Men Against the Rape & Discrimination (MARD)

  • உலகெங்கிலும் பெண்கள் பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு ஆளாவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா அவை ஆண்டுதோறும் நவம்பர்.25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளை உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறது. “Orange the World: Fund, Respond, Prevent, Collect!” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Chang’e-5 probe’ என்பது எந்த நாட்டால் தொடங்கப்பட்ட நிலவு ஆய்வுத்திட்டமாகும்?

அ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. இஸ்ரேல்

  • ‘Chang’e-5’ என்ற பெயரிலான நிலவு ஆராய்ச்சித் திட்டத்தை சீனா அண்மையில் அறிமுகப்படுத்தியது. கடந்த 40 ஆண்டுகளில் நிலவிலிருந்து பாறை மாதிரிகளை அதன் முன்னர் ஆராயப்படாத பகுதிகளில் இருந்து கொண்டுவரும் முதல் ஆய்வுப்பணியாக இது இருக்கும்.
  • ‘Chang’e-5’ என்பது நிலவின் தொலைவில் தரையிறங்கிய முதல் ஆய்வுத் திட்டமாகும். நிலவின் சுழற்சி மற்றும் தற்சுழற்சிக்காலம் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதால், நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தொடர்ந்து பூமிக்கு தெரிகிறது. இன்றுவரை நிலவின் மறுபக்கம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது மற்றும் இது நிலவின் தூரப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.

6. எந்த அரசாங்க செயலியின் பன்னாட்டு பதிப்பானது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரால் அண்மையில் வெளியிடப்பட்டது?

அ. UMANG

ஆ. FAME

இ. தூய்மை இந்தியா

ஈ. m-AWAS

  • நவம்பர்.23 அன்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், UMANG செயலியின் பன்னாட்டு பதிப்பை வெளியிட்டார். UMANG என்பது புதிய தலைமுறை நிர்வாகத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த திறன்பேசி செயலியாகும். இது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நெதர்லாந்து, UAE, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • UMANG செயலி தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதன் பன்னாட்டு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு இது வெளியிடப்பட்டுள்ளது.

7. கீழ்க்காணும் எந்தச் சீக்கிய குருவின் உயிர்த்துறவு நாள், நவம்பர் மாதத்தில், ‘ஷாகீத் திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது?

அ. குரு தேஜ்பகதூர்

ஆ. குரு ஹர்கோவிந்த்

இ. குரு கோபிந்து சிங்

ஈ. குரு ராம் தாஸ்

  • குரு தேஜ்பகதூரின் உயிர்த்துறவு நாளானாது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.24 அன்று ‘ஷாகித் திவாஸ்’ என அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1675ஆம் ஆண்டில், சீக்கிய மதத்தின் 10 குருக்களுள் ஒன்பதாவது குருவான குரு தேஜ்பகதூர் தூக்கிலிடப்பட்டார். அவர் குரு ஹர்கோவிந்த்தின் இளைய மகனாவார். குரு கிரந்த் சாகிப்பின்மேல் அவர் பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார்.

8. மத்திய கல்வியமைச்சரால் தொடங்கப்பட்ட ATAL ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் எது?

அ. AICTE

ஆ. UGC

இ. NASSCOM

ஈ. NCTE

  • நவம்பர்.23 அன்று மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமியின் (ATAL) 46 ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும். தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதே இந்த அகாடமியின் நோக்கமாகும். இது ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது.

9. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. லக்னோ

ஈ. ஹைதராபாத்

  • இந்திய வானூர்தி நிலைய ஆணையம் என்பது உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு சட்டபூர்வ அமைப்பாகும். 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வமைப்பு புது தில்லியை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது 2020 நவம்பர்.23 முதல் 27 வரை வானூர்தி பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரித்தது. அது, இந்தியா முழுவதும், AAI’ஆல் நிர்வகிக்கப்படும் அனைத்து வானூர்தி நிலையங்கள் மற்றும் வானூர்தி நிலைய வழிசெலுத்தல் சேவை ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற முதலீட்டுக் கூட்டமான, ‘RE-INVEST 2020’ என்பதை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2020) ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தின் மூன்றாவது பதிப்பானது, 2020 நவம்பர் 26 முதல் 28 வரை, “நிலையான ஆற்றல் மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் – Innovations for Sustainable Energy Transition” என்ற கருப்பொருளின்கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கூட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இதன் முதல் இரண்டு பதிப்புகள், 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.

1. CEFPPC, a scheme that was seen in the news, is associated with which Union Ministry?

[A] Ministry of Food Processing Industries

[B] Ministry of Agriculture and Farmers Welfare

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Youth Affairs and Sports

  • The Union Government has recently approved 28 Food Processing Projects worth more than 320 crore rupees. They are supported with a grant of over Rs 107 crore by the Ministry of Food Processing Industries. They are approved under the Scheme for Creation and Expansion of Food Processing and Preservation Capacities (CEFPPC). The aim of the scheme is to create processing and preservation capacities and expansion of existing food processing units.

2. What is the theme of the National Pharmacy Week 2020?

[A] Pharmacists: Frontline Health Professionals

[B] COVID–19 Warriors

[C] Responsible Pharmacy

[D] Ethical Pharmacy

  • The 59th National Pharmacy Week (NPW) was celebrated throughout the country from November 16–22, 2020. The theme of the NPW 2020 is “Pharmacists: Frontline Health Professionals. The Indian Pharmaceutical Association (IPA) organises NPW during the third week of November every year.
  • The main aim to this week is to make all stakeholders aware of the presence of pharmacists in the society and to know the role played by registered pharmacists with respect to medicines, their usage, handling and dispensing.

3. Government of India issued orders to block 43 mobile apps (total 220 Chinese apps till date) under which Ministry?

[A] Ministry of External Affairs

[B] Ministry of Home Affairs

[C] Ministry of Information & Broadcasting

[D] Ministry of Electronics and Information Technology

  • Ministry of Electronics and Information Technology, Government of India today issued an order under section 69A of the Information Technology Act blocking access to 43 mobile apps.
  • This action was taken based on the inputs regarding these apps for engaging in activities which are prejudicial to sovereignty and integrity of India, defence of India, security of state and public order. Ministry of Electronics and Information Technology has issued the order based on the comprehensive reports received from Indian Cyber Crime Coordination Center, Ministry of Home Affairs. Earlier on June, 2020 the Govt., of India had blocked access to 59 mobile apps and on Sep, 2020 118 more apps were banned under section 69A of the Information Technology Act.

4. What was the 2020 theme for the United Nations International Day for the Elimination of Violence against Women observed on November 25?

[A] Orange the World: HearMeToo

[B] Orange the World: Generation Equality Stands Against Rape

[C] Orange the World: Fund, Respond, Prevent, Collect!

[D] Orange the World: Men Against the Rape & Discrimination

  • United Nations (UN) International Day for the Elimination of Violence against Women is annually observed around the world on November 25 to raise awareness about the fact that women globally are subject to rape, domestic violence and other forms of violence.
  • Theme of International Day for the Elimination of Violence against Women 2020 – “Orange the World: Fund, Respond, Prevent, Collect!”

5. ‘Chang’e–5 probe’, which was seen in the news recently, is a lunar mission launched by which country?

[A] United States of America

[B] China

[C] Russia

[D] Israel

  • China recently launched the Change–5 Lunar Mission. The mission is the first probe in four decades to bring back rock samples from the moon from its previously unexplored portions. Change–5 is the first probe to land on the far side of the moon. As the rotation and revolution time period of the moon is same, only one side of the moon is constantly visible to the earth. The other side of the moon till date remains unexplored and is called the far side of the moon.

6. The International version of which government application has been launched by the Union IT Minister?

[A] UMANG

[B] FAME

[C] Swachh Bharat

[D] m–AWAS

  • The Union Information Technology Minister Shri Ravi Shankar Prasad launched the International version of the UMANG application. UMANG is Unified Mobile Application for New–age Governance. It was launched in UK, US, Australia, Canada, Netherlands, UAE, Australia, Singapore and New Zealand. The International version was launched on the completion of three years of UMANG. It was launched in collaboration with the Ministry of External Affairs.

7. The martyrdom day of which Sikh Guru is observed in the month of November, as ‘Shaheed Diwas’?

[A] Guru Tegh Bahadur

[B] Guru Hargobind

[C] Guru Gobind Singh

[D] Guru Ram Das

  • The Martyrdom Day of Guru Tegh Bahadur is observed across the country as Shaheed Diwas every year on November 24. In the year 1675, Guru Tegh Bahadur, the ninth of the ten Gurus of the Sikhism was executed. He was the youngest son of Guru Hargobind. He had also contributed many hymns to the Guru Granth Sahib.

8. ATAL Faculty Development Programmes, which were launched by the Education Minister, are organised by which institution?

[A] AICTE

[B] UGC

[C] NASSCOM

[D] NCTE

  • The Union Education Minister, Ramesh Pokhriyal ‘Nishank’ inaugurated 46 online AICTE Training and Learning (ATAL) Academy Faculty Development Programmes (FDP). It was launched to train the teachers in higher education institutions association with AICTE (All India Council of Technical Education).
  • The main objective of the academy is to provide quality technical education all over India. It promotes research and entrepreneurship.

9. Where is the headquarters of the Airports Authority of India located?

[A] Mumbai

[B] New Delhi

[C] Lucknow

[D] Hyderabad

  • The Airports Authority of India (AAI) is a statutory body working under the Ministry of Civil Aviation. It was founded in 1995 and is headquartered in New Deli. Airports Authority of India (AAI) commenced Aviation Safety Awareness Week 2020 from 23rd – 27th November, 2020. It is being observed at all airports and Airport Navigation Service locations managed by AAI across India.

10. ‘RE–INVEST 2020’, an investing meet which was seen in the news recently, is organised by which Union Ministry?

[A] Ministry of Petroleum and Natural Gas

[B] Ministry of New and Renewable Energy

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Corporate Affairs

  • RE–INVEST (Renewable Energy Investors Meet & Expo) is organised by the Union Ministry of New and Renewable Energy (MNRE), to promote investment in renewable energy. The 3rd edition of the Meet is scheduled to be held from Nov.26–28, 2020 with the theme of “Innovations for Sustainable Energy Transition”. Prime Minister Narendra Modi will inaugurate the virtual meeting. The first two editions were held in 2015 and 2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!